- இந்தக் கவிதை எனது வலைப்பதிவுக்காக எழுதிய My humble request to the bellicose rulers of the world என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
கவிதை: போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
- வ.ந.கிரிதரன் -
போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின்
ஆட்சியாளர்களுக்கு எனது
பணிவான வேண்டுகோளிது.
உங்களுக்கு அசோகாவைத் தெரியுமா?
மகா அசோகா,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தி.
அவர் ,
அமைதிப்பிரியராக
மாறிய
போர்ப்பிரியர்.
அவர்,
சமாதானப் பிரியராக
மாறிய
போர்வீரர்.
அவர் கலிங்கத்தில்
இரத்தம்தோய்ந்த
யுத்தத்தைப் புரிந்தவர்.
அழிவுகளின் யுத்தம்.
மிகப்பெரிய மானுட
அழிவுகளின் யுத்தம்.
மகா அசோகா.
தானே உருவாக்கிய மிகப்பெரிய
மானுட அழிவுகளுக்குச்
சாட்சியாக இருந்த
உன்னதம்மிக்க இந்தியச்
சக்கரவர்த்தி.
யுத்தத்தின் சாட்சியாக விளங்கியதும்,
அதன் விளைவுகளும்
அவரை மிகவும் ஆழமாகப்
பாதித்தன;அவரை
அடியோடு
மாற்றிவிட்டன.
அசோகா, யுத்தமனிதரான
அவர் அன்புமிக்கவராக,
அமைதியை நாடுபவராக
மாறினார்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்
ஒரு யுத்தம் அவரை
அமைதியை விரும்பும் ஒரு
மனிதராக, பெளத்தராக
மாற்றியது.
வாக்குச் சாதுரியத்தால் ஆட்சியில்
அமரும் சாமர்த்தியம் மிக்கவரே,
சொல்லொன்றும், செயலொன்றுமாக நடமாடும்
கபடதாரிகளே,
போர்ப்பிரியர்களே,
இந்த நவீன உலகத்தின்
ஆட்சியாளர்களான
நீங்கள்
எத்தனை யுத்தங்களை
சமாதானத்தின் பெயரால்,
மொழியின் பெயரால்,
சமயத்தின் பெயரால்,
தேசியத்தின் பெயரால்,
நடாத்தினீர்கள்?
போர்முனைப்பு மிக்க
இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களே!
உங்களுக்கு எனது பணிவுமிக்க
வேண்டுகோள் இதுதான்:
எப்பொழுது நீங்கள் நடந்தவற்றிலிருந்து
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தியான
மகா அசோகாவின் கதையிலிருந்து
பாடம் படிக்கப் போகின்றீர்கள்?
POEM: My humble request to the bellicose rulers of the world!
By V.N.Giritharan
This is my humble request
to the bellicose rulers
of the world.
Do you know Ashoka?
Ashoka the great,
a great Indian emperor
who ruled the country
two thousand years ago.
He, a warmonger
became a great
peacemonger.
He , a warrior
became a great
pacifist.
He fought a bloody
war in Kalinga.
A war of destruction.
A war of
great human tragedy.
Ashoka the great,
a great Indian emperor
witnessed the human
tragedy which he himself
caused.
Witnessing the
war and its effects,
affected him
profoundly;
changed him
forever.
Ashoka , a man of war
became a man of
love ; a man of
peace.
Two thosand years ago
a war changed him
into a peace loving
man, a Buddhist.
You Demagogues,
You Hypocrites,
You warmongers,
how many wars
Have you, rulers
of the modern world,
waged
in the name of
peace;
in the name of
language;
in the name of
religion;
in the name of
nationalism.
My humble request
to you, bellicose rulers
of the world, is
this:
When are you
going to learn
a lesson
from the past;
from the story
of Ashoka,
a great Indian emperor,
who ruled the country
two thousand years ago?
Courtesy: http://www.srilankaguardian.org/2013/10/poem-my-humble-request-to-bellicose.html