சுயமாக நடமாடக்கூடியதாக இருக்கும்வரை, வருடத்துக்கொரு தடவை எங்காவது ஒரு பயணம் செல்லவேண்டும் என்பது என் முதுமைக்கால இலக்குகளில் ஒன்றாகும். பயணங்களுக்கான ஆயத்தங்களையும், பயணங்களில் இருக்கும்போது நாளாந்தம் செய்யக்கூடியவற்றுக்கான பட்டியல்களையும் பிள்ளைகள் செய்துதந்தாலும்கூட, அவர்களில் ஒருவருடன் பயணிக்கும்போதே பயணங்கள் சிறப்புப் பெறுகின்றன. அதற்கு ஒத்த ரசனையுள்ளவர்கள் பயணிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது என்பதும், பயணத்தின்போது வரும் பிரச்சினைகளை பிள்ளைகள் தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் காரணங்கள் எனலாம். அவ்வகையில், இவ்வருடப் பயணத்தைப் பற்றிச் சிந்தித்தபோது, சின்ன மகளின் அடுத்த இரண்டு வருடக் கற்கையின்போது, சுற்றுலாவுக்கான நேரம் அவவுக்கு கிடைக்காது என்பதால், அவவுடன்தான் இம்முறை பயணிக்கவேண்டுமென நான் விரும்பினேன். அந்த விருப்பத்தைச் சாத்தியமாக்குவதானால் பயணம் ஒரு கிழமைக்குட்பட்ட செப்ரெம்பர் மாதப் பயணமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்கு San Francisco பொருத்தமாக ஓரிடமாக இருக்குமென மூத்த மகள் ஆலோசனை கூறினா.

அதன்படி, செப்ரெம்பர் 9ம் திகதி நாங்கள் San Franciscoக்குப் பயணமானோம். விமானநிலையத்திலிருந்து, Nob Hill என்ற இடத்திலிருந்த எங்களின் ஹோட்டலை நோக்கி Uberஇல் சென்றுகொண்டிருந்தபோது, அத்தனை கொள்ளை அழகையும் எப்படிக் கண்களுக்குள் அடக்குவதென நாங்கள் வியந்துபோனோம். முடிந்தளவில் அவற்றைப் படம்பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலில், வாகனத்தின் இருபக்கத்திலிரும் இருந்த எங்கள் இருவரினதும் தொலைபேசிக் கமெராக்களும் அடிக்கடி இயங்கிக்கொண்டிருந்தன. மலையும் மலைசார்ந்த இடமும் என்றால் அதன் அழகைச் சொல்லவும் வேண்டுமா எனப் பிரமித்துப் போயிருக்க, அதைத் தொடர்ந்த எல்லையற்ற நீலக் கடல், என் அழகு என்ன குறைவா எனப் போட்டிக்கு வந்தது போலத் தோன்றியது.

ஹோட்டலை அடைந்தபோது மாலை நான்கு மணியாகியிருந்தது. அப்போது ரொறன்ரோவில் மதியம் ஒரு மணி. போயிருக்கும் இடத்துக்குப் பழக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் வாழ்ந்த இடத்துக்கு இசைவாக்கப்பட்டுப்போன வயிற்றுப் பசிக்கும் உணவளிக்க வேண்டும் என முன்கூட்டியே Shizen என்ற vegan sushi உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தோம். அந்த உணவகம் எங்களின் ஹோட்டலில் இருந்து நடைதூரத்திலிருந்தது. Nob Hill ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த அழகானதொரு இடம் என்பதால் அதன் வீதிகளில் நடந்துசெல்வது இனிமையான அனுபவமாக இருந்தது. San Franciscoஇல் உள்ள Google நிறுவனத்தில் வேலைசெய்யும், சின்ன மகளின் சினேகிதிதான் Shizenஐச் சிபாரிசு செய்திருந்தா. எனக்கு sushi பிடிப்பதில்லை, அத்துடன் மகள் தாவரவுண்ணி என்பதால் சைவ sushi நன்றாக இருக்காது. ஏதோ பசிக்குச் சாப்பிடுவோம் என்று ஏனோ தானோ என்றுதான் அங்கு நான் சென்றிருந்தேன். ஆனால், Shizen என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அங்கிருந்த sushi வகைகளும், அவை பரிமாறப்பட்ட அழகும், அலங்காரமும், அவற்றின் ருசியும் பிரமிப்பைத் தந்தன. San Franciscoஇல் இருந்து வெளியேற முன்பாக இன்னொரு தடவையும் அங்கு சாப்பிட வேண்டுமென்ற ஆசையை அது தந்தது.
 
பின்னர் பார்க்கவேண்டிய இடங்கள் என மகள் பட்டியலிட்டுக் கொண்டுவந்திருந்த இடங்களில் முதலாவதாக இருந்த Alamo Squareஐ நோக்கி நடந்தோம். அப்போது, வெவ்வேறு வகையான கட்டடக்கலையைக் காட்டும்வகையில் வழிமுழுவதும் ஓங்கியுயர்ந்திருந்த கட்டடங்களையும், ரொறன்ரோவில் கண்டிராத அழகான மரங்களையும் பார்த்து ரசித்ததுடன், படங்களும் எடுத்துக் கொண்டோம். பச்சைப்பசேல் என்றிருந்த பெரிய புல்தரையைக் கொண்டிருந்த Alamo Square parkக்கு எதிரே பல்வேறு வர்ணங்களில் இருந்த Painted ladies எனப்படும் அழகான வீடுகள் அந்த இடத்துக்கு மேலும் அழகு சேர்ந்துக்கொண்டிருந்தன. ஒரே நிரலிலுள்ள அந்த ஏழு வீடுகளும் அரசி விக்ரோறியாவின் காலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்தோம். 1860இல் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அந்த வீடுகள் கலிபோர்னியாவில் பொன் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தின் அடையாளமாகவும் இருக்கின்றன. அத்துடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பென்னாம் பெரிய வீடுகள் அந்த நேரத்தில் பணக்காரர்களாக மாறியவர்களின் செல்வச்செழுமையைக் காட்டுவனவாகவும் இருக்கின்றன. Alamo Squareஇன் சுற்றுப்புறம், மலைகளும் குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் என மிக அழகாக இருந்தது. அந்த அழகான சுற்றுச்சூழலில் சூரியன் மறையும்வரை காத்திருந்து அதன் அழகையும் தரிசித்தோம்.

பின்னர் ஹோட்டலுக்குத் திரும்பிப்போனபோது, வேறொரு வழியால் நடந்தோம். அப்போது செல்வச்செழிப்பான அந்த நகரின் எதிர்பக்கம் தெரிந்தது. வீடற்ற மக்களால் நிறைந்திருக்கும், அழுக்கான வீதிகளைக் கொண்டிருக்கும் Tenderloin என்ற பகுதி மனதுக்கு அசெளகரியத்தையும் வருத்தத்தையும் தந்தது.

அடுத்த நாள் புகழ்பெற்ற Big Sur என அழைக்கப்படும் இடத்துக்குச் செல்வதற்காக வாடகைக் கார் ஒன்றை ஒழுங்குசெய்து கொண்டோம். வளைந்து வளைந்து செல்லும் இரண்டு ஒடுங்கிய பாதைகளைத் திசைக்கு ஒன்றாகக் கொண்டிருந்த Highway 1 scenic routeஇல் அன்று வாகனம் ஓடிய அனுபவம் மறக்க முடியாதது. அந்தப் பாதையே பூமியில் உள்ள மிகவும் வியக்கத்தக்க அழகான பாதை எனக் கூறப்படுகின்றது, உண்மைதான். பசுபிக் சமுத்திரத்தின் ஓரமாக இருந்த அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, செங்குத்தான பாறைகள், பசுமையான மலைகள், பரந்த கடற்கரைகள், சிவப்பு மரப்பட்டையுள்ள மரங்கள் என அத்தனையும் கண்களுக்கு விருந்தாக இருந்தன. அதேநேரத்தில் வாகனம் ஓடுவதற்குப் பயமாகவும் இருந்தது.

Coastal Gem என அழைக்கப்படும் Pedro Pointஐ நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, முதல் தரிப்பிடமாக Battery Bluffஐத் தெரிவுசெய்திருந்தோம். அந்த மணல் கடற்கரையின் ஓரத்திலிருந்த குன்றுகள் யாவும் புற்களால் அன்றி, வரண்ட பிரதேசத்தில் வாழும் succulent plantsஆல் நிரம்பியிருந்தது பார்ப்பதற்கு விசித்திரமானதாக இருந்தது. Pedro Pointஇல் hike செய்வதற்கு துரதிஷ்டவசமாக எங்களுக்கு நேரமிருக்கவில்லை. எனவே வீதி மட்டத்திலிருந்து கீழே கடல் மட்டத்துக்குக் செல்வதற்கென அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுக்களின் இறுதிவரை சென்று அதன் அழகை ரசித்தோம். அதன் பின்னர் பல்வேறு ஆங்கிலத் திரைப்படங்களில் மட்டுமன்றி, Jeans என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கும் (கொலம்பஸ் கொலம்பஸ் பாடல் காட்சி இடம்பெற்ற இடம்) Venice Beach க்குச் சென்றோம். Venice Beachஐ அடைவதற்கு சிறிய ஏரி ஒன்றைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த தாவரங்களும் முன்பு பார்த்திராத, முற்றிலும் வித்தியாசமான தாவரங்களாக இருந்தன. (பிள்ளைகள் பார்த்த தமிழ்த் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணலாம். அவற்றுள் Jeans அவர்களுக்குப் பிடித்த படமென்பதால் அந்த கடற்கரையையும் பார்க்கவேண்டியவற்றின் பட்டியலில் மகள் சேர்ந்திருந்தா).


பின்னர் சொற்பதூரம் சென்றதும், ஓரிடத்தில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதும், பலர் நிற்பதும் தெரிந்தது. எனவே அதுவும் முக்கியமான ஓரிடம் என்பது விளங்கியது. நாங்களும் எங்களின் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கடலோரம் போனோம். அங்கே நிறைய Sealsகளையும் பறவைகளையும் பார்க்கமுடிந்தது. கடலுக்குள் இருந்த குன்று ஒன்று பறவைகளின் எச்சங்களால் முழுமையாக மூடப்பட்ட நிலையில் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளும், அவற்றின் ஓசையும். முடிவுதெரியாத நீண்ட வெண்மணல் கடற்கரையும், நீல வானமும், வெண்ணிற முகில்களும், மிருதுவான காற்றும் விலகவே மனம்வராத அளவுக்கு மனதைக் கொள்ளைகொண்டன. இருப்பினும், நேரமாகிறதே என்பதால் விலகவேண்டியிருந்தது.

அடுத்ததாக 714 அடி நீளமான, கடல் மட்டத்திலிருந்து 218 அடி உயரத்திலிருக்கும் Bixby bridge ஊடாகச் சென்றோம். 1932இல் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பாலத்தின் அழகை முழுமையாக ரசிப்பதற்காக ஓரிடத்தில் காரை நிற்பாட்டிவிட்டு, அதனை ரசித்தோம். அப்போது, Pfeiffer Beachஇல் மணல் ஊதா நிறமாக இருக்குமென்பதால் அதையும் பார்க்கலாமெனத் தான் நினைத்ததாகவும், வளைவான அந்த HWY 1 பாதையில் இரவில் கார் ஓடுவது எனக்குச் சிரமமாக இருக்கும் என்பதாலும் நேரத்துடன் ஹோட்டலுக்குப் போவோம் என்றா மகள்.

தொடரும்

Big Sur இன் அழகின் துளியை கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்.
https://youtu.be/d3DV-W-oM14?si=7yU0U-eZG_8bqwNi – (Big Sur, California from the air)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com