தேர்ந்தெடுத்த படைப்பாளர்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் நான் வாசிக்கத் தோன்றும்போதெல்லாம் அவை நேராகவே என்னுடன் பேசுவது போலவும், அவை நித்திய ஜீவியாக என்னுடன் இருப்பதுபோலவும் நான் உணர்வதுண்டு. அந்த வகையில் இந்நூலை வாசிக்கும்போது அது என்னைச் சிறைப்படுத்தியது.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் கோலங்கள், தமிழ் இலக்கியத்தின் அச்சுப் பண்பாடு, ஓவியம், சாதியம், தமிழ் நிலத்தின் ஆவணச் சிற்பி, தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், நாவல், சிறுகதையென பல தகவல்களைத் தாங்கிய பத்துக் கட்டுரைகளை நூற்றி நாற்பத்திமூன்று பக்கங்களில், முதல் தைல வண்ண அட்டை ஓவியத்தோடும் இந்நூலைப் பார்க்க முடிகின்றது.
இத்தொகுதியில் ‘பொதுநலவாய நாடுகளின் இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ என்ற கட்டுரை முதல்த்தடவையாக நான் அறிந்திருந்த விடயமாகப்பட்டது. அதாவது அந்தக்காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து க. கைலாசபதி அவர்கள் (1933- 1982) பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கிரேக்க மொழித்துறையில் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனி;ன் மேற்பார்வையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டிருந்ததாகவும், அதே பல்கலைக்கழகத்தில் மைசூர்ப் பல்கலைக்கழகத்திலிருந்து யு.ஆர். அனர்ந்தமூர்த்தியும் (1932 – 2014) ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்களாம். அவ்வேளையில் யு.ஆர்.அனந்தமூர்த்தியும், க.கைலாசபதியும் இணைந்து எழுதிய கடிதம் வுiஅநள டுவைநசயசல ளரிpடநஅநவெ செப்டம்பர் 24, 1964 இதழில் ஐனெயைn ஏநசயெஉரடயச றசவைநசள என்ற தலைப்பில் பிரசுரமாகியது. அதில் பலவகையான இலக்கிய விவாதங்களை இக்கட்டுரை மூலம் என்னால் பார்க்க முடிகின்றது.
பொதுநலவாய நாடுகளின் இலக்கியம் என்ற இலக்கிய வகையை பிரித்தானியப் பேரரசின் கீழிருந்து விடுதலை பெற்ற நாடுகளான அவுஸ்திரேலியா, ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் எனப்படுவது.
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறை (ஸ்கூள் ஒஃவ் இங்கிலிஷ், லீட்டஸ் பல்கலைக்கழகம்) 1964 ஆம் ஆண்டு செம்டம்பர் 9ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்களாக இடம்பெற்ற முதலாவது பொதுநலவாய நாடுகளின் இலக்கிய மகாநாட்டில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் படைக்கப்படும் ஆங்கில இலக்கியம் இருந்தமையைத் தொனிப்பொருளாகக் காணலாம்.
கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகவும் ‘த டார்க் டான்ஸர்’ என்ற நாவலின் மூலம் நன்கறியப்;பட்டவருமான பாலச்சந்திர ராஜன், தனது உரையில்: ‘இலக்கியம் சமூக வரலாற்றின் ஒரு பகுதியேயாயினும், இலக்கியத்தின் பெறுமானம் என்பது அது ஒரு சமூக வரலாற்றறிஞனுக்கு வழங்குகிற கருத்துக்களைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. அது இலக்கியத்தை ஆவணரீதியாக அணுகும் போக்காகும். இந்த இலக்கிய - ஆவண அணுகு முறையைவிடவும், ஓங்கி ஒலிக்கும் மற்றொரு குரல் தேசப்பற்றாகும். இந்தியத்துவம் என்றால் என்ன என்பது நமக்குத் தெளிவாகவில்லை என்கின்றார். ஆங்கிலத்தில் எழுதும் இந்தியன், ஒரு இந்தியன் அல்லாதவன் என்பதுதான் என்கின்றார். அவன் இரண்டு கலாச்சாரங்களின் கலப்பினமாக நிற்கின்றான். அடிப்படையில் அந்நியமான மொழிக்கூடாக, இந்தியத்துவத்தின் உள்முகத்தைக் கொண்டுவர முடியாதென்றும் அதன் நுட்பத்தை – உள்தொனியை அந்த மண்ணின் வேரோடும், உள்ளார்ந்த வரலாற்றோடும் பிணைந்த மக்களின் மொழிக்கூடாகவே கண்டு கொள்ள முடியும் என்றும் எமக்குச் சொல்லப்படுகின்றது’ என்கின்றார்.
இந்தப் பொதுநலவாய நாடுகளின் இலக்கிய வகைப்பாட்டை புகழ்மிக்க நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பூரணமாக நிராகரிக்கின்றார். ‘பொதுநலவாய நாடுகளின் இலக்கியம்’ என்பது விசித்திரமாய்த் தெரிகிறது என்றும், இத்தொடர் ஒன்றுக்கும் உதவப்போவதில்லை என்றும் கொஞ்சம் அருவருப்பாயும்கூட இருக்கிறது என்றும் எழுதுகிறார். ‘பொதுநலவாய நாடுகளின் இலக்கியம்’ என்பது பிரித்தானியா, ஐரிஸ் வெள்ளையர்கள் அல்லாத, அல்லது அமெரிக்கப் பிரஜைகள் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிற இலக்கிய வகை என்றே அர்த்தப்படுத்துகின்றேன் என்கின்றார் ருஷ்டி. மையத்தில் ஆங்கில இலக்கியத்தையும் விளிம்பில் உலகில் மிஞ்சியிருக்கும் அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பிரித்தாளும் தந்திரம் என்று கண்டனம் செய்கின்றார் ருஷ்டி. நீண்ட நாளைக்கு இது தாக்குப்பிடிக்காது என்கின்றார் ருஷ்டி. இக்கட்டுரையை வாசிக்கும்போது பலவேறுபட்ட குழப்ப நிலைகளைப் புரிந்து, நம் தாய் மொழிகளின் உணர்வுகளின் மேன்மையைச் சிந்திக்க வைத்தது எனலாம்.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் மறைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் கைலாசபதியும் அனந்தமூர்த்தியும் இணைந்து இந்திய இலக்கியம் பற்றிய மிக முக்கிய விவாதங்களை முன்னெடுத்திருந்ததை முதல் தடவையாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கும் நூலாசிரியர் மு.நித்தியானந்தனின் பேருழைப்பு பாராட்டத்தக்கதாகும்.
இலக்கியத்தின் அச்சுப் பண்பாடுபற்றிய கட்டுரையில் ‘இலங்கைத் தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் அச்சுப்பண்பாட்டின் ஊற்று இஸ்லாத்திலிருந்தும் திருக்குர்ஆனிலிருந்தும் அரபு மொழியிலிருந்தும் பிரவகிக்கிறது. மொழி என்றாலே அரபுதான் என்றும், அதனால் அரபு அல்லாத மொழிகளை ‘அஜமி மொழிகள்’ என்றும், ‘காட்டுமிராண்டி மொழிகள்’ என்றும் அரபுகள் அர்த்தப்படுத்தினார்களாம்.
‘உலக வரலாற்றில் முதன்முதல் எழுத்தில் அமைந்த ஆவணம் விவசாயிகள் பயன்படுத்திய விற்பனைப் பற்றுச் சீட்டுதான். வாய்மொழி மூலமாக அறிவும் கலாசாரமும் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்பட்ட காலகட்டத்தில் இஸ்லாம் தோன்றியது மட்டுமல்ல, அரபுக்கலாசாரத்தில் முதல் எழுத்தில் பதிவு பெற்ற நீண்ட பனுவல் திருக்குர்ஆன் ஆகும் என அறிய முடிகிறது. திருக்குர்ஆனின் மொழியான அரபு மொழி, இஸ்லாம் பரவிய அனைத்து நாடுகளிலும் தனி முதன்மை பெற்று, அரபு எழுத்தின் வடிவத்திற்குப் பெருஞ் சிறப்பு நிலவியது.
1882இல் ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகை கண்டி கட்டுகஸ்தோட்ட அலுவலகத்திலிருந்து பி . ராயப்பன் என்பரால் வெளியிடப்படுவதாகவும், 1884 இல் பேராதனைக்கு மாற்றப்பட்டு அப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பாளராகவும், வெளியீட்டாளராகவும் எம்.சி. சித்திலெவ்வையின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகையில்தான் எம்.சி. சித்திலெவ்வை ‘அரசன்பே சரித்திரம்’ என்ற நாவலைத் தொடராக எழுதி வெளியிட்டிருக்கிறார். இலங்கையின் முதல் நாவலை எழுதிய நாவலாசிரியராகவும், அரசியல் கட்டுரைகள் எழுதியவராகவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் நடை கைவந்த வல்லாளராக எம்.சி. சித்திலெவ்வை சிறப்புப் பெறுகிறார்.
கிறீஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப கட்டத்திலேயே காகிதத்தின் பயன்பாட்டைச் சீனர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஏழாம் நூற்றாண்டிலேயே ‘சீனாவிற்குச் சென்றும் கல்வியைத்தேட’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவுறுத்தியமை சீனத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவினைப் புலப்படுத்துகிறது. அந்த நுட்பம் அரபு நாடுகளைச் சென்றடைய எட்டு நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன.
ஐரோப்பாவிற்கு 15ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியிலேயே அச்சு வந்துசேர்ந்தன. 1465இல் இத்தாலியிலும், 1470இல் பிரான்சிலும், 1474இல் ஸ்பெயினிலும், 1477இல் இங்கிலாந்திலும், 1482இல் டென்மார்க்கிலும், 1483இல் ஸ்வீடனிலும், 1495இல் போர்த்துக்கலிலும், 1553இல் ரஷ்யாவிலும் அச்சுமுறை அறிமுகமாகியது. ஐரோப்பிய நாடுகளில் அச்சுத்தொழில் வேகம் பெறத் தொடங்கிவிட்ட நிலையில் அரபு நாடுகளில் அந்த வேகத்தைக் காணமுடியவில்லை என இக்கட்டுரை மூலம் அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணம் குறித்த முதல் டச்சு ஓவியம் பண்டத்தரிப்பினைக் குறித்து நிற்கும் தைல வண்ண ஓவியமாகும்;;. இந்த ஓவியம் 1668ஆம் ஆண்டில் ஜோஹான் து லா றொக்கெற் என்ற ஓவியரால் வரையப்பட்டிருக்கிறது. 141 செ.மீ. உயரமும் 176 செ.மீ. அகலமும் கொண்ட இந்த ஓவியம் நெதர்லாந்தில் அம்ஸ்;டர்டாமில் அமைந்துள்ள றிக்ஸ் மியூசியத்தில் காணப்படுகின்றது.
இந்த ஓவியம் பிலிப்பஸ் பால்டேயஸ் நெதர்லாந்தில் பிறந்து தனது 21 ஆவது வயதில் இறையியல் கல்வியை முடித்து புரொட்டஸ்தாந்து திருச்சபையில் திருநிலைப்படுத்தப்பட்டார். பால்டேயஸ் யாழ்ப்பாணத்தில் சமயப்பணியை ஆரம்பித்து பல சேவைகளை ஆற்றியிருந்தார். இலங்கையின் டச்சு நிர்வாகத்திற்கும் பால்டேயஸிற்கும் இடையில்பெரும் முரண்பாடுகள் காரணமாக 1666இல் நெதர்லாந்து திரும்பியிருந்தார். அங்கு தெற்கு ஹொட்டாமில் அமைந்திருந்த ஒரு சாதாரண தேவாலயத்தில் போதகராகச் சேவையாற்றி தமது 39 ஆவது வயதில் மரணமுற்றார்.
பண்டத்தரிப்பில் தாம் வாழ்ந்த காலத்தினை நினைவு கூருமுகமாக ஜோஹானிடம் அணுகி இந்தத் தைல வண்ண ஓவியத்தினை தீட்டித் தருமாறு கேட்டிருக்கிறார். ஜோஹான் நெதர்லாந்தைவிட்டு வெளியில் சென்றது கிடையாது. பால்டேயஸ் விவரித்த நிலத்தோற்ற அமைப்பினையே ஓவியர் ஜோஹான் தமது ஓவியத்தில் தீட்டியிருக்கிறார். பண்டத்தரிப்புப்பற்றிய சித்திரம் பால்டேயஸ் கொடுத்த விபரங்களைக் கொண்டதாகும். இந்த நூலி;ன் முகப்பு ஓவியம் பிலிப்பஸ் பால்டேயரைச் சித்தரிக்கும் ஓர் அழகிய ஓவியம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது கால்பதிந்;த பண்டத்தரிப்புப்பற்றிய நினைவுக் காட்சிகள் இக்கட்டுரையினூடாக் சித்திரமாகிப் பறப்பதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.
யாழ்ப்பாணம் பற்றிய முதல் தைல வண்ண ஓவியத்தை அறிமுகப்படுத்தி அதனை நன்கு விபரித்திருக்கும் நூலாசிரியர் யாழ்ப்பாணத்தில் ஆழ வேறூன்றியிருந்த சாதியத்தின் ஆழ்ந்த தாக்கத்தினை நுட்பமாக ஆராய்கின்றார். பிரித்தானியரின் குடியேற்ற நாடாகத் திகழ்ந்த இலங்கையில் ஆட்சி நிர்வாகத்தை செவ்வனே கொண்டு நடாத்துவதற்காக பிரித்தானியா அரசு யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி அமைப்போடு எவ்வாறு சமரசம் செய்து கொண்டதென்பதை விளக்கும் கட்டுரை இந்நூலின் மிக முக்கிய கட்டுரையாக அமைகின்றது.
வன்னி மாவட்டங்கள் பற்றிய விரிவான நூலை 1895 இல் எழுதிய ஜே.பி.லூயிஸ் பற்றிய அரிய தகவல்களைத் தேடித் தொகுத்துத் தந்திருக்கும் சிறந்த கட்டுரையாக ‘வன்னியின் ஆவணச் சிற்பி’ என்ற கட்டுரை அமைகிறது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் அறிமுகமான செ.யோகராசாவின் நினைவுக்குறிப்புகளை ‘ஈழத்துப் பிராந்திய இலக்கியங்களின் கிட்டங்கி’ என்ற கட்டுரையில் அவரது இலக்கிய ஈடுபாட்டையும், புலமையையும் விபரிக்கின்றார் நூலாசிரியர்;. இரா.முரளீஸ்வரன் எழுதிய ‘ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாட்கள்’ என்ற நூலிற்கு செ. யோகராசா அவர்கள் எழுதிய முன்னுரையில் மேற்கோள் காட்டியதைச் சுட்டிக்காட்டி நூலாசிரியர் கட்டுரையை முடிக்கும் பாங்கு நெஞ்சை வருடியது.
‘சில வார்த்தைகள் சொல்லப்படாமல் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
சில வார்த்தைகள் கேட்கப்படாமல் வாழ்க்கை முடிந்துவிடுகின்றது’ என்பதுதான்.
திருமலை நவம் எழுதிய 1990 என்ற நாவல் பற்றி வரிவான குறிப்புகளை எழுதியிருக்கும் நூலாசிரியர் ஈழத்தின் போராட்ட காலத்தில் திருமலை அரச படைகளின் கொடூரங்களுக்கு எப்படிப் பலியாகியது என்பதை ஆதாரங்களோடு நூலாசிரியர் முன்வைக்கும் குறிப்புகள் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன.
ஜேர்மனியில் வாழும் பொ.கருணாகரமூர்த்தியின் ‘பாய்மரத்தில் ஒரு பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஜேர்மனிய வாழ்வியலின் அசலான எழுத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதை நூலாசிரியர் மு.நித்தியானந்தன் மிகச் சிறப்பாக விளக்கிச் சொல்கின்றார்.
முற்றிலும் புதிய தகவல்கள், நாம் அறிந்தனவற்றையே கூடப் புதிய கோணத்தில் அணுகும் அவருடைய ஆராய்ச்சிப் பாங்கும் சுவையான உரை நடையில் எழுதிச் செல்லும் லாவகமும் இந்த நூல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறந்த பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.
25.3.2025.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
**************