7
ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதலாய், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் யாவும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான பலரும் இன்று விடுவிக்கபட்டே உள்ளனர்.
அர்ணாப்ஜெசிம் முதல் (579 நாட்கள் சிறையில்), சஹ்ரானின் மனைவி வரை கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று விடுதலைப்பெற்று உள்ளனர் (16.03.2023). இது போலவே, இஸ்புல்லா பல்கலைக்கழகம் முதல் அடிப்படைவாத பிரசுரங்களாக கருதப்பட ஜெசீமினது மடிகணனி, மற்றும் நூற்றைம்பது புத்தகங்கள் போன்றவையும் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது போக, இதுவரை பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும,; ஏற்கனவே பதிவுக்கோரி விண்ணப்பித்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெளியாகியுள்ள செய்திகளின் முக்கியத்துவம் இலகுவில் புறந்தள்ள முடியாதது. (விடிவெள்ளி:14.02.2023). (இச்சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் வழமையான துர்பாக்கிய நிலைக்குறித்த கேள்விகளை அவரவர் எழுப்பிக்கொள்வது அவரவர் விடயமாகின்றது.)
மேலும் சில மதங்களின் முன், ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளதையும் இதனுடனேயே, நாம் இணைத்து பார்த்தாக வேண்டியுள்ளது. “முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்’. (வீரகேசரி:23.10.2023).
இந் நடவடிக்கைகள் அனைத்தும், வெறுமனே முஸ்லீம் மக்களின் மேல் உள்ள மேலான, பாசத்தால் அல்லது பரிவால் செய்யப்படுகின்றதா அல்லது பல்வேறு உள்நோக்கங்களுடனும் திட்டங்களுடனும், முக்கியமாக ‘மறைகரங்களின் அழுத்தத்தால’ செய்யப்படுகின்றனவா என்பதே, எம்முன் இருக்கும், கேள்வியாகின்றது.
இஸ்லாமிய தீவிரவாதத்தை சிரியா முதல் ஈராக் வரை மத்திய கிழக்கில் பதியப் போட்டு, விதைத்து மகிழ்ந்தது, மேற்கத்தேய நாடுகளும் அன்று அவர்களின் முகவர்களாக செயற்பட்ட கட்டார்,சவுதி போன்ற நாடுகளும்தான் என்ற குற்றச்சாட்டு பல்வேறு ஆய்வுகளில் பட்டியலிடப்படுத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய தீவிரவாதம், எப்படி எப்படி பயன்படுத்தப்பட்டது, என்பதற்கான சான்றுகளாக, இன்றும், திகழ்கின்றது. இத்தகைய நகர்வுகளி;ல் குளறுபடி ஏற்படும் போதே, காசா போன்ற நகர்வுகள் முன்னெடு;க்கப்படுவதாய் மேற்படி ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இதுபோலவே ஆப்கான் விடுவிப்பு,மற்றும்,மியன்மாரின் ரோகின்;யா முஸ்லீம்களின் நீதிக்கான போராட்ட முன்னெடுப்பு - இவற்றுக்கூடாகவும், தமது ஐந்தாம் படைக்கான நபர்களை உருவாக்கி கொள்ளலாம் என்று அமெரிக்கா நம்புவதாய் தெரிகின்றது. (உக்ரைன் போன்றே).அண்மையில் நடந்தேறிய ஆப்கான் விடுவிப்பின் முன்னர் அமெரிக்காவானது, ஆப்கானின் தலீபானின் மூத்த தளபதிகளுடன் டோவாவில், எத்தனை சுற்றுப்பேச்சு வார்த்தைகளை நடாத்தினர் என்பது மேற்படி ஆய்வாளர்களின் ஆழ்ந்த கவனத்தை பெற தவறியதாய் இல்லை எனலாம்.
இவ்வடிப்படையில் நின்று பார்க்குமிடத்து, ஆப்கான் விவகாரங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவரும், அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தவருமான, வரவிருக்கும் இலங்கைக்கான புதிய தூதுவர் எலிசபத் ஹோர்ஸ்ட் கூறியுள்ள ஒரு கூற்று கருத்தில் கொள்ளத்தக்கது: “ஆப்கானானது, அமெரிக்க நலன்களுக்கான ஒரு அச்சுறுத்தல் என நாம் கருதமுடியாது” (Tolo News:14.07.2023). விடயம், அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையாத அதே நேரம் இந்திய நலன்களுக்கு இச்சக்திகள் அச்சுறுத்தலாய் அமையுமா– அப்படி அமையும் எனில், எப்புள்ளியில், இலங்கை அதில் இணையும், என்பதுவே பிரதான வினாவாகின்றது.
இவ்வகையில், ஓர் இஸ்லாமிய தீவிரவாதத்தின், முன்னால் இருக்கக்கூடிய அதன் பல்வேறு அரசியல் கடமைகளை கட்டுவிப்பது யார், எது எதற்காக என்ற கேள்விகள் இன்று ஆய்வாளர்களால் ஆழமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
சுருக்கமாக கூறினால், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் முதலாம் சுற்று முடிய, இன்று இரண்டாம் சுற்று ஆரம்பமாகி உள்ளதோ என்பதே இன்றைய கேள்வியாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், கண்களுக்கு எளிதில் புலப்படாத இஸ்லாமிய தீவிரவாதமொன்று, வௌ;வேறு நிகழ்ச்சி நிரல்களுக்காக யாரும் அறியா வண்ணம் தயார்படுத்தப்பட்டு,தீண்போட்டு வளர்க்கப்படுகின்றதா என்பதுவே கேள்வியாகின்றது.
இப்புள்ளியிலேயே மன்சூர் அவர்களின் கருதுகோளும் கேள்விக்கு உட்படுவதாய் இருக்கின்றது. அதாவது இலங்கையில் இனவாதம் மரணித்துவிட்டது என்ற எடுகோள். கடந்த தினங்களில் காத்தான் குடியில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்ட விடயமும் இதனுடன் சேர்த்து வாசிக்கத்தக்கதே எனலாம். (01.03.2024). (ஆனால் யாரின் அழுத்தத்தால் - அல்லது தூண்டுதலால் இக்கைதுகள் இடம்பெற்றன - இக் கைதுகளில் பிராந்திய வல்லரசின் பங்கேற்பு உண்டா – ஏனெனில் இதே தினங்களில் இரண்டு இந்திய போர் கப்பல்கள் இலங்கை வந்திருந்தது என்பது மாத்திரமல்லாமல், மூன்று மின்திட்டங்களும், வடக்கு தீவுகளில் ஸ்தாபிக்கப்பட, ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டது போன்ற உண்மைகளும் இணைத்து பார்க்கத்தக்கதுதான். இவை அணைத்தும், தொடர்புபட்ட விடயங்கள்தான் எனில், இக் கைதுகள், பூகோள அரசியலின் அழுத்தங்களை உள்ளடக்குவனதான் எனக்கூறப்படுவதில் பொருள் உண்டெனலாம். வேறு வார்த்தையில் கூறுவதாயின், தமிழருக்கு எதிரான இனவாதத்தை போல் முஸ்லீம் மக்களுக்கெதிரான இனவாதமும் இந்தியாவை பாதிக்க கூடியதா என்பது தற்போது கேள்வியாகின்றது)
8
இந்தியா தனது தூதுவர்களை இன்று மாற்றி உள்ளது போல (வடக்கிலும், தலைநகரிலும்) அமெரிக்காவும் தனது தற்போதைய தூதுவரை திருப்பி அழைத்து, பாகிஸ்தான்-ஆப்கான்-தலிபான்-அல்கொய்தா போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றுவரும், பெரும் அனுபவசாலியுமான எலிசபத் ஹோர்ஸ்ட்டை களமிறக்குகின்றது. இதனுடன், அண்மையில் இடம்பெற விருக்கும், நூலண்டின் பதவி துறப்பு சுருதி சேர்க்குமெனில், விடயங்களில் ஓர் புதிய அணுகுமுறை தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம். 2023இல், இருமுறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, இம் மூன்றாம் நிலை அமெரிக்க பெண் அதிகாரி பற்றிய தகவல்களும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கோட்டாவின் நூலிலும் இடம்பிடித்திருந்தமை குறிப்படத்தக்கதே. பல ஆய்வுகளின் பிரகாரம், அமெரிக்காவின் வெளிவுறவு கொள்கைகளை இவரே இதுவரை, கட்டுப்படுத்தியும், பெரிய அளவில் கட்டுவித்தும் வந்துள்ளார் என கூறப்படுகின்றது. இவரது பதவி விலகலானது, உக்ரேனிய போரின் ஏற்றத்தாழ்வுடன் இணைந்து காணப்பட்டது என கூறப்பட்டாலும், இந்துசமுத்திர பிரதேசத்தின், முக்கியமாக இலங்கையில் இனி அமெரிக்க நகர்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பதற்கான சுவாரஸ்யங்கள் இவரது பதவி விலகலுடன்; முடுக்கி விடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதாவது இந்நகர்வுகள், அனைத்தும், மேற்படி இரு நாடுகளும் (அமெரிக்கா-இந்தியா போன்றவை,) பின்பற்றவிருக்கும் புதிய நடைமுறைகள் பொறுத்து ஆருடம் கூறுபவனாக இருக்கின்றன.
9
இதேவேளை, 01.02.2024 முதல் அமுலுக்கு வந்துள்ள நிகழ்நிலை காப்புச்சட்டம் (Online Safety Act). இன்றுவரை வலுவிழந்ததாக ஆக்கப்படவில்லை என்பதும் அது,போதிய வலுவுடனேயே இன்றும் அமுல்படுத்தப்படவிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. அதாவது, இப்பிண்ணனியிலேயே, மன்சூர் அவர்கள் தமது கட்டுரையில் எழுதும், இரண்டாம் விடயம் சம்பந்தம் பெற்றுள்ளது : “சிங்கள சமூக ஊடகங்களுக்கும் பெரும்போக்கு ஊடகங்களுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் கடும் போட்டியில் சமூக ஊடகங்கள் “வெற்றியீட்டி” இன்று முன்னணியில் நிற்கின்றன”. என மன்சூர் வர்ணிக்கின்றார். ஆனால், இவ்வெற்றியின் பின்னணியிலேயே, ( ? ) நிகழ்நிலை காப்புச்சட்டம் எப்படி, இனி செயல்படுத்தப்படவிருக்கின்றது என்பதுதான் கேள்வியாகின்றது.
பாகிஸ்தானில், மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிநிரல்போல், இம்ரான்கான் கட்சி தடை செய்யப்பட்டு, நவாஸ்செரிப் களமிறக்கப்பட்டு பூட்டோ கட்சியினரும் ஆதரிக்கப்பட்டு தேர்தலின் பின்னர் இவையிரண்டும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு, இம்ரான்கான் சார்பானவர்களை தோற்கடித்த சம்பவமானதுஆதிக்க சக்திகளின் நகர்வுகளை சுட்டுவதாயுள்ளது. (இம்ரான்கான் கட்சி 116 ஆசனங்கள் : நவாஸ்செரிப், பூட்டோ கட்சியனர் ஸ்ரீ 82 10 54). இதுபோலவே, இலங்கையிலும் சஜீத்-ரணில்-பசில்-மஹிந்த போன்றோரின் இணைவு ஊக்குவிக்கப்பட்டு, அதற்கூடு, ஜே.வி.பிக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிகழ்ச்சிநிரல் ஒன்று கட்டுவிக்கப்பட போகின்றதா என்பது கேள்வியாகின்றது. (பாகிஸ்தானைப் போன்றே!).
மறுபுறத்தில் ஊடகங்கள் பலதும் சுட்டிக்காட்டி உள்ளது போல, சஜித்துடன் முன்னாள் இராணுவ அதிகாரிகள் (முன்னை நாள் இராணுவ தளபதி, முன்னை நாள் கடற்படை தளபதி)மற்றும் பல்வேறு இராணுவ அதிகாரிகள்,போன்றோர் இணைவதற்கான தூண்டுகோளை அளிப்பதன் மூலம,; சஜீத் கட்சியினரின் தோற்றப்பாடு புதிதாய் உருவாக்கப்பட்டு, எதிர்வரும் நகர்வுகளுக்காய் இப்போதிருந்தே புடம்போடப்படுகின்றதா – ஜே.வி.பிக்கு எதிராய் - என்பதெல்லாம் கேள்வியாகின்றது.
இச்சூழ்நிலையிலேயே, அதாவது தேர்தல் நடக்கும் ஒரு சூழலிலும்,இல்லாவிடின்,நடக்காத ஒரு சூழலிலும் நிகழ்நிலை காப்புச்சட்டம் இனி எவ்வாறு செயற்படுத்தப்பட இருக்கின்றது என்பது கேள்வியாகின்றது (செயற்படுத்தபடுமானால்). இப்புள்ளியிலேயே, பூகோள அரசியலும் அதில் பங்கேற்கக்கூடிய இஸ்லாமிய தீவிரவாதத்தின் பரிமாணங்களும் அதில் களமிறக்கப்பட கூடிய இலங்கையின் உள்நாட்டு நிலவரமும் முக்கியத்துவப் படபோகின்றன எனலாம். இவையே, மன்சூர் அவர்களின் இரு எடுகோள்களையும் கேள்விக்கு உட்படுத்தும் நிகழ்வுகளுக்காய் இருக்கப்போகின்றன என்பது தெளிவு. இதே வேளை கரிநாள் என்றும், யாழ் தேசிய எழுச்சி நாள் என்றும், சாந்தனின் இறுதி ஊர்வலம் என்றும், கட்டி எழுப்ப, முயற்சிக்கப்பட்ட தமிழ் தேசியவாதம் மன்சூர் கூறுவது போல் தென்னிலங்கையில் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை தராது, என்றால், ஜே.வி.பியின் வளர்ச்சியை இவை முடக்கபோதில்லை. ஆனால், திட்டமிடப்பட்ட ஒரு முஸ்லீம் இனவாதம் களமிறக்கப்படுமானால் அவை முன்னெடுக்கும் வினாக்கள் வித்தியாசம் பெற்றனவாக இருக்கும். இங்கேயே, இந்தியாவின் பங்களிப்பும் முக்கியம் பெறுவதாக இருக்கும்.
10
தேர்தல் நடக்குமென்றால், (முதலில் நடக்கவிருப்பது பாராளுமன்ற தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்ற தர்க்கத்தின்; மத்தியில்) நடைபெறும் விடயங்கள், தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதை கோடிட்டு காட்டுபவனாகவே அமைந்துள்ளன. மறுபுறத்தில், தேர்தலை ஒத்திவைப்பதானது பிரதேச வல்லரசின் கோபத்திற்கு ஆளாக்கி, அது நாட்டிற்கு பாரதூரமாக அமைந்து போகுமோ என்பதெல்லாம் அழுத்தமான கேள்விகள் ஆகின்றன.
இச்சூழ்நிலையில், அப்படியே ஓர் தேர்தல் நடக்கத்தான் நடக்கப்போகின்றது என்றால் அதற்கேற்றவாறு மக்களின் மனநிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு உள்ளது. இதற்கு முன்பாக, கட்சிகளின் தோற்றப்பாடு வெகுகவனமாய் பார்த்து, கவனித்து, சீர்த்திருத்தப்பட வேண்டிய தேவை உண்டு. எனவேத்தான், ஒருபுறத்தில், ஜே.வி.பியினர் கூட, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட அழைக்கப்படுவதும், மறுபுறத்தே தமிழ் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விக்னேஷ்வரன் தலைமையில் ( ? ) பேச்சுவார்த்தை நடாத்த அழைக்கப்படுவதும் நடந்தேறுகின்றது (வீரகேசரி : 17.03.2024).
இவ் உரையாடல்கள், தென்னிலங்கை-வடகிழக்கு, மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களை மனமாற்றங்களுக்கு உட்படுத்தும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்கையில், வெடுக்குநாறி மலையில், ப10சகர் உட்பட, எண்மரை தூக்கிச்சென்று, நீதிமன்ற காவலில் இருத்துவதும் தேவையாகின்றது, (தென்னிலங்கை பார்வையில்). இத்தகைய ஒரு சூழலில், தமிழ் தேசியம், தனது வழமையான தனிபாட்டான சர்வஜன வாக்குரிமை பாடலை பாடவும் (தமிழ் பொது வேட்பாளரை) அவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தவும் – (14.03.2024:தினக்குரல்) பின்தான் சில காலத்தின் முன்தான், புதிதாய் பாட ஆரம்பித்த இந்திய சார்பு பாடலை உடனடியாக நிறுத்தி (இந்த பழமும் புளிக்கும் என்பதுப் போல்) இந்திய எதிர்ப்புவாத பாடலை “இவர்கள் தாம் எமது பிரதான எதிரிகள்”; (15.03.2024: தமிழ்வின் : கலாநிதி அருஸ்) என்ற பாடலைக் தற்போது கண்டுபிடித்து பாட ஆரம்பித்துள்ளதும் வேதனைக்குரியதுதான். காரணம், இக்குளறுபடிகள் யாவும் மக்களை, யாரை நோக்கி, நெட்டி தள்ளக்கூடியது என்பது வெளிப்படையானதாய் இருக்கின்றது.
உதாரணமாக, அண்மையில் இடம்பெற்ற, முற்ற வெளி விமானப்படை கண்காட்சியில் குறைந்தபட்சம் 70,000 மக்கள் கலந்து கொண்டனர் என்ற செய்தியும் (முரசு:17.03.2024), ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் தொகை, இது போலவே பல ஆயிரங்கள என்பதும் அதிர்ச்சியை தருவதாகவே உள்ளது (தேசியத்தின் பின்னணியில்). இதற்கு பக்கத்திலேயே, வெடுக்குநாறி எதிர்ப்பு போராட்டங்களில், அல்லது சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் திரள்வு, சில நூறுகளை தாண்டவில்லை என்ற செய்தியும் மனதை வருத்துவதுதான். (பெரிய ஊடகங்கள் இது பொறுத்து உண்மை செய்திகளை வெளியிட்டாலும், வெளியிடாவிட்டாலும்). இவை அணைத்தும், புலம்பெயர் அரசியல் அல்லது அவர்களின் உள்நாட்டு முகவர்கள் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளானவை தமக்கு தோதானவை அல்ல என்பதனை மக்கள் ஆழமாகவே உணர தலைப்பட்டுள்ளனர் என்பதினையே எடுத்துரைக்கின்றது. வேறு வார்த்தையில் கூறுவதனால், தர்க்கங்கள், காகிதங்களில் சரியாக இருப்பினும், அவை நடைமுறை யதார்த்த சூழ்நிலையிலிருந்து அந்நியப்பட்டதாகவே இருப்பதாய் இருக்கின்றன. இந்நகர்வுகள் எந்த மறைக்கரங்களால், யாரால் இயக்குவிக்கப்படுகின்றன என்பதனைப் போன்ற ஆழமான கேள்விகளை மக்கள் கேட்காவிட்டாலும், வெடுக்குநாறி அல்லது குருந்தூர் மலை அல்லது மயிலத்தடு மேய்ச்சல் நிலங்கள் போன்ற கேள்விகளுக்கிடையே, இப்புலம்பெயர் அரசியல் முன்னெடுக்கும் நகர்வுகள் எங்குள்ளன என்பது குறித்து மக்கள் ஆழமாக சிந்திக்க முற்பட்டுள்ளனர் என்பதினையே இந்நிகழ்வுகள் காட்டுவதாய் உள்ளன.
அதாவது, மக்களின் மனநிலையில் சாந்தனின் தியாகம் குறித்த தோற்றப்பாடு, ஆழ இருப்பினும் அது தற்போதைய அரசியல் வெளிப்பாட்டு அர்த்தங்களுடன் இணைவதாக இல்லை. இச்சூழலிலேயே, சில ஊடக ஆய்வாளர்கள், இதன் காரணத்தாலேயே, சில சமயங்களில், பொய் புகட்டவும் ஆளாகி விடுகின்றனர். உதாரணமாக, சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளிவந்த பின்வரும் கூற்று அதிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது. “சாந்தனின் நிகழ்வில் அரகலய போராட்டத்திற்கு சிங்கள மக்கள் திரண்டது போல், தமிழர்கள் திரட்சி பெற்றனர் என்பது இந்தியாவால் புரிந்த கொள்ளப்பட வேண்டும்.” (கணேஷலிங்கன்: தினகுரல்:10.03.2024)
இந்த பொய்மைகளையும் மக்கள் ஏதோ ஒருவகையில் உணரவே செய்கின்றார்கள். இது அவர்களை மேலும் மேலும் அந்நியப்படுத்திவிடும் போக்காகின்றது. இருந்தும் தேர்தல் தொடர்பான ரணிலின் நகர்வுகள், மேலே கூறியவாறு, கச்சிதமாகவே இருக்கின்றன. 180,000 மில்லியன் திறைசேரி முறிகளை, மீண்டும் கடந்த புதனன்று (13.03.2024) விற்றுதீர்த்து, தேர்தலுக்கு தேவைப்படும் பணத்தை திரட்டி, மின்சாரக் கட்டணம் அல்லது செலவு பொருட்கள் - இவற்றின் விலைகளை 'தற்சமயத்திற்கு” குறைப்பது போல் குறைத்து, தேர்தலுக்கு மக்களை ‘தயார்’ செய்து, தேர்தலின் பின் நாடு செல்லவேண்டிய பொருளாதார அல்லது அரசியல் பாதையை மாற்ற முடியாதவாறு வெகு ஆழமாய் இருத்திவிட அவர் மேற்கொள்ளும் இன்றைய நகர்வுகள் அனைத்தும் வெகு கச்சிதமாகவே இருக்கின்றன.
காசாவில் நாளொன்றுக்கு சராசரியாக அறுபத்து மூன்று பெண்கள் உயிரிழக்கின்றார்கள் என்பது போன்ற செய்திகளை புறந்தள்ளும் முகமாக (தினக்குரல் :11.03.2024) மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், தோட்டா ஒன்றை தனது பயணப்பொதிகளில் “மறைத்து” ( ?) வைத்திருந்த இஸ்ரேலிய பெண் வீராங்கனை ஒருவரை ( மறுபுறத்தில், இலங்கை அண்மையில் இஸ்ரேலுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளது என்பதும்- 22.03.2024 ராய்டர் செய்திகளின்படி - 2022 பதிவுகள் படி, இஸ்ரேலில் ஏற்கனவே 4.1 மில்லியன் இலங்கையர் தொழில் புரிகின்றனர் என்ற உண்மையும், சேர்த்து வாசிக்கத்தக்கதே.), விமானநிலையத்தில் வைத்து கைது செய்வதற்கூடு (விடிவெள்ளி:07.03.2024) உள்ளுர்-சர்வதேசிய-மத்தியகிழக்கு-தலையசைவை தனக்கு சார்பாக வளைத்து போட்டுக்கொண்ட பெருமையும், பனங்காட்டு நரியான (கலாநிதி அமீர் அலியின் வார்த்தையில்) ரணில் தேடிக்கொள்ளவே செய்துள்ளார்.
இது போன்றே இலங்கையில், “சீனத்தின் இராணுவத்தளங்கள் அமைக்கப்படவிருக்கின்றது” என அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் கூறுவதும் (15.03.2024), “இலங்கை-இந்திய வர்த்தக உறவானது மேம்பட வேண்டி உள்ளது” என ரணில் மறுதினம் கூறுவதும் (16.03.2024) “தென்னிலங்கையின் சில்லறை விவகாரங்களில் தலையிட போவதில்லை” என சபாநாயகருக்கு எதிரான முன்மொழிவுகளில் விக்னேஸ்வரன் கூறுவதும் (17.03.2024) பின் விக்னேஸ்வரனின் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து வெடுக்குநாறி மலை தொடர்பில் சிறைவைத்துள்ள எண்மரின்; கதியைப்பற்றி ஆலோசிப்பதும், எமது உள்ளுர்-சர்வதேசிய-பிராந்திய வல்லரசின் தற்போதைய நிலவரங்களை காட்டுவதாயுள்ளன.
பாகிஸ்தானின் இம்ரானகான்; கூறுவார்: “பாகிஸ்தான் இலங்கையைப்போல் ஆகிக்கொண்டிருக்கின்றது” என “இலங்கை, பாகிஸ்தான் போல் ஆகிக்கொண்டிருக்கின்றது” என்று இங்கிருந்து ஒரு கூற்றும், எழவே செய்கின்றது. இரண்டுமே ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுதான் என்றாலும் அதையே இக்கட்டுரையும் வாதிக்க முற்பட்டுள்ள சாரம்ச விடயமாகின்றது – முக்கியமாக மன்சூர் அவர்களின், எடுகோள்களின் பின்னணியில்.
தொகுப்பு :
1. மன்சூரின் கட்டுரை கூறும் இரண்டு விடயங்கள்:
I. இனவாதத்தின் தோல்வி.
II. சமூக வலைத்தளங்களின் எழுச்சியும், அவற்றின் வெற்றியும்.
2. இனவாதம், இந்நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் தாக்குவதாய் உள்ளது. ஒன்று, தமிழ். மற்றது முஸ்லீம் மக்கள்.
3. அரகல அல்லது ஜே.வி.பியின் அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால், இனவாதமானது கட்டவிழ்கப்பட வேண்டிய தேவை உண்டு.
4. தமிழருக்கு எதிராக கட்டவில்கப்படும் இனவாதமானது இந்தியா நகர்வுகளில் அல்லது இந்தியாவில் இருவகை தாக்கங்களை உருவாக்கக்கூடியது.
5. ஒன்று நீள்தூர, நிறந்தர பாதிப்பு கொண்டது. மற்றது உடனடி பாதிப்புக்களை வெளிப்படுத்தாதது.
6. ஆனால் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாதம் வித்தியாசம் கொண்டது.
7. அதன் பரிமாணங்களும், வேர்களும், மறைகரங்களும் உலகளாவியது.
8. இது போன்றே தமிழருக்கு எதிரான இனவாதமும் இன்று பல வேர்களை கொண்டதாய் கிளைத்து பரவுகின்றது.
9. இவை மன்சூரின் கட்டுரையில் கூறப்படும் எடுகோள்களை கேள்விக்கு உட்படுத்துவதாய் உள்ளன.
10. இச்சூழ்நிலையிலேயே, இலங்கையில் தேர்தல் ஒன்று நடக்க இருக்கின்றது.
11. ரணிலின் மீள் எழுச்சியும் அது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நகர்வுகளும், சர்வதேச ஒத்துழைப்புடன், ரணிலால் முன்னெடுக்கப்படுவதாய் தெரிகின்றது.
12. 2024, டிசம்பர் வரையிலும் ஐம்பது உல்லாசபுரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று கணக்கிடப்படுகின்றது. அது இலங்கையில் இருந்து மாலைத்தீவை சென்றடையும் என்றும் கூறப்படுகின்றது.
13. அதாவது, உல்லாச பயணிகளின் செலவில், ஒரு பூகோள அரசியலும் ஓர் உள்நாட்டு அரசியலும் (தொடர்புபட்டதுதான்) கட்டி வளர்க்கப்படுவது சம்பந்தப்பட்டவர்கள் அறியாமலேயே.
14. இவ்வகையில் தமிழ் புலம்பெயர் அரசியலின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கதாகின்றது.
15. ஆக இனவாதமும், உல்லாச பயணிகளும,; திறைசேரி முறிகளும் ரணிலின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிளாகின்றன.
16. இந்நகர்வுகளை, ஜே.வி.பியின் அரசியலும் இந்திய நகர்வுகளும் எப்படி கையாள இருக்கின்றன என்பது இரசனைக்குரிய ஒன்றாக இருக்க கூடும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.