I
கீழே காணக்கிட்டும், மூன்று அவதானிப்புகள், ஓரளவில், வரலாற்று முக்கியத்துவம் கொண்டன. ‘வீரசேகரியின்’ பத்தி எழுத்தாளர் ‘கபில்’ பின்வருமாறு தெரிவித்திருந்தார்:
“அண்மை காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் செல்நெறி குறித்து, தமிழ் மக்கள் ஆழமான அதிருப்திகளையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர்…. தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையில் முட்டிக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களால், தமிழ் மக்கள் சோர்வடைந்து இருக்கின்றார்கள்….” (வீரகேசரி : 08.10.2023)
இவ் அவதானிப்புக்கு சமதையாக, அரவிந்தன் எனும் போராளி, இரு கிழமைகளுக்கு முன்பு தனது நீண்ட பேட்டி ஒன்றினை வழங்கும் போது குறிப்பிட்டிருந்தார் : “நாம் முட்டாள் சமூகமாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றோம் - முட்டாள் தனமாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்”. (YouTube பேட்டி :- 30.09.2023)
“தற்சமயம் , தமிழ் மக்களுக்கு தலைமை இல்லை. கூட்டு தலைமைதாணும் கிடையாது. மேய்ப்பவரற்ற மந்தைகள் போலிருக்கின்றார்கள்”. (திபாகரன்: 15.10.2023:தமிழ்வின்)
மேற்படி மூன்று கூற்றுக்களிலும், மூவரதும் வேதனைகள் பிண்ணிப்படர்வதாக உள்ளது வெளிப்படை.
இவ் அவதானிப்புகளுக்கு தளம் அமைப்பது போல், பின்வரும் இரு செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
‘தினக்குரலின்’ தலைப்பு செய்தி பின்வருமாறு குறித்தது: “09 பேர் கொண்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு வரைபில், 13வது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட வில்லை” (ஞாயிறு தினக்குரல் : 15.10.2023)
இதே போன்ற இன்னுமொரு செய்தி : "எந்தவொரு தமிழ் கட்சியையும் சந்திக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் மறுப்பு தெரிவித்து விட்டார்”.
அதாவது, கபிலின், அரவிந்தனின், திபாகரனின் வேதனைகள், நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாள்தோறும் வளர்ந்து வரும் இனவாதத்தை கோடிட்டு காட்டுகையில், அதே பத்திரிக்கையானது, பிரிட்டனின் ‘இந்து–பசுபிக்கான அமைச்சரை சந்தித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் (சி.வி. விக்னேஸ்வரன் ஐயா உட்பட) பின்வரும் கூற்றை தெரிவித்துள்ளதாக, மற்றுமொரு செய்தியை வெளியிட்டுள்ளது: “ஜெனிவாவில் மீண்டும் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை”. (ஞாயிறு தினக்குரல் : 15.10.2023)
ஒரே பத்திரிக்கையில் வந்த, இவ்விரு செய்திகளையும், இனைத்து பார்க்கும் போது, தமிழருக்கெதிரான இனவாத்தின் தொடர்ச்சி, இலங்கையில் தீவிரமாக, பரவிக்கொண்டிருக்கும் போது, இதனை தமிழர்கள் தமக்கு பாதகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று நினைத்தோ என்னவோ, இம் மேற்கு நாடுகள், தத்தமது அதிகாரிகளை முடுக்கி விட்டு, வடக்கு சார்ந்த அரசியல் கட்சிகளுடன் ஒரு சந்திப்பை காலத்துக்கு காலம், நடத்தி முடித்து ‘விடயத்தின்’ சூட்டை தணியாது வைத்திருப்பதில் கைதேர்ந்த தமது நேர்த்தியினை காட்டி உள்ளனர். இது தீபாவளி, பொங்கல் திருநாட்களில், சர்வதேசத்து தலைவர்கள், தமது மழலை தமிழில், தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் வாழ்த்து செய்தி போன்றதாகும். 13 அகற்றப்பட்டதன் பின்னணியில், இலங்கைக்கு எதிரான இப்புதிய பிரேரணை குறித்து, தமிழர்கள் புல்லரித்து போகலாம். மொத்தத்தில் கபிலின் வருத்தங்கள், அரவிந்தனின் கொந்தளிப்புகள், போன்றவை, விக்னேஸ்வரன்-சித்தார்த்தன் இவர்களின் ‘நற் செயல்களால்’ விளையக்கூடிய இப் புதிய பிரேரணை - இவை அனைத்தையும் தொடக்கூடிய விடயங்களையே, கட்டுரை தொடரின், இப்பகுதி வினவ தலைப்பட்டுள்ளது எனலாம்.
II
ராமாயணத்தின் வதை படலம் போன்றே, சிறுபான்மையினர்களின் சிதைப்பு படலம் என்பது, இன்றைய உலகில், ஆட்சியாளர்களால் கை கொள்ளப்படும் ஓர் உலகலாவிய நடைமுறையாகின்றது.
“சிறுபான்மை இனங்கள்” அல்லது “சிறுபான்மைகள்” என்ற பதம் மதம் சார்பானதாகவோ அன்றி இனம் சார்பானதாகவோ அன்றி மொழி சார்பானதாகவோ அல்லது இன்னும் வௌ;வேறு சமூக ஏற்ற தாழ்வுகள் சார்ந்ததாகவோ இருக்க வாய்ப்புண்டு.
தேவை, சிதைப்பை ஏற்படுத்தி, அதற்கூடு, தேவையுறும் ஓர் அரசியல் சுவாத்தியத்தை அல்லது அரசியல் சூழலை அல்லது அரசியல் பிரக்ஞையை அல்லது அரசியல் மன மாற்றத்தை கொணர்ந்து சேர்;த்து, பின் அதனை ஆழ வேரூன்ற செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகின்றது.
சுருக்கமாக கூறினால் ‘அரகல’ ஏற்படுத்திய அரசியல் சூழல் மாற்றமடைய வேண்டுமாயின், அரசியலில் புதிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும் என்றாகின்றது.
இதன்போது, ஒரு சாராசரி சரவணராஜாவின் நாடு கடத்தல், (அல்லது தப்பி செல்லல்) போன்ற விவகாரம் என்பது, குறித்த சங்கிலி கோர்வையின் ஒரு கண்ணியே தவிர பெரிதாக ஒன்றும் இருக்க போவதில்லை.
அதாவது, திலீபனின் நினைவேந்தல் ஊர்வலத்தின் போது செல்வராசா பொன்னம்பலம் தாக்கப்பட்டது முதல் குருந்தூர் மலை அல்லது மயிலத்தமடு காணி கைப்பற்றல் வரை அனைத்துமே இதே சங்கிலி கோர்வையின் வெவ்வேறு கண்ணிகளாகின்றன.
இனி, சர்வதேசமும் சரி அல்லது எமது ஆட்சியாளர்களும் சரி மேற்படி அரசியலை கட்டுவிக்க அல்லது உசுப்பேற்ற அல்லது உக்கிரப்படுத்த, இத்தகைய சம்பவங்கள் எவ்வாறு பாவிக்கப்படலாம் அல்லது பயன்படுத்தபடலாம் என்று பார்ப்பார்களே அன்றி – இவற்றை தணிக்கும் கோணத்தில் இவற்றை அணுகுவது, அவர்களை பொறுத்தவரை முற்று முழுதான அசட்டுத்தனமாகவே காட்சி தரும். இது சர்வதேசத்துக்கும், இலங்கை அரசுக்கும் பொருந்தும் என்பதை, வரலாறு எமக்கு சுட்டியுள்ளது.
இவற்றை விடுத்து, நேரு குணரட்ணம் போன்றவர்கள் (கனடா) நீதிபதி சரவணராஜாவின் விடயமானது சர்வதேசத்திடை ‘கடும் கோபத்தை’ இன்று ஏற்படுத்தியுள்ளது அல்லது சித்தார்த்தன்- விக்னேஸ்வரனின், ஐ.நாவில் ‘புதிய பிரேரணை தயாராகின்றது’ போன்ற அறிவிப்புகள் அனைத்தும் பேதமை வகை சார்ந்தது என்பது தெளிவு. (குணரட்ணம் பேட்டி : தமிழ்வின் : 02.10.2023)
ஏனெனில், முள்ளிவாய்க்கால் தொடக்கம் ராஜ் ராஜரட்ணம் (Insider Trading) வரையிலான நிகழ்வுகளால் “கடுங்கோபம்” கொள்ள மறுத்து விட்ட சர்வதேசம் இப்போது சரவணராஜா விடயத்தில் “கடுங்கோபம்” கொள்கிறது என்று கூற விழைவது, அரங்கேறும் பூகோள விவகாரங்களை ஆழ்ந்து நோக்குமிடத்து, பேதைமை நிறைந்த கூற்றாகவே தென்படுகின்றது.
ஏனெனில், இத்தகைய நிகழ்வுகள் நடக்கவே நடக்கும் என்பதனை இச்சக்திகள் முன்கூட்டியே அறிந்து, திட்டமிட்டே, பிரஞ்ஞை ப10ர்வமாக செயல்படுகின்றன.
இச்சூழலை கட்டமைப்பதில், தலையாய பங்கினை வகித்தவர்களும், வகிப்பவர்களும் இவர்களே அன்றி பிறிதெவரும் இருப்பதாய் இல்லை.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, சர்வதேச நிதி நிறுவனத்தின், வரவும் செயற்பாடுகளும் இலங்கையில் ஆராயப்பட வேண்டியுள்ளது என சர்வதேசத்து ஆய்வாளர்கள் கடுமையான தொனியில் கருத்து தெரிவித்துள்ளனர்.
III
கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்தின் முன்னாலேயே சர்வதேச நிதி அமைப்பானது, இலங்கையுடனான தனது 16வது சுற்று பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்திருந்தது. மேற்படி பேச்சுவார்த்தைகள், இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும், மூன்று கோடி டாலர் கடன் உதவி சம்பந்தமானது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு மேலாக, இடம்பெற்ற, இவ் இழுப்பறியின் இறுதியில், முதல் கொடுப்பனவான 330 மில்லியன் டாலர்களை, சர்வதேச நிதி நாணயசபை, இலங்கைக்கு வழங்கியது. (மார்ச் - 2023)
இதனை தொடர்ந்து, கடந்த மாதம், செப்டெம்பர் 2023இல், நடந்த பத்து – தின – பேச்சுவார்த்தையின் இறுதியில் (செப்டெம்பர் 14 – 27), தரப்பட வேண்டிய இரண்டாவது கொடுப்பனவான 330 மில்லியன் டாலரை கொடுப்படுவதை, சர்வதேச நாணய சபையானது தற்சமயம் பின்தள்ளி போட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்குரிய காரணத்தை, சர்வதேச நாணய சபை சரிவர அறிவிக்கவில்லை என்றாலும் ‘சூழல்’ சரியாக அமையாததுதான் என விளக்கமளிக்கபட்டுள்ளது.
மொத்தத்தில் கடந்த வருட தொடக்கத்தில் இருந்தே (அதாவது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்தே) இலங்கையின் அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் மாற்றம் கண்டு வருவதாய் இருந்தது.
சுருக்கமாக கூறினால், இலங்கை தனது வங்குரோத்து நிலையை, உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து, தனது கடன் செலுத்தும் பொறுப்பில் இருந்து, தன்னை விலக்கி கொள்வதாக அறிவித்த நாள், கடந்த வருடம் ஏப்ரல்-12 ஆனது.
ஆனால், ஏப்ரல் 12 ஆகுகையில், இதே சர்வதேச நாணயசபை, இலங்கையுடனான தனது 15 அல்லது 16 சுற்று பேச்சுவார்த்தையை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடித்திருந்தது.
எனவே, இலங்கையில் நிலவிய பொருளியல் நிலைமையை அல்லது இலங்கை சென்றடைய இருக்கும் இந்நிலைமையை, சர்வதேச நிதி நிறுவனம் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது என்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றே பொருளியல் வல்லுனர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில், இலங்கை தனது, மேற்படி வங்குரோத்து நிலையை அறிவித்த சூழல் கூட சற்று கேள்விக்கிடமானது என இதே வல்லுனர்கள் வாதிட தலைப்பட்டினர். உதாரணமாக, இலங்கையை சார்ந்த கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் இது பொறுத்து ஆழமான கேள்விகளை எழுப்ப தவறினார் இல்லை.
இலங்கையானது, கோவிட் பெருந்தொற்றை காரணம் காட்டி தனது கடன் பொறுப்பில் இருந்து விடுபட்டிருக்கலாம் அல்லது உண்மையில், தன் கடன் பொறுப்புகளை செலுத்தவே செலுத்தி இருக்கலாம் - அந்தளவில் இலங்கையின் வருமானமானது குறிப்பிட்ட காலப்பகுதியில் போதுமானதாகவே இருந்தது என்பது இவரது வாதமாகியது.
ஆனால், இவ்விரண்டில் எதனையுமே இலங்கை செய்ததாகவும் இல்லை செய்ய முனைந்ததாகவும் இல்லை. மாறாக, வங்குரோத்து நிலையை அறிவிப்பதில் அவசரத்துடனான ஒரு வித மகிழ்வையே இலங்கை ஏந்தியதாக தெரிந்தது.
வங்குரோத்து நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மூன்றே மாதங்களில் (14.07.2022) ஜனாதிபதி கோட்டபாய தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதாவது, முதலில் வங்குரோத்து நிலை! பின்னர் அரகல!! பின்னர் ராஜினாமா!!! அதாவது தனது 15-16-வது சுற்று பேச்சு வார்த்தையை முடித்திருந்த சர்வதேச நாணயசபை இவ் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான வழிவகைகளை முன்வைத்ததா அல்லது ஆய்ந்ததா அல்லது குறைந்தபட்சம் தொடமுனைந்ததா-அப்படி எனில் மக்களுக்கு ஏன் இது அறிவிக்கப்படவில்லை என்பது, பொருளியல் வல்லுனர்களின் கேள்வியானது.
இவை ஒரு புறம் இருக்க, தற்சமயம் எழுத்துள்ள இரண்டாவது கொடுப்பனவு சம்பந்தமான தற்போதைய இழுபறியின் இடையே, ஜனாதிபதி அவர்கள், அமெரிக்காவில் இருந்து வந்ததும் வராததுமாய், சீனா நோக்கிய பயணத்துக்கான தயார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால், இலங்கையின் திறைசேரி முறிகளை விற்று தீர்த்து, நாடகமாடிய நபர்களின் செயற்பாடுகளில் தலையிடாது அவர்களின் செயற்பாடுகளை ஊக்குவித்து, நாட்டை நாணய சபையின், கடந்தகால பொருளியல் நெருக்கடிக்குள் தள்ளி, அதற்கூடு முன்னமே நிர்ணயிக்கப்பட்ட, ஒரு ‘பொறியில்’ இலங்கையை திட்டமிட்ட ரீதியில் சிக்கவைப்பதே இந்நகர்வுகளின் மொத்த பெறு பேறாகின்றது என்பதே இவ்வல்லுனர்களின் தர்க்கமாகின்றது.
அதாவது, ஒருபுறம் ‘பொருளாதார நெருக்கடி’ மறுபுறம் ‘அரசியல் பொறி’ – ஒற்றைக் கல்லில் இரண்டு மாங்காய்கள்.
இச்சூழலிலேயே, நாடகத்தின் பின் நாடகமாய், அரசியல் எதிர்வெடிகள் இன்றும், இலங்கையில் நாள் தோறும் அரங்கேறுவதாய் உள்ளன.
IV
சீனாவின் நகர்வுகள் ஒரு ‘கடன் பொறி’ என வர்ணிக்கப்பட்டிருந்தாலும், இலங்கையை ‘வங்குரோத்து’ நிலைக்கு தள்ளியது, உண்மையில், திறைசேரி முறிகளை விற்று தள்ளியதால் எழுந்த ‘பொறியே’ ஆகும். (பொருளாதார புள்ளி விபரங்களின்படி)
அதாவது, ‘இரண்டு பொறிகள்’ செயற்பட்டவாறு இருந்தன. ஒன்று, 8.7 ட்ரில்லியன் ரூபாய் பெறுமானமுள்ள திறைசேரி முறிகளை, விற்று தள்ளி, நாட்டை படு பாதாளத்துள் தள்ளிய ஒரு “பொறி.”
மற்றது, சீனத்தின் கடன் பொறி என சர்வதேசத்து ஊடகங்களால், குறிப்பாக இந்திய ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட ‘சீனக் கடன் பொறி’.
இருக்கலாம். ஆனால், விடயம் இவ்வாறு இருக்குமெனில் இது, இவ்விரு கடன் பொறிகளுக்கிடையே நிகழும் போட்டியாக தொழிற்படவும் வாய்ப்புண்டு.
இப்பின்னணியில், சம்பந்தப்பட்ட சக்திகள் (சீனாவும் மேற்கும்) ‘பொருளியல்’ லாபத்தை மாத்திரம் கோருபனவாக தெரியவில்லை. மாறாக இவை ஓர் ‘அரசியல் மாற்றத்தையும்’ விரும்புவதாகவே தெரிகின்றது.
அதாவது, குறித்த ஒரு கடன் பொறியானது, எப்படி ஒரு நாட்டை, ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி எவ்வாறு இறுதியில் ஓர் ஆட்சி மாற்றத்தையும், கொணர்ந்து சேர்க்கின்றது என்பதும் அதற்கு முன்னதாக, இவ் ஆட்சி மாற்றத்திற்கு, உகந்த அரசியல் சூழ்நிலைகளையும் அல்லது அரசியல் சுவாத்தியங்களையும் அது எப்படி ஏற்படுத்தி கொள்கின்றது –அதன் பின், தோதான தனக்கேற்ற, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் இவ், ஆட்சி மாற்றத்திற்கு உதவிய அரசியலானது எவ்வகையில் இல்லாதொழிக்கப்பட்டு, பொருத்தமாக பிரதியீடு செய்யப்படுகின்றது என்பதெல்லாம் அரசியல் அவதானிகளின் சுவாரசியமான கேள்வியாகின்றது.
சர்வதேச நாணய சபையானது இவ்வகையில், சர்வதேச ரீதியாகவே, பொருளாதார நெருக்கடிகளை அல்லது பொறிகளை உருவாக்கி, பின் எப்படி தமக்கு தோதான அரசியல் சுவாத்தியங்களை கட்டமைக்கின்றது என வாதிடும் இவ் ஆய்வாளர்கள் உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் தலைவிதிகளை உதாரணமாக காட்டுவர்.
V
2014இல், ரஷ்ய–உக்ரைன் போர், களைக் கட்டுவதற்கு முன்பாக, சர்வதேச நாணய சபையானது 14–18 பில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது.
1992இல், வெறும் 2.2 பில்லியன் டாலராக இருந்த, நாணய சபையின், கடனுதவி 2008 இல் 16.4 பில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டிருந்தது. (அதாவது, 14.2 பில்லியன் டாலர்கள் மேலதிகமாய்!) ஆனால், 2014 இல், எரிவாயுக்கான கட்டணத்தை உக்ரைன் 50மூ வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நாணய சபை 2015 இல் 17.5 கோடி டாலரை உக்ரைனுக்கு வழங்க போவதாக அறிவித்திருந்தது. (படிப்படியாக பொறிக்குள் விழுந்தப்பின்..)!
இவ் ஊடாட்டங்களின் இடையே எழுந்த அரசியல் நெருக்கடிகளின் போது உக்ரைனினது, ரஷ்ய சார்பு ஜனாதிபதி ஆயுஐனுநுNஇ போராட்டத்தின் போது துரத்தியடிக்கப்பட்டார். (கோட்டாபாய துரத்தியடிக்கப்பட்டது போன்றே). (தலைவர்கள், இவ்வகை பொறிகளின் போது துரத்தி அடிக்கப்படுவது சகஜமே.) இதன் பிறகு நடந்த எண்ணற்ற பொருளியல் -அரசியல் நகர்வுகளின் “பின்னர்,” இறுதியில், செலன்ஸ்கி பதவியேற்றார். ரஷ்யாவும் தனது போரை 2022 இல் ஆரம்பித்தது. இது, உக்ரைனின் பொறி கதையானது.
இது போலவே, பாகிஸ்தானிலும், 2008இல் வரலாறு காணாத 7.6 பில்லியன் டொலர்களை பாகிஸ்தானுக்குத் ‘தந்துதவ’ நாணய சபை ஒப்புக் கொண்டது. ஆனால், ஐந்து வருடங்கள் கழிந்து, 2013 ஆன போதும் நாணய சபையானது, பாகிஸ்தானுக்கு 43 லட்சம் டாலர்களையே கடனுதவியாக வழங்கி இருந்தது. அதாவது, பாகிஸ்தானை, 7.6 பில்லியன் டாலர்களை நோக்கி, வாய் பிளக்க வைத்துவிட்டு, நகர்வுகள் ஆரம்பமாகி இருந்தன.
பத்து வருடங்களின் பின், 2018இல் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்று, நாணய சபையை அவர் புறக்கணித்து, கடன் உதவிகளுக்காக சவுதி அரேபியா, எமிரைட்ஸ், சீனா போன்ற நாடுகளை, (நாணய சபையின் அசுர பிடியிலிருந்து விடுபடவும், அது விதிக்க கூடிய நிபந்தனைகளை புறந்தள்ளவும்) நாடி ஓடினார் என்பது பதிவு.
ஆனால், இம்ரான், இந்நகர்வுகளை மேற்கொண்டு சரியாக ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், பாக்கிஸ்தானின், பொருளாதார பொறியும், ராணுவ அமைப்பின் பொறியும் கழுத்தை நசுக்கி தள்ள, இம்ரான் அரசு, 22வது தடவையாக, மீண்டும் நாணய சபையை நெருங்கி பாகிஸ்தானுக்கு ஒரு கோடி டாலரை, தந்துதவுமாறு கெஞ்சியது.
ஆனால் சபையோ எரிபொருள் சலுகைகளை வெட்டி எறியும் படியும், வரிகளை அதிகரிக்கமாறும், பொது சொத்துக்களை தனியார் மய படுத்துமாறும் நிபந்தனைகள் பலவற்றை இம்ரான் கானுக்கு விதித்தது. (உக்ரைன் போன்றே)!
இறுதியில் 30.06.2023 இல் சபையானது பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தது. அதாவது, இப்போது சபையானது மூன்று கோடி டாலரை பாகிஸ்தானுக்கு வழங்க சம்மதித்தது. ஆனால் இச்சம்மதம் இடம் பெற இரு மாதங்கள் இருக்கும்போதே பாகிஸ்தான் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான்கான், ஒரு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பால் நீக்கப்பட்டார். பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இதுவே சபையானது பாகிஸ்தானை வெற்றி கொண்ட வரலாறானது.
சுருக்கமாக கூறினால், அது உக்ரைனாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் அல்லது இலங்கையாக இருக்கலாம் - ஆங்காங்கே தகுந்த பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி, பொறிகளுக்குள் அந்நாடுகளை சிக்க வைத்து பின் ஏற்ற அரசியல் மாற்றங்களை அவ்வவ் நாடுகளில் அவிழ்த்து விடும் போக்குகள் கைகொள்ளப்பட்டன.
உக்ரைனானது, ரஷ்யாவுக்கு எப்படி ஒரு சிம்ம சொப்பனமாய் விளங்கியதோ, அதே போன்று, பாகிஸ்தானானது ஓர் சீனா இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் என்பது போல், விடயங்கள் அதி வேகத்துடன் நகர்வதாய் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையிலேயே, இன்று ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை புறந்தள்ளுவதும், அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தில் 13வது திருத்தம் புறந்தள்ளப்படுவதும் நிகழ்வதாயுள்ளது.
இருந்தும், ஜெய்சங்கர் புறந்தள்ளியது, தமிழர்களையா அல்லது தமிழ் அரசியல் கட்சிகளையா என்பது கேள்வியாகின்றது.
ஏனெனில், ஜெய்சங்கர் அவர்கள் தமிழர் சார்பான பல்வேறு திட்டங்களை பிரேரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
VI
மொத்தத்தில், தமிழ் அரசியல் கட்சிகள், ‘கபில்’ குறிப்பிட்டவாறு ஒரு ‘நம்பிக்கை இன்மையை’ நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளன.
இந்த நம்பிக்கையின்மை, இன்று நேற்று வந்ததல்ல. மாறாக, கடந்த பல வருடங்களாய், தெரிந்தோ தெரியாமலோ, ‘கையாளப் போகின்றோம்’ என்று வெளிகிட்டவர்களின், பொறுப்பற்ற அல்லது தெளிவற்ற அரசியலால் வந்த நிலையே இதுவென்றால், அது மிகையாகாது.
சர்வதேசத்தின் அரசியலை அல்லது பிரதேச வல்லரசின் அரசியலை புரியாததின் விளை பயனே இது. ஏனெனில், முள்ளிவாய்க்கால் அல்லது ராஜ் ராஜரட்ணத்தின் விடயத்தில் செயற்பட்ட சர்வதேசம், ‘மழழை வாழ்த்து செய்தி’ தெரிவிப்பதற்கு அப்பால் செயல்பட மறுத்துள்ளது, என்பதே, இன்று நிதர்சனமாகும் உண்மையாகின்றது. (நவராத்திரி விழாவுக்கும் அண்மையில் கனடிய பிரதமர் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார்).
உதாரணமாக, (HAMILTON) ஹெமில்டன் வங்கி தொடுத்த இலங்கைக்கு எதிரான, திறைசேரி முறிகளுக்கான வழக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற சர்வதேச வல்லரசுகள் வழக்கில் உள் நுழைந்து, இலங்கை சார்பாக வாதம் புரிந்துள்ளன. மேலும், ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்நாடுகளால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் இந்நகர்வுகள் அனைத்தும் தமிழ் தேசிய அரசியலின் இருப்பிடத்தையும், இவ் அரசியல் சர்வதேசத்தை ‘கையாள்வது’ தொடர்பிலான கற்பனா வாதங்களையும், நேரு குணரட்ணம் போன்று, அவரவர் கற்பனையில் ஊறி திளையும் போக்குகளையும் இதனூடு கற்பிதம் செய்து கொள்ளும், ‘கடுங் கோபங்களையும்’ படம் பிடித்து காட்டுவதாய் உள்ளன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கபில் குறிப்பிடும் தமிழ் தேசிய அரசியலின் சிதைவு என்பது எப்படி அரங்கேறுகிறது - இதில் புலம் பெயர் அரசியலின் பங்கெடுப்பு எவ்வாறு இருக்கின்றது, என்பதெல்லாம் கேள்வியாகின்றது.
‘தொப்புள்; கொடி உறவுகள்’, “கடுங் கோபங்கள்' , என்றெல்லாம் அதிர் வேட்டுக்களை வீசி எறிந்து, தமிழ் மக்களை உசுப்பேத்த விழையும் எமது தமிழ் ஊடகங்கள், தாயகத்தில், வாழும் தமது உறவுகளின் இன்னல்கள்- பற்றி எந்தளவில் உண்மை கரிசனை கொள்கின்றனர் என்பது, கேள்வியாகின்றது.
உதாரணமாக, அண்மை பாலஸ்தீனிய-இஸ்ரேல் யுத்தங்களில் ஹமாஸ் இயக்கம் மேற்கொண்ட-மேற்கொள்ளும் திட்டமிட்ட தாக்குதல்கள் எப்படி இஸ்ரேலை கதிகலங்க வைத்துள்ளது என்றும் இது தமிழ் தேசியத்திற்கு எப்படி ஊக்கமூட்டக்கூடியது-வழிக்காட்டக்கூடியது என்பதனையுமே எழுத தலைப்பட்டுள்ளார்கள்.
ஆனால், காஸா பிரதேசத்தில், ஹமாஸ{க்காக ரஷ்யா, ஈரான், சிரியா உட்பட, பல்வேறு தேசங்கள் எப்படி குரலெழுப்பி-எவ்வளவு நிதி ஆயுதங்கள் வழங்கியுள்ளன-ஹமாஸ் எந்தளவு ஓர் அரசை ஸ்தாபிப்பதில் வெற்றிக்கண்டுள்ளது. என்பதெல்லாம் இவர்கள் கண்ணுக்கு படுவதில்லை.
உண்மையை கூறினால் ஹமாஸ் எங்கோ நிற்கையில் நாம் மயிலத்தடுவில் நிற்கின்றோம் –எமது வட மாகாண சபை- அல்லது வட -கிழக்கு இணைப்பு- அல்லது இன்னும் பல நூற்றை உடைத்து போட்டு விட்டு- ஐயா விக்னேஷ்வரன் முன்னெடுத்த-அல்லது வேறு பலர் முன்னெடுத்த அரசியலால்.
இச் சூழ்நிலையிலேயே மேற்குறிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் மீண்டும் ஒரு முறை சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டிய அவசிய தேவைப்பாட்டை எதிர் நோக்குகின்றது.
மயிலத்தடு சிக்கலில் வடக்கு அரசியல் சிக்கி தவிக்குகையில் ஐஆகு இன் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி சீனா செல்வதும், சீனம் அதனை ‘வரவேற்பதும்’, நாகபட்டின கப்பல் காங்கேசன்துறையை அடைவதும், கனடிய பிரதமர் தமிழர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள் தெரிப்பதும் இன்றைய நிகழ்வுகளாகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.