கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் - நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை (Yellow Cat in Memory Lane)| ஆவணப்பட இயக்குநர்: திரு. T.பாண்டியராஜு (T Pandiaraju) - https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY
கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம் - கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் ; இயக்குநர் : திரு ‘நிழல்’ திருநாவுக்கரசு; தயாரிப்பு: குவிகம் இலக்கிய வாசல் - https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமா கிறது? முக்கியத்துவம் பெறுகிறது? ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்க மும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண் டியது அவசியமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேச வேண் டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேச வேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர் கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?
காணக் கிடைத்த ஆவணப்படங்கள் இரண்டு இவ்வாறான பல கேள்விகளை மனதில் கிளர்த்தின.
பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தால் அது சம்பந்தப்பட்ட இரண்டு படைப்பாளிகளுக்கும், அவர்களைப் பற்றிய இந்த ஆவணப் படமெடுத்தவர் களுக்கும் நாம் செய்யும் எளிய பதில் மரியாதையாக அமையும்.
கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் - Yellow Cat in Memory Lane | நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை| T Pandiaraju
https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY
Yellow Cat in Memory lane is a film on the famous Indian Poet T. K. Doraiswamy aka Nagulan. The film was shot three years prior to his death. He takes us through his memory lane while talking about Poetry, Uncertainity and Life.
Directed by T.Pandiaraju
Cinematography T.Pandiaraju
Editing & Sound by P Ganesh Nandhakumar
Music by Vineeth
Line Producer - S Senthil Kumar
Produced by T.Pandiaraju
கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் – இயக்கம் 'நிழல்' திருநாவுக்கரசு
தயாரிப்பு: குவிகம் இலக்கிய வாசல்
https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s
குவிகம் வழங்கும் - கிணற்றில் விழுந்த நிலவு - புதுக்கவிதை முன்னோடி கவிஞர் வைத்தீஸ்வரன் பற்றிய ஆவணப்படம் - குவிகம்இலக்கியவாசல் (குவிகம் #kuvikamilakkiyavaasal)
கவிஞர் வைதீஸ்வரனின் உரை. ஒரு வருடத்திற்கு முன்னால் அவருடைய பிறந்தநாளையொட்டி குவிகம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த நிகழ்வில்அவரைப் பற்றிய ஆவணப்படத் திரையி டலுக்குப் பிறகு அவர் ஆற்றிய உரையின் காணொளிக்கான லின்க்கும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.