திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஏற்பாட்டில் 1/10/23 அன்று மொழிபெயர்ப்பு தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது .அதை ஒட்டி சுப்ரபாதி மணியனின் 'நைரா' நாவல் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. மற்றும் தூரிகை சின்னராஜ் அவர்கள் மொழி பெயர்ப்பு நூல்கள் தரும் புதிய வாசல்கள் பற்றி விரிவாக பேசினார்.
முத்து பாரதி தொடர் சொற்பொழிவு ' சுதந்திரப் போரில் தமிழகம்' , அ.அருணாச்சலம் தினேஷ் லோகேஷ் கவிதை வாசிப்பு , சர்ச்சைக்குரிய அழகு பாண்டி அரசப்பனின் எம் எஸ் சுவாமிநாதன் விஞ்ஞானி சேர்க்கை உரங்களின் தந்தை. அவர் விவசாய புரட்சியாளரா என்ற சர்ச்சைக்குரிய பேச்சு , சாமக்கோடங்கி ரவியின் எழுத்தறிவு அனுபவம் ஆகியவை இடம்பெற்ன.
சுப்ரபாரதிமணியனின் 'நைரா' நாவலை கோவை ஸ்டான்லி மொழிபெயர்த்திருக்கிறார் . கோழிக்கோடு லிபி பதிப்பகம் வெளியிட்டுள்ளது..தூரிகை சின்னராஜ் வெளியிட்ட, ஆர்.பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு செய்த உலகச்சிறுகதைகள் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.சுப்ரபாரதி மணியனின் ஐந்து நாவல்கள் முன்பு மலையாள மொழியில் வந்துள்ளன என்பது பற்றி சின்னராஜ் விரிவாக எடுத்துரைத்தது சிறப்பாக அமைந்திருந்தது. சிவதாசன் திருப்பூர் வரலாறு அனுபவம் பற்றி பேசினார். தங்கபூபதி பிரபுவின் சிறந்த ஒருங்கிணைப்பு சிறப்பாகவிருந்தது.
'நைரா' நாவலில்...
உலகமயமாக்களில் வியாபாரம் என்பது பொதுவாக விட்டது .உலகமே ஒரு சந்தை என்றாகிவிட்டது இந்த சூழலில் வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு வரும் போதும் அல்லது அவரவர் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் சாதாரணமாகிவிட்டது அப்படித்தான் வியாபாரம் பொருட்டு எண்பதுகளில் வடமாநிலத்தில் இருந்து முதலீடு செய்வதற்காக வட இந்தியர்கள், மார்வாடிகள் திருப்பூருக்கு வந்தார்கள் தங்களின் பொருளாதார முதலீடு காரணமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். பனியன் தொழிலில் வேரூன்றிய மரபான பல சாதி சார்ந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள்.
இந்த அம்சங்களை நாவலில் சொல்லியிருக்கிறேன். உலகமயமாக்கலில் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சூழல் சகஜமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நைஜீரியர்கள் திருப்பூருக்கு வந்து செல்கிறார்கள். திருப்பூருக்கு வந்து பனியன். பிற பின்னலாடைகளை எடுத்துச் செல்வது, வியாபாரம் செய்வது என்ற ரீதியில் சுற்றுலா விசாவில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் விடுதிகளில் தங்குவார்கள். சில நாட்கள் தங்கியிருந்து தங்கள் வியாபாரத்தை பார்த்து விட்டு செல்வார்கள். இவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூட ஆரம்பிக்கும்போது இவர்கள் விடுதிகளில் மட்டுமல்ல வாடகை வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்கள். அதுவும் சாதாரண விளிம்பு நிலை மக்கள் உள்ள பகுதிகளில் வீடு எடுத்து தங்கும் போது அந்த பகுதி இளம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும், அதிக வாடகை கொடுத்து உள்ளூர்காரர்களைக் கவர்வதும் சாதாரணமாகி விட்டது. இவர்களுடைய நடமாட்டமும் கலாச்சார பின்னணிகளும் உணவு பழக்கவழக்கங்களும் உள்ளூர் மக்களுக்கு பல வகைகளில் அதிர்ச்சியை தந்தன. இந்த அனுபவங்கள் பாரம்பரிய மதம் சாதி சார்ந்த உள்ளூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
அவர்களை நகரின் மத்திய பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களுக்கு வீடு தரக்கூடாது என்ற கட்டாயங்கள் பலரை நகரைவிட்டு திருப்பூருக்கு அருகில் இருந்த பல கிராமங்களுக்கு இடம்பெயரச் செய்தது. அவர்களில் பலர் தமிழ் பெண்களையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . காதலித்து தமிழ் பெண்களை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய குணம் இயல்பில் இருந்த நல்ல விஷயங்களை தமிழ் பெண்கள் புரிந்து கொண்டு அவர்களை காதலித்திருக்கிறார்கள். காத்திருந்திருக்கிறார்கள் இந்த அம்சங்கள் உள்ளூர் கலாச்சாரத்தில் மிகுந்த பாதிப்புகளை கொண்டு வந்திருக்கிறன.
இந்த பாதிப்புகளை நான் 'நைரா' என்ற நாவலில் பதிவு செய்திருக்கிறேன் .அதேபோல் தேனீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து சுமங்கலி திட்டம் என்ற வகையில் வேலை செய்யும் இளம் பெண்களின் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து இதுபோல் இளம் பெண்கள் வேலைக்கு வந்தார்கள். பின்னர் இப்போது பீகார் ஒரிசா வங்காளம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து கூட பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்துவந்திருக்கிறார்கள். திருப்பூருக்கு வந்திருக்கிற இடம் பெயர்ந்த மக்களின் தொகை சில லட்சங்களைத் தாண்டும். இந்த இடம்பெயர்வு பொருளாதாரரீதியாக அவர்கள் வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை மீறி சாதிய ரீதியாக அவர்கள் அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு இருப்பதை இன்னொரு முகமாய் காட்டுகிறது எனலாம் . என் முதல் நாவலில் இடம்பெயர்வு என்பது ஒரு வகையில் மாநில அரசுகளின் ஒரு தாக்கமாக இருந்தது . பின்னால் என் நாவலில் இடம் பெற்ற இடம்பெயர்ந்த மக்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தங்கள் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை இழந்து விவசாயம் போன்ற சிறு தொழில்களில் நிலைத்திருக்க முடியாமல் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அடைக்கலமாகிறார்கள் . இந்தத் தன்மையை காட்டியிருக்கின்றன அந்நாவல்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.