மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் நேற்று திருப்பூரில் நடந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்”:
“ இன்று இலக்கியம் பெரும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பதாக இருக்கிறது. டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக இர்க்கிறது. இன்று இலக்கியச் சந்தை கேளிக்கை தரும் விடயங்களையேத் தருகிறது. இன்றைய தலைமுறை கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும் அநீதியோடு சமரசம் செய்யாத எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதியார் கொடுத்தக் கவிதைகளூம் பாடல்களும் தேசபக்தி எழுச்சியை மக்கள் மத்தியில் ஊட்டியதாக இருந்தது. அது உதாரணம். இளைஞர்களின் இலக்கிய மையங்கள் பல இன்று முன் வந்து தரும் இலக்கியப்படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள் , நாவல்கள் உரிய சிறப்பு தரப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும். இதுவே புதிய, நல்ல இலக்கியங்களுக்கு வழிவகுக்கும். பெரும் இலக்கியங்கள் பல நாடுகளில் , பல கலாச்சாரங்களில் பலமுறை கடந்த காலங்களில் அடிப்படி சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன . அரசியல், அதிகார மாற்றத்திற்கான முன்னோடி இலக்கியம். சமூக மாற்றத்தினை பதிவு செய்யும் இலக்கியம் மக்களீன் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது ”
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “ சசிகலா வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* மே மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடைபெற்றது.தலைமை : தோழர் பி ஆர். நடராஜன்
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வரவேற்புரை :தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையை பி ஆர். நடராஜன் நிகழ்த்தினார் :
நூல்கள் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “ மூன்று நதிகள் “ சிறுகதைத் தொகுப்பு ( துசோ பிரபாகர் வெளியிட பாரதி வாசன் பெற்றுக் கொண்டார் )
இரா.முத்து நாகு ( நாவல் “ சுளுந்தீ “ ) கலந்து கொண்டார்
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “ ( சசிகலா வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் )
கா சு. வேலாயுதம் “ சிட்டு செல்போன் 2.0. “கட்டுரைத் தொகுப்பு தொகுப்பு (மருத்துவர் முத்துசாமி வெளியிட பி ஆர். நடராஜன் பெற்றுக் கொண்டார் )
* நூல்கள் அறிமுகம் .: , மருத்துவர் முத்துசாமி, ”பின்னல் “ சவுந்திரபாண்டியன், பொறியாளர் இரவிக்குமார். பங்குபெற்றனர் கவிதைகள் வாசிப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி, அருணாசலம், சிவதாசன் பங்கு பெற்றனர்
மற்றும்...பாடல்கள் , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் நடைபெற்றன. வெண்மனி நடராஜன் நன்றி கூறினார் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.