கோவா சர்வதேச திரைப்பட விழா சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட ‘எஸ்.துர்கா’ ( மலையாளம் ) ‘நியூட்’( மராத்தி ) ஆகிய இரு திரைப்படங்களையும் நீக்கியது பிஜேபி அமைச்சரகம். ’ ..தேர்வுக்குழு, நீதிபதிகள் மூவர் தங்கள் பெறுப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து விலகிக் கொண்டார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்’ மிக உயரிய விருதைப்பெற்ற மலையாளப் ’செக்சி துர்கா’ என்ற மலையாளப் திரைப்படத்தை ‘எஸ்.துர்கா’ என்று பெயரிடுமாறு சென்சார் நிர்ப்பந்தித்தது . பின்னர் தடை. .இயக்குனர் நீதிமன்றத்திற்குச் சென்று திரையிட அனுமதியை உடனே பெற்றாலும் கடைசிவரை திரையிடவில்லை. எஸ். துர்க்கா-கடவுள் பெயர், நியூட் போன்ற பெயர்களே பிஜேபியை உறுத்தி அலைக்கழித்தது..துர்க்கா படத்தை எடுத்த சனல்குமார் சசிதரனின் படம் 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டப்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடாதது சென்சார் போர்டு, அரசின் தலையீடுகள் பற்றிய சர்ச்சையைக்கிளப்பியது.
விழாவின் துவக்கவிழா படமாக அமைந்த மஜித்மஜீதின் ஈரான் இயக்குனரின் Beyond clouds -படம் முழுக்க பம்பாயில் எடுக்கப்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் சலவைத் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்ற ஒரு தமிழனைக் கொல்வதும், அந்தத் தமிழ்க்குடும்பத்தின் அல்லாடலும் இதில். யாருமற்ற , ஆதரவற்ற முதிய வயது பெண், இளம் பெண் , ஒரு சிறுமி உட்பட மூவரைக் கொண்டது அந்தத் தமிழ்க்குடும்பம்.கொலைசெய்த இளம் பெண்ணின் தம்பியை ஒண்டி அந்தத் தமிழ்க்குடும்பம் ஒதுங்கியதும் படத்தில் இருந்த குறைபாடுகளும் அப்படத்தை இன்னும் சர்ச்சைக்குறியதாக்கியது.மலையா ளிகள் தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை படங்களில் அமைப்பது போல் ஈரான் இயக்குனரின் அணுகுமுறையும் இப்படத்தில் பார்க்கப்பட்டது.
இடம்பெற்ற தமிழ்ப்படம் “ மனுஷங்கடா “ இதன் இயக்குனர் அம்சன்குமார் பல ஆவணப்படங்களையும் கி.ராஜநாராயணின் கதை ஒன்றை மையமாக்க் கொண்டு ஒருத்தி என்ற திரைப்பட்த்தையும் எடுத்தவர். பொதுப்பாதையில் தலித் பிணத்தை எடுத்துச் செல்ல பிரச்சினையின் போது நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் அதை அமலாக்க கவல்துறை அக்கறை எடுக்காமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துச் சென்று உண்மை புதைத்த நிகழ்வை படமாக்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி , மருத்துவம் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் பிணத்தைப் புதைக்க கூட உரிமை இல்லாததை மனித உரிமைப்பிரச்சினையாக்கியிருக்கி றார் இயக்குனர். இதில் கதாநாயகனாக கோலப்பன் என்ற கதாபாத்திரத்தில் அம்சன்குமாரின் மகன் ஆனந்த் நடித்திருக்கிறார்.. சமத்துவம் இறப்பிலும் தரப்படுவதில்லை. தப்பாட்டத்திற்கும் கூட ஊர் விலக்கம் செய்யும் கொடுமை. உள்ளூர் நிலைமை தெரியாமல் நீதிமன்றம் ஆணை போட்டிருப்பதாக உள்ளூர் நிர்வாகம், காவல்துறை சொல்லிக்கொள்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்கையில் மூன்று நாட்கள் பிணம் வீட்டில் கிடக்கிறது. பிணத்தை காவல்துறை எடுக்க முயற்சித்தபோது வீட்டினுள் பிணத்தை வைத்து கொண்டு காப்பதும், காவல்துறையினரின் அத்துமீறலைக்கண்டித்து வீட்டினுள் இருப்பவர்கள் மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வதும் கொடுமையாகவே உள்ளது. உள்ளூர் நிர்வாகம் இறுதியில் ஒத்துக்கொண்டு பொய் சொல்லி பிணத்தை வெளியே எடுத்து வரச்செய்து புதைத்து விடுகிறது. வீட்டில் இருப்போரையும் கைது செய்து விடுகிறது.. அடுத்த நாள் பால் ஊற்றும் சடங்கிற்கு முள்பாதையில் அலைந்து திரிந்து செல்லும் கதாநாயகன் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்று தெரியாமல் அல்லாடும் வேதனையுடன் படம் முடிகிறது. ,அமரர் இன்குலாப்பின் மனுஷ்ங்கடா பாடல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. சமரசம் உலாவும் இடமே என்ற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு பிணமான பின்னும் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தை இப்ப்டம் முன்வைத்திருக்கிறது.
கோவா திரைப்பட விழா திரைப்படங்களில் சிறந்ததாக அமைந்தபடம் ‘ஆன் பாடி&சோல்’. On body and soul –hungary .ஹங்கேரி இல்திகோ என்யாடி’ யின் இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் உயரிய விருதான ‘தங்கக்கரடி’ விருதைப்பெற்றது.
மாடுகளை கொன்று மாட்டுக்கறி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஆண் ஒருவரும் ஒரு பெண்ணும் தினமும் இரவு ஒரே மாதிரியான கனவுகள் காண்கிறார்கள்.மான்களாயும் காட்டில் அலைவதாயும். தங்கள் கனவுகளை பறிமாறிக்கொள்ளும் போது வாய்ப்பு கிடைக்கிறது இப்படி ஒரு அழகான கற்பனையை படமாகியுள்ளார். புதிய உளவியல் பார்வையோடு ‘இல்திகோ என்யாடி’. அணுகியிருக்கிறார் இந்த பெண் இயக்குனர்.
பணக்கார, சாதிய ஆதிக்க சக்திகள் அதிகார வர்க்கத்தின் துணையோடு ஒருவனை தொடர்ச்சியாக வேட்டையாடுகிறது. அவன் அதில் மீளமுடியாத அவலம் ‘எ மேன் ஆஃப் இண்டக்ரிட்டி’.அவர்கள் கையிலெடுத்த லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை அவனும் கையிலெடுக்கும் ஒருவனின் வாழ்க்கையை மிக உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இரானிய திரைப்படம் ‘எ மேன் ஆஃப் இண்டக்ரிட்டி’.இன்றைய தமிழக அரசியல் சூழலில் வைத்துப் பார்க்கத்தகுந்த அபடம் இது.
‘எ பெண்டாஸ்டிக் வுமன்’. A fantastic woman .சிலி நாட்டு திரைப்படத்தை இயக்கியவர் ‘செபாஸ்டின் லேலியோ’.பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற திரைப்படம் இது.50 வயதைக்கடந்த கோடீஸ்வர தொழிலதிபரின் காதலியாக வாழ்ந்த இளம் ‘திருநங்கையின்’ வாழ்க்கையை மிக நுட்பமாக சித்தரிக்கிறது.
பிறந்த நாளை தன் திருநங்கை காதலியுடன் சிறப்பாக கொண்டாடி விட்டு, தனிமையில் உடலுறவுக்குப்பின சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விடுகிறார்..கோடீஸ்வரரின் உறவினர்கள் , ‘திருநங்கையை’ இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கிறது.தடையை மீறி தன் காதலனுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தச் சென்று அவமானப்படுகிறார்.. காவல்துறை, மற்றவர்கள் பார்வையில் அவர் இன்னும் திருநங்கையாக அங்கீகரிக்கப்படாத நிலை. அவர் ‘எ பெண்டாஸ்டிக் வுமனாக’ விடுதியில் செய்யும் வேலையில் இருந்து பாடகியாக வேறு உருவம் எடுப்பது படத்தின் இன்னொரு சிறப்பம்சம்
திருநங்கையாக நடித்தவரின் அழகு,, இனிமையான குரல் ஆரம்பக்காட்சிகளில் அவரை ஒரு பெண்ணாகவே நம்ப வைத்தது.இப்பட விழாவில் சிறந்த பட்த்திற்கான பரிசைப் பெற்ற் பீட்ஸ் பர் மினிட் Beats per Minute –french படமும் ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள், அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் சித்தரித்தது. திருநங்கையின் வாழ்க்கையை மிக உன்னதமாக சித்தரித்த இன்னொரு ஜப்பானிய திரைப்படம் ‘க்ளோஸ்-நிட்’.close knit .இயக்குனர் ‘நாகோவ் ஓகிகாமி’ ஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாகவும், விரிவாகவும்,உண்மையாகவும் திருநங்கையின் வாழ்க்கை விவரித்திருந்தார் .சிறுமியொருத்தியை தவிக்க விட்டு விட்டு தாய் ஓடிப்போய் விடுகிறாள்.வளர்க்கிறார் தாய்மாமன்.தாய்மாமனின் காதலி ஒரு திருநங்கை.திருநங்கையிடமிருந்து , அந்தச்சிறுமிக்கு ஒரு தாயிடமிருந்து கிடைக்காத அன்பு, கிடைக்கிறது.அந்தச்சிறுமியை முறைப்படி தத்தெடுத்து வளர்க்க திட்டமிடுகையில் தாய் திரும்பி வந்து உரிமை கோருகிறாள்.அச்சிறுமியின் ஊசலாட்ட்ம் சொல்லப்பட்டிருக்கிறது பல்ரையும் கவர்ந்த ஒரு காட்சி. திருநங்கையை கேலி செய்த ஒருவரின் மீது கோப்ப்படுவாள் சிறுமி..‘கிண்டல்,கேலி செய்பவர்களைப்பார்த்து கோபமே வராதா?’ என சிறுமி கேட்கையில்,‘வரும்...ஆனால் கோபத்தை முழுங்கி விட்டு வீட்டில் வந்து ‘நிட்டிங்’ செய்வேன்.உல்லனில் நிட்டிங் செய்து ‘ஆண் குறி’ போல உருவாக்குவேன்.இது போல் நூற்றியெட்டு ‘உல்லன் ஆண் குறிகளை’ செய்து தீயிட்டு கொளுத்த வேண்டும்’ என்பார்
த யங் கார்ல்மாக்ஸ்’ திரைப்படம் . The young Karl marx –germay மார்க்ஸ் - ஏங்கல்ஸ் நட்பு, மார்க்ஸ் - ஜெனி காதல், ஏங்கல்ஸ் - மேரி காதல் என தொடங்கி மார்க்ஸ் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட்து வரை மார்க்சின் வாழ்க்கையை அணுகி இருக்கிறது இத்திரைப்படம். ஏங்கில்ஸ் முன்ன்னிலைப்படுத்தப்படுவது, ஜென்னியின் அறிvu ஜீவித்தனமான முகமும் இதன் முக்கிய அம்சங்கள்.
பிஜேபி தற்சமயம் படேல் , அம்பேத்த்கார் ஆகியோரை கையில் டுத்துக் கொண்டு செயல் படும் போது அடுத்து கவிஞர் ரவிந்திரநாத் தாகூரையும் எடுத்துக் கொள்ளா போகிறதோ என்ற சந்தேகத்தை சிலருக்கு விழாவின் இறுதியில் தாகூர் பற்றிய முக்கியப்படத்தை திரையிட்டதால் ஏற்பட்டது. Thinking of him –argentina .காரல் மார்க்ஸ் படத்தில் குறுக்கிட அது முயலவில்லை. அமிதாபச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தந்ததும் ஒரு பெரிய தூண்டில் முயற்சியாவே பார்க்கப்பட்டது. அஞ்சலி திரைப்படங்களில் ஜெயலலிதாவின் முக்கியத்துத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது, தமிழ்ரசிகர்கள் விசிலடித்து வரவேற்று படத்தைப் பார்த்தார்கள். இவ்விழாவில் கேரளா பிரதிநிதிகள் அதிகம் கலந்து கொண்டார்கள். அடுத்தபடியாக தமிழர்கள்.பக்கத்து மாநிலத்து மாராத்திப்படங்கள் அதிகம் திரையிடப்பட்டாலும் அவர்களின் பிரதிநிதிப்பங்களிப்பு குறைவாகவே இருந்தது..அதிக அளவில் ரஷ்யன், ஈரான், கனடா படங்களும் இடம்பெற்றன.
I dream in another language –netherland அழிந்த ஒரு மொழியை பேசுபவர்களில் இரண்டு பேர் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களிடம் அந்த மொழி பற்றிய பதிவுகளைச் செய்ய செல்லுமொரு இளைஞனின் காட்டு வாழ்க்கை அப்படத்தில் .அந்த இருவரும் சிறு வயதில் நண்பர்கள். ஓரின சேர்க்கையில் நணபர்கள். ஆனால் அதில் ஒருவன் காதல் செய்து திருமணம் செய்து கொள்வதால் ஏமாற்றப்படுவதால் அந்தப்பகை கடைசிகாலம் வரை தொடர்கிறது.
இந்தி நடிகர் சாருக்கானின் அமர்க்களமான துவக்கவிழாவின் உரை பலரையும் கவர்ந்தது. ” ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்திய சமூகத்தில் நிலவும் கதை சொல்லும் முறை திரைப்படங்களிலும் தொடர்கிறது.குடும்ப, புராண , வாழ்வியல் கதைகளைப் பகிர்ந்து கொள்வதில் திரைப்படங்களின் பங்கை இளைய தலைமுறையினரும் அறிந்த்திருக்கிறார்கள்.கதைகளை ப் பகிர்ந்து கொள்ளும் அனுபவம் மொழிகள், நாடுகளைக் கடந்தது. இந்த மாயாஜாலத்தை இளை தலைமுறையினர் வாழக்கையை பகிர்ந்து கொள்வதில் முகியத்துவம் பெருகிறது “ என்று அவர் குறிப்பிட்டதை இவ்விழாவின் படங்கள் நிரூபித்தன.
<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>