- எழுத்தாளர் டொமினிக் ஜீவா -
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை. ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப் புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள் மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.
எஸ். ரி. ஆர். பற்றிய உங்கள் பதிவும் நன்று. 1963 இல் எனது மாணவப் பருவத்தில் அந்த ராஜா தியேட்டரில் The longest day திரைப்படம் பார்த்தேன். பின்னாளில், நீங்கள் குறிப்பிடும் அந்த ஒழுங்கையில் பல நாட்கள் நடந்திருக்கின்றேன். மல்லிகை காரியாலயத்தில் தங்கள் காலடித் தடத்தை பதித்த எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த முகப்பினை மறந்திருக்மாட்டார்கள். அந்த கட்டிடமும் எறிகணை வீச்சினால் சேதமுற்றது. அதன் பிறகு ஆசிரியர் டொமினிக்ஜீவா கொழும்பிலிருந்து மல்லிகையை வெளியிட்டார்.
2010 இல் அங்கே சென்று எடுத்த படத்தை இத்துடன் இணைக்கின்றேன்.
நன்றி.
அன்புடன்
முருகபூபதி
- மல்லிகை காரியாலயம் (யாழ் ராஜா திரையரங்குக்கு அருகிலிருந்த ஒழுங்கையில் அமைந்திருந்தது.) -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.