அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன் நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.
இந்நிகழ்ச்சிகளுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள லெ. முருகபூபதி, அப்புத்துரை சதானந்தவேல் ஆகியோரும் உரையாற்றுவர். உதவிபெறும் மாணவர்களின் உரையும் இடம்பெறும். மதிய போசன இடைவேளைக்குப்பின்னர், க. பொ. த. (சாதரணதரம்) - க.பொ.த. (உயர்தரம்) மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெறும்.
முல்லைத்தீவு - விசுவமடுவில் இரண்டாவது நிகழ்ச்சி, 21 ஆம் திகதி ஞாயிறன்று முல்லைத்தீவில், விசுவமடு கணினி வள பயிற்சி நிலையத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சிறுவர் அபிவிருத்தி நிலைய திட்ட அலுவலர் திரு. ந. பாஸ்கரன், திட்ட இணைப்பாளர் திரு. சி இன்பரூபன், முல்லைத்தீவு தொடர்பாளர் திருமதி கு. சுதர்சினி மற்றும் திரு. லெ. முருகபூபதி ஆகியோர் உரையாற்றுவர்.
வவுனியாவில் மூன்றாவது நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை 3 மணிக்கு வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாடல் அமைப்பான சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் நடைபெறும். வவுனியா நிகழ்ச்சிகளை, வவுனியா சமூக அபிவிருத்திக்கான தொண்டு நிறுவனத்தின் இணைப்பாளர் செல்வி நிரோஷினி ஒழுங்குசெய்துள்ளார். மேற்குறித்த மூன்று நிகழ்ச்சிகளிலும் உதவிபெறும் மாணவர்களுக்கான இவ்வருடத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவியும் வழங்கப்படும்.
கிழக்கு மாகாண மாணவர்களுக்கான தகவல் அமர்வும் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர் திரு. இராஜரட்ணம் சிவநாதனும் இணைந்துகொள்வார். அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலுமிருந்தும் உதவும் அன்பர்களின் நல்லாதரவுடன் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இயங்கிவருகிறது.
மேலதிக விபரங்களுக்கு,
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையத்தளம்: www.csefund.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.