- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
This is what Maalan has written in his blog:
- உவேசா மறைந்து இன்னும் அறுபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் ஆய்வாளர்களின் வசதிக்கு ஏற்பத் திரிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் உவேசாவே தனது வாழ்க்கைச் சரிதத்தின் பெரும்பகுதியை எழுதியிருந்தும், அது பிரபல வார இதழான ஆனந்தவிகடனில் தொடராக வந்தும், இன்றும் அந்த நூலின் பிரதிகள் எளிதில் கிட்டும் போதும், இந்த நிலை. காலச்சுவடு இதழின் மார்ச் இதழில் பொ.வேல்சாமி எழுதுகிறார்:
"உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் குடும்பத்தார் இட்ட பெயர் வேங்கடராமன் என்பதாகும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா மாணவராகச் சேர்ந்தபோது 'வேங்கடராமன்' என்னும் வைணவப் பெயரைச் சொல்லி அழைக்க அவர் மனம் இடம் தரவில்லை.ஆகவே 'சாமிநாதன்' எனப் பெயரை மாற்றினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை."
ஆனால் உண்மை என்ன? " நான் பிறந்த போது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமி மலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக்கடவுளுக்குச் சாமிநாதனென்பது திருநாமம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை சாமா என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று" என எழுதுகிறார் உவேசா. (என் சரித்திரம் - அத்தியாயம் 9)
உவேசா இவ்வளவு தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கும் போது காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. "ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்" என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. அது வார்த்தைகளில் சொல்லாமல் மறைமுகமாக உணர்த்த முற்படும் செய்தி சூத்திரப் புலவரின் மனம், மாற்று மதம் சார்ந்த பெயரை ஏற்கத் தயங்கியது. ஆனால் பிராமணக் குடும்பம் பெருந்தன்மையுடன் சூத்திரப் புலவரின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டது என்பதாகும். 'சூத்திரப் புலவர்' எனக் காலச்சுவடு குறிப்பிடும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவரையும் தனது மாணவராக ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த கத்தோலிக்கரின் பெயர் சவேரிநாத பிள்ளை.அவரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அன்பொழுக 'அப்பா! சவேரிநாது' என்றுதான் கூப்பிட்டு வந்தார். பெயர் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
சரி, உவேசா விஷயத்தில் என்ன நடந்தது? அவரே சொல்லக் கேட்போம்:
"ஒரு நாள் ஏதோ விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, " உமக்கு 'வேங்கடராமன்' என்று ஏன் பெயர் வைத்தார்கள்?" என்று கேட்டார்.நான் " வேங்கடாசலபதி குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக் கடவுள் பெயரையே கொள்வது வழக்கம்" என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன் என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப் புலப்பட்டது. "
உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?" என்று அவர் கேட்டார்." எங்கள் வீட்டில் என்னை 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன்.
"அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?"
"அது முழுப்பெயரன்றே! சாமிநாதன் என்பதையே அவ்வாறு மாறி வழங்குவார்கள்." அப்படியா! சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது! உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும்" என்று அவர் சொன்னார். நான் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன்." ( உவேசா- என் சரித்திரம்- அத்தியாயம் 31)
இதிலிருந்து என்ன தெரிகிறது? பெற்றோரே உவேசாவிற்கு இரண்டு பெயர்களை வைத்திருந்தனர் (இப்போதும் பல பிராமணக் குடும்பங்களில் இந்த வழக்கம் இருக்கிறது) காலச்சுவடு சொல்வது போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெயரை மாற்றவில்லை. இருந்த இரண்டு பெயர்களில் ஒன்றைத் தேர்ந்து கொண்டார். அதற்கு சாமிநாதன் என்ற பெயர் வேங்கடராமன் என்ற பெயரைவிட ' எவ்வளவு நன்றாக இருக்கிறது' என்ற அழகுணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். 'வைணப் பெயரைச் சொல்லி அழைக்க மனம் இடந்தரவில்லை' என்பது காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் சவேரிநாத பிள்ளையின் பெயரை மாற்றவில்லை.
உவேசாவின் பெயரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாற்றினார் என்பதற்கோ, அதற்கு அது வைணவப் பெயர் என்பதுதான் காரணம் என்பதற்கோ, உவேசாவின் சுய சரிதத்தில் ஆதாரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வகுப்பாரின் பெருமையைப் பேசுவதற்காக, அல்லது தங்கள் வசதிக்காக, இது போன்ற வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஏனென்றால் வரலாறுகள் வெறும் காலத்தின் சுவடுகளாக மட்டுமல்ல,
உண்மையின் பதிவுகளாகவும் இருக்க வேண்டும்.
A Riposte From R.P.RAJANAYAHEM to Maalan:
1. Po. velsamy should take responsibility to give a reply to this. Kalachuvadu has definitely no motive in it. Maalan is biased in depicting a funny motive. Maalan's assumption is peculiar.
Po. Veluchamy was in "Nirapirigai" coterie and he has no rapport with Kalachuvudu.
2. This was the first article he wrote in Kalachuvadu.
3. He is an unique and important scholar
4. He has his own individuality and he has no need to blow the pipe of Kalachuvadu at any cost.
5. You have pointed out a factual error and thus you have done a good work. Thanks a lot. But why should you try to fix this as a polemics and establish a strange motive on Kalachuvadu.
6. Po.veluchamy has clearly indicated in his article that swaminathaiyer was a sanadhani and in spite of that his contribution to Tamil language is great and one cannot ignore his sacrifice and hard work.
7. Should Maalan have a motive to every news of SUN TV for e.g If a R.S.S member' s speech had been telecasted, could one say easily that Because Maalan is a brahmin , he has a motive in editing this new. won't this be funny?
8. It leads to a suspicion that For his obvious rapport with DMK leader M.Karunanidhi , Maalan is trying his level best to avoid his brahmin identity by accusing Kalachuvadu as Pro Bramin.
9. Swaminathaiyer in his Enn Saritram clearly writes in 'Peyar matram' chapter that he couldn't easily be accustomed to this name ' Swaminathan'. It is more than obvious because of his saiva principle Meenakshi
Sundaram forced him to change his student's name from Venkata raman to his another name Swaminathan.
I have a right to question that you try to establish that Po veluchamy has no sense of his own and he stoops to any level as he is a sutra that he agrees to write to a brahmin's command and thus this he has glorified brahmins in his article . this is Maalan's accusation. So a sutra can never raise to a level of great scholar and he can be easily dominated by brahminism. Maalan has strongly established this rotten motive in his article.
Please Maalan, You cannot take a scholar like Veluchamy for granted as he is a sutra by birth.
Friday, Jul 22, 2005
Dear Maalan, My intentions are genuine. I don’t see the need to retaliate. I object your comment that I am drifting matter from the real issue. It is again funny that you are emphasizing that you have never criticized Po.Veluchamy. We all know your target is Kalachuvadu and your deliberate intention is to attack Kalachuvadu is also clearly depicted in your article. When you raise a question to Kalachuvadu for the article written by Veluchamy, it is more than obvious you put a finger on Veluchamy also. You have found a factual error in Po.Veluchamy article only.
I have to use the same weapon on you unwillingly by which you tried to attack Kalachuvadu. You only forced me to question in your style and method.
I have given a proper rejoinder to your article and I feel this is more than enough.
With warm regards,
R.P. RAJANAYAHEM
மாலன்: இ.பா.விற்கு நன்றி. காலச்சுவடு ரசிகரின் பதில் என்ன?
காலச்சுவடு வெளியிட்ட உ.வே.சா கட்டுரையில் காணப்பட்ட திரிப்புகள் பற்றி நான் எழுதிய பதிவு தொடர்பாக இந்திராபார்த்தசாரதி தெரிவித்துள்ள கருத்துக்களை இன்று திரு.ராஜநாயகம் தனது பதிவிலும் என் பதிவின் பின்னூட்டத்திலும் வெளியிட்டுள்ளார். என் பதிவை நான் இ.பாவிற்கு அனுப்பவில்லை. ஒருவேளை ராஜநாயகமே இதை இ.பாவிற்கு அவரது கருத்தை அறியும் நோக்கத்தோடு அனுப்பியிருந்திருக்கிறார் என்பது இ.பாவின் பதில் கடிதத்திலிருந்து புலனாகிறது. ஜூலை 27ம் தேதியன்று இ.பா ராஜநாயகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலின் தமிழ் வடிவம் இது. (மொழிபெய்ர்ப்பு என்னுடையது. ஆங்கில மூலம் என் பதிவின் பின்னூட்டத்தில் இருக்கிறது)
அன்புள்ள ஆர்.பி.ராஜநாயகம், இன்று உங்கள் கடிதம் பார்த்தேன். நான் சில நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன். கட்டுரை எழுதுவதற்கு முன்பாக வேல்சாமி 'என் சரித்திரத்தை'ப் படித்திருக்க வேண்டும். ஆனால் படித்திருக்கவில்லை என்பது தெரிகிறது. மேலும் வேங்கடராமன் என்பது வைணப் பெயரல்ல. எந்த ஒரு வைணவ பிராமணருக்கும் அந்தப் பெயர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாமனிதரான மகாவித்வானுக்கும் இது தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
தனக்கு சாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டதென்று (நூலின்) ஆரம்பத்திலேயே ஐயர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். கட்டுரையை வெளியிடும் முன் காலச்சுவடு அதில் தகவல் பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். வேல்சாமியின் கருத்துக்களிலோ, சித்தாந்தங்களிலோ அது குறுக்கிட்டிருக்க முடியாது என்பதை நான் ஏற்கிறேன்.ஆனால் தகவல் பிழைகளைத் தவிர்த்திருக்க முடியும். மாலன் காலச்சுவடின் செயல்களுக்கு உள்நோக்கம் கற்பித்திருக்கத் தேவை இல்லை.
அந்த நாட்களில், இப்போதுள்ளது போல, சமூக அந்தஸ்தின் பின்ன்ணியில் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்க்கும் இடையில் பிளவு ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இந்தப் பிளவு 19ம் நூற்றாண்டின் அரைவேக்காட்டு வரலாற்றாசிர்யர்கள் பரப்பிய போலியான கோட்பாடுகளின் பிரசாரத்தால் நேர்ந்தது.
வெங்கடசுப்பய்யர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை அணுகித் தன் மகனை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இயல்பானது.அது அசாதாரணமான செயல் அல்ல. அவர்கள் புலமையைத்தான் மதித்தார்கள், ஜாதியை அல்ல. கடந்த காலத்தில் வாழ்ந்த அந்த மா மனிதர்களின் சிந்தனையில், பாழாய்ப் போன நம் சமகால எண்ணங்களைத் திணித்து ஏன் வரலாற்றைத் திரிக்கவேண்டும்?
இ.பாவின் கடிதம் என் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த தகவல்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.
1.நான் உவேசாவிற்கு, சாமிநாதன் என்ற பெயரைச் சூட்டியது அவரது பெற்றோர்தான், அதை உவேசாவே என் சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியிருந்தேன். அதைத்தான் இ.பாவும் சொல்கிறார்.
2.மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாமனிதர் என்பதை அவர் கத்தோலிக கிறித்துவரை மாணவராக ஏற்றுக் கொண்டு அவரது பெயரை மாற்றவில்லை என்பதன் மூலம் உணர்த்தியிருந்தேன். இ.பா. 'மாமனிதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை' என்று
குறிப்பிடுவதன் மூலம் அதை உறுதி செய்கிறார்.
3.வேல்சாமி கட்டுரை எழுதும் முன் என் சரித்திரத்தைப் படித்திருக்கவில்லை என்று இ.பா.குறிப்பிடுகிறார். நான் என் கட்டுரையில் வேல்சாமியைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தகவல் பிழைகள் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தேன்.
அதற்கே வேலுசாமி பிராமணர் அல்லாதவர் என்பதால் நான் அவரை அவமதிப்பதாக ராஜநாயகம் என் மீது பாய்ந்தார். இப்போது என்ன சொல்லப் போகிறார்?
4.'அவர்கள் புலமையைத்தான் மதித்தார்கள், ஜாதியை அல்ல. கடந்த காலத்தில் வாழ்ந்த அந்த மா மனிதர்களின் சிந்தனையில், பாழாய்ப் போன நம் சமகால எண்ணங்களைத் திணித்து ஏன் வரலாற்றைத் திரிக்கவேண்டும்?' எனக் கேட்கிறார்
இ.பா. நானும் அதைத்தான் கேட்கிறேன். என் கட்டுரையிலிருந்து:காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. "ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்"
என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. " கால்ச்சுவடு மீனாட்சி சுந்தரம் பிள்ளையை சூத்திரப் புலவர் எனக் குறிப்பிடுகிறது. அவருக்கு சூத்திர என்ற அடைமொழி ஏன்? அவர் பிராமணர் அல்லாதவர் என்பதைச் சுட்ட அது
எண்ணியிருந்தால் மீனாட்சி சுந்த்ரம் பிள்ளை எனக் குறிப்பிட்டாலே விளங்குமே?
5.காலச்சுவடு தகவல்களை சரி பார்த்திருக்க வேண்டும் என இ.பாவும் சொல்கிறார். இதழியலின் இந்த பாலபாடம் காலச்சுவடிற்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் அறிவு ஜீவிகள் ஆயிற்றே!. அவர்களுக்குத் தெரிந்திருந்தும்
அவர்கள் இந்தப் பிழைகளைத் திருத்த முற்படவில்லை என்பது என் சந்தேகம். ஏனெனில் காலச்சுவடின் நிறுவனர் அதன் இதழில் எழுதிய சிறுகதை. பிள்ளை கெடுத்தாள் விளையில் அந்தப் பெண் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமென்ன?
அந்த கிராமத்தில் நடந்தது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதையே கதையாக சொல்லியிருந்தால் கதை எந்த விதத்திலும் குறைவுபட்டிருக்காது. ஆனால அவளை தலித் என்ற சாதி அடையாளத்தோடு சித்தரிக்க முற்படுகிறார் சு.ரா.
ஏன்? அவர் மனதில் இன்னுமும் ஜாதீயம் இருக்கிறது. அந்தக்கதை குறித்து பலர் கேள்வி எழுப்பிவிட்டார்கள். ஆனால் சு.ரா இன்னும் வாய் திறக்கவில்லை. ஏன்?
காலச்சுவடின் செயலுக்கு நான் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டிய தேவையில்லை என்கிறார் இ.பா. அவர் இந்த உவேசா கட்டுரையை மட்டும் மனதில் கொண்டு அப்படிச் சொல்கிறார் என நான் கருதுகிறேன். ஆனால் நான் என் சந்தேகத்திற்கு முன்னரே ஓர் ஆதாரம் இருப்பதால், காலச்சுவடின் செயல் குறித்துக் கேள்வி எழுப்புகிறேன்.
என் கட்டுரை எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல், ரசிகர் மன்ற மனோபவத்தோடு, தன் சுடு மொழிகளால் என்னை வசைபாடினார் ராஜநாயகம். அவர் இ.பாவின் கடித்தத்தை வெளியிடும் போது அத்துடன் எனக்கு குறைந்த பட்சம் ஒரு 'ஸாரி' யாவது சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரிடம் நிச்சியம் சு.ராவின் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அவரிடம் பிள்ளை பெற்றாள் விளை கதை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலும், காலசுவடில் உவேசா கட்டுரையில் காணப்படும் திரிப்புகளுக்கு பதிலும் பெற்றுத் தருவாரா?
R.P.RAJANAYAHEM: AN ARDENT FAN OF KARUNANIDHI SO FAR IS LAUGHING AT ME
It is the height of irony that an ardent fan of Karunanidhi so far is amused in laughing at me and brands me as a rasika of Kalachuvadu!( I mark it as ‘SO FAR’ as it is whispered,there is a rumour now that Maalan is relieved from his post in SUN TV)
“ I do agree Kalachuvadu cannot interfere with Veluswamy’s Ideas and Ideology.. Maalan need not have attributed motives to Kalachuvadu.”
The above declaration of Indira Parthasarathy Proves strongly that my stand is correct. What I have specified in my rejoinders, Parthasarathy also has stressed in his mail and thus Maalan’s motive and Strange assumption is Totally shattered into pieces and yet Maalan has started his second round to play his tricks .
I have already thanked Maalan that he has found a factual error. PO. Veluchamy has admitted honestly that he has committed an error when I spoke with him over phone two days back.. But he is extremely pained and wounded at Maalan’s writings ‘ Researchers misinterpret the historical truths according to their own will and Kalachuvadu’s hand in his own writings.' Indira Parthasarathy is now informed of Veluchamy’s admittance of committing a factual error in a reply given by me to his email Yesterday.
Maalan is doing much ado about nothing and making a big issue over a small tissue now. He has no room to hide himself and of course he is in a pathetic condition and this grief should be crowned with consolation and only the tears live in an onion should water this sorrow.
It is a farce that Maalan had earlier ignored me by declaring "I will not respond to you hereafter as you have a closed mind to appreciate the issue" and now he conveniently forgets his declaration and again teases me as a Kalachuvadu Rasika (even after my explanation that Kalachuvadu is not an untouchable god) and gives me importance in his second round article's Title!
This itself is a success to my honest stand!!
Sundara Ramaswamy is being afflicted by this kind of slanderous remarks for the past fifty years. Actually he refused to respond more than sixty criticisms on 'JJ SILA KURIPPUKAL' and he will never respond to you as he knows very well that whatever genuine reply can never satisfy the intellecuals stuffed with strange criterion measure and funny reason.
Atlast somehow Maalan could manage to arrange a thilaga's friend to retort me and congratulate himself. Ha! ha! ha ! one more feather in his cap!
நம்புங்கள் எல்லோரும் ! மாலன் மீசையில் மண் ஒட்டவில்லை!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மூலம்: 'பதிவுகள்.காம்' : http://www.geotamil.com/pathivukal/rpr_and_malan.html