செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு!ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ்  2) சமற்கிருதம்  3) கன்னடம்   4) தெலுங்கு   5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.

இக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.

இக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது. இனி, அக்கல்வெட்டின் பாடம்:   
​​
1. jayati śri-pariṣvāṅga-śārṅga vyānatir-acytāḥ dānav-akṣṇōr-yugānt-āgniḥ śiṣṭānān=tu sudarśanaḥ
ஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன: 
जयति श्री परिस्वाङ्ग स्यार्ङ्ग व्यानतिर् अच्युतः दानवक्स्नोर् युगान्तग्निः सिस्टान्तु सिस्टानान्तु सुदर्सनः

ಜಯತಿ ಶ್ರೀ ಪರಿಷ್ವರ್ಙ್ಗ ಶ್ಯಾರ್ಙ್ಗ [ವ್ಯಾ]ನತಿರ್ ಅಚ್ಯುತಃ ದಾನಕ್ಷೆರ್ ಯುಗಾನ್ತಾಗ್ನಿಃ [ಶಿಷ್ಟಾನಾನ್ತು ಸುದರ್ಶನಃ

jayati -  வெற்றி;  pariṣvāṅga - சங்கு; śārṅga - வில்; vyānatir - நீர்மேல் ஓய்வு; acytāḥ-  திருமால்; dānav-akṣṇōr - அரக்கரை அழித்து தாக்கி; yugānt-āgniḥ - ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu - நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ

2. namaḥ śrīmat=kadaṁbapan=tyāga-saṁpannan kalabhōranā ari ka-
நம: ஸ்ரீமத் கதம்பபன் த்யாக ஸம்பன்னன்  கலபோரனா அரி கா 

नमः श्रीमत् कदंबपन त्याग सम्पन्नन् कलभोरना अरि 

ನಮಃ ಶ್ರೀಮತ್ ಕದಂಬಪನ್ ತ್ಯಾಗ ಸಂಪನ್ನನ್ ಕಲಭೋ[ನಾ] ಅರಿ ಕ

namaḥ - சரணம்; śrīmat - of high rank or dignity; kadaṁbapan - கதம்பர் போற்றும்; tyāga-saṁpannan - ஈகை நிறைந்த; kalabhōranā ari - கலக்கம் நிகழ்த்துவோர்க்கு பகை 

3. kustha-bhaṭṭōran=āḷe naridāviḷe-nāḍuḷ mṛgēśa-nā 

குஸ்த பட்டூரன் ஆளி நரிதாவிலே நாடுள் ம்ருகேச நா 
ककुस्थ भटटोरन आशि नरिदाविशि नाडुल्  म्र्गेस 

ಕುಸ್ಥಭಟ್ಟೋರನ್ ಆಳೆ ನರಿದಾವಿ[ಳೆ] ನಾಡುಳ್

Bhat́t́ōran - சமற்கிருத அறிஞர்; ஆளி - பணியாள்; naridāviḷe nāḍuḷ -  நரி கடக்கும், வாழும் சிற்றூருள்


4. gēndr-ābhiḷar=bhbhaṭahar=appor śrī mṛgēśa-nāgāhvaya-

கேந்த்ராபிலர் பட்டகர் அப்போர் ஸ்ரீ மிரிகேச நாகாஹ்வயர் 
नागेन्द्राभीळर् भ्भटहरप्पोर श्री म्र्गेस नागाह्व्यर   
ಗೇನ್ದ್ರಾಭೀಳರ್ ಭ್ಭಟಹರಪ್ಪೋರ್ ಶ್ರೀ ಮೃಗೇಶ ನಾಗಾಹ್ವಯ
appor - அப்பனார்;

5. r=irrvar=ā baṭari-kul-āmala-vyōma-tārādhi-nāthann=aḷapa-

இர்வர் ஆ பட்டரி குலாமல வ்யோம தாராதி நாதன்  அளப்ப  

इर्व्वरा बटरि कुलामल व्योम तारादि  नाथन  अळप  

ರ್ ಇರ್ವ್ವರಾ ಬಟರಿ ಕುಲಾಮಲ ವ್ಯೋಮತಾರಾಧಿನಾಥನ್ ಅಳಪ 
irrvar-  இருவர்; ஆ - அந்த; kul-āmala - குலவிளக்கு;  vyoma - வானத்து  tara - மீன், நிலா  ஆகியவற்றின் தலைவன், அளபகண -அளப்பறிய கூட்டம்  

6. gaṇa-paśupatiy=ā dakṣiṇāpatha-bahu-śata-havan=ā-

கண பசுபதி ஆ தக்ஷிணாபத பஹு சத ஹவனா
गण  पसुपतिया दक्षिणापथ बहुसतहवना
ಗಣ ಪಶುಪತಿಯಾ ದಕ್ಷಿಣಾಪಥ ಬಹುಶತಹವನಾ 

gana - group; paśupatiy- உயிர்களின் புகலிடத் தலைவன்; dakṣiṇāpatha - தக்கணம்; bahu - மிகப்பல; śata-havan - நூறு வேள்வி

7. havuduḷ paśupradāna-śauryyōdyama-bharitōn=dāna pa-

ஹவுதுள் பசுப்ரதான சௌர்யோத்யம பரிதோன் தான ப 
हव्दुऴ  पसुप्रदान सौर्योदयम  दान
ಹವದು[ಳ್] ಪಶುಪ್ರದಾನ ಶೌರ್ಯ್ಯೋದ್ಯಮ ಭರಿತೋ [ನ್ದಾನ] ಪ

havdul - வேள்விஅவியுள்; pasupradana - உயிர்களின் ஓம்பலை முதன்மையாக; śauryyōdyama - பகலொளி; bharitōn - வரை

8. śupatiyendu pogaḷeppoṭṭaṇa paśupati-
சுபதியெந்து  பொகளிப்பொட்டனான பசுபதி
पसुपतियेन्दु पोगलेप्पोट्टन पशुपति   
ಪಶುಪತಿಯೆನ್ದು ಪೊಗೞೆಪ್ಪೊಟ್ಟಣ ಪశుಪತಿ
pa-śupatiyendu -  தானப் பசுபதி என்று; pogaḷeppoṭṭaṇa - புகழப்பட்டவனான பசுபதி 

9. nāmadhēyan=āsarakk=ella-bhaṭariyā prēmālaya-
நாமதேயன் ஆசரக்கெல்லா பட்டரிய பிரேமாலய 

नामदेयन आसरक्केल्ल भटरिया प्रेमालय 
ನಾಮಧೇಯನ್ ಆಸರಕ್ಕೆಲ್ಲಭಟರಿಯಾ ಪ್ರೇಮಾಲಯ

nāmadhēyan - பெயரோன்; āsarak - வந்துபோகின்ற எல்லா பட்டர்கும்; prēmālaya -அன்பின் உறைவிடமான

10. sutange sēndraka-bāṇ=ōbhayadēśad=ā vīra-puruṣa-samakṣa-

சுதன்கே ஸேந்தரக  பாணோபயதேசத் ஆ வீர புருஷ சமக்ஷ
सुतन्गे सेन्द्रक बणोभयदेसदा वीर पुरुष समक्षदे   

ಸುತನ್ಗೆ ಸೇನ್ದ್ರಕ ಬಣೋಭಯದೇಶದಾ ವೀರಪುರುಷ ಸಮಕ್ಷದೆ

sutange - மகனுக்கு, இளவரசனுக்கு; sēndraka - of  a family; samakṣa - மன்னித்து 

11. de kēkaya-pallavaraṁ kād=eṟidu pettajayan=ā vija

தே கேகய  பல்லவரம் காட் எறிது பெத்தஜயன் ஆ விஜ 
केकय पल्लवरं कादेर्दु  पेत्तजयना विजय 
ಕೇಕಯ ಪಲ್ಲವರಂ ಕಾದೆಱದು ಪೆತ್ತಜಯನಾ ವಿಜ
de - காத்து; kād eṟidu (காடுஎறிந்து) - சிற்றூர் அழித்து; pettajayan - பெற்ற வெற்றி

12. arasange bāḷgaḻcu palmaḍiuṁ mūḷivaḷuṁ ko-

அரசன்கே பால்கள்சு பல்மடியம் முழிவளும் கொ   
अरसन्गे बाल्गश्चु पल्मडीउम् मुशुवल्लिउम् 
ಅರಸಂಗೆ ಬಾಳ್ಗೞ್ಚು ಪಲ್ಮಡಿಉಂ ಮೂೞುವಳ್ಳಿಉಂ
vijaarasange - வெற்றி அரசனுக்கு; bāḷgaḻcu - (மணம்செய்வித்து) வாழ்க்கை அளித்து;  palmaḍiuṁ - ஹல்மிடியின்  முன்னைப் பெயர்; mūḷivaḷuṁ - முழுவதும்; 

13. ṭṭār baṭāri-kuladōn=āḷa-kadamban kaḷadōn mahāpātakan
ட்டர் பட்டாரி குலத்தோன் ஆள கதம்பன் களத்தோன் மஹாபாதகன்   

कोट्टार बटारी कुल दोनाल कदंबन कलदोन महापातकन् 
ಕೊಟ್ಟಾರ್  ಬಟಾರಿ ಕುಲದೊನಳ ಕದಂಬನ್ ಕೞ್ದೋನ್ ಮಹಾಪಾತಕನ್
koṭṭār - கொடுத்தார்; āḷa - ஆளும்; kaḷadōn - அரசகுடியோன், of a  royal family ,

14. irvvaruṁ saḻbaṅgadar vijārasaruṁ palmaḍige kuṟu-
இர்வ்வரும் சள்பகந்தார்  விஜாரசரும்  பல்மடிகே குறு

इर्व्वरुम् सऴबङ्गदर्  विजारसरुम् पल्मडीगे कुरु
ಇರ್ವ್ವರುಂ   ಸಳ್ಬಙ್ಗದರ್‌ ವಿಜಾರರಂ  ಪಲ್ಮಡಿಗೆ  ಕುರು
irvvaruṁ-  தந்தை மகனாகிய மிருகேசர் இருவரும்; saḻbaṅgadar - பொய் (சள்) பகன்றார்; vijārasaruṁ - வெற்றியரசர் பசுபதியும்; kuṟumbiḍi - கைப்பிடி நீர்அட்டி;  

15. mbiḍi viṭṭār adān aḻivornge mahāpatakam svasti

ம்பிடி விட்டார் அதான் அழிவோர்கே மகாபாதகம் ஸ்வஸ்தி 

म्पिडी विट्टार अधान अश्हिवोर्गे महापातकं स्वस्ति
ಮ್ಬಿಡಿ ವಿಟ್ಟಾರ್‌ ಅದಾನ  ಳಿವೊನ್ಗೆ ಮಹಾಪಾತಕಂ ಸ್ವಸ್ತಿ 
viṭṭār - தானம் கொடுத்தார்; அதான் - அதை; aḻivornge - அழிப்போர்க்கு;  mahāpatakam - மாபாவம்; svasti - பிணிக்கும், embed. 

The following line is carved on the pillar's left face:
16. bhaṭṭarg=ī gaḻde oḍḍali ā pattondi viṭṭārakara
பட்டர்க் ஈ கழதே ஒட்டலி ஆ பத்தொண்டி விட்டாரகர

भट्टर्गिगशिदे ओद्दलि आ पत्तोन्दी विट्टारकर  

ಭಟ್ಟರ್ಗ್ಗೀಗೞ್ದೆ ಒಡ್ಡಲಿ ಆ ಪತ್ತೊನ್ದಿ ವಿಟ್ಟಾರಕರ

bhaṭṭarg - பட்டருக்கு; ஈ - இந்த, gaḻde (களத்தை) - வேள்விச்சாலை, கொட்டகை, வீடு;  oḍḍali -முழுவதும்; ā - அந்த, viṭṭārakara - தானம் கொடுத்தார். 

கல்வெட்டு பாடப் பொருள்:
வெற்றித் திரு விளங்க சங்கும் வில்லும் ஏந்திடும், அரக்கரைக் கொன்றும், நல்லோரைக் காத்து தீயோரை அழித்து முறைசெய்கிற சுதர்சன சக்கரத்தை ஏந்தியும்  ஆழியில் ஓய்வு கொள்ளும் அச்சுதன் எனும் திருமாலே சரணம் என பாகவத புராணத்தை அடியொற்றி கடவுள் வாழ்த்து தொடங்குகிறது. உயர்மிகுபெருமை உடையவரும், கதம்பர் போற்றலுக்கு உரியவரும், ஈகை நிறைந்தவரும்,போர் என முழங்குவார்க்கு பகையென விளங்குபவருமான ககுஸ்த பட்டூரனின் பணியாளும் நரிஉலாவும் (நரித்தாவு) எனும் சிற்றூர் வாழ்நருமான மிருகேச நாகேந்திர அபிலரும், அவர் தந்தை பட்டகர் மிருகேச நாகஹவ்யரும் ஆகிய இருவரும் அந்த பட்டர் குலஒளியும், வானத்து உடுக்களின்  நாயகனும், அளப்பறிய பெருங் குழுவுடையவரும், உயிர்களின் புகலிடத் தலைவனும், தக்கணத்தில் பல நூறு வேள்வி இயற்றி அவ்வேள்வியில் உயிர்களின் ஓம்பலையே முதன்மையாக வைத்து பகலொளிக் காலம் வரை கொடை தந்து தானப்பசுபதி என்று புகழப்பட்டவனான பசுபதி என்னும் பெயரினன்; தன்னை நாடிவந்து போகின்ற எல்லா பட்டர்க்கும் அன்பின் உறைவிடமான இளவரசனுக்கு அரச குடும்பத்து அம்பு எய்யும் விற்பயிற்சியை கொடுத்தனர். அதனால் அந்த வீரமகன் கேகய பல்லவரின் சிற்றூரை அழித்து பெற்ற வெற்றிக்குப் பிறகு அவனை மன்னித்துக் காத்தார். அதற்காக வெற்றி அரசர் பசுபதிக்கு மணம் முடித்துவைத்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து பல்மடியம் என்னும் ஊர் முழுவதையும் வெற்றிப் பரிசாய் தந்தார் அந்த பட்டர் குலத்தோன், ஆளும்  கதம்பனான அரசக்குடியோன். மாபாவியர்களான தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் வெற்றியரசரிடத்தில் பொய் பகன்றதால் வெற்றியரசர் பசுபதியும் பல்மடியத்தை நீர்அட்டி தானம் கொடுத்தார். அந்த தானத்தை அழிப்பவரை மாபாவம் பிணிக்கும் என்பது கல்வெட்டின் நிறைவானச் செய்தி. தூணின் இடப்பக்கக் கல்வெட்டு வரி மேலுள்ள 15 வரிகளோடு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் "பட்டருக்கு இந்த வேள்விச்சாலையை முழுவதுமாக அந்த பத்தொந்தி தானம் கொடுத்தார்" எனக் இயம்புகிறது.      

கல்வெட்டை வடித்தவர் யார்?
பல்மடியமாம் ஹல்மிடியை தானம் கொடுத்த வெற்றியரசர் இக்கல்வெட்டை வெட்டியிருந்தால் அவருடைய மெய்க்கீர்த்தி அதில் இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த அரசருடைய மெய்க்கீர்த்தியும் இக்கல்வெட்டில்  இடம்பெறவில்லை. மேலும், மன்னன் என்பவன் தன் அதிகாரத்தின் மீதும் படையின் மீதும் முழு நம்பிக்கை உடையவன் ஆதலின் இந்த அறத்தை அழித்தவர் மாபாவி ஆவார் என்று சாவித்து தன் இயலாமையை காட்டிக்கொள்ள  மாட்டான்.  தூணின் இடப்பக்கம் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் 16 ஆம் வரிச் செய்தி மேல் உள்ள மற்ற செய்தியோடு தொடர்புடையதாக இல்லாமல் யாரோ பத்தொந்தி என்பவர் பட்டருக்கு வேள்விச் சாலையை தானம் கொடுத்ததாகக்  குறிப்பிடுகிறது.  இக்கல்வெட்டில் அதிக அளவு சமற்கிருத சொற்கள் ஆளப்பட்டுள்ளன என்பதும் இதனை வெட்டியவர்கள் அவ்வூர் பிராமணரே என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே இக்கல்வெட்டு முதன் முதலில் மண் கோட்டை அல்லது மேற்கு வாயிலில் இருந்தது பின்னர் ஒருகாலத்தில் வீரபத்திரன் கோவில் முன் கொண்டுவந்து  வைக்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறானது.  உண்மையில், பிராமணரால் வெட்டப்பட்ட  இக்கல்வெட்டு பிராமணர் ஆளுகை செலுத்தும் வீரபத்திரன் கோவில் முன்பு தான் தொடக்கம்முதலே வைக்கப்பட்டு இருந்திருக்க முடியும். மண் கோட்டை பிராமணர் ஆளுகைக்கு உட்படுவ்தல்ல ஆதலால் அங்கு இக்கல்வெட்டை முதன்முதலாக வைத்திருந்திருக்க முடியாது.

கல்வெட்டை ஆழ்ந்து படிக்குங்கால் இதில் குறிக்கப்படும் கதம்ப மன்னன் ககுஸ்தனுக்கும் வெற்றியரசன் பசுபதிக்கும் எவ்வகை உறவு இருந்தது என்பதை அறிய இயலவில்லை. வெற்றியரசன் பசுபதி தான்வெற்றிப் பரிசாகப் பெற்ற பல்மடியத்தை தானம் செய்துவிடும் அளவிற்கு தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் அவன்பால் அளவிறந்த செல்வாக்கு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. முத்தாய்ப்பாக பல்மடியத்தின் மீது ஒருகாலத்தே அளவற்ற உரிமை பெற்றிருந்த பிராமணர்கள் அந்த உரிமைக்கு அதுபோது இடர் ஏற்படுவதை உணர்ந்து என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வைச சான்றாகக் காட்டி அதன் மூலம் இந்த பல்மடியம் தமக்குக் முன்னமேயே சொந்தமாகியது என்று கல்வெட்டு வடித்து தம் உரிமையை வலுப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர் என எண்ணத் தோன்றுகிறது.

பல்மடிய தானநிகழ்வைக் குறிக்கமுடிந்த பிராமணரால் மிருகேசர் இருவரது ஊரின் பெயரை மட்டும் தெளிவாகக் குறிப்பிட முடியாமல் நரிஉலாவும் இடம் என்கின்றனர். இந்த இருவர் வெற்றியரசரிடம் சொன்ன பொய் என்ன என்பதும் குறிக்கப்படவில்லை. கல்வெட்டில் உள்ள அத்தனைக் கன்னடச் சொற்களும் தமிழின் திரிபுச் சொற்களே. அதனால் தமிழ் அகராதியின் துணை வேண்டப்படுகிறது.  

கல்வெட்டின் காலம் எது?
கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே  கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்றுஅறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை. இதில் இடம்பெறும் பிற செய்திகளையும், மொழிநடையையும், மக்கள்  நம்பிக்கைகளையும் நோக்கித் துலக்கமாக இக்கல்வெட்டின் காலத்தை குறித்திருக்க இயலும். கல்வெட்டறிஞர்கோவிந்த சுவாமி கய் என்பவர் இக்கல்வெட்டில் இடம்பெறும் கதம்பன் ககுஸ்தன் என்பவன் கதம்ப ஆள்குடியின் அரசன் ககுஸ்தவர்மன் அல்லன் மாறாக இவன் பட்டாரி குலத்தைச் சேர்ந்த வேறு ஒரு அரசன், ஏனெனில் கல்வெட்டில் மானவ்ய கோத்திர, ஹாரிதீ புத்திர அதோடு முகாமையாக தரும மகாராஜ போன்ற கதம்ப மன்னர் பட்டப்பெயர்கள்   குறிக்கப்படவில்லை என்கிறார். இக்கல்வெட்டில் கன்னடம் பீடுநடை போடுவதால் இது கன்னடக் கல்வெட்டு என்பதில் ஒருசிறிதும் ஐயம் இல்லை. அதே நேரம் இக்கல்வெட்டில் மக்கள் மொழியில் இடம் பெறாத சமற்கிருதச் சொற்கள் பேரளவில் இடம் பெறுகின்றன. தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது, அரசமொழியானது என்பதை நோக்க இக்கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது.

மேலும்,  இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இலக்கித்துள்ள விஷ்ணுவின் பெருமைகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்தை உள்வாங்கி சமற்கிருத மொழியில்  எழுதப்பட்டதாகும். பாகவத புராணம் தென்னகத்தில் பரவிய பிறகே கி.பி. 8 ஆம் நூற்றாண்டிளவில்  ஆழ்வார்கள் தோன்றி திருமாலைப் பாடிப்பரவினர். உண்மையில், புராணங்கள் வெகு காலத்திற்கு முன்னமேயே இயற்றப்பட்டிருந்தால் ஆழ்வார்கள் இன்னும் முன்னமேயே தோன்றியிருப்பர் என்பதே உண்மை. அதோடு, கற்றளிக் கோவில் இயக்கமும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்ற கருத்தை பொருத்ப் பார்த்தால் வீரபத்திரன் கோவிலும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பின்னேயே தோன்றியிருக்க முடியும். அதனால் இக்கல்வெட்டும் அதன் பிற்பாடு தான் வெட்டப்பட்டிருக்க முடியும்.

பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டளவில் தென்னகத்தில் புராணங்கள் வழியே  பரவிய பின்பு தான் மக்கள் நெஞ்சில் இடம் கொண்டன. அதற்கு முன் பாவம், புண்ணியம் ஆகிய கருத்துகள் மக்களிடையே இருந்ததில்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இல்லாத ஒரு கருத்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டின்  கல்வெட்டில் இடம்பெற்றிருக்க முடியாது. முதன் முதலாக அரசர் அல்லாத பிறவோரால் வெட்டப்பட்ட கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளின் எழுத்து நடை அமைப்பில் தான் இந்த பாவம்,  புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் இடம்பெறுகின்றன. காட்டாக, இந்த அறம் அழித்தார் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், கங்கைக் கரையை இடித்த பாவத்தை அடைவர், இந்த அறம் காத்தார் கால்மேல் என் தலை ஆகிய கருத்துகளை காணவியல்கிறது. இதே போல் இக்கல்வெட்டிலும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் ஆளப்படுவது இந்த கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது. இதற்கு சான்றாக கீழே இரு கல்வெட்டுகள் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  

மேற்காணும் காரணங்களால் இந்த ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்கு செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது. இதே போல தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தற்கு பழமைச் சான்றாக காட்டப்பட்ட கடப்பை மாவட்ட கமலாபுரம் வட்டத்தில் அமைந்த எர்றகுடிபாலேம் என்ற ஊரின் கண் அமைந்த சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 575 இல் ஆட்சிபுரிந்த எரிகல் முத்துராஜனின் காலத்தது என்று சொல்லப்பட்டுள்ளது. தென்னகத்தில் கற்றளிகள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கட்டப்பட்டன எனும் போது இக்கல்வெட்டும் அந்த கோவிலும் எவ்வாறு கி.பி  6 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்க முடியும்  என்ற வலுவான கேள்வி எழுகிறது.  

எடுத்துக் காட்டு கல்வெட்டுகள் :
1. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்பெறுகிறான். ஒளகண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான். கல் தூம்பை காத்தவர் பாதம் என் தலைமேல் இருப்பதாகக் கடவது என்றும் அழித்தார் கங்கை குமரியிடை வாழும்  மக்கள் யாவரும் செய்த பாவத்தை அடைவர் என்றும் குறித்துள்ளார். ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும். கல்வெட்டுப்பாடம் பின்வருமாறு.

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை / கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு / ............வது மிலாடுக்குறுக்கைக் /கூற்றத்து ..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க / ....னேன்  இவூர்க்கு நஞ்செயரை / ..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு) / தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா / தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ /
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய் /தார் செய்த பாவமெல்லாங்கொள்வான் மேலை கற்றூபும் இட்டாருமிவரே

2. மேலை கங்க அரசன் நரசிம்ம வர்மனுக்கு பதினெட்டாவது ஆட்சியாண்டில் சன்மதூரன் அதிவாரண்டர சாத்தையன் தன் முக்கூடுர் புன்செய், நன்செய் நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் கைநீரட்டி தானமாக கொடுத்தோம் இதைக்  காத்தார் கால்மேல் என் தலையை வைத்ததாகக் கடவது என்று குறிப்பிட்டு தான் செய்த அறத்தை மறத்தல் வேண்டாம் என்று கல்வெட்டில் இலக்கித்துள்ளார்..  .

ஸ்ரீ கோ விசிய நரசிங்க பருமற்கு / யாண்டு பதினெட்டாவது சன்மதூ  / ரண்டாம் அதிவாரண்டர சாத்தைய னார்க்கு முக் / கூடூர்  அவருடைய புன் புலமும்  நன் புலமும் /  அவர் இருந்த மனையும் பரபு  / செய்த ஒன்று கை நீற்றீர் பெய் / து பிரமதாயன் கொடுத்தோம்  இ / து காத்தார் கால் மேல் என் / றலை      அறம(றவர்க)    கீழ் முட்டுகூர், குடியாத்தம் வட்டம் கல்வெட்டு SII XX  பக் 178

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்