நடிகை ஶ்ரீதேவி எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர். அவர் எங்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக, இளம் பெண்ணாக எங்கள் கண் முன்னால் வளர்ந்து இந்தியத் திரையுலகின் உச்சத்தைத் தொட்டவர். அவரது நினைவு தினம் பெப்ருவரி 24.
கந்தன் கருணையில் அறிமுகமாகி, எம்ஜிஆர் (நம்நாடு)< சிவாஜி (பாபு) எனத் தொடர்ந்து 'மூன்று முடிச்சு', 'குரு', 'வாழ்வே மாயம்', 'பதினாறு வயதினிலே' , 'சிகப்பு ரோஜாக்கள்' , 'மூன்றாம் பிறை' , 'மீண்டும் கோகிலா' என எழுபதுகளில், எண்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.
அவர் நினைவாக ஒரு பாடல். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் திரையுலகில் போட்டி நிலவிய காலகட்டம். ரிக்ஷாக்காரனாக எம்ஜிஆர் நடித்ததும் அதற்குப் போட்டியாக பாபுவில் சிவாஜி ரிக்ஷாக்காரனாக நடித்திருப்பார். யாழ் ராஜா திரையரங்கில் மிகப்பெரிய கட் அவுட்டுடன் பாபு வெளியானது நினைவிலுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக ஶ்ரீதேவி நடித்த திரைப்படங்களில் 'நம்நாடு' திரைப்படத்தில் வரும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' பாடலும், 'பாபு' திரைப்படத்தில் வரும் 'இதோ இந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் பிடித்தவை. அவர் நினைவாக 'பாபு' திரைப்படப் பாடலான 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடலை பகிர்ந்துகொள்கின்றேன்.
https://www.youtube.com/watch?v=N5B0OgHmTBc
கண்ணே கலைமானே
'மூன்றாம் பிறை' திரைப்படம் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கது. கமல், ஶ்ரீதேவியின் சிறந்த நடிப்பு, பாலுமகேந்திராவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசைஞானி இளையராஜாவின் இன்னிசை, கவிஞர் கண்ணதாசனின் திரைக்கு எழுதிய இறுதிப்பாடல் என முக்கியத்துவம் மிக்க திரைப்படம். கவிஞர் கண்ணதாசன் இதன் திரைக்கதையைக் கேட்டுவிட்டு இரண்டு நிமிடங்களில் இப்பாடலை எழுதியதாகவும் அறிந்திருக்கின்றேன். ஶ்ரீதேவியின் தமிழ்த்திரைப்படங்களில் அவரது நடிப்பில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படமாக 'மூன்றாம் பிறை'யையே கூறுவேன்.
https://www.youtube.com/watch?v=rtgU6lIBz5A
பாடல் வரிகள் முழுமையாக...
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே!
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே!
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்.
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.
ஊமை என்றால் ஒரு வகை அமைதி.
ஏழை என்றால் அதிலொரு அமைதி.
நீயோ கிளிப் பேடு. பண்பாடும் ஆனந்தக் குயில்ப் பேடு.
ஏனோ தெய்வம் சதி செய்தது.
பேதை போல விதி செய்தது.
கண்ணே கலைமானே!
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே!
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்.
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்.
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்.
உனக்கே உயிரானேன். என்னாளும் எனை நீ மறவாதே.
நீ இல்லாமல் ஏது நிம்மதி. நீதான் என்றும் என் சன்னிதி.
கண்ணே கலைமானே!
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே!
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்.
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.