"என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்"
இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகின் இரசிகர்களையெல்லாம் கவர்ந்தவர் நாட்டுப்புறப்பாடகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் பாடிய கொட்டாம்பட்டி றோட்டிலே பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல்.
'ரத்தபாசம்' திரைப்படத்தின் மூலம் நடிகராகத் திரையூலகில் நுழைந்தவர் ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக விக்கிபீடியா கூறுகின்றது. அவர் நேற்று (மே 5) மறைந்த செய்தியினை அறிந்தபோது அவரது பாடல்களை மீண்டுமொருமுறை மனது அசை போட்டது.
இள வயதில் வயதில் டி.கே.எஸ் நாடகக் குழுவில் பல நாடகங்களில் நடித்த காரணத்தினால் டி.கே.எஸ்.நடராஜன் என்று அழைக்கப்பட்டார்.
'வாங்க மாப்பிள்ளை வாங்க' திரைப்படத்தில் இடம் பெற்ற இவரது 'என்னடி முனியம்மா' பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.
இப்பாடல் பின்னர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த வாத்தியார் திரைப்படத்திலும், இமான் இசையில் சிறப்பாக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. அப்பாடலைப்பாடியவர்கள் பாடகர் கார்த்திக், பிலாஸ் (Blaaze). அதில் கெளரவத்தோற்றத்தில் டி.கே.எஸ்.நடராஜனும் இடம் பெற்றுள்ளார்.
என்னடி முனியம்மா பாடல்: https://www.youtube.com/watch?v=fXq_wc1J7-Q
டி.கே.எஸ்.பாடற் தொகுப்பு: https://www.youtube.com/watch?v=pXypZh5qxw0
வாத்தியார் திரைப்படத்தில்: https://www.youtube.com/watch?v=QI5hKDrfiCw
என்னடி முனியம்மா பாடல் முழுமையாக நாட்டுப்புறப்பாடலா அல்லது யாராவது எழுதியதா என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்.
என்னடி முனியம்மா பாடல் முழுமையாக:
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
இடுப்பில சொருகுறியே கண்ணம்மா
அது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன் மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
உன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல லவுக்கத்துணி
உன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல லவுக்கத்துணி
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா
அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்