அன்புள்ள தமிழ் நண்பர்களே! "மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன்- அவர் மாண்டுவிட்டாலதைப் பாடிவைப்பேன்- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை- எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லை!" இது போன்ற மணியான கருத்து நிறைந்த பாடல்கள் மூலம் நம் மனதில் நிறைந்த கவியரசு கண்ணதாசனின் 85-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் ஜுன் மாதம் 30-ம் நாள் சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பவுமண் அரங்கில் நடைபெறவுள்ள "கவியரசு கண்ணதாசன் கலை விழா"வுக்கு சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் ஆஸ்திரேலிய தமிழ் சங்கம் அன்புடன் வரவேற்கிறது. "தமிழருவி மணியண் ஐயா அவர்களின் தேன்தமிழ் சொற்பொழிவு" "விறுவிறுப்பான கருத்துமிக்க வழக்காடு மன்றம்" மற்றும் கண்ணதாசனின் சிறந்த திரையிசை பாடலுடன் கூடிய நடன நிகழ்ச்சி! அனைவரும் வருக! தமிழருவியில் நனைக! இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -