நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
கொழும்பு மருதானை தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரபல எழுத்தாளரும் கவிஞரும் நாவலாசிரியரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை கமால் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.
பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் வாசனா தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்வதோடு நூலின் முதன் பிரதியையும் பெற்றுக் கொள்வார்.
ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.எம். ஹிஸ்புல்லாஹ் சிரேஷ்ட அதிதியாக கலந்துகொள்வார். கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணிகளான எம்.ஆர்.எம். ரம்ஸீன், சால்தீன் எம். ஸப்ரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினூஸியா, ஒஸ்டம் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். நஸார், எம்.வை.எம். இக்றாம், ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின்; பணிப்பாளர்களான ஸரீனா ஹிஸ்புல்லாஹ், ஹஸ்னா ஹிஸ்புல்லாஹ் இஃப்லால், டாக்டர் எம்.இஸட்.எம். இஃப்லால், கலைஞர் எம்.எஸ்.எம். ஜின்னா, டாக்டர் ஸஹாமா ஸப்ரீன், இல்ஹாம் மசூர் மௌலானா, தினகரன் ஆசிரிய பீடத்தின் ஷம்ஸ் பாஹிம், மௌலவி எம்.எஸ்.எம். சுல்தான், அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், சட்டத்தரணி அஷ்ஷெய்க் சமீல் எம். சுல்தான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளார்கள்.
- எழுத்தாளர் திக்குவல்லை ஸும்ரி -
இந்த நிகழ்வினை செல்வன் தில்ஷாத் முஹம்மத் உமர் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைக்க, வரவேற்பு கீதத்தினை என்.எம். ஹிமாயத்துல்லாஹ் முன்வைப்பார். தொடர்ந்து வரவேற்புரையை திக்குவல்லை ஸப்வான் நிகழ்த்த, தலைமையுரையை திக்குவல்லை கமால் நிகழ்த்துவார். நூலாசிரியர் அறிமுகத்தை அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி நிகழ்த்துவார். விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் வாழ்த்துரை நிகழ்த்துவார். கவிதைப் பொழிவினை கவிஞர் எம்.எஸ். அப்துல் லதீப் மற்றும் கவிதாயினி வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஆகியோர் நிகழ்த்துவார்கள். சிறுகதை நூலாய்வினை கலாநிதி எம்.சி. ரஸ்மின் நிகழ்த்துவார்.
தொடர்ந்து சஞ்சாரம் - 'பிஞ்சு மனம்' நிகழ்ச்சியை ஸஹாரா இஸ்பஹான், இஸ்ஸா இஸ்பஹான் ஆகியோர் வழங்குகின்றனர். தொடர்ந்து "நட்பு" சிறுகதை நூலிலிருந்து ஒரு கதையை தெரிந்து சொல்ல வருகிறார்கள் வானொலிக் கலைஞர்களான சில்மியா ஹாதி மற்றும் ஜுனைத் எம். ஹாரிஸ் ஆகியோர்.
பிரபல வானொலி சஞ்சாரம் சமூகச் சித்திரம் நிகழ்ச்சியை வானொலிக் கலைஞர்களான மஹ்தி ஹஸன் இப்றாஹீம், ஞெய் ரஹீம் ஷஹீத், திக்குவல்லை ஸப்வான் ஆகியோர் வழங்க உள்ளார்கள்.
தொடர்ந்து ஏற்புரையை திக்குவல்லை ஸும்ரி நிகழ்த்த நன்றியுரையினை ரஹீமா ரம்ஸி அவர்கள் வழங்குவார்.
இந்த சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை ரஸ்மி மௌலானா, பாத்திமா ரீஸா ஹுசைன் ஆகிய வானொலிக் கலைஞர்கள் சிறப்பாகத் தொகுத்தளிக்கவுள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை 'இனிமை கலா மன்றம்' ஒழுங்கு செய்துள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.