அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்திருந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.
கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் வடக்கு – கிழக்கு – மலையகம், மற்றும் மேற்கிலங்கையில் இந்நிதியத்தினால் உதவி பெற்று வரும் மாணவர்களின் தொடர்பாளர் அமைப்புகளின் ஊடாக நடத்தப்பட்ட மாணவர் ஒன்றுகூடல், நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் பற்றிய விபரமான தகவல்களும் படங்களும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார். நிதிச்செயலாளர் திருமதி திவானா அஜந்தன் நிதியறிக்கையை ( 2022 – 2023 ) சமர்ப்பித்தார்.
இலங்கையில் வாழ்க்கைச்செலவுகள் அதிகரித்திருப்பதை கவனத்தில் கருதிய கல்வி நிதியம், மலரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவையும் அதிகரிக்கவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
2024 ஆம் ஆண்டுக்கான நிருவாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது:
தலைவர்: திருமதி விதுஷினி விக்னேஸ்வரன்
துணைத்தலைவர் : திரு. லெ. முருகபூபதி
செயலாளர்: திரு. குமாரசாமி கிருஷ்ணகுமார்.
நிதிச்செயலாளர்: திருமதி திவானா அஜந்தன்.
துணை நிதிச்செயலாளர்: திரு. சதீஸ்வரன் தியாகராஜா.
செயற்குழு உறுப்பினர்கள்:
திருமதி சிவமலர் சபேசன்.
திரு. ரோகான் முருகையா.
திருமதி வாசுகி பிரபாகரன்
திருமதி ஶ்ரீஜீவனி ரவிகாந்த்.
கணக்காய்வாளர்: திரு. ஏ.வி. முருகையா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.