Topic: Aana Saana Abdus samathu -Discussion
Time: Jun 13, 2021 03:00 PM London
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81343251488?pwd=L1hyUjdSYlg4NXk5d1NyMnBDUVlKZz09
Meeting ID: 813 4325 1488
Passcode: 140131
ZOOM வழியான ,
10வது தொடர் கலந்துரையாடல்
அ.ஸ. அப்துஸ் ஸமது
நாவலாசிரியர் , சிறுகதையாளர்
(1929- 2001)
உரையாளர்கள்-
*பாலமுனை பாறுக்
- கவிஞர்
* ஹனீபா இஸ்மாயில்
-கல்வியலாளர்
* றமீஸ் அப்துல்லா
-கல்வியலாளர்
காலம் -13ஜூன் 2021( ஞாயிறு)
3.00 PM London, 4.00 PM Europe ,7.30 PM Sri Lanka& India, 10.00 AM Canada
மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்
ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .
வழிப்படுத்தல்
எம்.பெளசர்
தொடர்புகளுக்கு...
0044 7817262980
Email. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இவரது படைப்புகள், எழுத்துக்கள், தொகுப்புகள்
சிறுகதைத் தொகுப்பு
*எனக்கு வயது பதின்மூன்று – 1977
நாவல்கள்:
*பனிமலர்-1982
*கனவுப்பூக்கள்-1983
*தர்மங்களாகும் தவறுகள்-1987
தொகுப்பு
*முற்றத்து மல்லிகை-1964 ( ஈழத்து முஸ்லிம் புலவர்கள் 57 பேரின் கவிதைகள்)
*பிறைப்பூக்கள்- 1979 (ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்கள் 27 பேரின் சிறுகதைகள்
கட்டுரைத் தொகுப்புக்கள்:
* சுலைமான் பல்கீஸ் - 1959
*இசுலாமிய இலக்கியம்
*நவீன தமிழ் இலக்கியம்
*சீறா இன்பம் - 1957
பாடநூல்கள்
இலக்கியப் பொய்கை 4, 5, 6, 7, 8 ஆம் வகுப்புப் பாடநூல்கள்
விருதுகள்:
சாகித்திய மண்டலப் பரிசு - எனக்கு வயது பதிமூன்று என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு – 1977
வீரகேசரி மட்டக்களப்பு பிரதேச நாவல் போட்டி - பனிமலர் - முதற்பரிசு – 1982
இவர் பற்றி:
கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளிகளில் முக்கியமானவர். அக்கரைப்பற்றை தாயகமாக கொண்ட இவர் மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். இவரது முதல்சிறுகதை 'நூர்ஜஹான்' 1950 இல் தினகரனில் வெளியானது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கிழக்கிலங்கையின் முக்கிய அங்கத்தவர் , மட்டக்களப்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவர்.
இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் வாழ்வினை நுட்பமாகவும் கலாரீதியாகவும் யதார்த்தமாகவும் படைப்பிலக்கியத்தில் வனப்புறச் சித்தரித்தவராக விமர்சகர்கள் அப்துல் ஸமதுவை மதிப்பிடுகின்றனர். இவர் உருவகக் கதைகள் எழுதுவதிலும் வல்லவர். நல்ல மேடைப் பேச்சாளர். வானொலி நிகழ்ச்சியாளர். இவர் 1991 இல் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க அமைச்சினால் கௌரவிக்கப்பட்டார்.2001ம் ஆண்டு மறைந்தார் .
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.