நாள்: டிசம்பர் 30, வெள்ளிகிழமை, 2011 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: திம்பம் & தெங்கு மரகடா
கட்டணம்: 2200/-
வணக்கம் நண்பர்களே, புது ஆண்டுக் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை என்பதாலும், ஆண்டின் எல்லா இரவுகளின் அமைதியையும் அந்த ஒரே நாள் இரவில் அதகளப்படுத்தும் மனிதர்களின் பேராற்றல் கண்டு நடுங்குவதைவிட, கடுங்குளிரில், வனவிலங்குகளைக் கண்டு அந்த அடர்த்தியான இரவில் நாம் நடுங்கிப் போவதே மேல். ஆதாலால் தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, வெள்ளிகிழமை இரவு தமிழகத்தின் மிக அடர்த்தியான வனப்பகுதியான சத்தியமங்கலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திம்பம், மற்றும் தெங்கு மரகடா பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.
தெங்கு மரகடா பற்றி:
எப்போதும் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும் நீரோட்டத்தின் ஓசை, எங்கு திரும்பினாலும் வாழைத் தோட்டத்தால் மூடப்பட்டு பசுமையாய் காட்சிதரும் வயல்வெளிகள், ஊரைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பியதுபோல உயர்ந்த மலைகள், இடையறாது வீசிக்கொண்டிருக்கும் மாசற்றக் காற்று.
இப்படி நாம் வர்ணிக்கும் ஒரு அழிகிய பூமி, காஷ்மீரிலல்ல, நமது தமிழ்நாட்டிலேயே உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியின் முடிவில், நீலகிரி மாவட்டத்தின் எல்லையாகத் திகழும் தெங்கு மரஹாடா எனும் இடம்தான் இப்படியுள்ளது.
பரந்து விரிந்த சத்தியமங்கலம் வனத்தில் புகுந்து, கரடு முரடான பாதையில் (சுமோ, குவாலிஸ் போன்ற வலிமையான வாகனத்தில்) 28 கி.மீ. பயணம் செய்துதான் இந்த அழகிய பூமியைக் காண முடியும். ஆனால் பயணப்பாதை எல்லா ஆபத்துக்களும், இயற்கையின் வன அழகையும் கொண்ட சாகசமான அனுபவமாக இருக்கும்.
போகும் வழியில் யானைகளைக் காணலாம், கூட்டம் கூட்டமாக மான்களையும், காட்டெருமைகளையும் காணலாம். பகலாக இருந்தால் வாழ்க்கையில் பார்த்திராத - செம்போத்து போன்ற - பல அரிய பறவைகளைக் காணலாம். மயில்கள் மிகச் சாதாரணம். மாலை நேரத்தில் பயணம் மேற்கொண்டால், முயல், முள்ளம்பன்றி, யானைகள், நரிகள், கரடிகள், சிறுத்தைகள் என்று பல விலங்குகளைக் காணலாம்.
மேலும் படிக்க: http://tamil.webdunia.com/entertainment/tourism/wildlife/0805/08/1080508051_1.htm
புத்தாண்டை நிச்சயம் கொண்டாடியே ஆகவேண்டும் என்று நினைக்கும் நண்பர்களும் இதில் கலந்துக் கொள்ளலாம். யாருடைய அமைதிக்கும் பங்கமில்லாமல் காட்டில் இந்த புத்தாண்டை நீங்கள் கொண்டாடலாம். எப்படி கொண்டாடப் போகிறோம் என்பதை நிச்சயம் நேரில் வந்துப் பாருங்கள்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு: 9840698236
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.