சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.
அங்கம் 23
1974ஆம் ஆண்டு கிளிநொச்சி, உருத்திரபுரம் “காந்தி சேவா சங்கம்” பொதுக்கூட்டம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்து இருத்தார் அதன் செயலாளர் அமரர் சி.க.வேலாயுதபிள்ளை அவர்கள் அதன் தலைவர் திரு.பெரியதம்பி (முன்னாள் பாராளுமன்ற சமநேர மொழிபெயரப்பாளர்) இந்தக் கூட்டத்திற்கு காந்திய வாதிகளான திருகோணமலை காந்தி மாஸ்ரர் அவர்கள், உருத்திரபுரம குருகுலம் கதிரவேலு அப்பு ஆசிரியர், ஆ.ம.செல்லத்துரை ஆசிரியர், சி.க.நல்லதம்பி. எஸ்.ஏ.டேவிட், சோ.இராச்சுந்தரம், மு.பாக்கியநாதன், எஸ். ஶ்ரீரங்கன், இராதாகிரஷ்ணன் இன்னும் பலர் கிட்டத்தட்ட 75-80 பேர் பார்வையாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். மத்ய போசனம் வழங்கப்பட்டது். வழமைபோல காந்தி மாஸ்ரர் புத்தகக் கடையை கடை விரித்திருந்தார். வாசகர்களுக்கு அது விருந்தாயற்று பலர் நூல்களை வாங்கினார்கள். நானும் சில நூல்களை வாங்கினேன். அவர் எங்கு புத்தகக் கடை வைத்தாலும் அவருக்காக புத்தகங்கள் வாங்குவேன். சிறிய சிறிய நூல்கள் பல நூல்களை அவருக்கு உதவ செய்யும் நோக்கிலும் வாங்குவேன். கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்தனர்.
காந்தியம் பிறக்க அடித்தளமிட்ட வரலாறு.
அடுத்தநாள் நான் சாந்தி கிளினிக்கிற்குப் போனேன். அப்போது இராசுந்தரம் அவர்கள் கூறினாரகள் நாம் இந்த ஊரில் சாதியில் ஒதுக்கப்பட்ட ஒரு குடியிருப்பு உண்டு. அவர்கள் நகரசுத்தி தொழிலாளர்கள். அவர்களே இந்த நகரத்தைச்சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள் இவர்கள் முழுப்பேரும் மலையத்தை சேரந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு சிறுவர் கல்வி, போசாக்கு உணவு , சுகாதார வாழ்க்கை போன்றவற்றை கற்பிக்க வேண்டும். இங்கிருந்து எமது சமூகத்திற்கு சில இங்கு இருந்து அத்திபாரம் போடுவோம் என முடிவு செய்து இரண்டு இளம் படித்த பெண் பிள்ளைகளை தெரிவு இதில் ஒரு பெண்பிள்ளை அந்த சமூகத்தில்இருந்தே தெரிவு செய்தோம். முதலில் வவுனியா நகரத்தில் உள்ள படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட பத்துப்பேர் வரையில் இராச்சுந்தரம் அவர்கள் அழைத்து பி .எஸ். மொகமட் கட்டிடத்தின் மேல் மாடியில் அவர்களது அனுமதி பெற்று 10-12 பேர் ஒன்று கூடி ஒரு விளக்கக் கூட்டம் நடத்தி அதில் நாம் சூசைப்பிள்ளையார் குளத்தில் குடியிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறுவர் பாடசாலையும் சத்துணவுக் கூடமும் நடத்துவதென்று முடிவு செய்து், மாதம் ஒருவரிடம் 10 ரூபா வீதம் வங்கி கட்டளை மூலம் பெறுவதென்று முடிவு செய்து அதனை இராச்சுந்தரமும் பாக்கியநாதனும் சேர்ந்து சேர்க்க வேண்டும் என்ற முடிவுடன் வந்தவர்கள் யாவரும் வங்கி ஸ்ராண்டிங் ஓடரில் 10ரூபா செலுத்த கையெழுத்திட்டனர்.
ஒரு நல்ல நாளைத்தெரிவு செய்து சூசைப் பிள்ளையார் குள சிறுவர் பாடசால திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது் சூசை என்பது கத்தோலிக்கப் பெயர் பிள்ளையார் என்பது சைவ பெயர் இது சமய ஒற்றுமையை வெளிப்படுத்தும் செயற்பாடாகும். இந்த ஊருக்கு முன்பு ரம்பைக்களம் அந்தோனியார் கோவில் உண்டு எமது இந்த சிறுவர் பாடசாலத் திறப்பிலும் பணம் மாதாந்தம செலுத்துவதிலும் பல கத்தோலிக்க நண்பர்கள் இணைந்து கொண்டனர்.
அங்கம் 24
சூசைப்பிள்ளையார்குள சிறுவர் பாடசாலை திறப்பும் அதற்கு முதற்கிழமை நடைபெற்ற காந்தி சேவா சங்க கூட்டம் இரண்டும் ஏதோ ஒரு வன்னி பிரதேசத்திற்கு ஒரு அரச சார்பற்ற சேவை நிறுவனம் தேவை என்பதை உணர்த்தி காட்டியது். நாம் சூசைப் பிள்ளையார் குளத்துடன் மட்டும் நிற்கக் கூடாது என்ற நோக்கோடு சில ஆசிரியைகளையும் தொண்டர்களையைம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் அழைத்து P.S.Mohamed கட்டிடத்தின் மேல் மாடியில் சிறுவர் பாடசாலை ஆசிரியர்களாக வரக் கூடியவர்களையும், சிறு கைத்தொழில் பழக்கிக் கொடுத்தல் அதாவது சீமெந்து பைகளை வாங்கி அதில் கடைகளுக்கு தேவையான அளவில் வேறு வேறு அளவுகளில் பை ஒட்டி அவர்கள் அதனை விற்று அதில் இருந்து ஒரு வருமானம் பெறுதல். பனை ஓலையல் பின்னல் வேலை பழக்கி விட்டு அதனை வீட்டில் வருமானம் தரக்கூடிய அளவில் பழக்கி விடுதல். முதலில் விளக்கக் கூட்டம் நடைபெறும் அதற்கு முன் காந்தி அவர்கள் விரும்பிய பாடலான
“ரகுபதி ராகவ ராஜா ராம்
பசீத்த பாவன சீதா ராம்
ஈஸ்வர அல்லா தேரோ நாம்
சபகோ சண்மதி தே பகவான்”
என்ற பாடல் முழுவதையும் பாடியே கூட்டத்தை ஆரம்பிப்போம். நாள் செல்லச் செல்ல இதனைக் கேள்விப்பட்டு இளம் பிள்ளைகள் படித்த பிள்ளைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பிள்ளைகள் வந்து கலந்து கொண்டார்கள் முதலில் டாகடர் இராச்சுந்தரம் அவர்களை வழிப்படுத்தும் உரையை ஆற்றுவார் நான் பயற்சி பற்றிய சிற்றுரை ஆற்றுவோம். தையல் பயிற்சி பற்றிய உரை, பன்னவேலை உரை, சத்துணவு தயாரித்தல் அது பற்றிய பயிற்சி, சுகாதாரம் பேணல் பயிற்சி, சிறுவர்களுக்கு கல்வியூட்டல் பற்றிய பயிற்சி போன்ற சிறப்பு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படும். மக்கள் வங்கியில் இருந்து மனேச்சர் வந்து உழைக்கும் மகளிருக்கு சிறு கடன் வழங்க வழிவகை சொல்லி ஒருவரை ஒருவர் மாறி மாறி உத்தரவாத கையெழுத்து இட்டு 3-5 ஆயிரம் ரூபா வரை கடன் எடுக்க முடியும் என்ற விளக்கத்தையும் கொடுத்தார்.
இராச்சுந்தரம் அவர்கள் சர்வோதயம் திரு ஏ.ரி.ஆரியரத்தினா அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தல்!
இதன் காரணமாக சிறுவர் பாடசாலை ஆசிரியைகளுக்கு பயிற்சி வழங்கவும், நோர்ஙவே அரசு வழங்கிய பால் மாவை வழங்கவும் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து எம்மிடம் இருந்த கெட்டித்தனமான ஆசிரியைகளை இராச்சுந்தரம் அவர்கள் தெரிவு செய்து மொறட்டுவை சர்வோதய நிலையத்திற்கு அனுப்ப முடிவு செய்து ஒருநாள் அந்த பொறுப்புனை என்னை செய்யச் சொன்னார். ஒரு சனிக்கிழமை இரவு மெயில் ரயிலில் 5 பேரையும் கூட்டிச் சென்று கொழும்பை அடைந்தோம். பின்னர் அங்கிருந்து மொறட்டுவை பஸ் எடுத்துக்கொண்டு அங்கு புறப்பட்டோம். மொறட்டுவ ரவுனில் இறங்கி சர்வோதய காரியாலயம் வந்து சேரந்து ஆரியரத்தினா அவரகளைச் சந்தித்தோம். அவருடன் கதைத்து விட்டு அவர்களை பயிற்சிக்கப் பொறுப்பு கொடுத்து விட்டு திரும்பினேன். அன்றே இரவு திரும்பி அடுத்த நாள் எனது கந்தோருக்கு போனேன். பின்னேரம் திரும்பி வந்து கிளினிக் போய் சகல விடயத்தையும் கூறினேன். அடுத்த்கிழமை ஒரு லொறி லோட் பால்மா வந்தது. அதனை மேல்மாடியில் அடுக்கி வைத்து முதல் பால் விநியோகம் சூசைப்பிள்ளையார் குள பாடசாலையில் தொடங்கினோம். அதுவே எமது முதல் பாடசாலையாகும்.
ஒரு நாள் இரவு திரு ௭ஸ்.ஏ.டேவிட் ஐயா வந்து கிளினிக்கில் கதைத்து விட்டு டொகடர் வீட்டில் இரவு தங்க போனார் டொக்டர் என்னையும் அழைத்தார். நானும் போனேன். அங்கு மூன்று பேரோடு சாந்தி அக்காவும் சேர்ந்தார் வேறு இரண்டு ஆதரவாளர்கள் இருந்தனர். டொக்டர் விளக்கம் கொடுக்கையில் நாம் ஒரு நிறுவனம் என்ற பெயர் இல்லாமல் சிறுவர் பாடசாலைகள் மேலும் சில பாடசாலகள் திறக்க உள்ளோம். பால் மா ரின் (5kg) ஒரு லொறி லோட் வந்துள்ளது. 5 பிள்ளைகளை சர்வோதயத்திற்கு ஆசிரிய பயிற்றுவிக்க அனுப்பியுள்ளோம். ஆகவே எமக்கு ஒரு நிறுவனம் வேண்டும். அதற்கு காந்தியின் அகிம்சை, உண்மை, வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு நிறுவனமாக அமைக்கப்பட வேண்டும் அதனை டேவிட் ஐயா உட்பட சகலரும் ஏற்றனர். இதற்கு “காந்தியம்” என்ற பெயர் பொருத்தமானது என்று டேவிட் ஐயா கூற அதனை சகலரும் ஏற்றோம். அடுத்து அதன் குறிக்கோள்களாக 1 Eradication of poverty 2. Eradication of ignorance 3 Eradication of disease அதாவது வறுமையை விரட்டுதல் , அறியாமையை அகற்றுதல், நோயற்ற வாழ்வை உருவாக்கல் ( இதன் நேரடி மொழிபெயர்ப்பை கொடுக்காமல் அதன் விளக்கத்தை தமிழின் கொடுத்தேன்) இவைகளுக்காக காந்தியம் பாடுபடும். இந்த நிறுவனத்தை ஒரு பொதுக்கூட்டம் நகரசபை மண்டபத்தில் கூட்டி ஒரு நிர்வாக சபையைத் தெரிந்து, எமது பெயராகிய காந்தியம் என்பதனை அங்கீகரித்து எமது மூன்று குறிக்கோள்களையும் பொதுச் சபை அங்கீகரித்து அந்த தீர்மானங்களுடன் இதனை ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக அரசாங்கத்தில் உரிய வழிமுறையில் பதியப்பட வேண்டும் என தீரமானித்து இன்னும் இரண்டு கிழமையில் வரும் சனிக்கிழமை பொதுக் கூட்டம் கூட்டுஙதென்று தீர்மானிக்கப்பட்டு இந்த ஒன்று கூடல் முடிவுற்றது.
25வது அங்கம்
தொடர்ந்து இரண்டொரு கிழமைகளில் எமது பொதுக் கூட்டம் நகரசபை மண்டபத்தில் 1974 ஆம் ஆண்டு ஒரு சனிக்கிழமை கூட்டப்பட்டது. டேவிற் ஐயா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தமிழ் தாய் வணக்கம், காந்திய கீதம், மௌன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பிக்கப் பட்டது.
தலைமையுரையுடன் இராசுந்தரம் அவர்கள் இந்த கூட்டம் ஏன் கூட்டப்படுகின்றது அதன் நோக்கம் என்ன? அதில் யார் அங்கத்தவராக சேரமுடியும், இச்சங்கத்தினை வழிநடத்த ஒரு யாப்பு வேண்டும். நாம் தொடங்கியிருக்கும் செயல்கள் சிறுவர் கல்வி, சத்துணவு, பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு. இவ்வகையினை அடிப்படையாகக் கொண்ட ஒரு தற்சார்பு சமுதாயமாக கட்டியெழுப்புதல் என்பனவாகும்.
பொதுச் சபையினரின் கருத்துப் பரிமாற்றத்திற்கு விடப்பட்டது . அப்போது அனுபவம் கொண்ட பெரியோர்களும் நடுத்தர வயதினரும் இளம் பெண் தொண்டர்களும் தமது கருத்துகளோடு சபை நடவடிக்கைகளை பதிவு செய்து கொண்டேன்.
அடுத்து எமது நிறுவன பெயர் “காத்தியம்” என்று அறிவித்து அபிப்பிராயத்தை தெரிவிக்கும்படி கூற யாவரும் ஏகோபித்த குரலில் மிக அருமையான பெயர் அதனை நாம் ஆதரிக்கிறோம் என்ற 90% வீதமானோர் குரல் எழுப்பினர். அடுத்து எமது மூன்று குறிக்கோள்களையும் வாசித்து கூறியபோது. அதுவே எமது முதுகெலும்பு அதனையே வையுங்கள் என்று முன்னாள் நகரசபைத் தலைவர் வேலு செயர்மன் அவர்கள் பிரேரிக்க ஶ்ரீரங்கன் அவரகள் அனுமதிக்க ஏகமனதாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து காந்தியத்திற்குரிய யாப்பினை எழுதுவதற்கு 5 பேரைக் கொண்ட ஒரு குழுவைத் தெரிவு செய்யச் சொல்ல இராசுந்தரம் அவர்களே திரு டேவிட் , பாக்கியநாதன் திரு வேலு செயர்மன் திரு அ. இராதாகிருஷ்ணன் மற்றும் இராசசுந்தரம் ஆகிய ஐவரை தெரிவு செய்தார்கள். அதனை சபையோரகள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அடுத்து காந்திம் செயற்குழு தெரிவு நடைபெற்றது. தலைவர் தெரிவில் திரு சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அடுத்து திரு சோமசுந்தரம் இராச்சுந்தரம் அவர்கள் அமைப்புச் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் அடுத்து திரு முருகேசு பாக்கியநாதன் நிர்வாகச் செயலாளராக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அடுத்து பொருளாளராக திரு அம்பலவாணபிள்ளை இராதாகிருஷ்ணன் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அடுத்து ஐந்து நிர்வாகசபை அங்கதவர்களாக பின்வருவோர் தெரிவு செய்ய பட்டனர். திரு கண்ணகி தேவராசா, திரு்.ச.ஶ்ரீரங்கன், திருமதி அந்தோனிப்பிள்ளை ஆசிரியை, திரு வேலு முன்னாள் நகரசபை தலைவர், ஐந்தாவது உறுப்பினர் பெயர் ஞாபகம் வரவில்லை மன்னிக்கவும். யாப்பு எழுதி முடித்தபின்பு நிர்வாக சபையில் சமர்ப்பித்து அதனை அங்கீகரித்த பின்னர் பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அமைப்புச் செயலாளரும் நிர்வாகச் செயலாளரும் சேர்ந்து காந்தியம் பதிவு செய்யும் வேலையை செய்து முடிக்க வேண்டும்.
சர்வோதயத்தில் பயற்சி முடிந்த பயிற்சியாளர்கள் வந்த பின்னர் அவர்களுக்கென பின்வரும் இடங்களில் பாலர் பாடசாலைகள் திறந்தோம் 1. கோயில்குளம் 2 பம்பைமடு 3 நொச்சிமோட்டை 4 ஓமந்தை 5 பத்தினியார் மகிழங்குளம் ஆகிய இடங்களில் ஒங்வொன்றாக பாலர் பாடசாலையும் சத்துணவுக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது. தொடரச்சியாக ஐந்து ஐந்து பேராக பயிற்சிக்கு பிள்ளைகனை அனுப்பி பயற்சி கொடுத்து கொண்டு இருந்தோம். அதோடு காதித பை செய்து விற்கும் பிள்ளைகள் அதனை விற்று பணம் வருவதால் அவர்கள் ஊக்கமாக அதனை செய்து கொண்டு இருந்தனர்.
வவுனியா மாவட்ட D.L.O அதாவது மாவட்ட காணி அதிகாரியாக இருந்தவர் திரு ஶ்ரீ சண்முகராஜா அவர்கள் கடமையாற்றினார். அவர் இராச்சுந்தரம் அவர்களுக்கு மிக நெருக்மான குடும்ப நண்பர் அவர் அத்தோடு டாகடர் என்.எம். பெரேரா அவர்கள் நிதி அமைச்சராக இருந்தபோது அவரது நிதி அமைச்சு செயலாளராக இருந்த எல்.எஸ்.எஸ். பி ஆதரவாளரும் ஆவார். என் எம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து யாழ்ப்பாணத்தின் மரவரி முறையை நீக்கி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களை நிறுவ அமைச்சருக்கு உறுதணையாக இருந்தவர். உத்தியோக ரீதியில் எனக்கும் நட்பானவர். அவரிடம் எமது காந்தியத்திற்கு விவசாயம் செய்ய எமக்கு 250 ஏக்கர் அரச காணி ஒதுக்கித்தர முடியுமா எனக் கேட்டோம். என்ன அது உங்களுக்கு சிம்பிள் என்றார். தனக்கு ஒரு கிழமை தாங்கோ தான் செக் பண்ணிவிட்டு சொல்கிறேன் என்றார். ஒரு நாள் அவரே வந்து ஓமந்தை, நவ்வி, பாலமோட்டையில் முன்பு ஒருவருக்கு 300 ஏக்கர் கொடுத்து அவர் காடுகளை எல்லாம் அழித்து தற்போது பற்றிக் காடாக மட்டும் உள்ள விவசாயத்திற்கு ஏற்ற மண் உள்ள காணி என்று கூறினார். அவர் அஅதனை கைவிட்டுவட்டார் அதனை அண்டி ஒரு ஆறும் பாய்கின்றது என்றதும் எமக்கு ஒரே சந்தோசம். எப்ப பாரக்கலாம் என்றோம். அவர் அடுத்த சனியே தனது ஜீப் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் காட்டினார் எமக்கு காணியை பாரத்ததும் சந்தோசம்.