யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தினர் அனுபவித்துவரும் பிரச்சினைகளைப்பற்றிச் சிங்கள ஊடகவியலாளரான ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவையில் தெரிவித்த கருத்துகள் பி.பி.சி.சியின் தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பிரசுரமாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் ஷெலி உபுல் குமார யாழ்ப்பாணம் சென்று இது பற்றி ஆராய்ந்து இவ்வாவணத்தைத் தயாரித்துள்ளார்.

இதன்போது அவர் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது அவர் 'தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது' என்று பதிலளித்திருக்கின்றார். இது மிகவும் தவறான தகவல் என்பதை நாம் அனைவரும்  அறிவோம்., யாழ் மாவட்டக் கிராமங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் சாதி அடையாளங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

தெற்கில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் இம்மக்களின் நிலை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஜேவிபியைப்பொறுத்தவரையில் அவர்கள் பாரம்பரிய அரசியல்வாதிகளின் வாரிசு அரசியல் அடிப்படையில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் ஆரம்பத்தில் இளைஞர்களை மையமாக வைத்தே, குறிப்பாகத் தென்னிங்கைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை முன் வைத்தே தம் அமைப்பினைக் கட்டியெழுப்பினர். அதனால் அவ்வமைப்பினர் அரசியல் தெளிவுள்ளவர்களாக வளர்த்தெடுக்கப்பட்டனர். தொழிலாளார், விவசாயிகள் மற்றும் வறிய மக்கள் பற்றிய புரிந்துணர்வுடன் , அம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதை நோக்காகக்கொண்ட சிந்தனை மிக்க இளைஞர்களின் அமைப்பாக ஜேவிபி பரணமித்தது.  அதற்காகவே இரு தடவைகள் ஆயுதப் புரட்சி செய்தனர். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் , தலைவர் ரோகண விஜேவீரா முதல் பலர் பலியாகினர். பின்னர் தேசிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பி இன்று ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜேவிபி உறுதியாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தது. தமிழர்களின் தமிழ் ஈழம் அதற்கு உறுதுணையாகவிருக்கும் என்பதால் மிகவும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் அதற்குத்  தென்னிலங்கை அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதச் சாயம், பூசினர் தம் அரசியல் நலன்களுக்காக. 83 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தை முன்னெடுத்தவர்கள் ஜே.ஆரின் அரசின் அமைச்சர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டலில் இயங்கிய குண்டர்கள்தாம். ஜே.ஆர் அப்போது ஜேவிபியே அக்கலவரத்துக்குக் காரணமென அதன் மேல் இனவாதக் குற்றச்சாட்டை முன்வைத்துத் தடை செய்தார்.

இன்று மக்களை முன்வைத்து அரசியல் செய்யும் ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மிகவும் கடுமையாக இனவாதத்தை எதிர்த்தே , மலையகத்தமிழர்களின் நிலையைத் தொலுரித்துக் காட்டியே, தமிழ் , சிங்கள் , முஸ்லிம் மக்களை இனவாத அரசியலே பிரித்து வைத்துள்ளது தனது சுய நலன்களுக்காக என்றே பிரச்சாரம் செய்தது. வடகிழக்கில் மட்டும் அல்ல, தென்னிலங்கையிலும்தான்.  ஜேவியைப் பொறுத்தவரையில் தனிநாட்டை ஆதரிக்கவில்லை. அனைவரும் அறிவோம். அது நாட்டின் பிரச்சினைகளைப் பொருளாதாரரீதியில் அணுகுகின்றது. இனப்பாகுபாடு அற்று , நாட்டு மக்கள் அனைவரின்  பிரச்சினைகளும் பொருளாதாரரீதியில் தீர்க்கப்பட்டால் , அனைவரும் பயன் அடைவர் என்று அது நம்புகின்றது. அதற்கு நாம் இனவாதம் பூசத்தேவையில்லை. நாம் செய்யவேண்டுவது எல்லாம் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் தொடராமல் உள்ளதா, இராணுவ முகாம்கள் தேவைக்குரிய அளவில் குறைக்கப்படுகின்றனவா, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் மக்கள் அனைவரும் இன, மதம், மொழி வேறுபாடற்று புதிய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பயன்பெறுகின்றார்களா என்பதை அவதானிப்பதுதான். அதற்குச் சந்தர்ப்பம்  கொடுத்துப்பார்ப்பதுதான். இவற்றில் அவர்கள் முன்னைய ஆட்சியினரைப்போல் தவறிழைத்தால் அதன்பின் அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பலாம்.

அடுத்தது ஜேவிபி எவ்விதம் தென்னிலங்கையில் மாற்றத்தைக்கொண்டு வந்ததோ அவ்விதமே வடகிழக்குத்  தமிழர்தம் அரசியலிலும் புதியதொரு மாற்றம் அவசியம். அம்மாற்றத்தை உள்ளடக்கியே அரசியலும் சீர்செய்யப்பட வேண்டும். வடகிழக்கைப்பொறுத்தவரையில் சமூக ஏற்றத்தாழ்வு குறிப்பாக ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வு  என்பது யாழ் மாவட்டத்திலேயே அதிகமாகவுள்ளது. வன்னியிலோ அல்லது மட்டக்களப்பு போன்ற கிழக்கிலோ பெரிதாகவில்லை. யாழ் மாவட்டச்சனத்தொகையில் முப்பது சதவீதமானவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இது பற்றிய சரியான புள்ளி விபரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுவரை காலமும் வடகிழக்கில் நிலவி வந்தம், நிலவி வரும் தமிழர்களின் தேசிய அரசியலென்பது இது பற்றிக் கவலைப்பட்டதில்லை. முதலில் இம்மக்களுக்குரிய பிரதிநித்துவம் வடகிழக்குத் தமிழரின் அரசியலில், குறிப்பாக யாழ் மாவட்ட அரசியலில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இம்மக்களுக்கு இப்போது பிரச்சினைகள் எதுவுமில்லை என்று கண்களை மூடிச் செல்லக் கூடாது.

பொருளியல்ரீதியில் இவர்கள் இன்னும் பொருளாதார அடிமைகளாகத்தான் இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் இவர்களின் சரியான நிலை பற்றிய  புள்ளி விபரங்கள் தேவை. அதாவது இவர்களின் மொத்தச் சனத்தொகையில் எத்தனை பேர் கல்வித் தகமைகள் பெற்றுள்ளார்கள், எத்தனைபேர் தகுந்த வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். கல்வி, வேலை  வாய்ப்பு போன்றவற்றில் இவர்கள் முன்னேறும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவர்கள் சமூகரீதியில் ஆற்றும் தொழில்கள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். நன்கு உழைக்கக்கூடிய தொழில்களாக அவை பயிற்றுவிக்கப்பட்டு, யாரும் அவற்றைச் செய்து உழைக்கும் வகையில் அவை மேனாடுகளில் இருப்பதைப்போல் மாற்றப்பட வேண்டும். மேனாடுகளில் குடி வகைகள் எவ்விதம் தயாரிக்கின்றார்கள்? எவ்விதம் ஆடைகளை சுத்தம் செய்கின்றார்கள் (Dry Cleaning - உலர் சுத்தம்), முடிவெட்டும் நிலையங்களை எவ்விதம் இயக்குகின்றார்கள்/ என்பன போன்றவற்றை அவதானிக்க வேண்டும். அது போன்றே இத்தொழில்கள் அனைத்தும் அனைவராலும் செய்யும் வகையில் மாற்றப் பட வேண்டும்.

தமிழர் அதிகாரப் பகிர்வைக் கேட்கும் போது அது இம்மக்களின் பிரச்சினைகளையு தீர்க்கும் வகையில் , சரியான நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், அவர்கள் வாழ்க்கையையும் முன்னேற்றும் வகையில் அமைந்திருப்பது அவசியம்.

அடிக்கடி தேசியம் தேசியம் என்று உணர்ச்சிகலந்த அறிக்கைகளை விடும் பல்கலைக்கழகத்  தமிழ் மாணவர்கள் முதலில் தமிழர் தேசியம் என்பது தமிழர் அனைவருக்கும் உரியது என்பதை ஏற்று, அவர்கள் பேசும் தேசிய அரசியல் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களையும் உள்வாங்க வேண்டும்.  தமிழர் அரசியலும் தமிழர் அனைவரினையும் உள்ளடக்கிய  அரசியலாக அமைந்திருக்க வேண்டும். அதற்கு முதலில் தமிழர் அரசியலில் குறைந்தது ஒடுக்கப்பட்ட மக்களின் சனத்தொகையைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அமைந்திருக்க வேண்டும்.

இதைச் செய்வதற்குரிய ஜேவிபி போன்றதொரு அமைப்பு இதுவரை தமிழர் மத்தியில் உருவாகவில்லை. இப்பொழு8து அதற்கான தேவை ஒன்றுள்ளது. எவ்விதம் ஜேவிபி இளைஞர்களை அணி திரட்டித் தமது புரட்சிகர அமைப்பினை ஆரம்பித்தார்களோ. அவ்விதமே தமிழ் இளைஞர்களும் , சித்தாந்த அடிப்படையில் வறிய மக்களின், தொழிலாளர்களின் நிலையினை மையமாக வைத்து புரட்சிகர அமைப்பொன்றினை உருவாக்கும் தேவை தற்போது  உள்ளது. இதனைத்தமிழ்த் தரப்பு செய்யாவிட்டால் மிக இலகுவாக அவ்வெற்றிடத்தைத் தேசிய மக்கள் சக்தி பாவித்துத் தமிழ்ப்பகுதிகளில் காலூன்றுவதைத் தடுக்க முடியாது.

பிபிசி தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் வெளியான கட்டுரைக்கான இணைப்பு -  https://www.bbc.com/tamil/articles/clj7y7jg79po


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R