கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."

இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார்.  எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது.  அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள்.  இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.

மேலும் '2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது என்னும் கூற்றும் மயக்கத்தைத் தருகின்றது.  ஏனென்றால் அக்காலகட்டத்தில் 1984- 1989 இல் கட்டப்பட்ட பல புதிய வீடுகள் ஆரம்ப விலையிலிருந்து குறைந்த விலையிலேயே விற்கப்பட்டுக்கொண்டிருந்தன.  மேலும் 2014இல் கூட மூன்று  அறைகளை உள்ளடக்கிய வீடொன்று $600,000ற்கும் குறைவாகவே விற்றுக்கொண்டிருந்தது. தாய் வீடு பத்திரிகையில் வெளியான விளம்பரமொன்றினை இத்துடன் இணைத்துள்ளேன்.   2015 - இன்று வரையில்தான் சுமார் $900,000 வரை அதிகரித்துள்ளன. அதற்குக் காரணம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதார மற்றும் குடிவரவாளர் சம்பந்தமான கொள்கைகள், குறைந்த வட்டி வீதம், பெருந்தொற்றினை அடுத்து வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று ஏற்பட்ட நிலை,  Airbnb போன்ற தொழில் நுட்பத்தால் இலகுவாக வாடகைக்குக் கொடுக்கலாம் என்று உருவான நிலை, சர்வதேச மாணவர்களின் அதிக வருகை என்ற நிலை, குடிவரவாளர்களின் அதிகரிப்பு, வாடகைக்குரிய வீடுகளை அதிக அளவில் கட்டாத நிலை எனப் பல  காரணிகள். இவற்றையெல்லாம் இக்கட்டுரையில் ஆராய்ந்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும்.

- 'தாய்வீடு' பத்திரிகையில் 2014இல் வெளியான விளம்பரம் -

'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது.' என்னும் கூற்றும் ஏற்கக் கூடியதாகவில்லை. 2000 ஆம் ஆண்டில் 10  NVIDIA நிறுவனப் பங்குகளை வாங்கிய ஒருவரிடம் இன்று மேலதிகச் செலவுகள் எவையுமற்று இன்று 1000 பங்குகள் இருக்கும். பல தடவைகள் அந்நிறுவனம் பங்குகளை Split செய்திருக்கின்றது.  இன்று அதன் விலை $1200.  நாளை மீண்டும் ஒரு தடவை 10:1 என்னும் விகிதத்தில் பிரிக்கப்போகின்றார்கள். இதன் படி 1000 பங்குகள் வைத்திருக்கும் ஒருவரின் பங்குகளின் எண்ணிக்கை 10,000 பங்குகளாக மாறப்போகின்றது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் அந்தப் பங்கு ,ஒரு கதைக்கு, $1000 செல்கிறது என்று வைத்துக்கொண்டால் , அப்போது அவரது பெறுமதி 10,000 * $1000 ஆக மாறும்.   10 மில்லியன் ஆகப்போகிறது. இவ்வளவுக்கும் 2000 ஆம் ஆண்டில அவர் வாங்கியது 10  பங்குகள்தாம்.  அதன் பின் அவர் வீடொன்றுக்குக் கட்டுவதைப் போல் மோர்ட்கேஜ் அதற்குக்  கட்டவில்லை. எவ்வித வரிகளும் கட்டவில்லை. Utilities என்று எவ்விதச் செலவும் செய்யவில்லை. இன்றும் அதிக அளவில் இலாபத்தைத்தரும் முதலீடு பங்குச்சந்தை முதலீடுதான். ஆனால் சரியான நிறுவனத்தின் , சரியான பங்குகளை வாங்க வெண்டும். பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

மேலும் தற்போதுள்ள நிலையில் , வீடு விற்கும் விலையில், குறைந்தது $140,000 ஆண்டு வருமானம் இல்லாமல் ஒருவரால் சட்டரீதியாக வீடு வாங்க முடியாது. அல்லது பல வேலைகள் செய்தால்தான் ஓரளவாவது சமாளிக்க முடியும்.  இதனையும் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஏனென்றால் ஏற்கணவே வீடு வைத்திருப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கு இலாபம் நிச்சயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வருமானம் உள்ளவர்களால் இவ்விலையில் திருப்தியாக வாழ்வதற்கு வீடுகள் வேண்ட முடியாது. அவர்களும் முன்புபோல் வாங்க வேண்டுமானால் ஒன்று வீட்டு விலைகள் நன்கு குறைய வேண்டும். அல்லது அவர்களது வருமானம் பல மடங்குகள் அதிகரிக்க வேண்டும்.

மேலும் வட்டி வீதம் முன்பு போல் அதிக அளவுக்குக் குறைக்கப்படாமல் வைக்கப்பட்டால், குடிவரவாளர்களின் எண்ணிக்கை, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டால், வாடகை வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டால், வீட்டு விலைகள் மீண்டும் குறைவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. ஏனென்றால் 2015 தொடக்கம் இன்று வரையிலான வீட்டு விலை அதிகரிப்பு என்பது இயற்கையானது அல்ல.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R