குடிவரவாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற கனடியப் பழமைவாதக் கட்சியின் தலைவராக அமரர் பிரயன் மல்ரோனியைக் (Brian Mulroney) கூறலாம். இவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான 'நிர்வாக மறுபரிசீலனை' த் திட்டத்தின் (Administrative Review - ADR)  மூலம் கனடாவில் தங்கியிருந்த அகதிக்கோரிக்கைக்காரர்கள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள்  ஆயிரக்கணக்கில் பயனடைந்தார்கள். நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்.

இவரது ஆட்சிக்காலத்தில் முதன் முறையாகக் கப்பலில் நியூ ஃபவுணலாந்துக் கரையில்  வந்திறங்கிய இலங்கைத்  தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். எதிர்ப்புகளை மீறி அவர் அப்போது கூறிய வார்த்தைகள் முக்கியம். அவர் கூறினார் "we are not in the business of turning away refugees." அக்கூற்றே அன்று வந்திறங்கிய தமிழ் அகதிகள் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமானதாகவிருந்தது.

இது பற்றிய நல்லதொரு கட்டுரையினை இன்று லிபரல் பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஹரி ஆனந்தசங்கரி  ஆகஸ்ட் 10, 2016 வெளியான 'டொராண்டோ ஸ்டார்' பத்திரிகையில் 'Accepting Tamils 30 years ago changed Canada'  என்னும் தலைப்பில் எழுதியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் குடிவரவாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பழமைவாதக் கட்சிப் பிரதமராக இவர் நினைவு கூரப்படுவார்.

இவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R