அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஆரொன் புஷ்னெல்லுக்கு  (Aaron Bushnell) வயது 25.  வாஷிங்டனிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்பாக 'சுதந்திர பாலஸ்தீன்.  நான் இனியும் இன்ப்படுகொலைக்கு  உடந்தையாக இருக்க மாட்டேன்' என்று கூறியவாறே தீக்குளித்தார். காயங்களுடன் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்ந்த இரங்கல்.

மரணத்தை எதிர்கொள்ளப்போகிறோமே என்னும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல், மிகவும் இயல்பாகத் தன் எண்ணங்களை எடுத்துரைத்தவாறே சென்று, மிகவும் இயல்பாகவே தன் மீது எரி திரவத்தை ஊற்றி, நெருப்பைப் பற்றவைத்து , Free Palestine என்று கூறியவாறே அவர் மரணத்தை எதிர்நோக்கினார். எத்துணை மனோதிடமும், மானுட நேயமும் மிக்க மனிதன்!

இவர் உண்மையான வரலாற்று நாயகன். வரலாற்றில் எப்போதும் அதன் சரியான பக்கத்தில் நின்ற  ஒரு மனித உரிமைப்போராளியாக நினைவு கூரப்படுவார்.  காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு உடந்தையாகவிருக்கும் மேற்கு நாட்டின் தலைவர்கள் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டும். அவர்கள் அனைவரும் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் வைக்கப்படுவார்கள்.

உலகக் குடிமகன் ஆரன் புஷ்னெல்லுக்கு அஞ்சலி!

நீ உண்மையான உலகக் குடிமகன்.
உனது வாழ்க்கை வீணானதொன்றல்ல,
ஆனால் மனித குலத்திறகான் நம்பிக்கை.
நீ நினைத்திருந்தால் தொழில்நுட்ப இனப்த்தில்
மகிழ்ந்து கிடந்திருக்கலாம்.
நீ வேறானதொரு பாதையைத்  தேர்ந்தெடுத்தாய்.
நீ உன் நாட்டுக்காகப் போராடத் தீர்மானித்தாய்.
உன் தாய்மண்ணுக்காக உன்னைத் தியாகம் செய்யத் தீர்மானித்தாய்.

இன்று,
நீ நிலைத்து நிற்கிறாய்
உலகக் குடிமக்களின்  நம்பிக்கைக்கு அடையாளச் சின்னமாக.
நீ ஒரு வரலாற்று நாயகன்.
உன் தாய்நிலம் உன் உலகுக்கான
பங்களிப்பை எண்ணிப்
பெருமைப்படலாம்.
உன்னைப்பற்றிப் பெருமையாக எண்ணும் அதே சமயம்
துயர்கலந்த உணர்வு என்னை மூடுகிறது.
இருந்தும்
நீ உன் இருப்பைப்பற்றிப் பெருமைப்படலாம்.
நாமும்தாம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R