தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்  தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும்,  ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளருமான  வேலாயுதம் நல்லநாதர் ( முகநூலில் R Rahavan) அவர்களின் மறைவினை நண்பர் அலெக்ஸ் வர்மா முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அவர் தனது அஞ்சலிக் குறிப்பில் '42 வருடங்கள் போராட்டத்திற்கு தனது வாழ்வை பதின்ம வயதிலிருந்து தொடர்ச்சியாக அர்ப்பணித்த மனிதன் தன் மூச்சை இன்றுடன் நிறுத்தி, இன்று (22.2.2024) மாலை விடைபெற்றார்' என்று தெரிவித்திருந்தார். தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆர்.ஆர் என்றறியப்பட்ட வேலாயுதம் நல்லநாதர் அவர்கள்.   இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனவருக்கும் ஆழ்ந்த  இரங்கல்.

இவர் என் முகநூல் நண்பர்களிலும் ஒருவர். அவ்வப்போது நான் இடும் பதிவுகளில் கலந்து கொண்டு எதிர்வினையாற்றுவார். தகவல்களைப் பகிர்ந்துகொள்வார். பிறந்தநாளன்று நீடூழி வாழ்கவென்று வாழ்த்துவார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமாகவிருந்த  உமாமகேசுவரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர். ஒரு முறை உமாமகேசுவரன் பற்றியொரு பதிவினையிட்டிருந்தபோது பின்வருமாறு எதிர்வினையாற்றியிருந்தார்:

"'நாம் பிறவிப்புரட்சியாளர்களல்லர்'  என்றும் 'எமது சமூகத்தின் எச்சசொச்சங்கள் எங்களிலும் பிரதிபலித்துள்ளது' என்றும் கூறியிருந்தார். 83 இனக்கலவரத்தையடுத்து இயக்கங்கள் திடீரென வீங்கிப் பருத்ததன் விளைவுகளையும் பரிணாமமில்லாத வளர்ச்சியினால் நிலைமைகளை கையாளுந்திறன் போதியளவில் இருக்கவில்லை என்பதையும் கடைசிக்காலங்களில் மனந்திறந்து ஏற்றார். மண் விடுதலையல்ல,  சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையை வேண்டியிருந்தார். அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து போராட நடைமுறையில் முயற்சித்தார்."

இன்னுமொரு தடவை கவிஞர் செல்வி பற்றிய பதிவொன்றில் காந்தியம் ஜீலி பற்றிக் குறிப்பிட்டபோது 'தோழி ஜூலி 1982லேயே காந்தீய செயற்பாட்டாளராக இருந்தார். 1983ல் வவுனியாவில் இடம்பெற்ற மேதின ஊர்வலத்தின்போது பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டார்' என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார்.

இலங்கைத் தமிழர்தம் ஆயுதப்போராட்டத்தில் பங்கு பற்றி , தம்  வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்து வாழ்ந்து வந்தவர்களில் ஒருவரிவர்   பல்வேறு அமைப்புகளில் இணைந்து போராடிய இவரைப்போன்றவர்களின் பங்களிப்புகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.   ஆழ்ந்த இரங்கல்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R