பிரான்சில் டானியல் ஜெயந்தனின்  'வயல் மாதா'சிறுகதைத்தொகுப்பு கத்தோலிக்க மதத்தை நிந்திக்கிறது என்னும் காரணத்தைக்காட்டி  எரிக்கப்பட்டுள்ளது.  தம் கருத்துகளுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு  எதிரான நூல்களை எரிப்பதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதைக் காலத்துக்குக் காலம் கண்டு வருகின்றோம்.  அண்மையில் கூட போலந்தில் மதகுரு ஒருவரால் ஹாரி போட்டர் நாவல் எரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம்.

ஐம்பதுகளில் அமெரிக்கச் செனட்டர் ஜோசப் மக்கார்தி இடதுசாரிக்கருத்துகளைச்சார்ந்த நூல்களையெல்லாம் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க நூலகங்களிலிருந்து அகற்றவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவ்விதமான நூலக நூல்கள் எரிக்கப்பட்டன. அண்மைக்காலமாக அமெரிக்காவில் புத்தக எரிப்புகள் அதிகரித்துள்ளதைத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக டென்னஸியில் கிறித்தவ  மதகுருவரால் நிகழ்த்தப்பட்ட புத்தக எரிப்பைக் கூறலாம்.

     - எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் -

இவ்விதமாகப் புத்தக எரிப்பை ஓர் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் பலவற்றில் இன்றும் பல்வேறு மத, மொழி, இன மக்களில் சிலர் மேற்கொண்டு வந்தாலும் இது ஓர் ஆரோக்கியமான எதிர்ப்பு நடவடிக்கை அல்ல. எதிர்ப்பு நடவடிக்கையாக இதனை  மேற்கொள்ளூம்போது சட்டரீதியாக இதனைத்தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கையின்போது எல்லை மீறி நூலை எழுதியவர் மீது வன்முறையினைப் பாவிப்பதோ, எழுதக்கூடாது என்று அச்சுறுத்துவதோ யாராலும் ஏற்றக்கொள்ள முடியாதவை. நாடுகளில் நிலவும் சட்டங்கள் கூட அனுமதிக்க முடியாத குற்றங்கள் அவை. மேலும் புத்தக எரிப்பானது சூழலுக்கு ஆரோக்கியமானதுமல்ல. புத்தக எரிப்பில் வெளிப்படும் நச்சு வாயுக்கள் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பவை.

அண்மையில் பிரான்சில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' நூலை எரித்தவர்களும் இவ்விதம் எல்லை மீறிச்சென்றுள்ளதாகச் சிலரது பதிவுகள் கூறுகின்றன. இவ்வெல்லை மீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மக்களுக்கிடையில் நிலவும் அமைதியைக் குலைப்பவை. எழுத்தாளரின் எழுத்துரிமைச் சுதந்திரத்தில் தலையிடுபவை. இவ்விதமான எல்லை மீறல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும், நானும் கண்டிக்கின்றேன். இது விடயத்தில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் சட்டத்தின் துணையினை நிச்சயம் நாட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய எல்லை மீறல்கல் தொடரும் அபாயமுண்டு.

அதே சமயம் நூல் தம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், தம் மதத்தை அவமதிப்பதாகவும் கருதுபவர்கள் நூலாசிரியருக்கு எதிராகத்தனிப்பட்டரீதியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. அவர்களும் சட்டத்தின் துணையை இது விடயத்தில் நாடலாம், நாட வேண்டும்.

டானியல் ஜெயந்தனின் 'வயல்  மாதா'  தொகுப்பை நான் இன்னும் வாசிக்கவில்லை. அதில் அப்படியென்ன கத்தோலிக்க மதத்தினரை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதும் எனக்குத்  தெரியாது. இருந்தாலும் எழுத்தாளர் ஒருவரின் நூலுக்கெதிராக வன்முறையினைத் தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R