முன்னுரை

பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் ஒன்றாக அமைந்தது முருக வழிபாடு குறிஞ்சி நில மக்களின் குல தெய்வமாக விளங்கியது. தலைவியானவள் காதலால் இன்புற்று தலைவன் பிரிந்த பிறகு துன்புற்று வாடும் போது வேலனை அழைத்து வெறியாடுட்டு நிகழ்த்தியமையும், பிறகு தலைவிக்கு நோய் தீர்ந்தமையும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வெறியாட்டில் முருகனுக்குப் பொருட்கள் படைத்தும், வெறியாட்டுக்களம், பண்ணமைந்த பாடல்கள் பாடியும், செவ்வரளிப் பூக்கள் சூட்டி வழிபாடு செய்தமையை எடுத்துரைக்கின்றது.    

வழிபாடு

வழிபாடு என்னும் சொல் வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. பூசனை என்பது தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயலாகும். வழிபாடு என்பது வணக்கம், பூசை, வழக்கம் எனும் பொருள்படும் இறைவனைத் தேவைக்காக நாடுதலும், நன்றியுணர்வால் அணுகுவதும் உண்டு. மனிதனின் நோய்களைத் தீர்க்கவும் வழிபாடானது நிகழ்த்தப்பட்டது. மனிதன் இன்புற்று வாழவும், நீண்ட ஆயுளுக்காகவும் இறைவனை வழிபட்டுனர். மிகப் பழங்காலத்திலிருந்தே வழிபாடு என்பது இருந்தது என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

பண்டைக் காலத்தில் மக்கள் மன்றங்களிலும், மரங்களிலும், கற்களிலும் தெய்வம் உறைந்ததாக நம்பி வழிபட்டனர் என்பதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. முருகன் வழிபாடு சங்க காலத்தில் இருந்தமையை மெய்ப்பிக்கும் பொருட்டு நக்கீரனார்

“அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் முருக“ 1

என்பதன் வாயிலாக இவர் காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு என்பது மரபாகப் போற்றப்படுகிறது. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வேல் போர்க் கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு விளங்கியதைக் காணமுடிகிறது.

முருக வழிபாடானது மிகப் பழமையானது, தென்னாட்டவர்க்குரியது என்பதை ஆதிச்சநல்லூரில் இருந்து சேகரிக்கப்பட்ட இரும்பு வேல்களும், பித்தளையாள் செய்யப்பட்ட சேவல்களும் சான்றாகும். வேலனுக்கு ஆடும் வெறியாட்டும் , வள்ளி வேடம் பூண்டு ஆடும் வள்ளிக் கூத்தினையும்

“வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்
வெறியாட் டயரந்த காந்தாள் ” 2

என்றும்,

“வாடா வள்ளி வயவர் ஏத்திய ஒடாக் கழல் நிலை” 3

என்றும் தொல்காப்பியர் கூற்றின வாயிலாக வெறியாட்டு வழிபாட்டு மரபு தொல்காப்பியர் காலத்திலிருந்தே பழக்கத்திலிருந்தமையை அறியமுடிகின்றது. பரிபாடலும், திருமுருகாற்றுப்படையும் முருகனது சிறப்பினைக் கூறுகிறது. சங்கநூல்களில் குமரன் என்று வழங்கியதை

“நயத்தகு குமர பின் வியத்தகு குமர” 4

என்பதன் வாயிலாகவும், சிறுதெய்வமாக வழிபட்ட நிலைமாறி இன்று பெருந்தெய்வமாக மாறியமையைக் காணமுடிகிறது.

வெறியாடல்

துணங்கை மற்றும் குரவைக் கூத்திற்கு மேலாக வெறியாட்டனது பரந்து காணப்படுகின்றது. சிவனுக்கு ஆடும் கபாலக் கூத்தின் வழியில் உருவான பேய் துணங்கைகளின் மறுதலையாக அமைந்தது வெறியாடலாகும். “முற்றிலும் சமுதாயத்தோடொட்டாதக் கற்பனைத் தழுவிய பேய்த்துயங்கையிலிருந்து உருவாகி சமுதாயத்தோடு தொடர்பு கொண்டுள்ள கூத்து வெறியாட்டு” என்பர். ச.வே. சுப்பிரமணியன்.

வெறியாட்டு தெய்வம் ஏற்பட்டு நிகழும் கூத்து என அடியார்க்கு நல்லார் விளக்கம் தந்துள்ளார். இலக்கியங்களில் வெறியாடிய அழகு மிகவும் தெளிவாகவும் , விளக்கமாகவும் குறிப்பிடப்படுகிறது. இச்சான்றுகளின் வழியாக வெறியாட்டின் சிறப்பு நமக்கு புலனாகிறது. மேலும் வெறியாடுவோர் தாமாக அதனை ஆடுவதில்லை. அவர் மீது ஏறிய கடவுளின் தூண்டதலால் ஆடினார். பாவை ஒன்றில் பொறி இணைத்து விட்டால் அது எவ்வாறு இயங்கி ஆடுமோ, அவ்வாறு அவர் ஆடினார்.

”வெறிஅயர் வியன்களம் பொற்பவல்லோன்
பொறி அமைபாவையின் தூங்கல்” 5

வெறியாடல் தனிநபர் கூத்தாக இருந்தாலும் இதனை ஒரு விழாவாக நடத்தியதைக் காணமுடிகிறது. வெறியாடுவோன் படிமத்தான் என்றும், வேலன் என்றும், அழைக்கப்படுகின்றான். இதன் பொருட்டு வேலனாட்டம் என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். வேலனால் காந்தாள் கூத்தென்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றது. வேலனாடல் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணையோடு நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளது. புறத்துறையில் சிறுபான்மையே இடம் பெற்றுள்ளது.இதனை,

“வெறியாட்டு இடத்து வெருவின் கண்ணும்
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்” 6

என்ற வரிகள் வாயிலாக அறியலாகின்றது.

“முருகாற்றுப் படுத்த நடு நாள்” 7

பௌர்ணமி நடுஇரவில் வெறியாட்டு நிகழ்ந்தது என்பதை அறியமுடிகிறது. முருகன் தன் மீது வரும்படி வெறியாட்டுக்களத்தில் நின்று அழைப்பதும் , முருகனை ஆற்றுப்படுத்தும் விதமாக

திருமுருகாற்றுப்டையை நக்கீரர் படைத்திருக்கும் நிலையை உணரமுடிகிறது.

நடுகல் வழிபாடு

சங்கால மக்கள் போரில் விழுப்புண் ஏற்பட்டு இறந்த வீரர்களுக்கும், வடக்கிலிருந்து உயிர் துறந்தவர்களுக்கும் நடுகல் வழிபாடு செய்தனர். இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் “கல்“ நட்டு வைத்து வழிபாடு செய்தனை நடுகல் வழிபாடு எனப் பொருள் கூறுகின்றனர். “ சமுதாய சிறப்புமிக்க இயல்புகளைக் கொண்டிருந்தவர்களனின் சிறப்பிற்குப்பின் அவர்களது நினைவாக நடப்பட்ட கல்லே நடுகல்” 8 என்று கூறும் அறிஞர் கருத்தின் வழியாக இறந்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் சிறப்பு பெற்று இருந்தமையையும். வீரத்தின் அடையாளமாகவே நடுகல் வழிபட்டதும், நடுகல் வழிபாடு இயற்கை வழிபாட்டிற்கு அடுத்த நிலையாக அமைந்தமையைக் காணமுடிகிறது.

”காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
………………….
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே” 8

என்னும் வரிகளில் தொல்காப்பியர் நடுகல் பற்றி விரிவாகக் கூறுகிறார். போர்க்களத்தல் இறந்த வீரரை நடுகல்லில் தெய்வ உருவாக ஆக்கும் பொருட்டு கல்லைக் காணுதல், கல்லைக் கொள்ளுதல், அக்கல்லை நீராட்டல், நடுகல்லாக நாட்டுதல், நட்டபின் கோயிலாக எழுப்பி சிறப்புச் செய்தல், நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்துதல் என நடுகல்லின் சிறப்புகளைப் பட்டியலிடுவதன் வாயிலாக தொல்காப்பியர் காலத்திலேயே நடுகல் வழிபாடு இருந்தமையை அறியமுடிகிறது. ஆண்களுக்கு மட்டுமே நடுகல் வழிபாட்டு உரியதாகவும் பெண்களுக்கு நடுகல் வழிபாடு என்பது இல்லை என்பதையும் சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன.

“நடுகல் பீலி சூட்டி” 9

“பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” 10

“ எழுத்துநடை நடுகல்லன்ன விழுப்பினர்” 11

என்னும் சங்கப் பாடல் வரிகள் நடுகல் வழிபாட்டினை எடுத்துரைக்கிறது. இயற்கை வழிபாடே ஆரம்ப கால வழிபாடாக இருந்தமையும் அதைத் தொடர்ந்து நடுகல் வழிபாடு, உருவ வழிபாடு ஆகியவை தோற்றம் பெற்றிருக்கிறது. இவ்வழிபாட்டில் மந்திரங்களும், ஈகம விதிகளும் இடம் பெறுவது இல்லை. சமுதாயத்தோடு ஒட்டாதக் கற்பனைத் தழுவிய பேய்துணங்கையிலிருந்து உருவாகி சமுதாயத்தேர்டு தொடர்பு கொண்டமைந்த கூத்து வெறியாட்டு என்பதையும், சங்ககால மக்கள் போரில் விழுப்புண் பட்ட வீரர்களுக்கும், வடக்கிருந்து உயிர் துந்தவர்களுக்கும் நடுகல் வழிபாடானது இருந்தது என்பதையும் அறியமுடிகிறது.


அடிக்குறிப்புகள்:

1.திருமுருகாற்றுப்படை 269
2.தொல் பொருள் 1006
3. தொல் பொருள் 1006
4. பரிபாடல் – 9
5. அகநானூறு –98
6. தொல் களவு 21 நூ
7. புறநானூறு – 299
8.தொல் பொருள்.63 நூ
9. அகநானூறு – 67.10
10. அகநானூறு – 67.10
11.ஐங்குறுநூறு – 352

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R