- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவின் விடிவெள்ளியாகத் தோன்றியவர். விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்துமுகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியுள்ளார்.

சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறாள். பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்ணுக்கு பல அடிமை விலங்குகளை பூட்டி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.

பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, கேலி செய்யப்பிறந்தவள், ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ளும் முன் பல வகையான பலன்களை எதிர்பார்க்கின்றனர். அவள் அழகுடையவளாகவும் அதிகமான சீர்வரிசை கொண்டு வருபவளாகவும், வீட்டிற்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது. பலபேரின் கேலிச் சொற்களைக் கேட்டு அதை சகித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது.

பெண்ணியம் என்பது பெண்ணுக்கு என்று எதையும் பிரித்து போதிப்பதன்று. இயற்கையிலேயே அமைந்த உடலும் மனமும் சார்ந்த வேறுபாடுகளை மனதில் கொண்டு காலம் இடம் மொழி ,சாதி, சமயம் கடந்து கூறுவதாகும்.  பெண்கள் உணவு சமைத்தல், விருந்தோம்பல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். சில பெண்கள் இன்னும் அடுப்படியிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

“பெண் என்பவள் பேசும் தெய்வம். ’’என்பதைத் தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி உள்ளதனை “எங்கெங்குகாணினும் சக்தியடா என்று சக்தியின் உருவகமாகப் பெண்னைப் பார்க்கிறார். திருவள்ளுவரும்,

“தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

அறிவு நிரம்பப் பெற்றவர்கள் பெண்கள். ஆண்களின் அடிமைத்தனத்தினால் தான் பாமரர் முதல் படித்தவர் வரை அடிமை வாழ்வு எய்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனாதிக்க சமூகத்தினால் கத்தி போன்ற கூர்மையான நாக்கினால் காயப்படுத்தப்படுகிறார்கள். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடையில் கூட கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டிய சூழலில் சில பெண்கள் இன்னும் வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். பெண்ணின் மனதை காயப்படுத்தும்
செயல் புரிபவர்களைக் கண்ட முண்டாசுக் கவிஞர்,

“அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்க முயல்பவர்கள் பித்தராம்”

என்று தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதி, மனைவியையும் தாயையும் மதிக்க வேண்டும் என்னும் கருத்தை,

“மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமன்றால்
மனையாளும் தெய்வமன்றோ மதிகெட்டீரே
தாயைப் போல பிள்ளையென்று முன்னோர்
வாக்கின் படி பெண்மை அடிமையுற்றால்
மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பன்றோ”

என்று விளக்குகிறார். இதன் மூலம் ஒருவர் பண்பும், ஆத்மீகமும் மற்றவர்களால் உருவாகின்றன என்ற கருத்தை உணர்த்தியுள்ளார்.

பெண் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதனை,

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைத்தோங்குமாம்
பேணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாகும்”

என்கிறரர். மேலும்,

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ”

என்கிறார். சமுதாயத்தில் ஒரு பெண் நல்லமுறையில் வாழவேண்டும் எனில் எதிர்த்து நிற்கும் துணிவு தன்னம்பிக்கை, முயற்சி ,ஊக்கம் , வைராக்கியம் போன்ற உயர்ந்த இலட்சியங்களைக் கைக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். தவறினைச்

சுட்டிக்காட்டி எடுத்துரைக்கும் மனோதிடம் உள்ள பெண்களினால் கவலையின்றி வாழ முடியும் என்றும் அவளே மிகச்சிறந்த பெண் என்றும் கூறுகிறார்.

பெண்மை வெல்க
பெண்மை வாழ்க என்று அழைத்து பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் பாரதி,

“பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா”

என்று கூறிவிட்டு ஆண்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக,

“பெண்ணறத்தனை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை
கண்ணைக் காக்கும் இமை மிரண்டின்மை போலவே”

“உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்ந்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”

என்கிறார்.

பெண் விடுதலை

பெண் விடுதலை பற்றிப்பேசும் போது அடிமை வாழ்வு வாழ்ந்த பெண்களின் அவல நிலையை எண்ணி வருந்துகிறார். படிப்பறிவு இல்லாத நிலை திருமண வாழ்வின் அவலநிலை சமுதாய உரிமை ஆகியவற்றிறைப் பற்றியும் கூறியிருக்கிறார். கல்வி
கற்க முடியாத நிலையையும் விருப்பமில்லா திருமண வாழ்வையும் நினைத்துக் குமுறும் முண்டாசு கவிஞர்,

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”

என்பதனையும், பெண் தன்னை விட படிப்பில் சிறந்தவளாக ஆளுமைமிக்க பெண்ணாக இருப்பதைக் கண்டு குமுறும் ஆண்களுக்காகவே எழுதப்பட்ட வரியாக அமைந்துள்ளது.மேலும் திருமணத்தில் பெண்களின் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டும் கவிஞர்,

“நல்ல விளைகொடுத்து நாயை விற்பார் அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டி வைத்தார் பழி சுட்டிவிட்டார்”

என்கிறார்.

பெற்றோர்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் கடமை முடிந்துவிடுகிறது என்று வரன்களை நன்கு விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்துவிட்டு மீளாத்துன்பத்தில் மாட்டிக்கொள்கின்றனர்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் பெண்களுக்கு விடுதலைப் பெற்றுதரப் பாடுபட்டவர் இந்தியாவில் ஏராளம், இல்லாளின் மாண்பைப் போற்றிவந்த வள்ளுவர் ‘பெண்ணிற் பெருந்தக யாவுள?’ எனக் கேட்பதிலிருந்து பெண்ணின் பெருமையை அறிந்து கொள்ளமுடிகிறது.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை கானென்று கும்மியடி”

என்று சமஉரிமைச் சிந்தனையைக் கூறுகிறார்.

எல்லாத்துறைகளிலும் கனிமாக உயர்ந்து நிற்கின்ற பெண்களின் பெருமையை அன்றே பாரதி கோடிட்டு காட்டிச் சென்றுள்ளார்.

தகுதியும் திறமையும் கொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் வெளியுலகை அறிந்து ம் தம் பிள்ளைகளை நற்பண்புள்ளவர்களாக ஆளாக்கி சமுதாயத்தில் நற்பண்புள்ள குடிமகனாக வளர்க்கவேண்டிய பொறுப்பும் பெண்களிடம் மிகப்பெரும் பங்கு உள்ளது.

அப்பெண்கள் ஞானத்தில் சிறந்து நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நற்பெயர் தரக்கூடியவர்களாக திகழமுடியும் என்பதில் ஐயமில்லை .


பார்வை நூல்கள்

1. பாரதியார் கவிதைகள் -முனைவர் ச.மெய்யப்பன்
மணிவாசகர் பதிப்பகம்
சென்னை.

2. திருக்குறள் எளிய உரை
தமிழ்ச்செம்மல்.புலவர்.சி இராசியண்ணன்.
மீனா புத்தகநிலையம்
சென்னை 600 008

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R