ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்தமிழகத்தில் இலக்கியம் தோன்றிய காலத்திலேயே அவ்விலக்கியத்தை முன்மொழிதல், இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தல் போன்ற நிலையில் இயக்கச் சாயலுடனான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன என்றே கருதலாம்.  சங்க காலத்தில் இருந்த முதல், இடை, கடைச் சங்கங்கள் இலக்கிய இயக்க அடிப்படை வாய்ந்தனவே ஆகும். பலர் ஒன்றாக ஓரிடத்தில் கூடி ஒரு பொருள் பற்றிச் சிந்திப்பது அல்லது படைப்புகள் பற்றி ஆராய்வது என்ற நிலையில் அமைந்தது சங்கம் என்ற அமைப்பாகும். குழு மனப்பான்மையுடன் பலரும் உயர இலக்கியத்தின்வழி  வழி காண்பது இலக்கிய இயக்கமாகின்றது.

சைவ சமய எழுச்சி காலத்தில் பக்தி இலக்கியம் கொண்டு சமுதாயத்தில் பெருத்த விழிப்புணர்ச்சியை அருளாளர்களால் ஏற்படுத்த முடிந்தது. 'இலக்கிய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் தனியிடத்தைப் பெற்றது பக்தி இயக்கம். இவ்வியக்கம் கலைக்குப் புத்துயிர் அளித்தது. பல்வகை இடங்களுக்குச் சென்று பதிகம் பாடியும், இறைவடிவங்களைப் பாசுரங்களில் ஒதியும்,இறையடியார்களுக்குக் காப்பியம் புனைந்தும்,இறைநலம் சார்ந்த பிரபந்தங்களை உருவாக்கியும் இலக்கிய வளம் சேர்த்தது இவ்வியக்கம்.'|  என்றவாறு பக்தி இயக்கப் பணிகள் குறிக்கத்தக்க இடத்தைத் தமிழக வரலாற்றில் பெற்றுள்ளன.

 தொடர்ந்து வந்த தனித்தமி;ழ் இயக்கம்,  சுயமரியாதை இயக்கம், விடுதலை இயக்கம், மார்க்சிய இயக்கம் ஆகியன தமிழ் இலக்கியப் பரப்பிலும், தமிழக வரலாற்றுப் பரப்பிலும் குறிக்கத்தக்க எழுச்சிகளை, மாற்றங்களைக் கொண்டுவந்தன. இவை இலக்கியம் சார்ந்த இயக்கங்களாக மட்டும் அமையாமல் அரசியல், ஏற்றத்தாழ்வு இன்மை போன்ற சமுதாயக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பெற்றன என்றாலும் இலக்கிய வளர்ச்சியை இவை சார்ந்திருந்தனவாக அமைந்தன என்பது கொள்ளத்தக்கது.

தனித்தமிழ் இயக்கம்
தனித்தமிழ் இயக்கம் என்பதைக் கி.பி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினாறாம் ஆண்டில் மறைமலையடிகள் தோற்றுவிக்கிறார். ~~தூய தமிழ்ச்சொற்களையே பயன்படுத்த வேண்டும். பேச்சு, இலக்கியம் ஆகிய இரண்டிலும் தனித்தமி;;ழ்;ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டது||  என்ற கொள்கையை இவ்வியக்கம் பெற்றிருந்தது. இவ்வியக்கத்தை நீலாம்பிகை அம்மையார், பரிதிமால் கலைஞர், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற பலர் வளர்த்தெடுத்தனர்.

திராவிட இயக்கம்
தந்தைப் பெரியாரால் தோற்றுவிக்கப்பெற்ற இவ்வியக்கம் அரசியலி;ல் நேரடிப் பங்குபெறாது தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டியது. பகுத்தறிப் பாதையைக் காட்டியது. தமிழகத்தில் நிலவிய மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்து அவற்றைப் போக்கப்பாடுபட்டது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தாறாம் ஆண்டு தொடங்கப்பெற்ற இவ்வியக்கம் தமிழகத்தின் பல ஊர்களுக்குப்  பரவியது.

பெரியாரின் புரட்சிக்கருத்துகளை உள்ளமைத்து திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளர்கள் படைப்புகளை படைக்க ஆரம்பித்தனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி என்று மிகத் தேர்ந்த திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளிகள் இதனுள் உருவாகினர். இவர்கள் பகுத்தறிவு இலக்கிய இயக்கத்தை முன் நடத்திச்சென்றனர்.

நாளடைவில் அறிஞர் அண்ணா இ;வ்வியக்கத்தில் இருந்து பிரிய தனித்தனிக் கட்சிகளாக திராவிட இயக்கக் கட்சிகள் பிரிந்து பரந்து வளர்ந்தன. இன்றுவரை அரசியலில் பகுத்தறிவு கொள்கை சார்ந்த இலக்கிய இயக்கமாக திராவிட அரசியல் இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. ~~மக்கள் வாழ்வின் பிரச்சினைகளையே கலையாகவும்,இலக்கியமாகவும் ஆக்கவேண்டும் என்பது அவர்கள் கொள்கை||  என்ற மேற்கோள்வழி இவர்களின் கொள்கையை அறிந்து கொள்ளமுடிகின்றது.

மார்க்சிய இயக்கம்
 ஆதிக்க சக்திகள் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் சுரண்டலுக்கு எதிரான உலகத்தைப் படைக்க முன்வந்த இயக்கம் மார்;க்சிய இயக்கம். இவர்கள் உழைப்பாளி – முதலாளி என்ற இரு வர்க்கப்பிரிவுகளின் போரட்ட வரலாறே உலக வரலாறு என்று  எடுத்துரைத்தனர். ~~சுரண்டலுக்கு எதிர்ப்பும், உழைப்புக்கும் பாட்டாளிக்கும் பாரட்டும், வர்க்கப்போராட்டத்துக்கும், சமுதாய மாற்றத்திற்கும் வரவேற்பும் பொதுவுடைமைச் சமுதாயத்திற்கு ஆதரவு அளிப்பதும் மார்க்சிய இயக்கத்தின் நோக்கங்கள் ஆகும்||  என்று இதன் தன்மை எடுத்துரைக்கப்படுகின்றது. ப. ஜீவானந்தம், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், தொ.மு. சி.ரகுநாதன்  போன்ற மரபுக்கவிஞர்களும், மீரா, தமிழன்பன், புவியரசு, வெண்மணி போன்ற புதுக்கவிஞர்களும், பொன்னீலன், சூரிய தீபன், ஜெயகாந்தன் போன்ற கதையாளர்களும் இவ்வியக்கப்பின்னணியில் எழுதிய முக்கியமான படைப்பாளிகள். இவர்களில் வலது, இடது என்ற பாகுபாடு உண்டு. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற அமைப்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் படைப்பாளர் சங்கம் என்ற அமைப்பும் இவ்வியக்கச் சார்பில் இலக்கியம் வளர்ப்பன. சிற்பி, காமராசு, பொன்னீலன், சந்திரகாந்தன் போன்றோர் கலைஇலக்கியப் பெருமன்ற வார்ப்புகள். முத்துநிலவன், கந்தர்வன், தமிழ்ச்செல்வன், ராஜாஜி, மேலாண்மைப் பொன்னுச்சாமி போன்றோர் முற்போக்கு எடுத்தாளர் கலைஞர்கள் பிரிவினர். இவ்விரு வகையாரும் இணைந்துத் தற்போது அரசியல் நிலையில் இலக்கிய நிலையில் செயல்பட்டு வருகின்றனர்.

காந்தீய இயக்கம்
மகாத்மா காந்தியடிகளின் அமைதி, அகிம்சை சார்ந்த போராட்டம், எளிய வாழ்க்கைமுறை இவற்றைக் கற்றுத்தரும் இயக்கம் காந்தீய இயக்கம் ஆகின்றது. மகாத்மா காந்தியடிகள் விடுதலை பெற்றபின் தனக்கு அதிகாரப் பதவிகள் வேண்டாம் என்று இருந்தவர். அவரின் பாதை இந்தியாவை நல்ல உயர்ந்த பண்புகள் கொண்ட நாடாக உலக அரங்கில் தலைநிமிர்த்தும் என்ற கொள்கையில் அசையாதவர்கள் காந்தீய இயக்கவாதிகள்.

 நாமக்கல் கவிஞர், கல்கி, சுத்தானந்த பாரதியார், பாரதியார் போன்றோர் இவ்வியக்கம் சார்ந்த கவிதைகளைப் புனைந்தோர் ஆவர். அகிலன், மு.வரதராசன் போன்றவர்கள் காந்தீயம் சார்ந்த கதையாளர்கள் ஆவர். திரு.வி.கல்யாணசுந்தரனார், வ.உ.சிதம்பரனார், சாமிநாத சர்மா, அயோத்திதாச பண்டிதர், வேங்கடரமணி போன்றோர் இவ்வியக்கம் சார்ந்த சான்றோர்கள் ஆவர்.

 சான்றாண்மையும், அமைதியும், எளிமையும் அரசியலிலும் வாழ்விலும் இலக்கியத்திலும் தேவை என்பதை வலியுறுத்தி காந்திய இயக்கம் இலக்கியப் படைப்பாக்கத்திலும் செயல்பட்டு வருகின்றது,

 இவ்வியக்கங்கள் ஓரளவிற்கு அரசியல் சார்ந்த இயக்கங்கள் என்றால் அது மிகையாகாது. முழுக்க முழுக்க இலக்கிய இயக்கங்களாக வளர்ந்த சில அமைப்புகளும் தமிழ் .இலக்கியப் பரப்பில் உள்ளன. புதுக்கவிதைக் காலக்கட்டத்தை மணிக்கொடிக்காலம், எழுத்து பரம்பரை, வானப்பாடி பரம்பரை என்று மூவகையில் அடையாளப்படுத்துவர்.

'மணிக்கொடி காலம் - 1930-1945, எழுத்து பரம்பரை- 1950-1970 , வானம்பாடி பரம்பரை- 1971 ஆம் ஆண்டிற்குப்பின்' என்ற நிலையில் இவ்வியக்கங்களுக்கு கால எல்லை வரையறுக்கப்பெற்றுள்ளது.

மணிக்கொடி இயக்கம்
 மணிக்கொடி என்ற இதழ் கு. சீனுவாசன், வ.ரா, டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பெற்றது. ~~ மணிக்கொடி வாழ்க்கையின் எதார்த்த நிலையைக் காட்டாது கனவுலகைச் சித்தரித்து இலக்கியத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்தும் நோக்கிற்கும், வணிகமயமாக்கும் போக்கிற்கும் எதிராக தேசிய உணர்வை ஊட்டும் இலக்கியப் போக்கை உணர்த்துவதற்கு மணிக்கொடி இதழ் தோன்றியது||  என்று இவ்விதழ் தோன்றிய சூழலை அறிந்து கொள்ள முடிகின்றது.

 இவ்விதழின் வழியாக ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபலன், வல்லிக்கண்ணன் போன்றோர் வெளிப்பட்டனர். தேர்ந்த இலக்கிய இயக்ககாலம் மணிக்கொடி காலம் ஆகும்.

எழுத்து இயக்கம்
 சி.சு.செல்லப்பாவின் முயற்சியால் விளைந்த இதழ் எழுத்து இதழாகும். புதுக்கவிதைக்கு இவ்விதழ் முக்கிய இடம் தந்தது. சிட்டி, தருமுசிவராமு, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன், க.நா.சுப்பிரமணியன் போன்ற எழுத்தாளர்கள் எழுத்து  இதழின் இலக்கியம் சார்ந்த கொடையாளர்கள் ஆவர்.
வானம்பாடி இயக்கம்

 உலகைப் புரட்டப் போகின்ற நெம்புகோல் கவிதையைப் படைக்கும் ஆர்வத்துடன் புறப்பட்ட புதிய இளைய கவிஞர்களால் உருவாக்கப்படடது வானம்பாடி இயக்கம். சிற்பி பாலசுப்பிரமணியன், புவியரசு, இளமுருகு, மேத்தா, சக்திக்கனல், அறிவன் போன்றோர் இவ்வியக்கம் சார்ந்தோர் ஆவர்.
 இவ்வகையில் தமிழகத்தில் தோன்றிய இலக்கிய இயக்கங்கள் பல நிலைகளில் தமிழ் படைப்புக்களத்தை மெருகூட்ட மேன்மைப்படுத்த உதவின.

இவைதவிர  இலக்கியத் திறனாய்வு அடிப்படையில் பற்பல இயக்கங்கள் தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்தன. அவற்றைப் பின்வரும் பகுதி அறிவிக்கின்றது. ~~கருத்துமுதல்வாதம், ஆன்மீக வாதம், ஆன்ம மெய்ம்மைக் கோட்பாடு, ஐயுறவு வாதம், ஊழ்வலி வாதம், இயற்ப்பண்பியல் வாதம், முன்மை மரபியல், புனைவியல், லோகயாதம், பொருள் முதல் வாதம், இயந்திரவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம், அடிப்படை அமைப்பும் மேற்கட்டுமானமும், மனிதாபிமானம், சீர்திருத்த இயக்கம், சீர்திருத்த வாதம், பயன்பாட்டுக் கொள்கை, தப்பி ஓடல், கலை கலைக்காகவே, அழகியல் வாதம், நனவோடை உத்தி, உருவவாதம், இருண்மை வாதம், கருத்துப் பதிவுக் கலைத்திறம், படிமக் கோட்பாடு, குறியீட்டியல்,வெளியீட்டியல் பாங்கு, எபிகூரிய வாதம், சிற்றின்ப வாதம், இருப்பியல் வாதம், தனிநபர் வாதம்,பிராய்டிய வாதம், டாடாயிசம்,மிகை எதார்த்தவியல், கிறிஸ்துவ சம தர்ம வாதம், நாற்காலிசோசலிசம், பேபியன் சோசலிசம், மார்க்சிய தத்துவம், கற்பனாவாத சோசலிஷம், சமதர்மம், பொதுவுடைமை, எதார்த்த வாதம், சோசலிஸ்ட் எதாத்த வாதம்||   போன்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய இயக்கங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் 'அமைப்பியல், பின்னை அமைப்பியல், நவீனத்துவம், செவ்வியல், கற்பனாவாதம், முற்போக்கு அழகியல், மீயதாரத்தவாதம், மீபொருண்மைவாதம், மாய எதாரத்தவாதம், பெண்ணியம், கறுப்பின் இலக்கியவாதம், தலித்தியம், வரலாற்றுவாதம், அதி வரலாற்றுவாதம், அநிரூபணவாதம், அனுபவ வாதம், இருபொருள் வாதம், இலட்சியவாதம், இறையியலியம். எதிர்காலவாதம், ஒலிமைய வாதம், கருத்து முதல்வாதம், சமூகவியல், சொல்மையவாதம், தர்க்கவாதம், துன்பியல்வாதம், நடப்பியல், நடைமுறைவாதம், நாட்hரியல்வாதம், நுண்இறைவாதம், பழக்கவாதம், பிரச்சார வாதம், மறுப்புவாதம், வட்டார வழக்கு வாதம், ஒருமைவாதம்'|  என முப்பத்தைந்து இலக்கிய இயக்கங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படுகின்றன.

இவ்வகையில் தற்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியத் திறனாய்வுப் பார்வைகள் தோன்றி அவற்றின் வாயிலாக இலக்கிய இயக்கங்கள் பல வளர்ந்து வருகின்றன. இலக்கியங்கள் ஆராயப் பெற்று வருகின்றன.

இவைதவிர இலக்கிய அமைப்புகள் என்ற நிலையில் தமிழகத்தில் பற்பல இயக்கங்கள் நடைபெற்றுவருகின்றன. அவை பின்வருமாறு.

'1. திருவள்ளுவர் இயக்கங்கள்
 திருக்குறள் கழகம், புதுக்கோட்டை,  திருக்குறள் பேரவை, குன்றக்குடி, குறளாயம், திருக்குறள் நெறி பரப்பு மையம் -தமிழக அரசின் நிறுவனம், திருக்குறள் உயராய்வு மையம்- முனைர் கோ. மோகனராசு, வள்ளுவர் வழி (கல்லை. தெ. கண்ணன்)இதழின் வழியான இயக்கம், இடுக்கிஆதித்திருவள்ளுவர் ஞானமடம், திருவள்ளுவர் தெய்வ வழிபாட்டியக்கம், நங்கைநல்லூர்,திருவள்ளுவர் சங்கம்,பெங்களுர், கொழும்பு தமிழ் மறைக்கழகம்

2. தனித்தமிழியக்கம்,3. தமிழிசை இயக்கம்,4. உலகத் தமிழ் அமைப்புகள்,5. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 6. மதுரைத் தமிழ்ச்சங்கம்7. யாழ்ப்பாண நூலகம்,8. கரந்தைத் தமிழ்ச்சங்கம்,9. பெங்களுர் தமிழ்ச்சங்கம்,10. தில்லித்தமிழ்ச்சங்கம்,11. தலைநகர்த் தமிழ்ச்சங்கம்,

12. பலவண்ணத் தமிழ் அமைப்புகள்: பாவேந்தர் பாசறை, காரைக்குடி இந்துமதாபிமான சங்கம், பாரதி கலைக்கழகம்,ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றம்,தமிழ் இளைஞர் கழகம், சரசுவதி மகால், தமிழ் வளர்ச்சிக்கழகம், புத்தகச் சந்தை,இலக்கிய வட்டம், தமிழ்ச்சான்றோர் பேரவை,தமிழாசிரியர் கழகம், தமி;ழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, தமிழகப் புலவர் குழு, பேராசிரியர் மெய்யப்பன் தமிழாய்வகம், தமிழ்ச் சுரங்கம், பாவாணர் கோட்டம், கோவை தமிழ்ச்சங்கம்,அனைத்திந்திய தமிழ்எழுத்தாளர் சங்கம்

 13. உலகத் தமிழ் மாநாடுகள், 14. வரலாற்றை நிலைநாட்டி நிற்கும் அமைப்புகள், சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம், தமிழ்வழிக்கல்விஇயக்கம் ||  முதலான பல இலக்கிய அமைப்புகள் தமிழகத்தில் வேரூன்றித் தொடர்ந்து பல இலக்கியப் பணிகளைச் செய்து வந்தன.

 இவற்றில் விடுபட்டுப் போனவும் உண்டு. தமிழகத்திலும், பல வெளிநாடுகளிலும் கம்பன் புகழ் பாடும் கம்பன் கழகம் (தலைமையகம் - காரைக்குடி), தென்காசி திருவள்ளவர் கழகம், மதுரை திருவள்ளுவர் கழகம், திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் போன்ற பல  குறிக்கத்தக்க அமைப்புகள் தமிழ் இலக்கியங்கள் மக்களிடம் பரவ வழி செய்துள்ளன.

 இவைதவிர சமய இலக்கியங்கள் சார்ந்த அமைப்புகளும் தற்போது வீறு பெற்று எழுந்துவருகின்றன. சைவ சமய இலக்கியங்கள், சாத்திரங்கள் சார்ந்து சைவ சித்தாந்த சபை, பன்னிரு திருமுறை மன்றம், தேவார திருவாகச மன்றங்கள், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் போன்றனவும், வைணவ இலக்கியங்கள் சார்ந்து ஆழ்வார் ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளும் சமண சமய இலக்கியம் சார்ந்து இயங்கும் அமைப்புகளும் இங்கு இவ்வகையில் இணைத்துக் காணத்தக்கன.

மேற்காட்டப்பெற்ற கருத்துகளில் இருந்து ஒரு பொது முடிவிற்கு வரமுடிகின்றது. தமிழ் இலக்கியங்களை முன்னிறுத்தி அவற்றின் நேரிய வழியை மக்களுக்கு நினைவுபடுத்தி, செம்மையான வாழ்க்கை வாழ எழுத்து வழியாகவோ, பேச்சுவழியாகவோ, செயல்கள் வழியாகவோ சாதி, மதம், இனம், அரசியல் சாராது, இவ்வேறுபாடுகளுக்கு இடம் தராது பலர் கூடி நடைபெறுத்தும் இயக்கம் இலக்கிய இயக்கம் ஆகின்றது.

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R