ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?!
நீட் எமனால்..
கேட்டுக்கு வெளியே நிறுத்தும்
நீட் தேர்வை சாமானியர்கள்
எத்தனைமுறை எழுதினாலும்
வாழ்க்கையில் தேரமுடிவதில்லை.
அவசியமான தேர்வென்றால்
அரசியலுக்கு இல்லையேயென்று
கழுத்து நரம்புகள்
புடைத்து வீங்கினால்
சுருக்கிலிடுகிறது ஆண்டைகளின் முந்நூல்.
அசுர ஓநாய்கள்
வெள்ளாடுகளைக்
காவு கொள்கின்றன..
தொட்டில் சேலையே
தூக்குக் கயிறாய்
மாறிப் போகிறது.
பிள்ளைகளின் கழுத்தை அறுத்த
நீட் வலையின் பின்னலறுக்க
ஒடுங்கிய கைகள் உயர்ந்தெழும்
கொதித்தடங்கிய சாம்பலும்
உயிர்த்தெழும் .
நீட்டைப் பூட்டுவோம்..
பிள்ளைகளைத் திறந்திடுவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.