கற்பிதம்
- மணிமேகலை (கோவை) -
கருமேகங்கள் படர்ந்த வானில்
வளர்கிறது பிறை
அருந்ததியை முன்னிருத்தி ஒளிரும் நாட்களில்
கருமை படர்ந்திருக்கிறது
வீணை ஏந்திய மீராவுடன்
வெண்ணையுண்ணும் கிருஷ்ணன்
பொம்மையின் குறும்பு முகத்தில்
குழந்தையின் அழகு முகம் வடிவுகொள்கிறது
உன் அடையாளங்களுடன்
கருப்பை எங்கும் கண்ணகியின் பரல் ஓசை
கற்பிதங்களில்
மலையும்
மரமும்
அடர்ந்த கனம்
தொலைந்துபோனது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கிறகம்பெல் தந்த உறவு
வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்)
எண்ணினால் உறவை உணரும் அது மனம்.
எண்ணினால் உறவு தொடருமது தொலைபேசி.
விநாடிச்சேவை, விலைமிகு காலச் சேமிப்பு.
விநய வேண்டுகோளில் நெருங்கும் தொடர்பு.
வாழ்வுக்கு விஞ்ஞானம் வரமாக்கிய வசதி
அலெக்ஸான்டர் கிறகம்பெல்லின் ஆய்வு வெகுமதி.
விரல் நுனியில் இலக்கம் அழுந்த
கரம் தரும் இணைவு பொருந்தும்.
சரமாய்த் துயரம், மகிழ்வு, நெகிழ்வும்
தரமாய் உயர்வும், தாழ்வும், பயமும்
நிகரற்ற அதன் சேவைப் பகிர்வு.
அயராத வியன் கொள் நகர்வு.
உன் கிண்கிணி நாதத்தால் உறவில்
தேன் சொரியும், மென்சிறகுகள் வருடும்.
கண்ணியமாய் இரகசியம், கலகமும் கடக்கும்.
உன்னைத் தொட நடுங்கும் பிறவிகளும்,
உன்னை உடைத்து நொறுக்கும் பிரகிருதிகளுமாய்
நீ ஒரு இறக்குமதி! நவரச ஆகிருதி.
இரகசியம் பதுக்கும் நீ ஒரு விசுவாசி.
பரகசியமான நீயொரு மேல்த்தட்டு வாசி.
பிரிவுத் துயரில் செல்லமான மனோவைத்தியர்.
பெரிதும் உன்னுறவுக்கு ராஐ மரியாதை.
மனதைரியம் தரும் நம்பிக்கைத் தெய்வம்.
மணியடித்துப் பலன் தரும் நீயொரு சொர்க்கம்.
காதலர்கள் உணர்வின் இன்ப வடிகால்நீ.
காதலை இணைக்குமொரு உறவுப்பாலம் நீ.
கட்டளைப் பூர்த்தியிலொரு சேவகன் நீ.
கடுகதி சேவையிலொரு மந்திரவாதி நீ.
மதுவெறியாளன் கரத்தில் விலைமகள் நீ.
ஆமாம்! வெறிக்குட்டிகள் கையிலொரு விலைமகள் நீ.
உன் உன்னத உறவுப் பாலத்தில்
வன்முறை மானுடம் மருண்டது காலத்தில்.
நீயில்லா உலகு நிலவில்லாப் பூமியாய்
நித்திய வாழ்வின் அத்தியாவசியம் ஆகினாய்.
பத்தியமாகி மானுடர் வாழ்வில் ஒரு
உத்தமத் தொடர்புப் பாலம் தொலைபேசி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
1.வார்த்தைக்குள் அகப்படவில்லை..!
- ஜுமானா ஜுனைட், இலங்கை -
பூக்களுக்குள்
வாசம் எங்கே
தேடினேன் -
காம்பு மட்டுமே
மீதமாகியது கைகளில்..!
வெற்றிகளின்
ஓரம் வரை சென்றேன்,
பெரும் கிண்ணக்குழிகளாய்
நின்றன…
மழை நாட்களில்
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,
வாழ்வின் நிலையாமை
புகட்டின…
சாலைகள் தோறும்
கற்களைப் பார்த்தேன்,
மனித இதயங்களின்
மறு வடிவம் யாம் என்றன..
கண்ணாடி தேசத்திற்குள்
நுழைந்தேன்,
என் நிழலைத் தவிர
மற்றெல்லா நிழல்களும்
ஒளிந்து கொண்டன….
உண்மை கொண்டு
உலகைநோக்கினேன்,
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம்
பூஜ்ஜியமாகின..
பார்வை தாண்டி
நோக்கும் போது
பௌதிகஅதீதம் காட்சிதந்தது..,
வார்த்தைக்குள் அகப்படவில்லை
அது..!!
2.அன்னையே…!
- ஜுமானா ஜுனைட், இலங்கை -
உயரமான
ஒரு சொல்லை
எழுதினேன்
அது –
“சிகரமா”னது…
நீளமான
சொல்லை
வரைந்தேன் -
உடனே
“நதி”யானது…
வெப்பமான
சொல்லொன்று
எழுத
“சூரியனா”ய்
உதித்தது…
ஈரமான
சொல்லொன்று
எழுத
“மழை”
பொழிந்தது…
அன்பாக
ஒரு சொல்
எழுத
“நீ”யானாய்…
நீ
உடன் வந்தாய் -
இனியும்
நான் யாதெழுத…?,
என் முன் நீ
அன்பொழுக…!
இனி நீயே
கதையெழுது…,
வாழ்க்கை நதியோட….!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வியாதிகள் ....,!
- கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -
மனதினை துயரமாக்கும்
வியாதிகள் ....,
தடவிக்கொண்ட
வியாதியினை
எண்ணி உருகும்
இதயம் ...
உள்ளத்து உடல்களில்
உறுப்புக்களின் உணர்வுகளில் ..
வேதனை வலிகளின்
எதிரொலிகள் ...!
நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை -
ஏய்க்கும் வாழ்வு ...!
இடையில் ...,
ஏந்திழை என்
பிராத்தனை...,
இறைவனால் அங்கிகரிக்கப்படும்
இறை நம்பிக்கை ...!
இறை பக்தி ...!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்தியர்கள் அனைவருக்கும்
- முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -
1
அக்டோபர் 2 தான்
காந்தி ஜெயந்தி!
எனக்கு மட்டும்
உன் பிறந்தநாளான
ஜனவரி 15 தான்
காதல் ஜெயந்தி!!
2.
தங்கள் பிறந்தநாளன்று
அடுத்தவர்களுக்கு
இனிப்புகளை வழங்குவர்
அனைவரும்!
ஆனால்...
உன் பிறந்தநாளன்று மட்டுந்தான்
அனைவரும் உன் பெயரைச் சொல்லி
மாட்டுப்பொங்கல் என்ற பெயரில்
குலவை போட்டு
பொங்கல் வைத்து
ஐந்தறிவு ஆநிரைகளின்மேல்
அன்பைப் பொழிகின்றனர்!
3.
தேவதைகள்
பூமியில் வாழ்கிறார்கள்
என்ற செய்தியை
உன்னைப்பார்த்த பிறகுதான்
நான் நம்பத்துவங்கினேன்!
4.
சிறகுகளே இல்லாமல்
பூமிக்கு வந்த தேவதை
இவ்வுலகில் நீ மட்டுந்தான்!
5.
நீ
சேலை கட்டி வந்தால்
அழகா?
சுடிதார் அணிந்து வந்தால்
அழகா?
ஒரு பட்டிமன்றமே
நடக்கிறது எனக்குள்!
6.
பிரம்மனின் ஆணுருவம்
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னைப் படைத்ததனால்...
7.
ஜனகனின் மகளாய்
சீதை பிறந்தாள்!
ஜனவரியில் நிலவாய்
கோதை நீ மலர்ந்திருக்கிறாய்!
சீதையை மணம்முடிக்க
இராமன்
வில்லை வளைத்தானாம்!
என் கோதை
உன்னை மணம்முடிக்க
உன் மாமன் நான்
உன்மேல் காதலை வளர்க்கிறேன்!
8.
குல தெய்வத்தை வேண்ட
குடும்பத்தோடு
கோயிலுக்கு போனோம்!
போகிற வழியில்
உன்னைப் பார்த்தோம்!
உன்முன்னே நின்று
குலவை போட்டபடி
தேங்காய் உடைத்து
அர்ச்சனை செய்துவிட்டு
வீடு திரும்பினோம்!
நீ தான் எங்கள்
குடும்ப தெய்வம்
என்ற நினைவில்...
9.
‘அவள் எங்களை
அணிந்துகொள்ள மறுக்கிறாள்’
என உன்மேல்
புகார் செய்தன
உன் சிறுவயது ஆடைகள்!
‘அவள்
பெரிய குழந்தை ஆகிவிட்டாள்.
அவளால்
உங்களை அணிந்துகொள்ள முடியாது’
என்றேன்!
அவ்வளவுதான்...
கன்னத்தில் கைவைத்தபடி
கதறி அழ ஆரம்பித்துவிட்டன
உன் சிறுவயது ஆடைகள்
அனைத்தும்!!
10.
வருடத்திற்கு ஒருமுறை
ஜனவரியில் பூக்கும்
காதல் பூ
நீ மட்டுந்தான்!!
11.
அரிசி மண்ணெண்ணெய்
வாங்க
வரிசையில் முண்டியடித்துக்கொண்டு
நிற்கும் ஜனங்களைப் போலவே
முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றன
என் கனவுகள்!
என் தூக்கத்தில்
நுழைவதற்கு...
நான் உன்னைத்தவிர
வேறுயாரையும்
அனுமதிப்பதில்லை!
இருள்சூழ்ந்த
என் உறக்க உலகம்கூட
நீ வந்தபின் ஒளிபெறுகிறதே
அதனால்...
12.
பிள்ளையார்
சிவன் பார்வதியை சுற்றிவந்து
ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டாராம்!
நான்
உன்னை மட்டுமே சுற்றிவந்து
முத்தங்களை வாங்கிக்கொண்டிருக்கிறேன்
உன்னிடமிருந்து!!
13.
பச்சிளங்குழந்தை
தன் பிஞ்சுபாதங்களால்
தத்தித்தவழ்ந்து நடப்பதைப்போலவே
நீயும் எழுந்து நடக்கிறாய்!
தூக்கம் களைந்து
சோம்பல் முறித்து
முகம் கழுவ...
14.
‘உன் முந்தானைக்கு பதிலாய்
என்னை உன் மாரோடு
கட்டிக்கொள்ளேன்’
என்றேன்!
‘ச்சீ போடா’
என்று வெட்கத்தில்
என்தோளில்
உன் முகம்புதைத்துக்கொண்டாய்!
அவ்வளவு தான்!
கறுப்பாய்ப்பிறந்த நானும்
உன் வெட்கச்சிவப்பால்
தங்கநிறத்தில்
ஜொலிஜொலிக்க ஆரம்பித்துவிட்டேன்!!
15.
முகத்தில் பவுடர்,
உதட்டில் உதட்டுச்சாயம்,
உடல்முழுவதும் வாசனைத்திரவியங்கள்,
இப்படி
மற்றவர்களை கவர்ந்திழுக்க
ஆரவாரமாய்
போய்க்கொண்டிருக்கும்
உன் தோழிகளுக்கு நடுவில்
நீ மட்டும்
அரிதாரமின்றி
ஆரவாரமின்றி
சீதையின் அவதாரமாய்
அமைதியாய்...
இந்த அமைதிதானடி
என்மனம் உன்னை
காதலிக்க வைத்தது!!
16.
நான்தான்
ஏற்கனவே சொன்னேனே!
நீ நிலா தானென்று...
நிலா என்ன
உலா வருவதற்கு
முகத்தில்
பவுடரா பூசிக்கொள்கிறது?!!
17.
உன் முகத்தில் வழியும்
வியர்வைத் துளிகளை
உன் கைக்குட்டையால்
அடிக்கடித் துடிக்கிறாய்!
உன்னைப் போலவே
உன் கைக்குட்டையும்
அழகாகிக் கொண்டே
வருவதைப் பார்...!!
18.
களைப்பாய்
இருக்கிறதென்றாய்!
இளைப்பாறுவதற்காய்
என் மடியில் தலைசாய்த்தாய்!
என் குட்டிப்பாப்பா
நீ தூங்க
உன் தலையணையாய்
மாறிப்போனது
என்மடி!!
19.
உப்புமூட்டை தூக்கச்சொல்லி
அடம்பிடிக்கிறாய்!
என் தலையில் குட்டுகிறாய்!
செல்லமாய்த் திட்டுகிறாய்!
சிறுகுழந்தையாய் மாறி...
பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பட்ட
சிவபெருமானைப் போல்
உன் குட்டையும்
உன் திட்டையும் வாங்கிக்கொண்டு
உன் செல்லக் கொஞ்சல்களோடு
உன்னைச் சுமக்கிறேன்
குதூகலமாய்...!!
20.
நீ என்னை
செல்லமாய்த் திட்டவேண்டும்
என்பதற்காகவே
குறும்புகள் செய்யத் தோன்றுகிறது
உன்னிடம்!
21.
இரவில் மட்டுமே
உலா வருகிறது
நிலா!
என் வாழ்நாள் முழுவதும்
என்னோடு உலா வருகிறாய்
நீ!!
22.
இராமனின் பாதுகைகளை
தனுஷ்கோடியில் வைத்து
வணங்குகின்றனர்
அனைவரும்!
நம் காதலை
என் உயிர்க்கோடியில் வைத்து
வணங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்!!
23.
நீ கண்ணாடியைப் பார்த்து
உன்னழகை
சரிசெய்து கொள்கிறாய்!
அனைவரும்
உன்னைப் பார்த்து
தங்களின் அழகை
சரிசெய்து கொள்கின்றனர்!!
24.
நீ
உடைமாற்றும்
வேளையில் மட்டும்
என்னை வெளியே தள்ளி
கதவைத் தாழிடுகிறாய்!
‘ச்சே’
பிறந்திருந்தால்
உன் வீட்டு
நிலைக்கண்ணாடியாய்ப்
பிறந்திருக்க வேண்டும்!!
உன் அனுமதியோடு
உன்னழகை முழுதாய்
இரசிப்பதற்கு...
25.
குளித்துவிட்டு ஈரஉடையுடன்
என்னெதிரிலே நின்றுகொண்டு
உன் சிகைகளில்
சிக்கெடுக்கிறாய்!
உன் சிகைகளோடு
சிக்கிக் கொள்கிறது
என் மனசு!!
26.
தாயின் ஸ்பரிசத்தை
மென்மையாய் உணரும்
பச்சிளங்குழந்தைபோலவே
உணர்கிறேன் நான்!
நீ என்
தலைகோதி விடும்போதெல்லாம்...
27.
இளங்கலை இதழியலை
மூன்றாண்டுகள் மட்டும்
படிக்கத் துடிக்கின்றனர்
அனைவரும்!
இந்த இளங்காளை
உன் இதழ்களை
என் வாழ்நாள் முழுவதும்
கடிக்கத் துடிக்கிறேன்!!
28.
கருவறைக்குள்
அலங்கார ரூபிணியாய்
அமர்ந்திருந்த அம்மனைத்
தரிசிக்க வந்த
பக்தனைப் போல்
உன்னைத் தரிசிக்க
நான் காத்திருக்கிறேன்
வகுப்பறைக்குள்...!!
29.
அம்மனை தரிசித்துவிட்டு
ஆனந்தமாய்
வீடுதிரும்புவார்கள் பக்தர்கள்!
நானோ
வீட்டிலிருந்து
வகுப்பறைக்கு ஓடினேன்
ஆனந்தமாய்...!
என் காதல் தேவதையான
உன்னை தரிசிக்க...!!
30.
‘அழகு’ என்ற தலைப்பில்
கவிதை எழுதச் சொன்னார்கள்!
உன் பெயரை மட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு
வந்தேன்!
முதல் பரிசு
கிடைத்தது எனக்கு!
31.
திருவிழா அன்று
என் வீதிவழியே பல்லக்கில்
அலங்கார ரூபிணியாய்
உலா வந்துகொண்டிருந்தது
அம்மன்!
அனைவரும் இருகரம்கூப்பி
அம்மனை வணங்கினர்!
அம்மனோ எழுந்துநின்று
இருகரம் கூப்பி
வணங்கியது!
கண்ணாடியணிந்த
அம்மனாய்
நீ வருவதைப் பார்த்து...
32.
உன் அழகையெல்லாம்
உன் உடைகள்
வாங்கிக் கொண்டு
தங்களால் தான்
நீ அழகாய் இருப்பதாய்
வெளியே
பீற்றிக் கொள்வதைப் பார்...
33.
இயற்கை இசையமைக்க...
காற்று பாடல் பாட...
உன் முந்தானை
துள்ளலாட்டம் போடுகிறது!
உன் முந்தானையின்
துள்ளலைப் பார்த்து
துள்ளிக் குதிக்கிறது
என் மனசு!
34.
காற்றை மட்டுமே
சுவாசித்து வாழும்
திருவண்ணாமலைச்
சித்தர்கள் போல்
காதலை மட்டுமே
சுவாசித்து வாழும்
என்தாய் அரசிஉன்
பக்தன் நான்! – காதல்
பித்தன் நான்!!
35.
அழகு தேசத்தின்
இளவரசி நீ!
உன் கோட்டைவாயிலின்
காவலாளியாகவாவது
என்னை நியமித்து விடு!
எனக்கு
மாதச் சம்பளமாக
எதுவும் வேண்டாம்!
தினமும் என்னை
ஒருமுறை
அன்பாய்ப் பார்த்துவிட்டு போ!
அதுபோதும் எனக்கு!!
36.
குந்திதேவி
சூரியனைப் பார்த்தவுடனேயே
கருவுற்றாளாம்!
நான் உன்னைப்
பேருந்தில் பார்த்தவுடனேயே
காதலுற்றேன்!!
37.
உன்னைத் தவிர
வேறு எதைப்பற்றியாவது
எழுத நினைக்கிறேன்!
ஆனால்...
உன்னைத்தவிர
வேறு எதைப்பற்றியுமே
எழுத மறுக்கிறது
என் பேனா!!
38.
தங்களின் உடல் அங்கங்களை
உடைநாகரீகம் என்ற பெயரில்
கடைவிரித்துக் காட்டும்
பெண்கள் வாழும் நாட்டில்
உன் அழகையெல்லாம்
மறைப்பதற்காகவே
சேலை, சுடிதார்
அணிந்து வருகிறாய்
நீ!!
39.
பேச்சுத் துணைக்காக
உன் தோழிகளோடு
செல்கிறாய்
நீ!
தங்களை
அழகாய்க் காட்டிக்கொள்ள
உன்னை அழைக்கிறார்கள்
உன் தோழிகள்!!
40.
என் கன்னக்குழிகளில்
ஊற்றி வைத்திருக்கிறேன்
நீ கொடுத்த
முத்தங்களின் ஈரத்தை...
---------------------------------------------------------------------------
நான்
காதல் முன்னேற்றக் கழகம்
என்று ஒரு
கட்சி ஆரம்பிக்கலாமென்று
இருக்கிறேன்!
பொதுச் செயலாளர்
நீதான்!
ஆனால்
ஒரு நிபந்தனை!
கட்சியின்
காதல் பரப்புச்செயலாளராக
நான் மட்டுந்தான்
இருப்பேன்!!
41.
உன்னை
வானவில்லோடு கூட
ஒப்பிட முடியாது!
ஏழுவண்ணங்களால் மட்டுமே
உருவானது
வானவில்!
இந்தப் பிரபஞ்சத்தின்
அனைத்து வண்ணங்களாலும்
குழைத்து செய்யப்பட்ட
வர்ணஜாலம்
நீ!!
42.
உன்னைக்
காதலிப்பதற்கு முன்பிருந்தே
நான்
உன்னைத்தான்
காதலித்துக் கொண்டிருந்தேன்!!
43.
உன்னை
இவ்வளவு அழகாய்ப்
பெற்றெடுத்த
உன் அன்னைதந்தைக்கு
அழகியலில்
முனைவர் பட்டமே
கொடுக்கலாம் போ...!!
44.
எத்தனையோ பெண்களை
நான் கடந்துவந்த போதும்
அன்றொருநாள் பேருந்தில்
உன்னை சுட்டிக்காட்டித்தான்
நம் காதல்
என்னைக்
காதலிக்கச் சொன்னது!
காதல் சொல்லைத்
தட்டாத பிள்ளையாகவே
வாழ்ந்து வருகிறேன்
இன்றுவரை...!!
45.
திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்!
ஆனால்...
ஒரு சொர்க்கமே
என்னை திருமணம் செய்துகொள்ள
நிச்சயிக்கப் பட்டிருக்கிறதே...
நான்
கொடுத்து வைத்தவன்தான்...!!
46.
இனிமேல் இரவில்
முத்தமிடும்போது
மெதுவாய் சத்தமின்றி
கொடு!!
‘இச் இச்’ என
நீ கொடுக்கும்
முத்தத்தின் சத்தத்தில்
விழித்துக் கொள்ளப்போகிறது
இந்த ஊர்!!
47.
அதிகாலை
சூரியன் உதிப்பதற்கு முன்
கோலம்போட போகாதே...
என்று சொன்னேனே...
கேட்டாயா?
அங்கே பார்...
அனைவரும் உன்னை
வணங்கிகொண்டிருக்கின்றனர்
சூரிய நமஸ்காரம்
என்ற பெயரில்...!!
48.
மின்விளக்கை அணைத்தவுடன்
இருள் சூழ்ந்துவிடும்!
ஆனால்...
உன்னை மட்டும்
அணைக்க அணைக்க
வெட்கத்தில்
ஒளிர்கிறாயே...
அது எப்படி?
49.
‘என்னைத்
தொட்டுக்கொண்டே பேசேன்’
என்றாய் கெஞ்சலாய்...
‘ஏன்?’ என்றேன்
செல்ல அதட்டலுடன்...!!
‘பேசுன்னா பேசு’
என்றாய்
வெட்கம் பிடுங்கித் தின்ன...!
சில நிமிடங்கள்
கழித்தபின்பு தான்
தெரிந்தது எனக்கு!
‘நீ வெட்கப்படுவதற்காகவே
என்னைத் தொட்டுப்பேசச்
சொல்கிறாய்’ என்று...!!
50.
காதல் என்று
வந்துவிட்ட பிறகு
பேதம் பார்ப்பதில்
நியாயமில்லைதான்!
புத்தன்
ஆசைகளைத்
துறக்கச் சொன்னான்!
நான் உன்
ஆடைகளை மட்டுமே
துறக்கச் சொல்கிறேன்!!
அப்படியே
உன் வெட்கத்தையும்
கொஞ்சம்
மூட்டைகட்டி வை!!
51.
சாப்பாடு போடவந்தாய்!
என் கண்முன் தெரிந்த
உன் அழகான இடுப்பை
செல்லமாய்க் கிள்ளினேன்!
உடனே
‘ஐயோ அம்மா’வென்று
கத்திக் கூப்பாடு போட்டு
ஊரைக் கூட்டிவிட்டாய்!
எதையோ சொல்லி
கூட்டத்தைக் கலைத்துவிட்டாய்!
என் மனதின்
கலவரம் குறைவதற்குள்
என்னருகே வந்துநின்று
என் கண்முன்னே
உன் இடுப்பைக்காட்டிக்
கிள்ளச் சொல்லும்
பிள்ளைக் குறும்பை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்றுவரை...!!
52.
நீ என்னிடம்
இதுவரை
எத்தனையோ குறும்புகள் செய்து
என்னைப்
பாடாய்ப்படுத்தி எடுத்திருக்கிறாய்!
தன் குழந்தையின்
பிள்ளைக்குறும்புகள்
தாய்க்குத்
தொல்லையா என்ன?!!
53.
உன் செல்லக்குறும்புகள்
எத்தனையோ முறை
எல்லைமீறிய போதும்
நான் ஒருமுறைகூட
உன்னைக்
கோபத்தில் திட்டியதில்லை!
ஒருவேளை
உன்னைத் திட்டியபிறகு
நான்
உயிரோடிருப்பேன்
என நினைக்கிறாயா
நீ?
54.
‘என் அம்மாவீட்டுக்குப்
போய்வருகிறேன்’
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
உன் தோழிகளோடு
போய்விட்டாய்!
அன்று மட்டும்
நான் நம்வீட்டில்
தனியாய்...
பிணமாய்க் கிடந்தது
உனக்குத் தெரியாமலேயே
போகட்டும்!!
55.
நான் இந்த உலகின்
எந்த மூலைக்குப்
போனாலும்
என் மூளை
நிச்சயமாய்ச் சுமந்துசெல்லும்
உன் நினைவுகளை...!!
56.
எப்போதும்
எனக்கு மட்டுமே
முத்தங்களைக் கொடுத்த நீ
நமக்கு குழந்தை பிறந்தவுடன்
என்னை விட்டுவிட்டு
நம் குழந்தைக்கு மட்டுமே
முத்தங்களைக் கொடுக்க
ஆரம்பித்து விட்டாய்!
‘ஒரு முத்தமாவது
எனக்குக் கொடு’
என உன்னிடம்
கெஞ்சச் சொல்லி
நச்சரிக்கிறது
என் குழந்தை மனசு!!
57.
கங்காரு
எங்கு போனாலும்
தன் குழந்தையை
தன் வயிற்றுப் பைக்குள்
சுமந்துகொண்டு செல்வதைப்போல்
நானும் எங்குபோனாலும்
உன்னை என்
இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு
சுமக்கத்தான் ஆசைப்படுகிறேன்!
58.
கல்லாய்க் கிடந்த
அகலிகை
இராமனின் பாதம்பட்டவுடன்
விமோசனம் அடைந்தாளாம்!
கறுப்பாய்ப் பிறந்த
நானும்
அழகு இராட்சசியான
உன் பார்வை பட்டவுடன்
கவிதை எழுதத் துவங்கினேன்!!
59.
கெஞ்சல்கள்
கொஞ்சல்கள்
செல்லச் சிணுங்கல்கள்
இவைகளெல்லாம்
காதலுக்கான
கலைச்சொற்கள் கண்மணி!!
60.
காய்கறி
நறுக்கிக் கொண்டிருந்தாய்!
தண்ணீர் உள்ள பாத்திரத்தை
எடுக்கச் சொன்னாய்!
எடுத்துக் கொடுக்கும்போது
கைதவறி கீழே விழுந்தது!
‘அட மண்டு’ என
என் தலையில் குட்டிவிட்டு
உதட்டைச் சுழித்தாய்!
உன் அழகான
உதடுகளின் சுழிப்பில்
கிறங்கித்தான் போனேன்
நான்!
அப்படியே
உன் அல்வாத்துண்டு
உதடுகளை
கடிக்கத் தோன்றியது
எனக்கு...!!
61.
எத்தனையோ முறை
மிட்டாய் தின்றபிறகும்கூட
மீண்டும் மீண்டும்
மிட்டாய் தின்னக்
குதூகலப்படும்
குழந்தைகள் போலவே
எத்தனையோ முறை
உன்னைக் காதலித்த பிறகும்கூட
மீண்டும் மீண்டும்
உன்னைக் காதலிக்கக்
குதூகலப்படுகிறது
என் குழந்தை மனசு!!
62.
குழந்தை
மிட்டாயை சுவைக்க சுவைக்க
மிட்டாய் கரைந்துவிடும்!
நான்
உன்னை காதலிக்கக் காதலிக்க
உன்னழகு குறைந்துவிடாமல்
கூடிக் கொண்டேதானிருக்கும்!!
63.
என்னோடு சேர்த்து
எத்தனையோ பேர்
உன்னைக் காதலிக்கின்றனர்
என்று தெரிந்தும்கூட
என் ஆழமான காதலை
நீ உணர்ந்தபிறகு
‘நீதான் வேண்டும்’
என்று சொல்லி
என் பின்னால் வந்த
உன்னையும்
உன் அன்பையும்
எப்படி மறக்கமுடியும்
என்னால்?!!
64.
தேநீர் அருந்திவிட்டு
அந்தக் கோப்பையை
கீழே எறிந்துவிடாதே...
என்னிடம் கொடுத்துவிடு!
என் செல்லக் குழந்தையான
உன் இதழ்கள் பட்ட
அந்தக் கோப்பையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம்முடைய காதல்!!
65.
கடைத்தேருவுக்கோ
தோழி வீட்டிற்கோ
செல்வதற்கு முன்
என் அனுமதி வேண்டும்
எனக் காரணங்காட்டி
என்முன்னே வந்து நின்றுகொண்டு
சிணுங்கினாய்!
நான் உன்னை கவனித்தும்
கவனிக்காதது போலவே
அமர்ந்திருந்தேன்!
எனக்கு
இலவச இணைப்புகளாய்
மூன்று முத்தங்களையும்
ஒரு உதட்டுச் சுழிப்பையும்
கொடுத்து என்னைக்
கிறங்கடிக்கச் செய்துவிட்டு
மீண்டும் சிணுங்க ஆரம்பித்தாய்!
உன்னிடமிருந்து
இலவச இணைப்புகளை
மீண்டும் மீண்டும்
பெறுவதற்காகவே
உன்னைக் கவனிக்காதது போல்
நடிக்கத் தோன்றுகிறது
எனக்கு!
66.
ஐந்து நிமிடங்களில்
உருகிவிடும்
ஐஸ்கிரீமைப் போல்
உன் வருகைக்காக
நம் வீட்டிற்குள்
காத்திருந்து காத்திருந்து
உருகிக் கொண்டிருக்கிறோம்
என்பதை
உன் தோழி வீட்டிற்குச்
சென்றிருந்த உன்னிடம்
எப்படிச் சொல்வது?
67.
தினமும் காலையில்
குளித்து முடித்துவிட்டு
தேநீர்க் கோப்பையுடன் வந்து
உறங்கிக்கொண்டிருந்த என்னை
தட்டி எழுப்பி
தேநீர் அருந்தச் சொல்கிறாய்!
நான் கண்விழித்து
உன் முகம்பார்த்துவிட்டு
தேநீர்க் கோப்பையைப்
பார்க்கிறேன்!
உன் உதடுகளைப்
பார்க்கிறேன்!
தேநீரை சுவைப்பதைவிட
உன் உதடுகளை
சுவைக்கவே விரும்புகிறேன்
நான்!!
68.
சற்றுமுன்
தொலைக்காட்சியில் ஒலிபரப்பான
முத்தக்காட்சியைப் பார்த்துவிட்டு
என்னருகே
நெருக்கமாய் வந்தமர்ந்தாய்!
‘உதட்டோடு உதடு வைத்து
ஒரு முத்தம் கொடுடா’
என்று
செல்லமாய் சிணுங்கியபடியே
பார்வையால் கிறங்கடித்தாய்!
‘இது என்ன
கெட்ட பழக்கம்’
என்று பொய்க்கோபத்தோடு
சொல்லிவிட்டு
குதூகலமாய்த் திரும்பிநின்றேன்!
உற்சாகத்தில் திளைத்தது
என்மனம்!
‘இப்படியொரு வாய்ப்பிற்காய்த்தான்
இத்தனை நாளாய்
நான் காத்திருந்தேன்’
என நினைத்தபடியே...
69.
சிறுவயதிலிருந்தே
இன்றுவரை
கூச்சத்தினாலும்...
பயத்தினாலும்...
தயக்கத்தினாலும்...
என் அன்னையிடம்
கேட்காத உதவியை
உன்னிடம் கேட்கிறேன்!
‘என்னை
செல்லங்கொஞ்சுடா ம்மா...’
70.
உன்னை
‘அழகான மலர்’
என்று வர்ணித்ததுதான்
தாமதம்!
‘அப்போ நீ
தேனீ தான்!
என் ஆடைகளுக்குள் புகுந்து
மலரான என் உடலில்
எங்கெல்லாம் தேன் இருக்கிறதோ
அங்கெல்லாம் தேனை உறிஞ்சி
எடுத்துக்கோ!’
என என்னை நோக்கி
தாவிக் குதித்தாய்!
ம்ம்ம்ம்...
உனக்கு
காதலிக்கக் கற்றுத் தந்த
குரு நான்!
குருவையே மிஞ்சிவிட்ட
சிஷ்யையாகி விட்டாய்!!
71.
நான் வெளியூருக்குக்
கிளம்பினேன்!
பறக்கும் முத்தமொன்று
கொடுத்தாய்!
என்னை நோக்கி
வருவதற்குள்
காற்றின் கைகள்
அம்முத்தத்தைக் கவ்விக்கொண்டு
பறந்துவிட்டது!
இனிமேல்
பறக்கும் முத்தமெல்லாம்
கொடுக்காதே!
உன் அன்பைப்
பெறுவதில் மட்டும்
நான் சுயநலவாதி தான்!!
72.
வருங்காலம்
எப்படி அமையுமென்று
எனக்குத் தெரியாது!
நீ என்னெதிரே
வரும் காலம்மட்டும்
பொற்காலமாய் மாறுதடி
எனக்கு!!
73.
நீ தூங்கியபின்
நான் தூங்காமல்
உன் பக்கத்திலேயே அமர்ந்து
இரண்டுவயது குழந்தைபோல்
நீ தூங்கும் அழகை
பார்த்து இரசிப்பதில்
கிடைக்கும் மனநிறைவைவிட
இவ்வுலகில் வேறெதுவும்
எனக்குப் பெரிதல்ல...
74.
நம் குழந்தையை
நீ உன் தோளில்போட்டு
தட்டிக் கொடுத்து
தூங்க வைக்கிறாய்!
என் மனமோ
உள்ளுக்குள்
ஏங்கித் தவிக்கிறது!
உன்னை
என் தோளில்போட்டு
தட்டிக் கொடுத்து
தூங்கவைக்கவேண்டுமென்று...!!
75.
என்
செல்லக்குழந்தை நீ!
என் உள்ளங்கையில்
தூக்கி வைத்துக்கொஞ்சும்
குட்டிப்பாப்பா நீ!
என் தோளில்போட்டு
தட்டிக் கொடுத்துத்
தூங்க வைக்கும்
பெரிய குழந்தை நீ!!
76.
நீ எனக்கு
வாழ்க்கைப்பட்டு வந்தவள்
அல்ல...
எனக்கு
வாழ்க்கை தந்தவள்!
என் வாழ்க்கை
பட்டுப் போகாமல்
காத்துக் கொண்டிருப்பவள்
நீ!!
77.
உன் பெயரைச் சொல்லி
உன்னை அழைக்கும்போதெல்லாம்
வெறும் வார்த்தையாக
நினைப்பதில்லை!
என் வாழ்க்கையாகவே
நினைக்கிறேன் நான்!!
78.
ஒருநாள் நீ என்னை
அலட்சியமாய்ப் பார்த்ததோடு
உனக்குத் தெரியாமலே
காதல் விதையையும்
என் மனதில் தூவிவிட்டாய்!
நீ என்னோடு
வாழ்ந்த காலமெல்லாம்
காதல்விதை துளிர்விடத் தொடங்கி
இன்று விருச்சமாய்
வளர்ந்திருப்பதைப் பார்!!
79.
இப்பொழுதெல்லாம்...
எப்பொழுதாவது தான்
உன்னை நினைக்கமுடியும்
என்ற போதிலும்
எப்பொழுதும்
என் நினைவிலிருக்கிறாய்
நீ…!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
***************************
--