பரதன் நவரத்தினம்யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,

“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .

நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .

காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .

“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “

“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "

“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்"

“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "

“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "

“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்"

“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல"

“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன " மனைவியிடம் உமா இறந்த செய்தியை சொல்லிவிட்டு கோண்டாவில் சந்தியை நோக்கி இறைச்சி வாங்க சயிக்களை உழக்குகின்றான் வசந்தன் .

காலை காற்று முகத்தில் வீச பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வந்துபோகின்றது வசந்தனுக்கு ,

வசந்தனுக்கு நம்பியுடன் தனக்கான உறவை நினைக்க வியப்பாக இருந்தது. ஆறாம் வகுப்பில் உரும்பிராயில் ஒன்றாக படித்தது ,பின் எட்டாம் வகுப்பில் யாழ் இந்துவில் படித்தது, பின்னர் பிரான்சில் சந்தித்து ஒன்றாக தண்ணி அடித்தது ,

84 ஆம் ஆண்டு தான் இயக்கத்தில் போய் சேர்ந்து புதுக்கோட்டை பயிற்சி முகாமிற்கு சென்ற போது நம்பி அங்கு கிணறு வெட்டிக்கொண்டு நின்றது ,இயக்கத்தில் இருக்கும் போது முதல் முதல் நம்பியுடன் தான் களவாக "கீதாஞ்சலி ' படம் உதயம் தியேட்டரில் பார்த்தது, இயக்கம் முரண்பாடுகளால் நிரம்பியிருந்த நேரம் ஓடி சென்ற தோழரை தேடி பம்பாயிற்கு வேறு சிலருடன் நம்பியை அனுப்பியதற்காக உமாவுடன் வாக்குவாதப்பட்டது.

கடைசியில் இலங்கை -இந்திய ஒப்பந்தத்துடன் மற்றைய அமைப்புகளுக்கு கிடைத்த அதிகாரம் போல எதுவித பங்கும் அதில் கிடைக்காமல் இந்தியாவால் கைவிடப்பட்டு கப்பலில் உமா உட்பட அனைத்து உறுப்பினர்களும் மன்னாரில் இறக்கிவிடப்பட்ட போது நம்பியுடன் தான் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் வசந்தன் .அதன் பின் அரசியலில் இருந்து ஒதுங்கிய வசந்தன் மக்கள் வங்கியில் வேலையும் எடுத்து ரேவதியை கல்யாணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகிவிட்டான் .
கிரேக்க கப்பலில் வேலை கிடைத்து நம்பியும் பத்துவருடங்கள் உலகம் எல்லாம் சுற்றி நல்ல பணத்துடன் நாடு திரும்பி ஊரெழுவில் செட்டிலாகி விட்டான் .
மன்னார், வவுனியாவில் இருந்து அரசியல் செய்த அவன் சார்ந்த அமைப்பு இரண்டு தடவைகள் மட்டும் சில உறுப்பினர்களை வெல்லவைத்தது .அதன் பின் உமாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் .

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை முதல் இரண்டு தடவைகளும் திலீபன் தலைமையிலான புலிகளின் அரசியல் கட்சியாலும் பின்னர் மூன்று தடவைகள் மாவையின் தலைமையிலான கூட்டணியாலும் ஆட்சி செய்யப்பட்டு கடைசியாக நடந்த தேர்தலில் மீண்டும் புலிகளின் அரசியல் கட்சி வெற்றியடைந்ததால் நம்பியின் கடைசி தம்பி திலீபன் தான் இப்போ மாகாண முதலமைச்சர் .

வெள்ளிகிழமை வேலைமுடிய வீடு திரும்பும் சந்தோசமே தனிதான் என்று மனதில் நினைத்தபடி காரை கராஜில் தரித்துவிட்டு வீட்டுக்கதவைத்திறந்தால் ,

“என்னப்பா இப்படி வெய்யில் விடாமல் அடிக்குது "

சமையலறையில் இருந்தபடியே மனைவியின் குரல் வருது .

தோட்டத்திற்கு தண்ணி அடிக்கசொல்லி மனுசி சொல்லாமல் சொல்லுது, உண்மையில் விடாமல் ஒருமாதமாக அடிக்கும் இந்த வெய்யில் டொராண்டோவிற்கு புதிதுதான் .

“அப்பா பிளீஸ் சாப்பிட்டிட்டு விட்டு கணணி முன் குந்தியிருந்து அவனவன் வேலை வெட்டி இல்லாமல் எழுதும் பதிவுகளுக்கு ஒரு விரலால் கீபோர்டை குத்திக்கொண்டு இருக்காமல் ஒரு நடை போட்டுவந்து தோட்டத்திற்கு தண்ணியை அடியுங்கோ "

மனுசிக்கு தெரியும் கணணி முன் குந்தினால் அசையமாட்டேன் என்று, எனவே வாரவிடுமுறையை சண்டையுடன் தொடங்காமல் மனுசி சொல்வதை கேட்பம் என்று நல்ல பிள்ளையாக அனைத்து அலுவல்களையும் முடித்துவிட்டு கணணி முன் வந்து குந்துகின்றான் வசந்தன் .

முப்பது வருடங்களுக்கு முதல் கனடா வந்த வசந்தன் வாழ்கையில் ஓரளவு செட்டிலாகிவிட்டான் .இரண்டு வளர்ந்த பெடியங்கள் மூத்தவன் ஆதவன் படிப்பை முடித்துவிட்டு வேலைசெய்கின்றான் சின்னவன் பிரணவன் பல்கலைக் கழகத்தில் கடைசி வருடம் படிக்கின்றான் . மனைவி ரேவதி வேலை வீடு பிள்ளைகள் என்று வாழ்பவள் .
கனடா வந்த புதிதில் கணனிக்கும் வசந்தன் செய்யும் வேலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லாததால் கணணியை கண்ணால் கண்டதுடன் சரி என்று இருந்தவனுக்கு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலையே நிரந்தராமக வைத்திருக்க அடிப்படை கணணி பற்றிய அறிவு தேவைப்பட்டது .வேலைக்கு தேவை என்று கணணியை தொட்ட வசந்தன் இப்போ கணணியுடன் தான் வாழ்க்கை . கணனியில் அரசியல் ,விளையாட்டு ,சினிமா ,இலக்கியம் என்று மெல்ல மெல்ல வாசிக்க தொடங்கி இப்போ முகபுத்தகம் ,யுடியுப் ,டுவிட்டர் என்று ஒரே பிஸி .பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் , தான் டிவி பார்க்கவும் நண்பிகளுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசவும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் காணும் என்று ரேவதியும் வசந்தனை தொந்தரவு செய்வதில்லை .

கணணி முன் குந்திய வசந்தன் முக புத்தகத்தை திறந்தால் பக்கம் பக்கமாக ஜெயமோகன் தடம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி பற்றி திட்டி வந்துகொண்டேயிருக்க வசந்தனுக்கு வெறுப்பேறி விட்டது. முகபுத்தகதை விட்டு வேறு தமிழ் இணையங்களுக்கு போனால் அங்கும் அதே பிரச்சனை தொடருது .புலம்பெயந்த அநேக தமிழர்கள் போல வசந்தனுக்கும் இலங்கை அரசியல் என்றால் காணும், மணிகணக்காக அவனவன் எழுதும் கருத்துகளை வாசித்துக்கொண்டே இருப்பான் .விடுதலை என்று தொடங்கிய விடுதலை போராட்டம் திசை மாறி யுத்தம் வருடக்கணக்காக இழுபட்டு தமிழர்கள் வாழ்வில் அனைத்துவித நாசங்களையும் அந்த யுத்தம் செய்துவிட்டு போய்விட்டது என்று முற்றிலும் நம்புவவன் வசந்தன் .

தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று எவ்வளவு அழிவுகள் வந்தால் என்ன எவ்வளவு வருடங்கள் சென்றால் என்ன என்று கோர யுத்தத்தை ஆதரித்தவர்கள் யுத்தம் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி தோல்வியில் முடிந்தபின் யுத்தம் விட்டுசென்ற அழிவுகளை மீள் கட்டியெழுப்புவதை விட்டு யுத்தம் தோற்றத்திற்கு இல்லாத காரணங்களை தேடுவதிலும் தம்முடன் உடன்படாதவர்களை திட்டி தீர்ப்பதிலுமே குறியாக இருப்பதை நினைத்து, எதிர்பார்ப்புகள் சாத்தியமாகாமல் போகும் போது இவ்வாறு ஏற்படுவது மனித இயல்புதான் என்று புரிதல் வசந்தனுக்கு இருந்தது . இருந்தாலும் இந்த ஜெமோ விடயம் சற்று ஒவராகவே பட வெறுப்பின் உச்சத்திற்கு போய் மனுசியின் அண்ணர் ஜெர்மனியில் இருந்து கொண்டுவந்த கொனியாக்கை பச்சையாக அடித்துவிட்டு படுக்கபோய்விட்டான் .

கட்டை டெனிம் காற்சட்டையுடன் பட்டன் பூட்டாமல் திறந்துவிட்ட சேர்ட்டை நுனியில் முடிந்து விட்டபடி சமந்தா காலால் மண்ணை எத்தியபடி வசந்தனை நோக்கி வருகின்றார் . அட சமந்தா பாட்டுடன் வருகின்றார் என்ன பாட்டு என்று தெரிந்தால் சேர்ந்தேபாடலாம் என்று யோசிக்க

“என்னை நினைச்சோ நித்திரை வராமல் கிடந்து கட்டிலில் உருளுகின்றீர்கள் "

“அது போன வருடம் இப்ப கீர்த்தி சுரேஷ் என்று வாயில் வந்ததை மெல்ல முழுங்கிவிட்டு இல்லை சமந்தா இது வேற பிரச்சனை "

“அப்படி என்ன பிரச்சனை "

“முகபுத்தகத்தை சும்மா பிரட்டி பார்த்துவிட்டு படுக்க போவம் என்றால் அவனவன் வந்து ஜெமோ வை திட்டி முகப் புத்தகம் நிரம்பி வழியுது "

“ஜெமோ ? யார் அது ?”

“உங்கட ஆள்தான் ,கமலின்ரை பாபனாசம் படத்திற்கு வசனம் எழுதியவர் "

“ அவரை யார் ஏன் திட்டுகின்றார்கள் "

"எங்கட ஆட்கள் தான் . இலங்கை தமிழர்கள் . படத்திற்கு வசனம் எழுதுவதை விட்டுவிட்டு எங்கட இனப்பிரச்சனைக்கு வசனம் எழுதினதால் வந்த பிரச்சனை "

“எனக்கு எதுவும் தெரியாது , முடிஞ்சா ஒரு பாட்டு சீனுக்கு உங்களோட ஆடலாம் "

“பாட்டு ஒண்டும் வேண்டாம் , நான் விடிய முகபுத்தத்தை திறந்தால் ஜெமோ பற்றிய பதிவு எனது கண்ணில படக்கூ டாது. அதுக்கு ஒரு உதவி செய்தால் காணும் "

“ம்ம்ம்ம்ம்ம் சொல்லுங்கோ "

“24 படத்தில சூர்யா உங்களை லவ் பண்ண ஒரு கடிகாரத்தை வைத்து நேரத்தை முன்னால பின்னால ஓடவிடுவார் அல்லோ அந்த கடிகாரத்தை சூரியாவிடம் இருந்து மெல்ல அடிச்சு கொண்டுவந்தா காணும் "

“அது என்னால ஏலாது ,வேணுமென்றால் என்ன நேரத்திற்கு மணிக் கூ ட்டை மாத்தவேண்டும் எண்டு சொல்லுங்கோ சூரியாவிற்கு தெரியாமல் மெல்ல மாத்திவிடுகின்றேன் . இது ஒருமுறை மட்டும் தான் எனவே நேரத்தை சரியா சொல்லுங்கோ "

“ஒரு செக்கன் நில்லுங்கோ சொல்லுறன் "

ஜெமோ எப்போ ஈழப்பிரச்சனையில் வாயை திறந்து முதன் முதலில் வாங்கி கட்டிகொண்டார் என்று யோசிக்க ,இந்தியன் ஆமி இலங்கைக்கு போய் செய்த வெறியாட்டத்தை நியாயப்படுத்தியதுதான் நினைவு வருகின்றது வசந்தனுக்கு ,

சிங்கள அரசு தமிழர்களுக்கு எதையும் தராது என்ற நிலை தொடர இலங்கைக்குள் தனது மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்த இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைக்காக என்று தமிழர்களை பகடைகாய்களாக்கி முதல் அடியை வைக்க முனைந்த அந்த காலகட்டம் . சிங்கள அரசு ஓரளவு அடிபணிந்த அந்த நேரம் தான் இலங்கை தமிழர்களுக்கான ஒரு விடிவும் கிடைத்திருக்கவேண்டிய காலம் அது .

1 - "On April 2nd., 1985 Customs officials seized a container as big as a train car that was unloaded from a ship at the Madras Port. When they examined it they were in for a rude shock. It contained at least 1,400 rifles of 1945 model, 300 sten guns, 5 wireless sets of Japanese origin and an electronic radio set with an amplifier. The Captain and the crew had no idea about the contents in the container, which had been marked "used newspapers". The arms bought for 3 lakhs US Dollars from a Taiwanese Arms agent were meant for the PLOT."

நேரத்தை மாற்றி இந்த ஆயுதங்களை பிடிபாடாமல் செய்யாலாமா ? ஏற்கனவே உள்முரண்பாடுகள் நிரம்பி வழியுது .ஆளுக்கு ஆள் சுடுபடுவது மாத்திரம் இல்லை மற்ற இயக்கங்களையும் அழிக்க முனைந்திருப்பார்கள் . இவர்களை நம்பி நேரத்தை மாற்ற சமந்தாவை கேட்க முடியாது .

2- Thimpu Talks In July–August 1985
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
recognition of the Tamils of Ceylon as a nation
recognition of the existence of an identified homeland for the Tamils of Ceylon
recognition of the right of self determination of the Tamil nation
recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils of Ceylon

நேரத்தை பின் கொண்டுபோய் இந்த பேச்சுவார்த்தையை வெற்றிபெறவைக்கலாம் ஆனால் இது தமிழர்களுக்கான தீர்வு இல்லை இது தமிழர்களுக்கான தீர்வின் அடிப்படை நியாயங்கள் மட்டுமே .இதன் பின்னரும் கூ ட இந்திய ஆர்மி இலங்கை செல்ல வேண்டி வந்திருக்கும் . இதுவும் வேண்டாம் .

3 - July 1987 Delhi
இலங்கை -இந்திய ஒப்பந்தம் தயார். சென்னையில் அனைத்து இயக்க பிரதிநிதிகள் ,கூ ட்டணி தலைவர்களுக்கு ஒப்பந்தந்ததின் சாரம் தனித்தனியே கொடுக்கப்படுகின்றது .அனைவரும் தமக்கு திருப்தி என்கின்றார்கள் .நாட்டில் இருக்கும் பிரபாகரன் ,சென்னையில் இறங்கி தமது பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு டெல்கியில் பாலசிங்கத்துடன் அசோகா கொட்டேலில் நிற்கின்றார் .இது இலங்கை -இந்திய ஒப்பந்தம் தங்கள் தரப்பு சம்பந்த படாத தீர்வு எதிலும் தனக்கு சம்மதம் இல்லை என்கின்றார் . எம்ஜிஆரை இந்திய தரப்பு டெல்கிக்கு வரவழைத்து பிரபாகரனை இணங்கவைக்க முயற்சித்தும் பிரபாகரன் தனது முடிவை மாத்த மறுத்துவிட்டார் . எவரது ஒப்புதல் பற்றியும் தனக்கு அக்கறையில்லை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு அமுலுக்கு வரும் என்று ராஜீவ் அறிவிக்கின்றார் .

இதுதான் சரியான நேரம் . 25 July 1987.

சமந்தாவிடம் நான் நேரத்தை சொல்ல கனவு சமந்தா மறைந்து  விட்டார் .

டெல்லி அசோகா கொட்டேல் லோபியில் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி வலதுகையால் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் கையையும் இடது கையால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையை உயர்தியபடியும் நிற்கின்றார் .

July 29 1987 வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை -இந்திய ஒப்பந்தம் நாளை இலங்கையில் கையெழுத்தாகின்றது .

பத்மநாதன் தலைமையில் பன்னிரெண்டு அங்கத்தவர்கள் கொண்ட வடக்கு -கிழக்கு இணைத்த ஒரே இடைகால நிர்வாகம் .இரண்டு முஸ்லிம்களை உள்ளடக்கி ஏழு விடுதலைப்புலிகள் ,தமிழர் விடுதலை கூ ட்டணி மூ ன்று பேர்கள் .ஈ பி ஆர் எல் எப் இரண்டுபேர்கள் .தமிழ் நாட்டில் இருந்து அனைத்து இயக்கங்களும் அகதிகளும் இலங்கைக்கு கப்பலில் அனுப்பபடுகின்றார்கள்.

நேரத்தை மாற்றி இலங்கை பிரச்சனையை தீர்த்து வைத்ததற்கு நன்றிகள் சமந்தா .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்