அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.
இது தொடர்பாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் வந்த 25 கோடியை ஒரே நாளில் தன்னுடைய சொந்த விளம்பர செலவிற்கு 'ஓராண்டு சாதனை நூறாண்டு சாதனை' என்று பொய்யான செய்தியை அனைத்து ஊடங்களும் வெளியிட்டு பணத்தை வாங்கி தன்னுடைய கல்லாவை நிரப்பி பத்திரிகை தர்மத்தை மீறியிருக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதாரண மக்களின் 25 கோடியை கொள்ளையடித்த தமிழக முதலமைச்சர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் நிச்சயம் மனம் வருந்துவார் என நம்புகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
ஊடகங்களே, மனசாட்சிப் படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் மக்களின் 25 கோடி வரிப்பணத்தை ஒரே நாளில் தின்று செய்த பாவத்திற்கு நான் ஒரு பரிகாரம் சொல்கிறேன். கேளுங்கள். இந்தப் பதிவைக் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேர்காணல் காணுங்கள். தங்களின் ஊடங்களில் (வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழ் மற்றும் சிற்றிதழ்) வெளியிடுங்கள். நீங்கள் அனைவரும் செய்யப் போகும் இந்த மாபெரும் உதவியால் எத்தனையோ ஏழை எளிய மக்களின் குடும்பம் நல்வாழ்வு பெறும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள் தோழர்களே. இந்தப் பதிவை படிக்கும் தோழர்கள் (வெளிநாடாக இருந்தாலும் சரி) அருகிலுள்ள ஊடக அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தப் பதிவில் சொன்ன செய்தியை தெரியப்படுத்தி ஊடங்கள் வாயிலாக வெளியிடச் சொல்லுங்கள். நாம் கொடுக்கும் அழுத்தத்தில் தன்னுடைய தவறை ஆசிரியர் தேர்வு ஆணையம் ஏற்றுக் கொள்ளும். பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் உங்கள் அனைவரையும், உங்கள் உதவியையும் பெரிதும் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.
மனித நேயம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற பதிவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பெருந்தன்மையான மனம் வேண்டும். அந்த நல்மனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
கீழ்க்கண்ட நியாயங்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நான் முன்வைக்கிறேன்.
1. 'அரசாணை இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை' என பொறுப்பில்லாமல் காட்டுமிராண்டித் தனமாக பதிலளித்து அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தின்மீதும் அங்குள்ள ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. வெளிப்படையான இறுதிப் பட்டியல் வெளியீடு இல்லை. திரைமறைவில் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாகத் தெரிகிறது.
3. ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வின் வினாத்தாளின் இரண்டாம் பக்கத்தில் 'சமமான பட்டப்படிப்பு' என அவர்களே சொல்லியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
4. அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் இறுதிப் பட்டியலில் பெயர் வெளியிடாமல் இழுத்தடிக்கும் ஆசிரியர் தேர்வு ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான சரியான தெளிவான விளக்கமும் ஆசிரியர் தேர்வு ஆணைய ஊழியர்களிடம் இல்லை.
நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்திருக்கிறேன், நானும் ஒரு கவிஞன், எழுத்தாளன் என்ற முறையில் எழுத்தின் பலமும் எழுதுகோலின் பலமும் எனக்கு என்னவென்று நன்றாகவே தெரியும்.
இலக்கிய இதழ் ஆசிரியர்களே, ஒரு வேண்டுகோள். தாங்கள் சிற்றிதழ்களாக இருந்தாலும் சரி. இலக்கியம் = இலக்கு + இயம். ஒரு இலக்கை எடுத்து இயம்புதல். சமுதாய மாற்றம் என்ற ஒரு இலக்கை எடுத்து இயம்புங்கள் ஊடக அன்பர்களே.
தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டிலேயே நியாயமான உரிமைகளைப் பெற ஆள்பலமும் இல்லாமல் பணபலமும் இல்லாமல் அதிகார பலமும் இல்லாமல் தன்னந்தனியே போராட வேண்டியிருக்கிறது. வேதனையோடு வாழ வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டை ஒரு தமிழனோ தமிழச்சியோ ஆண்டிருந்தால் தமிழர்களின் வலி வேதனை புரிந்திருக்கும். தற்போது அப்படி இல்லை. காசுக்காக நக்கிப் பிழைக்கின்ற கூட்டம்தான் அதிகம்.
மனித நேயம் உள்ளவர்கள், இந்தப் பதிவைக் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேர்காணல் செய்ய விரும்புகிறவர்கள், என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.