அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் (நினைவு தினம்: டிசம்பர் 24) விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. இன்றைய தலைமுறைகூட அவரை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றது. இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று, மக்கள் அவர்மேல் அன்பு வைத்திருந்தார்கள்; வைத்திருக்கின்றார்கள். அவரைப் போலவே அவரது திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபல்யமானவை. இம்முறை அவர் நினைவாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படப்பாடல்களில் சிலவற்றை உங்களுக்கு வழங்குகின்றோம். கருத்தாழமிக்க அவரது திரைப்படப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் புத்துணர்ச்சியினை, வாழ்வு மீதான நம்பிக்கையினை ஊட்டும் வல்லமை மிக்கவை. சிந்திக்கத் தூண்டுவன. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் அவருக்காக எழுதிய பல பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் சில கீழே:
1.
சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண்: சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு
அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்
கையும் காலும்தானே மிச்சம்
ஆண்: இப்போ காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
காலம் இருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சுரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
பெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
பெண்: மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்
ஆண்: அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!
பெண்: பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
பெண்: வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண்: இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
பெண்: நல்லவர்கள் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
ஆண்: நாளை வருவதை எண்ணி எண்ணி
நாழிக்கு நாழி தெளிவாரடி
பெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
ஆண்: பட்ட துயர் இனி மாறும்
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்!
நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
2.
திருடாதே! பாப்பா திருடாதே!
திரைப்படம்: திருடாதே!
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!
3.
தூங்காதே தம்பி தூங்காதே
திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
திரைப்படம்:நாடோடி மன்னன்
இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
4.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
திரைப்படம்: அரசிளங்குமரி
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்தைதையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா
தனிஉடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தனிஉடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே
5.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
பாடல்: கண்ணதாசன்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
6.
நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
திரைப்படம்: எங்க வீட்டுப் பிள்ளை
பாடல்: வாலி
நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
சில திரைப்படக் காட்சிகள் ...
1. எம்ஜிஆரும் மனைவி வி.என்.ஜானகியும் 'மோகினி' திரைப்படத்தில்..
2. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில்..