பதிவுகள் முகப்பு

சண்டிலிப்பாயின் கலைச்சங்கமம் - 2026! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
17 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முதலில் நடந்த மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் மன்றத் தலைவர் திரு. அஜய் மகேந்திரன், திருமதி மகேந்திரன், திருமதி தேவகி ராஜநாதன், பிரதம விருந்தினர் திருமதி வாசுகிதேவி மகாதேவன், டாக்டர் வரகுணன் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இளம் பாடகி செல்வி. கிஸோரி ராஜ்குமாரினால் பாடப்பெற்றன. அடுத்து அமைதி வணக்கம் இடம் பெற்றது.

அடுத்து திருமதி லாசந்தி ராஜ்குமாரின் இராகாலயா பைன் ஆட்ஸ் மாணவிகளின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் பாடல்கள் இசைக்கப்பெற்றன. இந்த இசை நிகழ்ச்சியில் சரண்யா ராகவன், தர்சனா சக்திதரன், ஹர்சினி ஸ்ரீஸ்கந்தகுமார், விதாரா குலசோதி, ஆரணி மோகனதாஸ், கிஸோரி ராஜ்குமார், ராஜ்பவன் ராஜ்குமார், திவ்ய நரேந்திரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

நிர்வாகக் குழுவின் சார்பாக, அமிர்தராஜா தேவதாசனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஈசா பார்கவி செல்வகுமாரன், வித்தகி சபேசன் ஆகியோரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து பிரிதம் சுரேசனின் பிரபல பாடல்களின் ட்ரம்பெட் இசைத் தொகுப்பு இடம் பெற்றது. அடுத்து லக்ஸன் கெங்காதரன், மாதங்கி திருஞானசம்பந்தன் ஆகியோரது இசை இடம் பெற்றது. தொடர்ந்து டாக்டர் வரகுணன் மகாதேவனின் ஸ்ராண்டப் மெடிசின் நிகழ்ச்சி இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

முனைவர் சு.சோமசுந்தரியின் ‘சில்லாட்டை’ சிறுகதை நூல் ஒரு பருந்துப்பார்வை! - முல்லைஅமுதன், இலண்டன்-

விவரங்கள்
- முல்லைஅமுதன், இலண்டன்-
நூல் அறிமுகம்
17 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.

தெளிவான சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனுபவ வெளிப்பாடுகளை சிறப்புற சிறுகதைகளாக்கித் தருவதில் வல்லமையுள்ளவராகத் தெரிகிறார். அலுவலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட சங்கடங்களை அத்துமீறல் கதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் எனக்குப் பிடித்தது பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இருப்பது. கார்குழலி உதாரணம். அதே போல ஒரு சராசரி அப்பாவின் மனநிலை, அவரின் இழப்பு, அவர் சார்ந்து குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றிச் சொல்லிச் செல்கிறது அப்பா கதை. மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமானது.. ஒரு தாய்க்கு கொள்ளி போடாத மகன்..மருமகனையே கொள்ளிப் போடச்சொல்லும்உறவுகள்...யதார்த்தமானகதை. நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் அனுபவங்களின் தொகுப்பாகவும் இவரின் கதைகள் அமைந்துள்ளன. ஈரமற்ற மனித மனங்களைக் காணும்போது தனக்குள் துடிக்கவும், ஏக்கமுறவும் ஒருத்தி...தாகத்துக்கு தண்ணீர் தராமல் நின்ற மக்களின் நடுவே இறந்துபோன உயிரைப் பற்றிப் பேசும் கதையாய் ஈரம் கதை எழுதப்பட்டிருக்கிறது.

உடைந்து போன கலசங்கள் நல்ல கதை. வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரது வாழ்வுநிலை பற்றிப் பேசும் கதை ஏகாந்தம்... உண்மைக்கதை போன்றுள்ளது. கதையை நகர்த்தும் பாணியும் மனதில்ஏதோ ஒன்றை உணர்த்திச் செல்கிறது. சொரியலாக ஆங்காங்கே பிரசுரமான கதைகளை வாசித்திருந்தாலும், தொகுப்பாக இணைத்து வாசிக்கையில் கதைகளின் சிறப்பு உணரப்படும் என்றே கருதுகிறேன். கட்டுரை, விமர்சனங்கள் என இவர் எழுதியிருந்தாலும் கதைகளில் காட்டும் ஆர்வம் நம்மையும் உடன் இருத்தி அழைத்துச்செல்லும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் எளிமையான உரைநடை, கதைசொல்லும்பாங்கு 'இது எனது கதை.. என்னை அல்லது எங்களைப் பற்றிய கதைகள் என ஒவ்வொரு கதைகளும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அவைதான் கதாசிரியருக்குக் கிடைத்த கிடைக்கப்போகும் வெற்றியுமாகும். தான் காணும் மாந்தர்களை உள்வாங்கி அசைபோட்டு, அசைபோட்டு பாத்திரங்களாக்கி கதைகள் எழுதும்போது அவைகள் அல்லது அக்கதாபாத்திரங்கள் நம்முள் ஒருவராக மாற்றி பாதிப்பையும் நமக்குத் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது. சமகால வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துத் தந்திருக்கிறார்.

மேலும் படிக்க ...

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  அமரர் ஈழநாதன் -

எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நூலகம் நிறுவனத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இப்பதிவு துணை புரியும். பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்து கொள்கின்றேன்.  இப்பதிவுகள் நூலகம் நிறுவனத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதால் முக்கியமானது. நூலகத்தின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட இப்பதிவு உதவியாகவிருக்கும்.  மேலும் அமரர் ஈழநாதனின் ஆரம்பக் காலத்துப் பங்களிப்புகளை மறந்து விட முடியாது. இப்பதிவுகள் அவரது பங்களிப்பையும் எடுத்துக்காட்டும்.

1. பதிவுகள் - மே 2006 இதழ் 77  -  நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்! - https://www.geotamil.com/pathivukal/noolagam_forum_discussion.html

2. பதிவுகள் - 15 ஜூலை 2020  - வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -     - வ.ந.கிரிதரன் - 

தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது  நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால்  நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.

மேலும் படிக்க ...

ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
15 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுநா இதழில் (ஆகஸ்ட் 9, 2025)  வெளியான கலாநிதி சிவா  தியாகராஜாவின் 'யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1' என்னும் கட்டுரையில் நல்லூர் நகர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும்." (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107). இங்குள்ள 'யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.' என்னும் கூற்று கலாநிதி சிவா தியாகராஜாவின் கூற்று என்று கருதுகின்றேன். 

கலாநிதி சிவா தியாகராஜாவின் மேற்படி கூற்றிலிருந்து நல்லூர் பற்றி முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ குறிப்புகள் எதுவும் இல்லை என்னும் கூற்று உண்மையா?  இதற்கான விடையைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் சிந்தனை இதழில் எழுதிய 'ஈழமும் இந்து மதமும் பொலனறுவைக் காலம் (1200 -1250)' என்னும் கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்! - தகவல்: நடேசன் & கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் & கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
11 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
11 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாள்  - மே 24, 2026  | இடம் -  Scarborough Civic Centre  - Council chambers, 150 Borough dRIVE, Toronto,ON M1P 4N7 | நேரம் - பிற்பகல்  2.00 மணி 


யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எழுதிய 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ' என்னும் நூலிற்கான வெளியீட்டு நிகழ்வு  மே 24, 2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு , ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் நடைபெறவுள்ளது.  கல்விக்கூடங்களின் முன்னாள் மாணவர்கள்  அக்கல்லூரிகளின் சொத்துக்களே. அவர்கள் பெருமை மிகு சாதனைகள் அக்கல்விக்கூடங்களின் சாதனைகளே.  மயூரநாதனின் இந்த வரலாற்று நூலானது அவ்வகையில் முக்கியமானதொரு சாதனை.

தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் நானூறு ஆண்டு வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க ...

தள்ளுவண்டிலைத் தவிர்த்தல்! - ஆங்கிலத்தில்: சிவகாமி விஜேந்திரா | தமிழில் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஆங்கிலத்தில்: சிவகாமி விஜேந்திரா | தமிழில் - ஶ்ரீரஞ்சனி -
சமூகம்
10 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, ​​சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.

எங்களுடைய மகன் பிறந்தபோது, எங்களின் கனேடிய நண்பர்களைப்போல தள்ளுவண்டியைப் பயன்படுத்தாமல், எல்லாவிடங்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்லும் அதே தமிழ் மாதிரியையே நானும் என் கணவரும் பின்பற்றத் தொடங்கினோம். ஆனால், அவனை வெறுமனே கைகளில் காவுவதற்குப் பதிலாக, cloth baby carrier ஒன்றில் அவனை நாங்கள் சுமந்தோம். எங்கள் இருவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அது சுலபமானதாவும், வசதியாகவும், இயல்பானதாகவும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். சுமந்துசெல்லும் அல்லது இறுகப்பிணைந்திருக்கும் பாலூட்டிகளாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, எல்லாநேரங்களிலும் எங்களின் உடலுக்கு அருகில் இருக்கவேண்டும் என்ற உள்ளார்ந்த தேவை எங்களின் குழந்தைகளுக்கு இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூக்கி வைத்திருப்பதைக் குழந்தைகள் விரும்புவது இயல்பானதே — அத்துடன், அவர்களைத் தூக்கிவைத்திருப்பதற்கு நாங்கள் விரும்புவதும் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

மேலும் படிக்க ...

திக்குவல்லை கமால் சிறுகதைகள்: கலங்காத வாழ்வின் மெய்யியல்! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
ஆய்வு
08 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


திக்குவல்லை கமால் (முகம்மது ஜமால்தீன் முகம்மது கமால்; 1950) எனக்கு பிடித்தமான எழுத்தாளர். ஒரே வேகத்தோடு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர். வாழ்வியலின் அச்சொட்டான படப்பிடிப்பு அவரது படைப்புக்கள். குறிப்பாக அவரது சிறுகதைகள் நிஜவாழ்வின் குறும்படங்கள். 2025 ஐப்பசி இல் ஜீவநதி (கலையகம், அல்வாய்) சாதனை நூல் வரிசையில் (ஓரு மாதத்தில் 31 நூல்கள்) வெளிக்கொணர்ந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு ‘மாடி வீடும் ஒரு தென்னை மரமும்’. க.பரணீதரன் நேர்த்தியாக வடிமைத்திருக்கும் இப்பிரதியின் பக்கங்கள் 68. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இருக்கின்றன. உயிர்பான இந்த பன்னிரண்டு உரைப்படைபுகளும் மிக விரிவாக விமர்சன பகுப்பாய்வுக்கு உட்படத்தக்கது. அதனை இன்னொரு ஆய்வுக்கு வைத்துவிட்டு, ஒரு சுருக்க நவீன வாசிப்பு இங்கு முன்வைக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியப் பரப்பில், திக்குவல்லை கமாலின் படைப்புகள், உள்ளூர் வாழ்வின் யதார்த்தங்களையும், இஸ்லாமியப் பண்பாட்டுக் குறியீடுகளையும் சுமந்து நிற்கும் தனித்துவமான இலக்கிய வெளியைக் கட்டமைக்கின்றன. “மாடி வீடும் ஒரு தென்னை மரமும்’ என்ற 12 கதைகளின் தொகுப்பாய்வு, இந்த இலக்கிய வெளியில் புதைந்துள்ள அதிகாரம், வர்க்கம், இன அடையாளம், மற்றும் தனிமனித அறவியல் ஆகியவற்றின் சிக்கலான அடுக்குகளை வெளிக்கொண்டுவரும் நவீன தேடலாக அமைகிறது.

திக்குவல்லை கமாலின் சிறுகதைகள், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலைத் துல்லியமாகப் பதிவுசெய்தாலும், அவற்றின் ஆழத்தில் அதிகாரம் (Power), சமூகக் கட்டமைப்பு (Social Structure), வர்க்கம் (Class), மற்றும் இன அடையாளம் (Ethnic Identity) ஆகிய நவீன கருத்தாக்கங்கள் பொதிந்துள்ளன.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுயசரிதை பாங்கில் அமைந்த 'ஒரு விதையின் இருமலர்கள்' – 'Two Blooms of One Seed' என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது. நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர் எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன். கவிதைத்துறையில் ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும் கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால், இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்கு சிட்னியில் வதியும் கவிஞர் த. நந்திவர்மன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சரநாதன், தனது இளமைக்காலம் முதல் தீவிர வாசகராகவும், கலை இலக்கியங்களில் ஆர்வம் மிக்கவராகவும் விளங்கியவர். பாடசாலைக்காலத்தில் மட்டுமன்றி, கல்லூரியில் பிரவேசித்த பின்னரும், அதன்பிறகு இலங்கை பல்கலைக்கழகத்திற்கு ( பேராதனை பல்கலைக்கழகம் ) பிரவேசித்த பின்னரும் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டவர்.

பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற வேளையில் யுகம் என்ற இதழில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது சமகால மாணவர்தான் மெல்பனில் வதியும் கலாநிதி எஸ்.வி. காசிநாதன். இவரே இந்நூலுக்கு ஆங்கிலத்தில் முன்னுரையும் வழங்கியிருக்கிறார். (Dr S V Kasynathan அந்நாட்களில் இள நிலை விரிவுரையாளர் - Assistant Lecturer in Philosophy)

ஒருவரது சுயசரிதையின் மூலம், அவரது வாழ்க்கையை மாத்திரமின்றி, வாழ்வியல் அனுபவங்களையும் , அவர் கடந்து வந்த பாதையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம். அத்துடன் அகவயமான - புறவயமான பக்கங்களையும் தரிசிக்க முடியும்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் - 'நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்'. இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5. AI

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
கலை
05 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் - 'நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்'.  இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5. AI. டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி.

 பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=e6uttZwUiWk

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் கே. டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் - ஓர் அறிமுகக் குறிப்பு! - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
நூல் அறிமுகம்
05 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1.

அதிகாரம் யார் யாரின் கைகளில் இருந்திருக்கின்றதோ அவர்கள் காலங்காலமாக சாமானிய மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பதை காலந்தோறும் எழுதப்பட்டிருக்கின்ற சமூக வரலாறுகள் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு வண்ணங்களிலும் வெவ்வேறு வடிவங்களிலும் இது தொடர்ந்து கொண்டிருப்பதை ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் யாவரும் அறிவர்.

இந்த வரலாற்றுத் தொடர்ச்சியை பஞ்சமர் வரிசை நாவல்களை எழுதிய மக்கள் எழுத்தாளர் டானியல் பதிவுசெய்து வைத்திருக்கிறார். தலைமுறை தலைமுறையாக சாதியப் பிரச்சினைகளால் ஒடுக்குதல்களுக்குள்ளான மக்களின் வாழ்வை எழுதியதால் சமகாலப் பிரச்சினை குறித்து எழுதவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது,

‘’சமகாலப் பிரச்சினையிலிருந்து விலகி நான் மிகவும் முற்பட்ட காலக் காரியங்களில் எனது பேனாவைப் பிரயோகிக்கிறேன் என்று சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். சமகாலப் பிரச்சினை என்று தமிழர்களுக்குள்ளேயே இன்றுவரை நடைமுறையில் இருப்பவைகளைச் சமகாலப் பிரச்சினைதான் என்பதை வெளிக்கொண்டுவர இந்தப் பஞ்சகோணங்களுடன் பஞ்சமர் வரிசையில் ஐந்து நாவல்கள் பிறந்துவிட்டன. ஒரு அடிக்கருத்தை வைத்து இதுவரை இப்படிப் பிறப்பிக்கும் என்னிடம் இன்றைய தமிழர் பிரச்சினையை வைத்து எழுதும்படி, இங்கு வற்புறுத்துபவர்கள் இலங்கையில் உள்ள மற்றைய படைப்பாளிகளைப் பார்த்து இப்படிக் கேட்காதது விந்தையானதல்ல. ஏனெனில் இவர்கள் விரும்புவதெல்லாம் தாழ்ந்தவர்களின் - வஞ்சிக்கப்பட்டவர்களின் - அன்றாடங் காய்ச்சிகளின் - அடிமைப்பட்டவர்களின் - வயிற்றுச் சோற்றுக்காக ஆலாய்ப் பறப்பவர்களின் பக்கம் நின்று எழுதுவதிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதுதான். இவர்கள் சொல்வதுபோல, இன்று காண்பவைகளை இன்றே எழுத்தில் கொடுப்பதற்கு நான் ஒரு பத்திரிகை நிருபர் அல்ல. சரியும் பிழையும் நடைமுறையிலும் தீர்க்கமான பார்வையிலும்தான் தெளிவாகப் புலனாகும்.'’ (கே. டானியல், பஞ்சகோணங்கள், முன்னுரை ப.5)

மேலும் படிக்க ...

நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'பிரத்தியேகக் காட்சி - ஏழு நாடகங்களும் பதிவுகளும்' நூல் பற்றிய இரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
நூல் அறிமுகம்
04 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவும் சிலருக்கு உள்ளூறும் உணர்வாகவும் இணைந்து வாழ்வுடன் பிரிக்க முடியாததாக உள்ளது. இவ்வாறான ஒரு உண்மைக் கலைஞராக, வாழ்வியலை ஆழ்ந்து படித்து அதிலிருந்து சிறந்த அனுபவங்களை உளம்கொண்டு நாடகங்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர் திரு.க. பாலேந்திரா அவர்கள். 

1970 களில் பொறியியல் கற்கை நெறியுடன் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் ஆரம்பமான அரங்க வாழ்க்கை , பல தடங்கல்களைக் கடந்ததுடன் தாயகத்திலும் , புலம்பெயர்ந்த நிலத்திலும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. நாடகமும் அரங்கும் அவரது உயிரோடும் உணர்வோடும் கலந்தவை என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர்.

1978 இல் யாழிலும் கொழும்பிலும் செயற்பட்ட அவைக்காற்று கலைக்கழகத்தின் முயற்சிகள், புலம்பெயர்ந்து சென்றபின் இவரால் லண்டன் நகரிலும் தொடரப்பட்டன. நாடகத் தயாரிப்புகளின் இயக்குனராகவும் நடிகராகவும் இன்றுவரை தொடர்ந்து கலைப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். புலம்பெயர் வாழ்வில் கலைசார்ந்த ஒருக்கிணைப்பை கட்டி எழுப்பியதுடன் இளைய தலைமுறையினின் நாடக ஆர்வத்திற்கும் வழிகோலியுள்ளார். 

உலகத்தரம் வாய்ந்த நாடகங்களைத் தழுவியும், தாயகம் சார்ந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகளை உள்ளடக்கியும் நாடகப் பிரதியாக்கங்களை அமைத்ததுடன்,  மேடை மற்றும் நெறியாள்கை செய்பவராகவும் நடிகராகவும் வெற்றி கண்டவர் இவர். சக கலைஞர்களுக்கான முன்னேற்றத்தையும்,  நாடகத் துறைக்கான நவீன வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயங்கியவர். 

மேலும் படிக்க ...

அமெரிக்கா & ஈரான் வளைகுடாப் போர் நிலைமை பற்றிய ஓர் அலசல்! - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
04 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமெரிக்கா நினைத்தால் எதனையும் செய்யலாம். உற்பத்தி சங்கிலிகளையும், விநியோக பாதைகளையும் ஒருங்கே சிதைத்து மூடலாம். பொருளாதார தடைகளை விதிக்கலாம். முழு உலகத்தையும் பட்டினி போட்டு அலைய செய்யலாம். கடற் பாதைகளை, கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யலாம்.

காரணம்: பதினொரு பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பல்களை அது வரிசையாக சொந்தம் கொண்டாடுகின்றது. மேலும், 80 நாடுகளில், கிட்டத்தட்ட 750-800 படைத்தளங்கள். 1.33 மில்லியன் யுத்த துருப்பினர். பின், 11,000 விண்வெளி செய்மதிகள். ஆனால், இவை அனைத்தும் நேற்றைய செய்தியானது. இன்று உலகம் மாறி வருகின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு கடன் 38 ட்ரில்லியன் டாலரை தாண்டி உள்ளது என்பதும், தொழிநுட்பங்களில், சீனா-ரஷ்யா-இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவை விஞ்சி உள்ளது என்பதும், டாலரின் சரிவும், BRICS  போன்ற அமைப்புகளின் உதயமும் இன்றைய உலகின் முகத்தை புதிதாய் வரைவதாய் இருக்கின்றன. இச்சூழ்நிலையிலேயே, ஈரானிய போரும் தோன்றியுள்ளது.

தனது மூன்று விமானம்தாங்கி கப்பல்களை, ஈரான் நோக்கி திசை திருப்பியும், இஸ்ரேல் என்ற மத்திய கிழக்கின், பெயர் போன காட்டுமிராண்டி நாட்டை (காசா புகழ் இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்துமாறும், மக்களை குண்டு வீசி கொலை செய்யுமாறும், ஊக்குவித்தும் அதே பாணியில், தானே முன்நின்று தாக்குதல்களை தனிப்பட நடத்தி, கொமெய்னி உள்ளிட்ட 40 முக்கியஸ்தர்களை கொன்றொழித்தும், 600க்கும் மேற்பட்ட பிஞ்சு பள்ளி சிறார்களை குண்டெறிந்து அழித்தும் - அது ஆட்டம் காட்டினாலும், ஈரான், இன்னும் அமெரிக்காவிடம் மண்டியிட்டதாக தெரியவில்லை.

மேலும் படிக்க ...

மே 1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
01 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே  1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் -  'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' 

வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'   பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=A9qVjj6YZLU


உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

உழைப்புக்கு உரிய  ஊதியம்  வழங்குவோம்.
உழைப்பவர் உயர்வே உலகத்தின் உயர்வாம்.
உண்மையிது உணர்வோம். செயற் படுவோம்.
மண்ணில் மலர்ச்சியை ஏற்றி வைப்போம்.

உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே  உலகத்தின்  இயக்கமாம்.

உழைக்கும் பெண்களின்  உரிமைகளை வழங்குவோம்.
உழைப்பவர் தொழிலை நிரந்தரம் ஆக்குவோம்.
வர்க்க ஒற்றுமையை உருவாக்கி வைப்போம்.
சொர்க்கம் அதுவேயென உணர வைப்ப்போம்.

மேலும் படிக்க ...

காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறைமுக நகரே யாழ்ப்பாணப்பட்டினம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
30 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]


1. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!

யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.  இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத்  தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

.கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. "...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்". ('யாழ்ப்பாண இராச்சியம்', கலாநிதி சி.க.சிற்றம்பலம்).

மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநேயே' பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்:

மேலும் படிக்க ...

உளவியல் அணுகுமுறையில் எஸ்.ஜே. சிவசங்கரின் 'நிழல்'! - முனைவர் சி.தேவி -

விவரங்கள்
- முனைவர் சி.தேவி -
ஆய்வு
29 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. 


முன்னுரை

இலக்கியமும் உளவியலும் இணைத்து ஓரு சேரப்பார்க்கத்தக்க அறிவுத்துறையாகும், இலக்கியப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உளவியல் கோட்பாடுகள் மூலம் ஆராயத் திறனாய்வாளர்கள் முற்படுகின்றனர். படைப்பாளனின் மனநிலை, உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி ஆராய உளவியல் உதவுகிறது. மேலும், இலக்கியப் படைப்புகளின் மூலம் மனித நடத்தைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்.  எனவே எஸ்.ஜே. சிவசங்கர் அவர்களின் “ கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும்” என்ற சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள படைப்பான 'நிழல்' எனும் சிறுகதை உளவியல் பார்வையில் அணுகப்பட்டுள்ளது.

இலக்கியமும் உளவியலும்
படைப்பாளியின் உளவியல்
படைப்பின் உளவியல்
உளவியலைக் கருவியாகப் பயன்படுத்துதல்
சமூக மற்றும் வாழ்வியல் கூறுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஒப்பிலக்கியத்தின் ஒரு பிரிவு என்ற ஐந்தின் அடிப்படையில் இலக்கியங்கள் உளவியல் சார்ந்து ஆயப்படுகிறது.

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
29 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கட்டுரையாளர்: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 


முன்னுரை

தமிழ்மொழி எளிமையானது. இனிமையானது. தொல்காப்பியம் உள்ளிட்ட பல இலக்கணநூல்களைத் தன்னகத்தே கொண்டது. சங்கஇலக்கியம் முதலாக பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டது.பல செய்திகளை உள்ளடக்கியது என்றாலும் சில செய்திகளைக் கம்பரே தம் இராமாயணத்தில் முதன் முதலில் கூறியுள்ளார். அவற்றுள் சுவையான சில செய்திகளை மற்ற இலக்கியங்களில் காணப்படாத, கம்பரே கூறிய செய்திகளைக் கண்டு நாம் வியப்போம்.கம்பர் கூறிய வியப்பான சில செய்திகளை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

முதல் விவாகரத்து

கம்பரே முதன் முதலில் விவாகரத்து குறித்துக் கூறியுள்ளார். கைகேயி, தசரதனிடம் பரதன் நாடாளவும், இராமன் காடாளவும் வரம் கேட்டதால் மனமுடைந்த தசரதன், வசிஷ்டரிடம் இவள் என் மனைவி அல்லல் இவளை மனைவி எனும் நிலையிலிருந்து முற்றிலும் நீக்கிவிட்டேன். அரசனாக வரப்போகும் அந்தப் பரதனையும் இனி என் மகன் என்று கருத மாட்டேன். அவன் என் இறுதிச் சடங்கு செய்வதற்கு உரிமை உடையவன் ஆக மாட்டான் என்றான்.

“இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அவ் பரதன்தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்”
(நகர் நீங்கு படலம் 341)

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'

விவரங்கள்
-மகாகவி பாரதியார் -
கலை
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=Js6sGGAHIFY

நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென்று..
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

மேலும் படிக்க ...

சங்க இலக்கியம் கூறும் அறம்! - முனைவர் அ .கல்பனா -

விவரங்கள்
- முனைவர் அ .கல்பனா -
இலக்கியம்
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் : முனைவர் அ .கல்பனா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை -


முன்னுரை

சங்ககாலம் மனித வாழ்வின் முக்கிய இடத்தை பெறுகிறது . சங்ககாலமும் தமிழ் மொழியும் பிரிக்கமுடியாதது உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது.

சங்கம்

சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள் கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர்.

மேலும் படிக்க ...

யுடா அக்னாரியின் மழை நிலாக் கதைகள்! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
நூல் அறிமுகம்
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.

யதார்த்த இலக்கியம் அன்றாடம் நாம் உண்ணும் இட்லி, தோசை போன்ற உணவாக இருந்தால், மாயா யதார்த்தம் விடுமுறையில் சுவைக்கும் இத்தாலிய அல்லது வியட்நாமிய உணவுப் போல புதுமையையும் இனிமையையும் தருகிறது.

இந்த உணர்வின் தாக்கத்தில்தான் நான் எழுதிய அசோகனின் வைத்தியசாலையில் போன்ற படைப்புகளில், பேசும் பூனை, கொல்லப்பட்ட பெண்ணின் ஆவி கதாநாயகியாக வருவது போன்ற அம்சங்களை பயன்படுத்தினேன். அதேபோல் தாத்தாவின் வீட்டில் என்ற படைப்பில், மனக்குழப்பமான கனவுகளின் வழியாக இந்தியாவில் இருந்து நாய்களை வரவழைத்து, எதிர்கால இலங்கை அரசியலைப் பற்றியும் சிந்தித்தேன். இவற்றை மாயா யதார்த்தம் எனக் கருதி, ஒரு சாதனை உணர்வுடன் நாவல்களாக உருவாக்கினேன்.

ஆனால், என்னை ஆரம்பப் பள்ளி மாணவனாகவே உணரச் செய்தது யுடா அக்னாரியின்  (Ueda Akinari)  சிறுகதைத் தொகுப்பு. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த ஜப்பானிய எழுத்தாளரின் ஏழு கதைகள் ‘மழை நிலாக் கதைகள்’ என்ற பெயரில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் தமிழ்ப் பெண் எழுத்தாளர் கீதா மதிவாணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

இசை நாடக மேதை நாடக கவிமணி எம்.வி. கிருஷ்ணாழ்வார் (1985-1972) - த.சிவபாலு -

விவரங்கள்
- த.சிவபாலு -
கலை
28 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாள்வார் கரவெட்டி மத்தியில் பிறந்து வளர்ந்தவர். நாட்டுக்கூத்தில் வல்லவராக அவர் வளர்ந்த வரலாறு ஈழத்து நாட்டக்கூத்து வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பாடலுடன்இ ஆடலும் சேர்ந்து வர பொருளுக்கேற்ப பாடி ஆடுவது கூத்தின் பாங்கு. மிக நளினமாக தான் பூண்டுகொண்ட வேடத்திற்கேற்பவே மாறிவிடுகின்ற உன்னத நடிப்பாற்றல் கொண்டவர் அண்ணாவியால் என பிற்காலத்தில் எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான நாடக கவிமணி அவர்கள். பாடல்களை இயற்றுவதிலும், அதனை இசையமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். பண்டிதர்களும் ஏற்றிப்போற்றும் நிலைக்கு கவிதை யாப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கியவர். கரவெட்டியில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களில் வாழ்த்துக் கவி இயற்றிப் பாடுவதிலும், அந்தியேட்டிச் சபிண்டீகரணத்தில் தான்எழுதிய கல்வெட்டில் உள்ள பாடல்களை மனமுருகப் பாடுவதிலும் சமத்தராக காணப்பட்டவர். சமத்துவத்தை வலியுறுத்தி சமதர்ம சமுதாயம் அமையவேண்டும் என விழைந்தவர். ஏழை எழியவர்களின் நண்பனாக, பட்டி தொட்டியெங்கும் சென்று கலைப்பணி ஆற்றியவர். அவரால் எழுதப்படும் இறந்தவரைப் பற்றிய நினைவலைகள் பிள்ளைகள் புலம்புவதாகவோ அன்றி மனைவி அல்லது கணவன் புலம்புவதாக அமையும்போது அவை உண்மையிலேயே நிகழ்ந்தவற்றைப் பின்னிப்பிணைந்தவைiயாக யதார்த்தமாக அமைந்திருப்பதற்கு அவர் இருந்த சூழலில் உள்ளவர்கள் அனைவரையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர்களில் வாழ்வில் ஒரு பங்காளராக, பார்வையாளராக அவர் மிக நெருக்கமாகப் பழகிவந்தமை அவரின் சமூகக்கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவன.

மேலும் படிக்க ...

காலத்தின் கரங்களும் ஜடப்பொருளின் சாட்சியமும்: அ.முத்துலிங்கத்தின் புனைவுகளில் இயற்கை - மானுட முரணியக்கப் பகுப்பாய்வு - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
ஆய்வு
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

சுருக்கம் (Abstract)

நோக்கம்: இக்கட்டுரை, ஈழத்துச் சிறுகதை உலகின் முன்னோடிப் படைப்பாளி அ.முத்துலிங்கம் அவர்களின் "ஆயுள்", "வமிசவிருத்தி", "கொழுத்தாடு" ஆகிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு, மனித இருப்பிற்கும் இயற்கையின் விதிகளுக்கும் இடையிலான முரண்பட்ட உறவினைப் பகுப்பாய்வு செய்கிறது. மனித மையவாதச் சிந்தனையிலிருந்து (Anthropocentrism) விலகி, காலத்தின் பிரம்மாண்டத்தையும், பருப்பொருட்களின் (Objects) நிலைத்தன்மையையும் இப்படைப்புகள் எவ்வாறு முன்வைக்கின்றன என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும்.

முறையியல்: இவ்வாய்வு பின்நவீனத்துவக் கோட்பாடுகள், இருத்தலியல் நோக்கு (Existentialism) மற்றும் சூழலியல் விமர்சன (Ecocriticism) அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைகளில் வரும் அறிவியல் தரவுகள் மற்றும் படிமங்கள் எவ்வாறு மெய்யியல் (தத்துவார்த்த) உண்மைகளாக மாற்றமடைகின்றன என்பது பண்புசார் பகுப்பாய்வு (Qualitative Analysis) முறையில் விளக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகள்:

    ஆயுள்: இக்கதையில் மனிதனின் உணர்வுப்பூர்வமான வாக்குறுதிகளை விட, ரசாயனத் தன்மையுடைய பிளாஸ்டிக் குடுவை அதிக ஆயுளைப் பெற்றுள்ளது. இது மனிதனின் 'நிச்சயத்தன்மை' என்பது காலத்தின் முன் எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்துகிறது.

    வமிசவிருத்தி: உயிரினங்களின் உயிர் பிழைத்தல் மற்றும் சந்ததிப் பெருக்கம் என்பது ஒரு அறம் சார்ந்த செயல் என்பதை விட, அது இயற்கையின் தவிர்க்க முடியாத உயிரியல் விதி (Biological Law) என்பதை முத்துலிங்கம் நிறுவுகிறார்.

    கொழுத்தாடு: அதிகார படிநிலையில் மனிதன் இயற்கையைத் தன் நுகர்விற்காக மாற்றியமைப்பதையும், அந்தச் செயல்பாட்டில் நிகழும் அறவீழ்ச்சியையும் இக்கதை குறியீடாக்குகிறது.

மேலும் படிக்க ...

எல்.ஜோதிகுமாரின் '23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள்' கட்டுரைக்கான எதிர்வினை! -பிரதா-

விவரங்கள்
-பிரதா-
இலக்கியம்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த உரை, இளம் வயதிலேயே சுப்பிரமணிய பாரதி தனது அரசியல் சிந்தனைகளை எவ்வாறு படிப்படியாக வடிவமைத்துக் கொண்டார் என்பதை மிகவும் ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட அணுகுமுறையில் விளக்குகிறது.  இதில் அடங்கியுள்ள சிந்தனைகள் மூன்று முக்கிய கோட்பாட்டு தளங்களின் வழியாக தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. “மரபு–நவீனம் மோதல் (tradition - modernity)”, “அரசியல் சுயவடிவமைப்பு (political self-fashioning)”, மற்றும் “வெகுஜன அரசியல் (mass politics)”. இளம் பாரதி பழமையின் செழுமையுடனும், அதன் அறிவுச் சுவடுகளுடனும் ஆழமான தொடர்பை வைத்திருந்தாலும், அந்த மரபு அவரை நவீன அரசியல் தளத்திற்குள் நுழைவதில் தடையாக அமையவில்லை என்பது இவ்வுரையின் மைய வாதமாகத் தோன்றுகிறது. மாறாக, அந்த மரபை மறுப்பதற்குப் பதிலாக அதை மறுஅமைத்து (reconfiguration), புதிய அரசியல் கண்ணோட்டத்துடன் இணைக்கும் ஒரு செயற்பாட்டில் அவர் ஈடுபட்டார் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. காலனித்துவ சூழலில் உருவாகும் நவீனத்துவம் (postcolonial modernity) என்பது முழுமையான பழமையறுப்பு அல்ல. அது மாற்றியமைக்கப்பட்ட தொடர்ச்சி என்பதற்கு இவ்வுரை ஒரு வலுவான ஆதாரமாக விளங்குகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! - தகவல்: ஓராயம் -

விவரங்கள்
- தகவல்: ஓராயம் -
நிகழ்வுகள்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்விதமான நூல்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை. ஆதரவளிப்போம்! நூல் வெளியீட்டை வெற்றிகரமானதாக்குவோம்!

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!

விவரங்கள்
- தகவல்: ரவி கனகசபை -
நிகழ்வுகள்
24 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி) எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஸ்கார்பரோவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நீங்கள் உங்கள் நூல்களைக் காட்சிப்படுத்துவதற்கு, விற்பதற்கு நியாயமான கட்டணத்தில் ($30) வசதிகள் செய்து தருவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்குள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பிக் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. (ஏப்ரில் 23 உலக புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".
  2. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்!! - முனைவர் கு.வளர்மதி -
  3. சுப்ரபாரதிமணியன் அவர்களின் அந்நியர்கள் – நாவல் ஒரு பார்வை! -டாக்டர். சீதாராமசாமி, பேராசிரியர் பிலோமினா கல்லூரி, மைசூரு -
  4. நெதர்லாந்து அரசியலமைப்பு! - பவானி சற்குணசெல்வம் -
  5. இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58: “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்” - தகவல்: அகில் -
  6. மினாப் 168: ஒரு நிரந்தரக் கையெழுத்து - ஈழக்கவி -
  7. மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் கே. பொன்னுத்துரை பவளவிழா!
  8. எனது ஊகம் மட்டுமே: தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2026! - நந்திவர்மப்பல்லவன் -
  9. வாசிப்பும், யோசிப்பும்: கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! & நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -
  10. புறநானூற்றில் துணைவஞ்சி! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -
  11. கு.சின்னப்ப பாரதியின் 'சர்க்கரை' புதினத்தில் முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்கமும்! - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் -
  12. காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் 'தாத்தாவின் வீடு 'நாவல் - சி. ரமேஸ்
  13. கனடா - ரொறன்ரோவில் நூல் வெளியிட்டு விழா! - சுலோச்சனா அருண் -
  14. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "முன்வரலாற்றுக் கால தமிழகம் ; இடம் - மனிதர்கள் - மொழி. அண்மைக் கால உரையாடல்கள்."
பக்கம் 2 / 128
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி