பதிவுகள் முகப்பு

வேலாயுதம் இராமரின் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு" என்னும் 'எழுநா'க் கட்டுரை குறித்துச் சில கருத்துகள்! - ஜேம்ஸ் விக்டர் -

விவரங்கள்
- ஜேம்ஸ் விக்டர் -
ஜோதிகுமார்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எழுநா மின்னிதலிழ் நண்பர் வேலாயுதம் இராமர் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு! மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆதங்கத்தோடு மக்கள் கவிமணி சி.பி வேலுப்பிள்ளை குறித்து ஒரு  குறிப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டியிருந்தார். அதாவது.

"மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் ஊடாக உலகறியச் செய்த சீ.வி வேலுப்பிள்ளை கூட, பெரியகண்காணிகள் தமது மக்களுக்கு செய்த கொடுமைகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவோ, தொட்டு காட்டவோ செய்யவில்லை. இதற்கான காரணமாக அவர் ஒரு பெரிய கண்காணியின் வாரிசாக இருந்ததையும் அதனால் நேர்திருந்த கடப்பாடுகளையும் குறிப்பிடலாம்."

மேற்படி பந்தியில் வேலாயுதம் இராமர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து எந்த தள்ளாட்டமும் இல்லாமல் பின்வரும் விடயங்களை பட்டியிலிடுகிறார்.

1. பெரிய கங்காணிகள் மலையக மக்களுக்கு செய்த கொடுமைகளை சீ.வி. வேலுப்பிள்ளை தொட்டுகாட்டவில்லை.
2. பெரிய கங்காணிகளை சீ.வி வேலுப்பிள்ளi விமர்சிக்கவில்லை.
3. இவ்வாறு விமர்சிக்கவோ, தொட்டுகாட்டவோ அவருக்கு முடியாது போனதுக்கு அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாக இருந்ததே காரணம்.
4. சீ.வி வேலுப்பிள்ளை அவர்கள் பெரிய கங்காணிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அவர்களுக்கு கடமைப்பட்டவராகவும் இருந்தார்.

உண்மையில் வேலாயுதம் இராமர் அவர்களின் இந்த ஆதங்கள் எந்தளவிற்கு யதார்த்தமானது என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

மேலும் படிக்க ...

ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் 'நெய்தல் நடை' நூல் வெளியீட்டு நிகழ்வு உரை! - பவானி சிவகுமாரன் -

விவரங்கள்
- பவானி சிவகுமாரன் -
நூல் அறிமுகம்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் ஆரம்பமான எம் ஈழத்துச் சிறுகதை வரலாறு தன் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தடம் பதித்தவர்கள், ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், தம் இருபது வயதுகளிலேயே இவர்கள் எழுத ஆரம்பித்தது தான்.

மருத்துவத் துறையில் முப்பத்து மூன்று ஆண்டு காலச் சேவை நிறைவின் பின்னும், காலந் தாழ்த்தியே எழுத ஆரம்பித்தவர் ரஞ்ஜனி அவர்கள். Better late than never. என்ன தான் தாமதித்திருந்தாலும், குறுகிய காலத்தில் சிறுகதை, திறனாய்வு,கட்டுரை எனப் பல தளங்களில் எழுதிப் பலரின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தவர் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.

பன்னிரெண்டு சிறுகதைகளுடன், ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது இச் சிறுகதைத் தொகுப்பு. இச் சிறுகதைகள் அனைத்தும் 2022 முதல் 2025 வரையான காலப் பகுதியில் ஞானம், ஜீவநதி, பதிவுகள் இணையத்தளம், சிறுகதை மஞ்சரி, வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளில் வெளி வந்தவை. ஞானம் சஞ்சிகையில் 'அன்றொரு நாள்' எனும் தனது முதற் சிறுகதை மூலம் சிறுகதை இலக்கிய உலகில் கால் பதித்த ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் ஆறு சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலேயே வெளி வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் பதின்ம வயதின் இறுதியில், தான் கற்பித்த ஊரைப் பார்க்க விளையும், அறுபது வயதுகளின் விளிம்பில் நிற்கும் பெண் பற்றியது இவரின் முதற் சிறுகதை 'அன்றொரு நாள்'. எதற்காக அங்கே செல்கிறாள் என்பது அந்தப் பெண்ணிற்கே தெரியவில்லை என்பதை 'கார்க் கண்ணாடியில் பதிந்த புகைமூட்டம் போல் தெளிவில்லாமல் இருந்தது' என்னும் வரி வெளிக் கொணர்கிறது. அந்த ஊர் பற்றிய விபரிப்பும்,வர்ணனைகளும், உளம் கிளர்ந்த உணர்வுகளும் கதையைப் பின் தள்ளிக் கோலோச்சுகின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

பாடலைக் கேட்க - https://youtu.be/TC1p_RwuQfM?si=4prp7eXoh0SSclA_

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

மேலும் படிக்க ...

'ரவி அல்லது' கவிதைகள்! - ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
12 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அதீத நிதர்சனம்

அநேகமாக
இந்தச் சூரியன் இன்றோடு நின்றுவிடப்போவதில்லை.
அந்த
நிலவுக்கு மேகத்தில் மறைதல்
கால நீடிப்பானாலும்
ஒளிவதற்கு உகந்த இடமெனக் கொள்ள முடியவில்லை.
ஆடு கடித்தாலும்
அந்தப் பூ
அடுத்தடுத்த நாளில்
பூக்கத்தான் போகிறது.
அவளைக் காதலிக்கத்தான்
வேண்டுமென்ற
அவசியங்கள் எதுவுமில்லை.
எப்படியும் கல்யாணம் செய்யத்தான் போகிறார்கள்.
இம்முறை
அடை வைத்த முட்டைகள்
பொறிக்காமல் போனாலென்ன
மறுமுறை முட்டைகள் போடும் கோழி இருக்கத்தான் செய்கிறது.
எனக்குத் தெரிந்தவரை
என் தாத்தாவும்
அவர் தாத்தாவும் செத்துத்தான் போனார்கள்.
இங்கு
இப்பொழுதென
எதார்த்தத்தை
ஏற்று
இயல்பில்
இணங்கியவனுக்கு
நாளை பற்றிய
நம்பிக்கைத் தேவையில்லை
தருணப் புரிதலில் லயிப்பதற்கு.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: எழுத்தாளர் கந்தையா அருந்தவராஜாவின் 'புலம் பெயரும் மண்வாசம்'! நூல் பற்றியதொரு பார்வை! - வாசுகி விமலராஜ் -

விவரங்கள்
- வாசுகி விமலராஜ் -
நூல் அறிமுகம்
12 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .

இந்நால் வெளிவந்து பல வருடங்கள் கடந்து இறுதியாக எதிர்பாராமல் என் கையில் கிடைத்தது .இத்தனை வருடங்கள் கடந்த பின்னர்தான் இந்நூலை வாசிக்க முடிந்தது என்ற ஆதங்கம் என் மனதில் எழுந்தாலும் , இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் வாசிக்கும்போதும் புவியியல் கற்றேன்! அரசியல் கற்றேன் ! வரலாறு கற்றேன்!அறிவியல் கற்றேன் !விஞ்ஞானம் கற்றேன் ! இலக்கியம் கற்றேன்! அத்துடன் அருந்தமிழையும் அள்ளிப்பருகினேன்!

புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுத முற்பட்ட இந்நூலாசிரியர் புலம் பெயர் தமிழராக இருப்பது , இந்நூலை எழுதுவதற்கு முக்கிய தகுதியாக நான்  கருதினாலும் அவர் தான் அனுபவித்த புலம் பெயர் வாழ்க்கை அனுபவங்களை அறிவினால் மட்டுமன்றி உணர்வு பூர்வமாகவும் உணர்ந்திருக்கின்றார் என்பதை இந்நூலிற்கு அணிந்துரை நல்கிய அமர ர் லெனின் மதிவாணன் மிக அழகாக குறிப்பிட்டிருந்தார் . இந்நூலில் உள்ள எட்டுக் கட்டுரைகளும் இவற்றை ஆதாரங்களுடனும்,மேற்கோள்களுடனும் எமக்குத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளன.

அகன்ற வான்வெளியில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியச் சுடர்  மட்டுமே இருந்ததாகவும் பின்னர் அச்சுடரில்  ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்டு பல துண்டங்களாக வீசப்பட்டு, பின்னர் கட்டித்து இறுதிக் கோளாக மாறி புவிக்கிரகமாக உருப்பெற்றது என்றும் இதுவே “பஞ்சியாக் கண்டம் “ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் புவியோடு வெடிப்புக்குள்ளாகி ஏழு கண்டங்களாக பிளவுபட்டு இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதுவே புவியில் ஏற்பட்ட முதலாவது இடப்பெயர்வு என பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்கள்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. ]


1. வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!


இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI
https://www.youtube.com/watch?v=t8mZmnb0Pig


யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப்  பறந்தன.

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மேலும் படிக்க ...

ஈழக்கவி கவிதைகள்!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
11 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1

முகில்களின் மூன்றாம் பருவம்
(மௌனத்தால் பேசும் சூஃபி நிழல்)


புதைந்திருக்கும் ஒலி ஒன்று,
தொலைந்து போன ஓர் இனிமை போல
மேகத்தின் மடியில் கனவு காண்கிறது.
அது மெல்ல
தன் கருப்பு வெள்ளைப் பட்டங்களை விரித்துக்கொண்டு
புதிய சாயலை இழைக்கிறது —
நம்முள் பிறக்காத வார்த்தைகளுக்குள்.


வானத்தின் உச்சியில்,
ஒரு புறா பறந்தது
அது தூது அல்ல,
நம்மை நம்மிடம் கொண்டு சேர்க்கும்
ஒரு கோணக்கண்ணாடி.


மேகங்கள் மட்டும் பேசத் தெரிந்திருந்தால்
நம் கண்ணீர் குறித்து என்னவெல்லாம் சொல்வது?
பொழிந்ததும் போலவே,
அது எப்போதும் எங்கும் இல்லை.
தோன்றுவதும் மறைவதும்
அவைபோல் நாமும்.

நாம் ஒரு உறவின் இரு முனைகளில்
வசிக்கும் மழைதுளிகள் —
ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும்
ஓர் ஆழம் மாறுகிறது.

மேலும் படிக்க ...

தமிழரின் அறவியல் சிந்தனைகளும் பொது அறக் கூறுகளும்! - முனைவர் ஆ.முத்தையன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சு-2), தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர். -

விவரங்கள்
- முனைவர் ஆ.முத்தையன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சு-2), தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர். -
ஆய்வு
10 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாகப் போர் நடைபெற்று வருகிறது. இதேபோல இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமான போரையும் குறிப்பிட்டாக வேண்டும். இவைமட்டுமில்லாது உலகின் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போர்களும் பிராந்திய மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இவை எவற்றை முன்வைக்கின்றன என்பதே கேள்வி. இவ்விடத்தில்தான் அறம் (நீதி) குறித்தான கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது.

போர் குறித்தான சிந்தனை நம்முடைய சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்க்கிறோம். நீதிநூல்களில் ஒன்றான திருக்குறளில் போருக்கான அறத்தையும் காண்கிறோம். சங்க இலக்கியங்கள் தொடங்கி அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால நீதி நூல்கள், தற்கால இலக்கியங்கள் வரை அனைத்தும் பல்வேறு அறங்களை (நீதிகளை) முன்வைக்கின்றன. ஆனாலும், ஏன் எல்லாக் காலங்களிலும் போர்கள் உருவாகி வருகின்றன என்பது விளங்காமலே இருக்கின்றன. இவர்களுக்குள் அறம் என்பது இல்லையா? அல்லது அறம் போதிக்கப் படவில்லையா?.

மேலும் படிக்க ...

என் நினைவில் எழுத்தாளர் கலா சிறீரஞ்சன் (பூங்கோதை) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
09 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



[பெண்கள் சந்திப்பினூடாக இடம்பெற்ற நினைவுப் பகிர்தலில் எனது உரை. - நவஜோதி ஜோகரட்னம்- ]

    லண்டனில் ‘விம்பம’ நடாத்தும் இலக்கியக் கூட்டங்களின் போதுதான் கலாவை நான் முதன் முதலில் சந்தித்தேன். முதற்சந்திப்பின்போதே ‘பூங்கோதை’ எனத் தனது எழுத்துலகப் பெயரைக்கூறி தன்னை அறிமுகஞ்செய்து அன்பாகப்பேசி அழகு சேர்த்த பாங்கு என்னைக் கவர்ந்தது. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமே எமது உறவு தொடர்ந்து நீடித்தது.

     இலக்கிய விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் தவிர சொந்த விடயங்கள் எதுவும் எமக்கிடையில் பரிமாறப்படுவதில்லை. இருந்தும் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் பாமுகம் பா ரிவியில் நான் தயாரித்து வழங்கும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை மேற்கோள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தேன். பூங்கோதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டார். அவ்வேளைகளில் தான் அவர்பற்றிய சிறு விபரங்களை அவருடன் உரையாடிப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் நல்ல தகவல்களோடு அந்த நேர்காணலை என்னுடன் மேற்கொண்டார். அந்த வேளையில்தான் தனக்கு இரு மகன்மார் இருக்கிறார்கள் எனக் கூறினார். எனக்கும் இரு மகன்மார் உள்ளனர் எனக்கூறி நாமிருவரும் ஒருவித  ஒற்றுமையில் பூரிப்படைந்தோம். அத்தோடு கலா  ஆசிரியைக்குரிய பண்போடு எனது இளைய மகனின் ஓவியத்தை ‘It's so beautiful well done to his artistic hands!’  என்று பாராட்டியிருந்தமையை என்னால் மறக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

கணேஷின் கவிதைத் துளிகள்!

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
07 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.

கனவுகளில் தோய்ந்து
நினைவுகளை இழந்தவன்
திகைப்பாளி
நினைவுகளில் தோய்ந்து
கனவுகளை இழந்தவன்
ஏமாளி
கனவுகளையும், நினைவுகளையும்
இணைத்து  செல்பவனே 
வெற்றியாளன் .

சுதந்திரத்தை துர்ப்பிரயோகம் 
செய்யும் சிலரைக் காட்டி
இன்றும் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க​ துடிப்பவர்களை சந்திக்க​
வைக்கிறோம் என்று
ஆற்றை அல்லவா வற்ற​ வைத்து 
விடுகிறீர்கள் .
நானும் . நீயும் ஒரே வலுவுள்ள​
கைபேசிகளை வைத்திருந்தாலும்
அவற்றை பாவிக்கும் விதத்தில்
தானே வேறுபட்டு நிற்கிறோம் .

மேலும் படிக்க ...

தமிழரின் அறவியல் சிந்தனை – துறவறம்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
07 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலகில் உள்ள தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என்று சிறப்பித்து அழைக்கப்படும் தமிழினத்திற்கு என்று தனித்த பண்பாட்டு அடையாளமும், வரலாற்றுப் பின்புலமும் உண்டு. நாடோடி மக்களாக வாழ்க்கையைத் தொடங்கிய தமிழர் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு என்று தனித்த அடையாளத்தை உருவாக்கினர். தங்களுடைய வாழ்க்கை முறைகளைச் செழுமையானதாக வடிவமைத்துக் கொண்டனர். இந்த நிலை ஈராயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தேறியுள்ளது. நிலத்தின் அடிப்படையில் அமைந்தது அவர்களின் அந்த வாழ்க்கை முறை. அது மலை, காடு, வயல்வெளி, நீர்நிலை, வறண்ட நிலப்பரப்பு என்பதாக அமைந்திருந்தது. அதைப் பண்டைத் தமிழ் இலக்கியப் பாடல்களும் பதிவு செய்துள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் அமைந்த அவ்வாழ்வியல் அகம் – புறம் என இரு பிரிவாக அமைந்திருந்தது.

மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்ட சமூகங்களில் ஒன்றாக விளங்கும் தமிழினத்தின் வாழ்வியல் தொடர்ந்து ஒவ்வொரு காலத்திலும் மென்மேலும் செழுமை பெற்று வந்துள்ளது. தொடக்கத்தில் காதல் / வீரம் என்றிருந்துள்ளது. அதன் பின்னர் அறம், பக்தி, பகுத்தறிவுச் சிந்தனை எனப் பல சிந்தனைகள் தொடர்ந்து உருவாகியுள்ளன. பல்வேறு அரசியல், சமூக நெருக்கடிகள் நிலவியிருந்த பின்னணியிலும், தொடர்ந்து காலச்சூழலுக்கு ஏற்பச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்தி வந்துள்ளனர். பிற இனத்தவரால் (பிற மொழி, பண்பாட்டுப் பின்னணி) அதிக காலம் ஆளபட்டிருந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் தம் இனத்தின் தனித்த அடையாளங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க ...

இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
06 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.  ஆறு  தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.

இவர் இயக்கத்தில் வெளியான  வீடு, சந்தியாராகம், வண்ணவண்ணப் பூக்கள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகள் பெற்றிருக்கின்றன.  சிறந்த ஒளிப்பதிவாளருக்காக மூன்றாம் பிறை , கோகிலா (கன்னடம்) ஆகிய திரைப்படங்களுக்காக விருதுகள் பெற்றவர். சிறந்த இயக்குநருக்காக ஆறு  தடவைகள் பிலிம்ஃபெயர்  விருது பெற்றிருக்கின்றார். மேலும் கேரள, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகள், பிலிம்ஃபெயர் விருதுகள், நந்தி விருதுகள் பெற்றிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்- நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
கலை
05 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே!
( இசை & குரல் - AI Suno  ஓவியம் - AI)

 பாடலைக் கேட்டுக் களிக்க


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே

சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: சாஞ்சியின் தூபிகள் – அசோகனின் கதை, புத்தரின் கலைச்சின்னங்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன  இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஒரு சிற்பத்தில், சுத்தோதன மன்னருக்கு வாரிசு கிடையாது என்ற எண்ணத்தில் அவரது மனைவி மாயாதேவி, தங்கையான கவுதமியை மணம் செய்யுமாறு வற்புறுத்துகிறாள். மன்னர் சம்மதிக்காமலிருந்தாலும், பட்டத்துக்கு வாரிசு தேவை என்பதாலேயே அந்த திருமணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாயாதேவியின் கனவில் வெள்ளை யானை தோன்றியதும் , ஜோதிடர்கள் அதனை நல்ல அறிகுறியாக அரசனிடம் கூறுகிறார்கள். இத்தகைய பல புராணக் கூறுகள் தூபியில் சிற்பமாகக் காணப்படுகின்றன.

இந்த தூபியின் வாசல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் புத்தரின் முற்பிறவிக் கதைகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. இவை இந்தியச் சிற்பக் கலையின் தொடக்கமாகவே கருதப்படுகின்றன. அதாவது  மாமல்லபுரத்து சிற்பங்களிலும் 900 வருடங்கள் தொன்மையானது.

தூபியின் சில தூண்களில் அசோக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் இந்தியரல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடைகள் மற்றும் பாத அணிகளிலிருந்து அவர்கள் கிரேக்கர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது கிரேக்கர்களும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது. இவற்றின் மூலம், ஒரு கால கட்டத்தில் மவுரியச் சாம்ராஜ்யம் எப்படி இயங்கியது என்ற  வரலாற்றைச் சிற்பங்களினாலேயே நமக்கு அறிய முடிகிறது.

மேலும் படிக்க ...

கவிதை: எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறே வா! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
கவிதை
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

மேலும் படிக்க ...

இளைய பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்:     “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.

 24 வயது இளைஞனாய் பாரதி, பின்வருமாறு எழுதுகின்றான்:

“அனேக நூற்றாண்டுகளாக நித்திரை போய்க் கொண்டிருந்த ஓர் பெருந் தேசமானது இப்போது கண் விழித்து ஏற முயற்சி பண்ணும் சமயத்தில் அமுக்கி விடுவது இலேசான காரியமாகுமா”
(பக்கம்: 280)

இங்கே, மூன்று விடயங்கள் காணக்கிட்டுகின்றன:

1. அனேக நூற்றாண்டுகளாய் நித்திரை கொண்டிருந்த ஒரு தேசம்
2. அது, இப்போது, கண் விழித்து எழும் (அரசியல் உணர்வு பெற்றதாய்).
3. அதனை அமுக்கி விடுவது, அத்தனை இலேசான காரியமாக போவதில்லை என்பது.

மேலும் படிக்க ...

ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு! - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -

விவரங்கள்
- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -
ஆய்வு
02 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[முனைவர் பட்ட ஆய்வாளராகவிருந்த செ.செளந்தரி (இப்பொழுது முனைவராகவிருப்பார் என எண்ணுகின்றோம்) பெரியார் பற்றிப் பதிவுகள் இணைய இதழில் எழுதி,  02 ஜனவரி 2020  வெளியான இக் கட்டுரை பெரியாரைப்  பற்றிய முக்கியமான கட்டுரை. தற்போதைய தமிழக அரசியற் சூழலில் இதுபோன்ற கட்டுரைகள் பெரியாரைப்பற்றிய இன்றைய தலைமுறையினரின் புரிதலுக்கு வழி வகுக்கின்றன என்பதால் , இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -]

பெரியாரின் சிந்தனை முறையியல் நவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்திய அளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது" (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.

மேலும் படிக்க ...

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
02 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்)  என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:

1. என் குருமண் காடே! 
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4.  இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!

இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.

இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் YouTube  சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

சிறுகதை: நிவாரணம்! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்த மழை இரவு, கிராமத்தின் எல்லைகளில் ஓடும் சிறிய ஆற்றின் குரல் முதலில் மெதுவாகக் கேட்டது. பிறகு அது கோபமடைந்த குழந்தையைப் போலக் கர்ஜித்தது. வெள்ள நீர், எச்சரிக்கையின்றி, இரவு இரண்டு மணிக்கு வீடுகளில் புகுந்துகொண்டது.

பள்ளித் தெருவின் கடைசி வீட்டில் வசித்த முஹீத், நனைந்த பாய் மீது தூங்கிக் கொண்டிருந்த மகன் உனைபை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடியபோது, வீடுகளின் கதவுகள் ஒன்றின் பிறகு ஒன்று திறந்து, மக்கள் தங்களின் குடும்ப மரபைக் கடத்துவது போல, கோப்பைகள், ஆவணங்கள், படுக்கைகள், ஒரு பழைய றங்குப் பெட்டி...... எதை முடியும் என்பதையெல்லாம் கைகளில் பற்றிக்கொண்டு ஒளிந்தார்கள்.

வெள்ளத்தைப் பார்க்க வந்த கிராமத்து வீதி ஒருவேளை நாகரிகத்தின் இதயம் போல இருந்தது; அன்றிரவு, அது எல்லோரினதும் பயத்தை ஏற்றிக்கொண்ட இருண்ட மேடையாக மாறியது. மழை போகும் அறிகுறி எதுவும் இல்லாத அச்சமான இருளில், ஒரே ஒலி நீரின் சத்தம்.

மேலும் படிக்க ...

சிறுகதை: கனவு மெய்பட வேண்டும்… -பாலமுருகன்.லோ-

விவரங்கள்
-பாலமுருகன்.லோ-
சிறுகதை
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”

“ம்மா.. ஏம்மா சும்மா இதையே சொல்றீங்க, நான் எப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்ப நீங்க கத்திக்கிட்டே இருக்கீங்க. இந்த அம்மாவுக்கெல்லாம் எங்கிருந்துதான் இந்தக் கடவுள் மூன்றாம் கண்ணைக் கொடுத்தாரோ! இப்பதான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இந்த மடிக்கணினியை எடுத்து ஃபிரெண்ட்ஸோட வாட்ஸ்அப்பில் பேசிட்டு இருந்தேன். ம்மா, கொஞ்ச நேரம்தான் இப்படிப் பேசுறேன், இது உங்களுக்குப் பொறுக்காதா? இவ்வளவு நேரம்தான் படிச்சுக்கிட்டே இருக்கிறேன். கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கணுமல்ல, அதான்.”

“ஏன்டா, அதுக்குன்னு வாட்ஸ்அப்பில் பேசணுமா? தினமும்தான் ஸ்கூல்ல பேசுறீங்க, திரும்பவும் வீட்டுக்கு வந்து அந்தப் பேச்சு தொடரணுமா? சரி, அப்படி என்னன்னுதான் பேசுவீங்க? எனக்கும் சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்ல.”

"நாங்க சின்னப் பசங்க ஏதாவது பேசிக்கிட்டு இருப்போம்! அதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றது? நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல்ல எல்லாம் நாங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் இல்லை. உங்களுக்கு நல்லாவே தெரியும், ஸ்கூல்ல ஆங்கிலம்தான் பேசணும், மீறி நாம தமிழ் பேசினோம்னா பனிஷ்மென்ட்தான். அப்படி இருக்க, எப்படி நீங்க சொல்லலாம் நாங்க ஸ்கூல்ல பேசிக்கிட்டே இருக்கோம்னு? ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது. நான் இப்போ இதை நிறுத்திட்டு என்னோட புத்தகத்தை எடுத்துக்கிட்டு உட்காரணும், அவ்வளவுதானே?"

“இல்லடா, நான் அப்படிச் சொல்ல வரல. உனக்கு ரெஸ்ட் தேவைதான், நான் இல்லைன்னு மறுக்கலை. உன்னோட கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவைதான். அப்படி இருக்க, மீண்டும் நீ மடிக்கணினியை எடுத்துக்கிட்டு அந்த ஸ்கிரீன்ல கேம்ஸ் விளையாடினேன்னா, எப்படி உன்னோட கண்ணுக்கு ரெஸ்ட் கிடைக்கும்? அதான் உன்னை இதை மூடி வைக்கச் சொன்னேன்.”

மேலும் படிக்க ...

அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.

பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே.  செங்கை ஆழியானின் 'போரே நீ  போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.

'தற்காலத்து யாழ்ப்பாணத்து ஓவியர்கள்' என்னும் தனது நூலில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா ஓவியர் ரமணி பற்றி எழுதிய குறிப்பு ஓவியர் ரமணி பற்றிப் பல முக்கிய விபரங்களைத் தருகின்றது. அதில் குறிப்பிடப்படும் ஓவியர் ரமணி பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

மேலும் படிக்க ...

காரல்யுங்கின் ஆளுமைவகைப்பாடு! - முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -
ஆய்வு
30 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆளுமையைப் பற்றிய விரிவான கருத்துக்களை எடுத்துரைத்தவர்களுள் காரல் யுங் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பகுப்பு உளவியல் கோட்பாட்டைத் தோற்றுவித்தவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரமான சமயவாதியாகத் திகழ்ந்தவர். இயல்பான மனித உலகம் அவருக்கு எவ்வளவு உண்மையானதோ, அந்த அளவு அமானுட உலகமும் அவருக்கு உண்மையானது. அந்த நம்பிக்கையை அவருடைய சுயசரிதையும் மற்றும் அவர் எழுதிய உளவியற் புத்தகங்களும் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது. அவா் குறிப்பிட்டுள்ள ஆளுமை வகைப்பாடுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

பிராய்டும் யுங்கும்

காரல் கசுதவ் யுங் கெஸ்வில் நகரில் 1875 ஜீலை 26 ஆம் நாள் பால்அக்கிஸ், எமிலி பிரிஸ்வொ்க் தம்பதியின் மகனாகப் பிறந்தார். 1895 இல் University of Basel இல் மருத்துவம் படித்தார். 1900 இல் Zürich நகரில் உள்ள Burghölzli என்ற மருத்துவமனையில் மனநோய் மருத்துவராக Eugen Bleuler என்பவருடன் இணைந்து பணியாற்றினார். அவர் சிக்மண்ட் பிராய்டுடன் ஏற்கனவே தொடா்பு கொண்டிருந்தார். யுங்கின் ஆய்வேடு 1903இல் வெளியிடப்பட்டது. அவரது ஆய்வேட்டின் தலைப்பு On the Psychology and Pathology of So-Called Occult Phenomena.1 1906இல் Studies in Word Association இல் அதனை வெளியிட்டார். அதனுடைய பிரதி ஒன்றினை பிராய்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னா் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடா்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க ...

நினைவுக் குளிப்பு: பொன்னம்மா ரீச்சர்! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
28 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன.  அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.

பொன்னம்மா ரீச்சர்

முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன.
ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது.

பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நிர்வாக ரீதியாக எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும், கந்தர் மடமென்றே ஊரில் பெயர்பெற்றிருந்தது. அந்த கந்தர் மடம் பள்ளிக்கூடத்தில் விருப்பத்தோடு நான் படிக்கச் செல்லவில்லை. என்னை வில்லங்கமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்து படிக்கவைத்தார்கள் அங்கே. அவ்வாறு என் விருப்பமின்றி படிக்க நான் சென்ற அரிவரி வகுப்பில் ஆசிரியராக இருந்தவர்தான் பொன்னம்மா ரீச்சர் – என் முதலாவது ஆசிரியர். அங்கே பொன்னம்மா ரீச்சர் நீண்டகாலம் படிப்பித்திருப்பாராக இருக்கும். ஏனெனில் அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரையும்விட ஊரவர் தம் பிள்ளைகளைக் கூட்டிவந்து வகுப்பில் விட்டுவிட்டு அவரோடேயே நிறைய கதைத்துப் போனார்கள்.

பொன்னம்மா ரீச்சர் என்று எண்ணும்போதே எனக்கு அவரது முகம்தான் எப்போதும் ஞாபகம் வரும். அது வட்டமான முகம். இரண்டு வட்டக் கண்கள் அதில். நடு வகிடெடுத்து படிய வாரி கொண்டை போட்டிருப்பார். மூக்குத்தி அணிந்திருந்தார். கழுத்திலே சங்கிலியெதுவுமோ, கையிலே காப்பெதுவுமோ நான் கண்டதில்லை. சின்ன முகமுள்ள வெள்ளி நிற மணிக்கூடு கட்டியிருந்தார்.

மேலும் படிக்க ...

“விமர்சனத்தை ஒடுக்கி, பலவீனங்களை ஆயுதமாக்கும் உள்-வட்ட சர்வாதிகாரங்கள்: சமூகத்தை வீழ்த்தும் நவீன அதிகார நிழல்கள்”! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
சமூகம்
28 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“விமர்சனத்தை ஒடுக்கி, பலவீனங்களை ஆயுதமாக்கும் உள்-வட்ட சர்வாதிகாரங்கள்: சமூகத்தை வீழ்த்தும் நவீன அதிகார நிழல்கள்”

சமூகம் என்பது கருத்துகளின் கூட்டுச் சுவாசம். ஒரு தலைமுறை எழுந்து நிற்க வேண்டுமெனில், அது கேள்விகளால் ஊட்டமளிக்கப்பட வேண்டும்; விமர்சனத்தால் செம்மையாக்கப்பட வேண்டும்; உண்மையால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில், சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், சமூக மாற்றத்தின் பெயரில் அதிகார அரசியலை உள்-வட்டமாக நிறுவி, வெளியில் இருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் கூட பகைமை என சித்தரித்து ஒடுக்குகின்றன. இந்த அதிகாரக் கட்டமைப்பு வெளியில் தெரியாத நிழல் போல செயல்பட்டாலும், அதன் தாக்கம் சமூகத்தின் ஆழ வேர்களையே சிதைக்கும் அளவுக்கு வலிமையானது.

1. விமர்சனத்தை ‘எதிரி’ என மாற்றும் உத்தி: அறிவை ஒழிக்கும் முதல் படி

ஆரோக்கியமான அமைப்புகளில் விமர்சனம் ஒரு திருத்தக் கருவி. ஆனால் அதிகாரம் மையமாகிய அமைப்புகளில், விமர்சனம் ஒரு அச்சுறுத்தல். தவறு சொல்பவர்களை எதிரியாக்கும் போக்கு என்பது:   உண்மையை மறைக்க உதவும் உளவியல் ஆயுதம். தலைமையின் பிழைகளை மறைக்கும் பாதுகாப்பு சுவர் மக்களை அச்சத்தின் மூலம்
கட்டுப்படுத்தும் மௌனச் சட்டம்

"நீ எதிரி" என்ற ஒற்றை வரி, ஒரு வாதத்தை உடைக்க அல்ல – ஒரு வாதத்தை பிறக்க விடாமல் கொல்ல பயன்படுத்தப்படுகிறது. இது தர்க்கத்தை மறுக்கும் செயல் அல்ல; தர்க்கமே தேவையில்லை என்று சொல்லும் அதிகார மொழி. இதன் மூலம், சமூகத்தில் வளர வேண்டிய கேள்வி கலாச்சாரம் சிதைக்கப்படுகிறது, சிந்தனையின் இடத்தில் விசுவாசம் மட்டும் நிறுவப்படுகிறது.

2. உள்-வட்டக் கூட்டமைப்பு: வெளிப்படைத்தன்மையற்ற கூட்டு சர்வாதிகாரம்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கனடாவில் எழுத்தாளர் விமல் பரம் அவர்களின் 'தீதும் நன்றும்' சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!
  2. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தமிழில் (Gemini AI முன் வைத்து) - முனைவர்பீ. பெரியசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர்எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம்கலைக்கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா -
  3. புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முக பகுப்பாய்வு! (2) - ஈழக்கவி -
  4. கல்விக் கண் திறத்தல்! - நடேசன் -
  5. 'ஒருமுனை'யிலிருந்து 'பன்முனை' நோக்கி - சரவதேச அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்திய 2025! - எல்.ஜோதிகுமார் -
  6. புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு!(1) - ஈழக்கவி -
  7. இப்னு அஸுமத்: கவிதை மொழிபெயர்ப்பு பற்றிய விளக்கம்! - ஈழக்கவி -
  8. கம்பராமாயணத்தில் மருத்துவயியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  9. இந்திய மீனவர் இலங்கைக் கடற்பரப்ப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் எழும் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (2) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -
  10. நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!
  11. இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -
  12. இந்தியப் பயணத்தொடர்: கான்ஹா புலிகள் சரணாலயம்! - நடேசன் -
  13. குரைக்கும் குரல்களும் கரையாத ஒளியும்! - பவானி சற்குணசெல்வம் -
  14. கலாமோகன் தோற்கும் இடங்கள் - கலாமோகன் படைப்புக்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! (பகுதி 1) - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -
பக்கம் 9 / 128
  • முதல்
  • முந்தைய
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • அடுத்த
  • கடைசி