ஒரு மொழிமாற்ற நூலும் மெருகேறிய மரபுகளினுடனான அந்நூல் வெளியீடும்! - அவதானி -
நூல்: “எனினும் நான் எழுகிறேன்” | ஆசிரியர்: திரு க.நவம்
மொழிமாற்றங்கள் ஒன்றும் புதிதல்ல, நூல் வெளியீடுகளும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் எவற்றை மொழிபெயர்க்கிறோம், அவற்றை எங்ஙனமாய் மொழி மாற்றங்கொள்ளும் மொழிக்குள் உள்வாங்குகிறோம், அவற்றை யார் மூலமாக யாரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்பவற்றை இந்நூலும் இந்நூல்சார்ந்த வெளியீடும் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் வாயிலாக,வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் இவ்வரைபின் முக்கிய நோக்கம்.
இந்நூலுக்கு முகவுரை எழுதியவன் என்ற வகையில் , நூலைப்பற்றியும், இந்நூல் வெளியீடு பற்றியும் என் மனதில் தோன்றியதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இக்குறிப்பின் இன்னொரு காரணமாக அமைகிறது.