அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி.... - வ.ந.கிரிதரன் -
ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார் திசாநாயக்க பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியத்துவம் மிக்க கட்டுரையொன்றினை 'அநுரா குமார திசாநாயக்க; “இடதுசாரி” நட்சத்திரம் இலங்கையில் உதயம்' என்னும் தலைப்பில் டெய்லி மிரர் (இலங்கை) பத்திரிகையில் எழுதியுள்ளார். அதிலவர் அநுரா குமார திசாநாயக்கவின் வாசிப்பு மற்றும் நீச்சல் பழக்கம் பற்றியும் விபரித்துள்ளார். அவற்றின் மூலம் அநுரா எவ்விதமான நூல்களை வாசிப்பார், எத்தகைய தேகப்பயிற்சி அவருக்குப் பிடித்தது போன்ற விடயங்களை அறிய முடிகின்றது.
அநுரா தனது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் தீவிர வாசிப்பாளராக இருந்தவர். அவர் தனக்கு மிகவும் நூல்கள் என லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', மார்க்சிம் கோர்க்கியின் 'தாய்' சிங்கள எழுத்தாளரான மகிந்த பிரசாத் மாசிம்புலாவின் ( Mahinda Prasad Masimbula ) 'செங்கொட்டான்', மோகன் ராஜ் மடவாலாவின் (Mohan Raj Madawala) 'ஆடரனீயா விக்டோரியா' ஆகிய நாவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறுகதைகள் பலவற்றையும் தனக்குப் பிடித்ததாகவும் குறிப்பிட்டதாக டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.