அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1965 - 1966 காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியான டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் அர்த்தசாஸ்த்திரம் பற்றிய, வள்ளுவர் பற்றிய கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகளை அ.ந.கந்தசாமி எழுதியுள்ளார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியான வேறு பல ஆங்கில பத்திரிகை, சஞ்சிகைகளில் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியிருந்திருக்கக் கூடும். அவை பற்றிய விபரங்கள் மேலதிக ஆய்வுகள் மூலம் பெறப்பட வேண்டும்.