பதிவுகள் முகப்பு

பாரதிராஜா! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதிராஜா என்று தமிழ் திரைப்பட உலகில் சாதனை படைத்தவன் மறைந்து விட்டான். கிட்டத்தட்ட 49 வருடங்களின் முன்னர், 1977இல் “16 வயதினிலே” என்ற படத்திற்கூடாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா தனது காலப் பகுதியில் சில பிரமாண்டங்களை தராமல் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம் அன்று இருந்திருக்கக்கூடிய காலச் சூழல் என்பதும் நீதியரசர் பகவதி கூட பொது நல வழக்கு (Public Interest Litigation) என்ற கருத்தாக்கத்தை இக்காலத்திலேயே அறிமுகம் செய்தார் என்பதும் குறிக்கத்தக்கது. ஆதலால் இது தற்செயல் அல்ல என புரிவது பொதுவில் சிறப்பானது.

“அலைகள் ஓய்வதில்லை” (1981) தனது முக்கிய படம் என பாரதிராஜா வரையறுப்பார். தேசிய விருது பெற்ற “முதல் மரியாதை''யைத் தாண்டி (1985) அவர் இப்படத்தை தேர்வது இவரது சிறப்பம்சம். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இவர் மனக்கண்களில் வடித்து வைத்திருக்கும் முஸ்லீம் பெண் கதாப்பாத்திரத்தை மட்டும் எடுத்துவிடக்  கோருவார். “முஸ்லிம்- இந்து விவகாரத்தை நீங்கள் தொடாதீர்கள்… என்பது அவர் விடுத்த வேண்டுகோள்” எனக் கூறுவார் பாரதிராஜா.

தனது 16 வயதினிலேக்கு பிறகு தனது கால்களை ஓரளவு உறுதியாக தமிழ் திரைப்பட உலகில் பதித்துக் கொண்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலமே புரையோடி போயிருந்த முஸ்லிம்-இந்து உறவுகளை சீர்படுத்தும் விதத்தில் செயல்படலானார். முஸ்லிம்-இந்து என்ற இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு பதின் வயது இளசுகளிடையே தோன்றும் காதல் குறித்தும் இறுதியில் இவ்விளசுகள் இருவருமே தத்தமது மத அடையாளங்களை தூக்கி எறியும் காட்சிகளையும் பிரதானமாக படம் பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறுவார்:

“இறுதியில் அந்த முஸ்லிம் பெண் தனது பர்தாவை அப்படியே கழற்றி தூக்கி எறிவதாக நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை கற்பனையிலேயே வடிவமைத்தும் இருந்தேன். ஆனால் அமைச்சரின் இந்த கோரிக்கைகயை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை… படம் வெளிவந்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததேன்…இறுதியில் இந்த முரணை ஒரு இந்து-கிறிஸ்தவ முரணாக மாற்றிக் கொண்டேன்…”

இது அவரது காலம் முழுவதும் தொடர்ந்த ஒரு கதையாகின்றது. அதாவது ஆதிக்க சக்திகள்  கலைஞன் ஒருவனை  வாங்குவதும் சிதைப்பதும்,  உருவகப்படுத்தி தமக்கேற்ற வகையில் உருவாக்குவதும் இச்சமூகம் கூறும் விடயமாகின்றது.

மேலும் படிக்க ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் கற்குவையும்! - முனைவர் ஆ. சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன்-
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி களாய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் இரு நடுகற்கள் மற்றும் ஒரு கல்குவையை அரை கிலோமீட்டர் இடைவெளியில் அடையாளம் கண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் கிழக்குப் பார்த்தவாறு இரு நடுகற்கள் உள்ளன. அவை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதி எல்லையில் இருந்து இரண்டு கிலோமிட்டர் தொலைவிலும் சிங்காரப்பேட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளன. அவற்றில் இடப்பக்கம் உள்ள நடுகல்  மூன்றடி உயரமும் இரண்டே முக்கால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன் நேராக நின்றவாறு இருக்கிறான். அவனது இடதுகால் முன்னோக்கி நிலத்தில் ஊன்றி நிற்கிறது. வலது கால் இடதுகாலை நோக்கியவாறு உள்ளது. வலது கையில் கூர்மையான வாளை வைத்துள்ளான். இடையில் இடைக்கச்சையும் கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல் மற்றும் இடது பகுதி உடைந்துள்ளதால் அவனது இடது கையில் என்ன வைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவ்வீரனுக்கு வலப்புறமாக ஒரு காட்டு மாட்டின் உருவம் ஒன்று சிறிய அளவில் உள்ளது. அது அவ்வீரனைத் தாக்குவதாக உள்ளது.   

மேலும் படிக்க ...

ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதனின் வாழ்வும் பணிகளும்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர் -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி -
ஆய்வு
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                      [எழுத்தாளர் முல்லை அமுதன் ]

மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

முல்லை அமுதன் பிறப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் கல்லியங்காட்டில் 27.08.1954ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை இரத்தினசபாபதி. தாய் வேதவல்லி. இவர் திருகோணமலை மெதடிஸ்ற் தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். மகேந்திரன் அவர்கள் எழுத ஆரம்பிக்கும்போது புனைபெயராக முல்லை அமுதன் என்ற பெயரை வைத்துக்கொண்டார். காலப்போக்கில் அப்பெயரே நிலைபெற்றுவிட்டது.

முல்லை அமுதன் அவர்களின் படைப்புகள்

முல்லை அமுதன் அவர்கள் நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத்தொடும், யுத்த காண்டம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இன்று என் வீடு அழகாய் இல்லை ஆகிய கவிதை நூல்களையும் விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், ஆத்மா, சிநேகம், யாகம் ஆகிய நாவல்களையும் இலக்கியப்பூக்கள்  என்னும் இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு நூல்கள் இரண்டையும்,  எழுத்தாளர் விபரத்திரட்டு என்ற ஆவண நூலையும் தாமரைத்தீவானின் மொழிநூறு, சுதந்திரன் கவிதைகள் உள்ளிட்ட பிற நூல்களையும் வெளியிட்டுள்ளார். வாழு வாழவிடு, சந்தியில் நில்லாதே, சந்தி சிரிக்கிறது, நல்லமுடிவு, மலராத வாழ்வு ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களுக்கான நூல் கண்காட்சியை நடத்துவதோடு, காற்றுவெளி  இதழையும் வெளியிட்டு வருகின்றார். ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருகின்றார்.

மேலும் படிக்க ...

மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி! - கார்த்திக் , மியன்மார் -

விவரங்கள்
- கார்த்திக் ஜெயபால் , மியன்மார் -
நிகழ்வுகள்
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ பயிற்றுவிக்கும் தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக்]

சுமார் 20 இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் நாட்டில் தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி முடித்த தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.

மேலும் படிக்க ...

சூழலியல் சமநிலை நோக்கில் நீலகிரி படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு! - முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    [படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு]

* கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -


செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.

இயற்கையை உய்த்துணர்ந்து அதை வணங்கவும், வசப்படுத்தவும் இனக்குழு சமூகங்கள் உருவாக்கிய சடங்குகள் சூழல் பன்மியத்தையும், பேணலையுமே பெரிதும் வலியுறுத்துகின்றன. அதிலும், அச்சடங்கியல்சார்ந்த வாய்மொழி வழக்காறுகளின் தலைநோக்கமும் அதுவாகவே இருந்தது எனலாம். அவ்வகையில், நீலகிரியில் வாழ்கின்ற படகர் இனமக்களின் மரபார்ந்த சடங்கான “கரு ஹரசோது” எனும் இறப்புச் சடங்கும் சூழல் சமநிலையை அறிவுறுத்தலையும், பேணுதலையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சடங்குசார்ந்த புரிதலுக்குப் படகர்கள் குறித்த சிறு அறிமுகம் அடிப்படையானதாகும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர்களும் EMPATHYயும்! - லதா ராமகிருஷ்ணன் (பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND) -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.

மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொருவருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறுகிறது.

மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச்சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக் கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர்கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்பதைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமானதாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப்பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத்தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக் கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச்சொல்லியிருக்கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற்பட்ட எல்லா சமூகங்களி லுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தாயிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக்கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?

மேலும் படிக்க ...

சிறுகதை இலக்கியம், சமூக நிஜங்கள் மற்றும் இளம் தலைமுறை - “காலத்தின் கண்ணாடி”! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
இலக்கியம்
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே கதைகள் மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. மனிதனின் அனுபவங்கள், உணர்ச்சிகள், போராட்டங்கள், ஆசைகள், அச்சங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் அனைத்தும் கதைகளின் மூலம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக ஆவணமாகவும், சிந்தனையின் கருவியாகவும், மாற்றத்தின் ஊடகமாகவும் விளங்குகிறது.


இலக்கிய வடிவங்களில் சிறுகதை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறுகிய பரப்பில் ஆழமான கருத்துக்களைத் தாக்கம் மிக்க வகையில் பதிவு செய்யும் திறன் சிறுகதைக்கு உண்டு. சமூகத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குரல்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாழ்வின் முரண்பாடுகள், குடும்ப உறவுகளின் சிதைவு, அரசியல் ஊழல், பாலியல் வன்முறை, போதைப் பழக்கம், தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறுகதை வெளிப்படுத்தி வருகிறது.

ஆனால் இதனுடன் ஒரு முக்கியமான கேள்வியும் எழுகிறது:  சமூகத்தின் இருண்ட பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களை எழுத்தாளர் கதையாக பதிவு செய்வது சமூகப் பொறுப்புள்ள செயலா? அல்லது அது இளம் தலைமுறையைத் தவறாக பாதிக்கும் அபாயமுள்ள செயலா? “இது சமூகத்தில் நடப்பதே; எனவே இது காலத்தின் கண்ணாடி” என்ற வாதம் எந்த அளவிற்கு நியாயமானது? இந்த ஆய்வுக் கட்டுரை, சிறுகதை இலக்கியத்தின் சமூகப் பங்கு, எழுத்துச் சுதந்திரம், சமூகப் பொறுப்பு, இளம் தலைமுறையின் மனநிலைகளில் இலக்கியத்தின் தாக்கம், மற்றும் “காலத்தின் கண்ணாடி” என்ற கருத்தின் உண்மைத் தன்மை ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது.

மேலும் படிக்க ...

தமிழ்ச்சிற்றிதழ் வளர்ச்சியில் 'கனவு'! - முனைவர். ப. தமிழ்ப்பாவை -

விவரங்கள்
- முனைவர். ப. தமிழ்ப்பாவை -
ஆய்வு
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர். ப. தமிழ்ப்பாவை, துணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை  Retd , ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
உடுமலைப்பேட்டை -


125ம் இதழை கனவு ஏட்டி உள்ளது. பெரிய சாதனை. தமிழ் இதழியல் வரலாறு என்பது கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றிய வண்ணமும் மறைந்தவண்ணமுமாக உள்ளன. 1842 தொடங்கி இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் தமிழ் இதழ்கள் 2500 க்கும் மேற்பட்டன (தமிழ் இதழியல் வரலாறு(1842-1950), ரோஜா முத்தையா நூலகத்தரவுகள்). இவ்விதழ்கள், சிற்றிதழ், பேரிதழ் என்று இரண்டு வகைப்பாடுகளில் அடங்கும். தமிழ் இதழியலின் எண்ணிக்கையிலும், ஆழத்திலும் பரப்பிலும் சிற்றிதழ்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன." சிறுபத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை” (குருசாமி,மா.பா. இதழியல் கலை,ப.1-2) என்று தி.ஜ.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். சிற்றிதழ் என்றும் சீரிதழ் என்றும் சொல்லப்படும் இவ்விதழ் தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்வட்டத்தைச் சென்றடையும் இதழ் ஆகும்.

இச்சிற்றிதழ்கள், கட்டுரை, கருத்துரை, விமர்சனங்கள், திறனாய்வு, துறை ஆய்வு, நேர்காணல்கள், விவாதம், கவிதை ஆகிய பலவகைப்பட்ட உள்ளடக்கங்களுடன் தொடங்கின. பொருளீட்டும் நோக்கம் இல்லாமல் வெளிவருகின்ற இச்சிற்றிதழ்கள் கருத்துச் சுதந்திரம் கொண்டவை. புனிதங்களைக் கட்டுடைப்பதிலும், அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதிலும் சிற்றிதழ் பெரும்பங்கு வகிக்கின்றது. "எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டும் நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்" என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் உலகச் சிற்றிதழ்களின் சங்கத்தலைவர் கவிஞர் விதிலை பிரபா (தமிழ்ச் சிற்றிதழ் - கருத்துருவாக்கத்தில் பங்கு, இணையம்).

மேலும் படிக்க ...

செயற்கைப் புலமையும், ஆழ்நிலை அரசின் மறைக்கரமும் அல்லது சகுனிகளும், செயற்கைப் புலமையும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈரானிய-அமெரிக்க உடன்பாடு வெள்ளியன்று சுவிஸர்லாந்தில் கைசாத்திடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது (15.6.2026).
ஆனால், ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் இப்பொழுது கையெழுத்திட்டானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது (16.06.2026). 

உடன்படிக்கைக்கு முன்னர், அமெரிக்கா ஈரானுக்கு தந்த நெருக்குதல்கள் பல.

தரைவழி தாக்குதலுக்காக தனது விமானங்கள் கப்பல்களில் இருந்து, ஆயிரக்கணக்கான துருப்புகளை இறக்குவது உட்பட ஈரானின் நாகரிகத்தைக் கற்காலத்துக்கு அனுப்பி வைக்கப் போகின்றேன் என சபதமிட்டு, தனது அணு ஆயுதப் பாவிப்பு முறைமை ஈறாக, அனைத்து மிரட்டல்களையும் சம்பிரதாய பூர்வமாக ட்ரம்ப் ஈரானுக்கு விடுக்காமல் இல்லை.

இருந்தும், ஈரான் இப்பயமுறுத்தல்களுக்கெல்லாம் மசிந்ததாக தெரியவில்லை. செறிவூட்டப்பட்ட அணு துகள்களை (யுரேனிய துகள்களை) ஈரான், அமெரிக்காவிடம் பவ்வியமாக ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது ஈரானுக்குள்ளேயே அவற்றை அழித்து விட வேண்டும் என்ற நிபந்தனையையும் அது நிராகரித்திருந்தது. மேலும், ஹோமூஸ் நீரிணையானது, எந்தவொரு ஈரானின் சுங்க கட்டுப்பாட்டு வரிகளுக்கும் ஆட்படாது, கப்பல்கள் சுதந்திரமாக நடமாட ஈரான் இடமளிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் பில்லியன் டாலர் கணக்கான சொத்துக்களை, மீள கையளிப்பது தொடர்பில் அமெரிக்கா மேலும் ஆலோசனை நடத்த ஒன்றுமில்லை என்பது போன்ற அமெரிக்காவின் நிலைப்பாடுகள் ட்ரம்பால், ஈரானுக்கு அறிவிக்கப்பட்டே இருந்தன.

இச்சூழ்நிலையில்தான், ஆரம்பத்தில் பாகிஸ்தானும், பிந்திய ஒரு கட்டத்தில் கட்டாரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கின. (அமெரிக்காவின் தூண்டுதலால்?)

இதனை தொடர்ந்தே, அமெரிக்காவின் விட்டுக்கொடுப்புகள் மெதுமெதுவாக இடம்பெற துவங்கின என்பதும், உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடுவது என்பது நடக்கக்கூடிய ஒரு விடயம்தான் என்பதும் வெளிப்பட ஆரம்பித்தன.

மேலும் படிக்க ...

கனேடிய இலங்கை மன்றம்: 'இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜூலைக் கலவரமும் , வெலிக்கடைச் சிறைப் படுகொலையும்' (நந்தன வீரரத்னவின் புலனாய்வு நூலைத் தழுவிய அரசியல்)! - தகவல்: கோணேஸ் -

விவரங்கள்
- தகவல்: கோணேஸ் -
நிகழ்வுகள்
17 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கந்தர்மடம் அ.அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை'- ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம்

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம்
நூல் அறிமுகம்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 

கந்தர்மடம் அ. அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை' கவிதைத் தொகுப்பில் அவ்வாறான அதீத நயம் கொண்ட கவிதைகள் பலவுள்ளன. ஒவ்வொரு கவிதைத் தலைப்புமே சில கதைகளையும் களங்களையும் தன்னுள்ளே கொண்டு உயிரோட்டமாக நகர்கிறது.

புறப்பொருளும் அகப்பொருளுமாக  இவர் தொட்டுச் செல்லும் கவிவரிகள் எல்லைகளால் விரிந்தவை . சொல்லழகால் மட்டுமல்ல பொருள் அழகாலும் மனதினில் நிறைந்தவை.

கருகிய கனவுகளின் பின்னே, துளிர்விடும் எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்வினை நோக்கிக்,  கனவு காணும் கவிஞனின் சோகநெஞ்சினை நிதர்சனமாகக் கவிதைகளில் கொண்டு வருகிறார். பொழிவதற்குத் தயாரான நிறை மழைமேகத்தினை ஒத்ததோர் கனதி கவிதைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது.

அவசியமான இடங்களில் கிண்டலும் கேலியும் மறைபொருளும் மிகுந்த கவிநடை பெரும் உவப்பிற்குரியது. பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் தனிமனித உரிமைகள் எல்லாம் கேள்விக் குறியானதொரு நாட்டில்,  'சொன்னாலும் குற்றமடா சொல்லவிட்டால் துக்கமடா...' என இயன்றளவில் உண்மைகளை வெளிப்படுத்திய எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. எனினும் குறிப்பாலுணர்த்திய சில கவிதைகளின் ஆக்ரோஷமே மனதில் நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க ...

"சோற்றுக்கும் சர்க்கரை வியாதிக்கும் இடையில்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நலந்தானா? நலந்தானா?
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.

சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண் (ரொட்டி) சாப்பிடுவது இழிவாகக் கருதப்பட்டது. அரிசி வாங்கப் பணமில்லாதவர்கள்தான் பாண் சாப்பிடுவார்கள் என்ற கருத்து எங்கள் தீவுப் பகுதி மக்களிடையே பரவியிருந்தது. அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு தவறு என்று இன்று விவாதிக்க முடியாது.

இதை இக்காலத் தமிழ் அரசியலுடன் ஒப்பிடலாம். சிலர் எமது அரசியலை “யாழ்ப்பாண மையவாதம்” என்று சொல்வதைப் போல, இதனை “தீவுப் பகுதி மையவாதம்” எனக் கொள்ளலாம்.

இந்த அரிசியியலில் பழகிப்போன எனக்கு அரிசிச் சோற்றை விட முடியாமல் போனது வியப்பில்லை. இரவில் ஒரு கோப்பை நிரம்பச் சோறு உண்ணுவதைப் பார்த்து, பலமுறை எனது மகள்,

“Dad, this is too much!” என்று எச்சரிப்பாள்.

எனக்கு அரிசிச் சோற்றை இன்னும் இலகுவாகச் சாப்பிடுவதற்கு ஒரு Single Malt Whisky கூட துணைபுரியும்.

மேலும் படிக்க ...

'நந்தலாலா' வழங்கும் பாரதி நூல் அறிமுகம்: எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி!'

விவரங்கள்
- தகவல்: ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார்.


'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச்  சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. 

இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது  தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - 'சினிமாவுக்குப் போன நாடகக்காரர்கள்: தமிழ் சினிமாவின் தொடக்கமும் நாடகமும்'

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்  - 'சினிமாவுக்குப் போன நாடகக்காரர்கள்: தமிழ் சினிமாவின் தொடக்கமும் நாடகமும்'


உரை நிகழ்த்துபவர் :  முனைவர் கி.பார்த்திபராஜா

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

எலும்புகளின் நூலகம்! - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
கவிதை
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடலுக்குள்
ஒரு நூலகம் இருக்கிறது.
அதை
யாரும் திறக்கவில்லை.
ஆனால்
அது எப்போதும் திறந்திருக்கிறது.

அதன் புத்தகங்கள்
காகிதத்தால் ஆனவை அல்ல.
எலும்புகளால் ஆனவை.

ஒவ்வொரு எலும்பும்
ஒரு காலத்தைச் சுமக்கிறது.
ஒரு காயம்.
ஒரு சிரிப்பு.
ஒரு பெயர்.
ஒரு மறதி.

நான்
என் கைகளைப் பார்க்கிறேன்.
அவை
பக்கங்களைப் போலத் தோன்றுகின்றன.
படிக்க முடியாத எழுத்துகளுடன்.
ஆனால்
உணரக்கூடிய அர்த்தத்துடன்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் The Artamonov Business (மூன்று தலைமுறைகள்) நாவல்! - பா.பிரதாரிணி -

விவரங்கள்
- பா.பிரதாரிணி -
ஆய்வு
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1925இல் மாக்சிம் கார்க்கியின் The Artamonov Business (மூன்று தலைமுறைகள்) நாவலானது  ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை யோட்டத்தை சித்தரிக்கும் படைப்பாக இருந்தாலும், The Artamonov Business என்பது ஒரு சராசரி குடும்ப வரலாற்றுத் தாங்கிநிற்கும் நாவல் என்பதைத் தாண்டி ரஷ்யாவில் 1860களில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து 1917 புரட்சி வரையிலான பின்னனியில் ரஷ்ய சமூகத்தவரின் சமூக, பொருளாதார மற்றும் பழக்க வழக்க மாற்றங்களின் வரலாற்றைப் பிரதிபளிப்பதாக அமைந்துள்ளது. இம்மாற்றங்களின் ஆழமான வரலாற்று, சமூகவியல் ஆய்வு என்றே கூறலாம். குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் நடத்தைகளைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் உருவாக்கம், அதன் உள்ளார்ந்த முரண்பாடுகள், மற்றும் இறுதிச் சிதைவு என்பவற்றை இலக்கிய வடிவில் பிரதிபலிக்கிறார்.

நாவலின் முதல் தலைமுறைத் தலைவர் ஆர்டமோனோவ் குடும்பத்தின் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம் மற்றும் வீழ்ச்சியின் படிமுறைகள் சமூக அமைப்புகளின் சுழற்சியையும், அவை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் கடப்பாடுகளையும் கார்க்கி நுண்ணியமாக வெளிப்படுத்துகிறார். முதல்தலைமுறை ஆர்டமோனோவ் தன் முயற்சியையும் உழைப்பையும் நம்பி தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கின்றார். புதிய உலகின் உருசக்தியாக பொருளாதார உருவாக்கத்தில் அவர் உச்சமுன்னோடியாக விளங்குகிறார். இதனால் Ilya Artamonov விடுதலை வென்ற விவசாயியிலிருந்து தொழிலதிபராக மாறிய “ஆரம்ப முதலாளித்துவ மனிதன்” என்பதன் குறியீடாக நிற்கிறார். அவரது முயற்சி ஆற்றல், உழைப்பு மற்றும் தொழில் முனைவுத் தந்திரோபாயத் திறன் ஒரு புதிய பொருளாதார வர்க்கசக்தியை உருவாக்கினாலும், தொழிற்சாலையின் வளர்ச்சிநிலைகள் வெறும் பொருளாதார உச்சத்தில் மட்டும் தாக்கஞ் செலுத்தவில்லை. அவர் உருவாக்கிய தொழிற்சாலை வர்க்க முரண்பாடுகளையும் சமூகப் பிரிவினைகளையும்; விதைக்கிறது. மனித உணர்வுகளின் உறவுகளையும் வாழ்க்கைச் செல்வாக்கு மதிப்புகளையும் மெதுமெதுவாக மாற்றத் தொடங்கியது. தொழிற்சாலையின் அதி விரிவாக்கம், சொந்த குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து, பின் உறவு;களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளே அவ்வுறவுகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக உருபெற்றது.

மேலும் படிக்க ...

முகநூற் பதிவுகள்: மனித குலத்தின் மனச்சாட்சி மௌனமானது! - ப.வி. ஶ்ரீரங்கன் -

விவரங்கள்
- ப.வி. ஶ்ரீரங்கன் -
முகநூல் குறிப்புகள்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -



தமிழ்நாட்டின் சிறந்த கலைஞன் பாரதிராஜா செத்த அதே நாளில் உலகின் மாபெரும் மானுடநேயவாதியும் அறிஞருமுமான ஜீன் சிக்கலரும் (Prof.Dr. Jean Ziegler)  காலமானார் . 

பல தசாப்தங்களாக அநீதிக்கு எதிராகப் போராடிய சுவிச்சர்லாந்து நாட்டின் முதுபெரும் சமூகவியலாளரும் , அரசியல்வாதியும் , புனைவல்லாத எழுத்தாளரும் நாவலாசிரியருமான  ஜீன் சீக்லர் ( Jean Ziegler) தனது 92வது வயதில் காலமானார். சிமோன் டி பூவா , ஜீன் போல் சார்த்தார் , சே குவேரா உள்ளிட்ட பலருடன் நட்பாக இருந்த சீக்லர், சுவிட்சர்லாந்தையும் விமர்சித்தார்; உலகையும் விமர்சித்தார் . 

ஜீன் சீக்லர், 1934’ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பெர்னுக்கு(Bern) அருகிலுள்ள தூன் (Thun ) என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் ஆரம்பத்தில் சுவிஸ்சர்லாந்தின்  தேசிய மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் கூடவே ,  ஜெனீவா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் இருந்தார். அவர் பெர்ன்(Bern) கிரெனோபிலும் பாரிஸ் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தார்.சிறந்த சிந்தனையாளர் ! 

மனித குலத்தின் மனச்சாட்சி மௌனமானது! ஜீன் சீக்லருக்கு வீரவணக்கம் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். உலகின் பசியால் வாடும் மக்களின் குரலாகவும், சுரண்டலுக்கு எதிரான மனித மனச்சாட்சியாகவும் விளங்கிய ஜீன் சீக்லர் தனது 92’ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுடன் உலகம் ஒரு தலைசிறந்த சிந்தனையாளரையும், முதலாளித்துவத்தின் கொடுமைகளை அஞ்சாமல் அம்பலப்படுத்திய போராளியையும் இழந்துள்ளது.

மேலும் படிக்க ...

கனடா உதயன் விருது பெற்ற வவுனியூர் இரா. உதயணன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
15 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் படிக்க ...

குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
13 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.

சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங்களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

மேலும் படிக்க ...

பாரதி பார்வையில் பகவத் கீதை! -முனைவர் செல்லத்துரை சுதர்சன், (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) -

விவரங்கள்
-முனைவர் செல்லத்துரை சுதர்சன் -
ஆய்வு
13 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர் -   -முனைவர் செல்லத்துரை சுதர்சன், (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) -

இந்திய மெய்யியலின் ஆன்மிக மனத்தை, தமிழுக்கேயான உலகநிலைப்பட்ட நவீன சிந்தனை மரபொன்றைக் கட்டமைப்பதற்குத் தளமாக்கி, சிந்தித்தும் எழுதியும் செயலாற்றியும் வினை புரிந்தவன், பாரதி. பண்டைய வேத, உபநிஷத ஞான மரபினூடும் வேதாந்த மரபினூடும், பல்வகை மதநெறிகளின் உட்கிடையான முழுமுதல் பற்றிய அறிவினூடும், தமிழ் நிலத்தின் சித்தர் தத்துவத்தினூடும் அவன் பெற்றிருந்ததும், காலத்தேவையுணர்ந்து புதுமை செய்ததும், அதனைத் தனது பாணியில் முன்வைத்ததுமான கருத்துநிலையை, 'பாரதீயம்' என இக்கட்டுரை கருதுகிறது. தமிழ் நவீனம் என்பதைத் தனியே மொழி, இலக்கிய நவீனமாக அணுகாது, தனது காலத்திருந்த, ஒட்டுமொத்த இந்திய மெய்யியல் சாரத்தினூடு அணுகிய, பாரதியின் தனித்த சிந்தனையின் தேட்டமே, 'பாரதீயம்'. இது, பாரதி நவீன காலத்தில், தமிழுக்கு வழங்கிய தத்துவார்த்தக் கொடை. பாரதீயத்தில் வேத, உபநிஷத் வழிவந்த வேதாந்தமாகிய பகவத்கீதை குறித்த உரையாடல்களே முதன்மையானவை. அவ்வகையில், 'பாரதி பார்வையில் பகவத்கீதை' எனும் பொருளிலான இந்த அறிமுகக் கட்டுரை, கீதையின் தோற்றம், பிரதான அடிப்படைகள் எவ்வாறமைந்தன, சத்திரியர்களின் மேலெழுகையை எதிர்கொண்டு தாக்கியதில் கீதையின் வகிபாகம் எவ்வாறமைந்தது, இந்திய விடுதலை இயக்க காலத்தில் அதன் வரலாற்றுப் பாத்திரம் எவ்வகையில் முதன்மை மிக்கது, தத்துவத்தின் வரலாற்றோட்டத்தில் கீதை மீதான எதிர்க் கருத்தியலை பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், கீதை பற்றிய பாரதியின் நோக்குநிலை எவ்வாறமைந்தது, கீதையூடு அவன் அவாவிய புரட்சி எத்தகையது போன்ற வினாக்களை இக்கட்டுரை அலச முன்னிறுத்துகிறது.

இந்தியத் தத்துவ மரபின் சிகரமான பகவத்கீதை, பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகவும், அகத்தூய்மை, செயலூக்கம், பொதுநலன் ஆகியவற்றைப் பேசுவதாகவும், வேதமரபு சார்ந்த சமூகக் கட்டமைப்புத் தளத்தில் உருவான சிந்தனையாகவும் கருதப்படுவது. 'கீதையை உள்ளடக்கியமைந்த மஹாபாரத இதிகாசம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.4ஆம் நூற்றாண்டு வரையான பல நூறாண்டுகளில் உருவாகியது' என்பார், நா.சுப்பிரமணியன். ஆகையால், இக்காலப் பகுதியிலேயே கீதை உருப்பெற்றதாகக் கருதமுடிகிறது. உபநிஷத்தாகவும், பிரம்ம வித்தையாகவும், யோக சாஸ்திரமாகவும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜூன சம்பாஷணையாவும் கீதை திகழ்வதை அதன் ஒவ்வொரு அத்தியாய நிறைவும் அறிவிக்கிறது. 'உபநிஷத்துக்கள் யாவும் பசுக்கள்' எனவும் 'பால் கறப்பவன் கோபால நந்தனன்' எனவும் 'அருச்சுனன் பசுக்கன்று' எனவும் 'அருந்துவோர் பேரறிவாளர்' எனவும் 'அருந்தப்பெறும் கீதையாகிய அமிழ்தம் மேன்மைமிக்க பால்' எனவும் கீதையின் தியான சுலோகம் கூறுவதால் 'உபநிஷதப் பசுக்களின் பாலே கீதை' என்பது புலனாகிறது.

'தத்வமஸி' எனும் உபநிஷத மகா வாக்கியத்தின் விரிவு கீதை என்பதும், கீதையின் கருத்துக்கள் உபநிஷத்திலிருந்து வளர்ச்சி பெற்றன என்பதும், கீதையின் முழுமையான அமைப்புசார் வடிவத்துக்கு உபநிஷத்துக்களே காரணம் என்பதும், கீதையை வேதாந்தக் கருவூலம் எனக் கருதவைக்கிறது. பெரும்பாலும், யோகம் பற்றிக் கூறும் ஈசாவாஷ்ய, கடோ, முண்டக, சாந்தோக்கிய, சுவேதாஸ்வரத முதலாய பழைய உபநிஷத்துக்களே கீதையின் அடிப்படைக் கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. கீதையானது போர்த் தேரின் தட்டில் உருவாகியமைகூட, உபநிஷதக் கருத்தேற்றலின் ஓர் உருவகமே. 'உடலைத் தேராகவும் மனத்தைக் கடிவாளமாகவும் புத்தியைச் சாரதியாகவும் ஜீவனைத் தேரில் வீற்றிருப்பவனாகவும் அறி. குதிரைகள் புலன்கள். ஈடுபடும் விடயம் பாதை. எந்த மனிதன், விவேக புத்தியாகிய சாரதியால் அடக்கப்பட்ட மனமாகிய கடிவாளத்துடன் உள்ளானோ, அவன் உலகியல் வாழ்க்கைக் கடுவழியின் எல்லையை அடைவான்' என்ற கடோபநிஷத் சுலோகத்தின் வழியே தேர்த்தட்டில் கீதையின் பிறப்பு, உருவகமாகி நிலைபெற்றமை ஓர் உருவகம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க ...

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம்' நூல் வெளியீடும், கலந்துரையாடலும்!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
12 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்

நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்

எழுத்தாளர் க.கலாமோகன் (ஜெயந்தீசன், கே.எல்.நேசமித்திரன் புனைபெயர்கள்)  புலம்பெயர்த் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமை.  புலம்பெயர் தமிழ்ப் படைப்புகளில் அங்கதச் சுவை மிகுந்து வெளிவரும் படைப்புகள் மிகவும் அரிது. இந்நிலையில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் அங்கதச் சுவை மிகுந்த படைப்புகளைத் தருபவர் கலாமோகன்.  கலாமோகன் பிரெஞ்சு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவரது கவிதைகள் பிரெஞ்சு மொழியில் வெளியாகிக் கவனத்தைப் பெற்றிருப்பவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது 'ஜெயந்தீஸன் கதைகள்' மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'நிஷ்டை' மிகவும் கவனம் பெற்ற சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று.  எக்ஸில் வெளியீடாக வெளிவந்துள்ளது.  அதன் பின்னணியில் இருந்தவர்கள் எழுத்தாளத் தம்பதியினர் கற்சுறா & ஜெபா.  தற்போது 'மற்றது' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது 'துவாரம்' சிறுகதைத்தொகுப்பு.  'மற்றது' பதிப்பகம் கற்சுறா & ஜெபா தம்பதியினருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

பயணத்தொடர் : கரிபியன் பயணம் (2) - போட்டரிகோ! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
11 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.

இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரிய தீவு கியூபா ஆகும். அமெரிக்காவிலிருந்து செல்லும் எந்தக் கப்பலும் நேரடியாக கியூபாவிற்குச் செல்வதில்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிற்கு மிக அருகில் ஒரு சிறிய நாடாக இருப்பதே, கியூபாவுக்கு விடுதலை இல்லாத ஒரு பெரிய சாபமாக அமைந்துள்ளது.

நாங்கள் பனாமா கால்வாயைக் கடந்தவுடன் கப்பலின் முக்கிய தரிப்பிடம் போட்டோ ரிக்கோ. இது ஒரு பெரிய தீவாகவும், தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சுமார் 3.5 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். கப்பலிலிருந்து இறங்கியவுடன் எங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். இது கோட்டைகள் நிறைந்த தீவாகும். பல கோட்டைகள் அழிந்துவிட்டாலும், இன்னும் பல அழியாத கோட்டைகள் இங்கு காணப்படுகின்றன.

மேலும் படிக்க ...

கன்னிமாரா வாசகர் வட்டம் நூலேணி பதிப்பகம் நடத்தும் ஹைக்கூ நூல் பரிசுப் போட்டி 2025 பரிசளிப்பு விழா! -

விவரங்கள்
- கன்னிக்கோவில் இராஜா -
நிகழ்வுகள்
11 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தோழர் வேலு சிந்தனையும் செயலும் – ஒரு பார்வை! அண்மையில் இலண்டனில் மறைந்த தோழர் வேலு ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதியான குரல்’’! - மாதவி சிவலீலன் -

விவரங்கள்
- மாதவி சிவலீலன் -
அரசியல்
11 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.

‘’இழப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை. ஆனால் போராடுவதற்கு ஒரு இலட்சியம் இருக்கிறது.’’எனும் சேகுவரா கூற்றுக்கு அமைய வாழ் நாள் முழுவதும் மக்களுக்காகத் தன் சிந்தனையையும் செயலையும் அர்ப்பணித்தவர் வேலு. இலண்டனில் முன்னோடி முற்போக்கு வட்டத்தின் செயற்பாடுகளில் இடப் பெறுகின்ற அரசியல் கருத்துநிலைகள், இலக்கியப் போக்குகள், நூல் குறித்த உரையாடல்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான வெளிப்பாடுகள் என்பவற்றில் வேலுவின் பங்களிப்பு காத்திரமாக இருந்ததென பௌசர் தன் பதிப்புரையில் குறிப்பிடுகின்றார். வேலு இயல்பில் மார்க்சிய லெனினிய கொள்கையாளர்; பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைத் தெளிவாக உள்வாங்கியவர்; மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்பும் இந்திய கம்யூனிஸ்ட் (மக்கள் யுத்தக் குழு) பின்புலமும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவங்களும் சிந்தனை ஆளுமையும் இவருக்கு மேலும் வலுச் சேர்த்தன.

லண்ட ன் – தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்பின் ஆரம்ப ஸ்தாபக உறுப்பினராகிய இவர், அமைப்புத் தொடர்ச்சியாக இயங்குவதற்கு சிறந்த ஆலோசகராக விளங்கி வந்துள்ளார். வடிவேலு என்பது இயற்பெயர் எனினும் தோழர் என்றால் அது வேலு தானென இலண்டன் இலக்கியச் சமூகத்தால் அன்பாக அறியப்பட்டார். ஆனாலும் இந்திய அரச வன்முறையாளர்களின் சித்திரவதைகளினாலும் கொலைகளாலும் கொல்லப்பட்ட தன் தோழர்களான எல் அப்பு, பாலன், சீராளன் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துக்களை சேர்த்துத் தன் பெயரைப் பூபாளன் என மாற்றியிருந்தார். இது அவர், தன் தோழர்களுக்குக் கொடுத்த மதிப்பாகவும் அன்பாகவும் கருதப்படுகின்றது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு! - பதிவுகள்.காம் -
  2. நனவிடை தோய்தல்: பட்டம் விட்ட ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -
  3. லண்டன் பாரதிய வித்ய பவனில் ‘சாஸ்வதம்' - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  4. தமிழக முதல்வருக்கு ஓர் ஆலோசனை! - வ.ந.கி -
  5. கனடா – மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கலைவிழா! - சுலோச்சனா அருண் -
  6. பிராந்திய மொழியின் உக்கிர அழகியல்: சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்’ - ஒரு அதிநவீன வாசிப்பு! (4 & 5) - ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -
  7. திருமுருகாற்றுப்படை - சில வினாக்களும் விவாதங்களும்! - முனைவர் ஆ. சந்திரன்-
  8. ஆய்வு: கம்பராமாயணத்தில் ஜோதிடவியல்! -முனைவர் க.மங்கையர்க்கரசி -
  9. நினைவுக் குளியல் (5): கறை படிந்த கைகள்! - தேவகாந்தன் -
  10. சென்னை 29வது 'சமூக நீதி' திரைப்பட விழாவில்... - சுப்ரபாரதி மணியன் -
  11. பிராந்திய மொழியின் உக்கிர அழகியல்: சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்’ - ஒரு அதிநவீன வாசிப்பு! (2 & 3) - ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -
  12. அமெரிக்க-ஈரான் உடன்படிக்கை: சில யதார்த்தங்களும் சில சங்கடங்களும்! - ஜோதிகுமார் -
  13. அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் !
  14. சிந்தனைக் களம்: ‘செயற்கை நுண்ணறிவு நோக்கில் பண்ணிசை மரபு’
பக்கம் 1 / 129
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி