களத்தில்.... - கடல்புத்திரன் -
1.
சின்னக்கா , அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது . அக்காவிற்கு அந்த மித்திரனின் மீது அபார நம்பிக்கை . காரணம் அவன் அவருக்குப் பிடித்த லகஷ்மி ஆசிரியையின் புத்திரன் . அந்த கிராமத்தில் , ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது . சரஸ்வதியின் (கல்வி) முகம் . பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டு " சாப்பிட்டாயா? "என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள ...மாணவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு . மாணவரின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வேறு கூறுவார் . அங்கே , வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள் .... இடித்தல் முதலான வேலைகள் ,பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள் . விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில் சிறிதளவு நெல்... கொடுக்கிறதும் இடம் பெறுகிறது . கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள் . காந்தி வழி . அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள் . இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும் கூட ...மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை தகர்த்து விடுமா ?
அவனுடைய இயக்கம் தாமரையில் குருநாதி சேர்ந்த போது அவன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருந்தார் . ‘ஆசிரிய மரியாதையை இயக்கத்திற்கு பயன்படுத்துறேன் என்ற உறுத்தல் அவனுக்கும் இருக்கவே செய்தது . அவன் சேர்ந்த போதிருந்த பொறுப்பாளர் ரஞ்சன் அவர் பகுதியைச் சேர்ந்தவர் . அவருடைய வட்டத் தோழர்கள் பாண்டி , அன்டன் , கேதீஸ்...,,அவன் .அதிலே கேதீஸ் குருநாதிக்கு அண்ணன் முறை . அண்ணனுக்குப் பின்னால் எப்பவும் அவர்களுடனேயே இழுபட்டுக் கொண்டிருந்தான்.இயக்கத்திலிருந்தாலும் அன்றாடம் காய்ச்சிகள் . அவனை விட ரஞ்சன் உட்பட மற்றவர்களும் நகரவேலைக்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் .