தலித் முரசு: "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
[இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பெப்ருவரி 9, 2013 காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இவரது தூக்கு தண்டனையையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. அவரது கருணை மனுவை, இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெப்ருவரி 3 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து, டெல்லி திஹார் சிறையில் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி ஒரு பதிவுக்காக வெளிவரும் மீள்பதிவுகளிவை.]
அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...