தோழர் குட்டியின் (சஞ்சீவ்ராஜ்) மறைவு. - ராகுல் சந்திரா -

பாரதியும் சிறுகதை இலக்கியமும்! - முருகபூபதி -
பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல். ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது, பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர். மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில், மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும் வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர் 1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி அதனை இயக்குவதற்காக பரத்வாஜ் என்ற ஆசிரமத்தையும் அமைத்தார். அத்துடன் பாலபாரதி என்ற இதழையும் நடத்தினார். இவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிறது.
பாரதி மறைந்து நான்கு ஆண்டுகளில் வ.வே.சு. ஐயரின் வாழ்வில் பெருந்துயரம் நேர்ந்துவிடுகிறது. தனது குருகுல மாணவர்கள் சகிதம் அம்பா சமுத்திரம் அருவிக்குச்சென்றவிடத்தில், அவரது மகள் அந்த அருவியில் தவறி விழுந்துவிடவும், அவளைக்காப்பற்ற அருவியில் குதிக்கிறார். தந்தையையும் மகளையும் அருவி இழுத்துச்சென்றுவிட்டது. சடலங்களும் கிடைக்கவில்லை. பாரதிக்கு முன்னர் ஐயர் இறந்திருந்தால், பாரதி, ஐயர் பற்றி ஒரு காவியமே இயற்றியிருப்பார்.
நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
பதில்: நிறமும், கருவும் தான்.
கேள்வி: நிறத்தை பற்றி விளக்குவீர்களா?
பதில்: அவரது நிறங்கள் ஆழமானவை. எண்ணற்றவை. நிறங்களை அவர் தேர்வு - தெரிவு செய்வது வித்தியாசமானது. உதாரணமாக வானத்துக்கான அவரது நிறத்தின் தேர்வு படத்துக்கு படம் வேறுபடும். அதுபோலவே மரங்கள், மேகங்கள், பூக்கள், நீர் - இவை அனைத்துமே - தான் கூற வரும் பொருளுக்கேற்ப அவரது கரங்களில் - வித்தியாசப்பட்டு நிற்கும். நிறங்களை அவரே ஆக்கி கொள்வதாகவும் ஒரு கதை உண்டு. பொதுவில் இது ஓவியர்களுக்கு நடக்கும் ஒன்றே. தங்களுக்கு தேவையான நிறங்களை அவர்களே ஆக்கி கொள்வார்கள். அது, உண்மையாக இருக்கலாம் - இவர் ஆக்கியுள்ள நிறங்களை பார்க்கும் போது – கபில வானம், நீல வானம், செம்மஞ்சள் வானம், எத்தனை வானங்கள். அத்தனையும் வித்தியாச வித்தியாசமான அதிர்வுகளை ஏற்படுத்துபவை.
கேள்வி: கவிஞர் ஜெயபாலன் அவர்கள், வான்கோவின், தூரிகையின் அசைவு குறித்து பேசும் பொழுது, தீப்பற்றியெறியும் காட்சியை போல அவரது தூரிகையின் வீச்சு அவ்வப்போது இடம்பெற்றுள்ளது என குறித்தார். அவரது தூரிகை வீச்சைப் பற்றி (Brush strokes) என்ன கூறுவீர்கள்?
பதில்: அவரது Brush strokes பற்றி என்னால் கூறவே முடியாது. என்னால் மாத்திரம் அல்ல. யாராலும்தான் என்றே கூறுவேன். ஏனென்றால் அப்படி அவை இயங்குபவை. தான் எடுக்கும் பொருளுக்கேற்ப, வண்ணங்களை மாத்திரமல்ல தனது தூரிகையையும் வித்தியாச வித்தியாசமாக பாவித்த மகா கலைஞன் அவன். உதாரணமாக ஒரு மூன்றாம் பரிணாமத்தை பெற்றுக் கொள்ள அவர் சமயங்களில் Pallet Knife பாவித்துள்ளதாகவே படுகின்றது. அதாவது, தான் கூறவரும் பாவத்திற்கு, ஓவியத்தின் செய்திக்கு – தூரிகை அவருக்கு போதாமல் போகின்றது.
கேள்வி: அவரது தூரிகை வீச்சை நீங்கள் பின்பற்ற எத்தணித்துள்ளீர்களா?
பதில்: பின்பற்றுவதற்கு முன் அவரது தூரிகை வீச்சு எத்தகையது என்பதனை அறிந்து நான் உள்வாங்க வேண்டி இருக்கின்றது. சில சந்தர்பங்களில் அவர் Pallet Knife ஐ பாவித்திருக்கிறாரோ என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு பூதக்கண்ணாடியின் உதவியுடன் (Magnifiying glass) அவ் ஓவியங்களை நான் நுணுகி ஆராய்ந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அத்தகைய பரிசீலனைகளில் இருந்து நான் வந்து சேர்ந்த முடிவு, வான்கோ அவர்கள் நிச்சயமாக ஒரு Pallet Knife ஐ அல்லது தன் கைவிரலை பாவித்திருக்க வேண்டும் என்பதே. அண்மித்த ஓவிய நிபுணர்கள் Impasto என்னும் technique ஐ அவர் பாவித்துள்ளார் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள்.
கேள்வி: Impasto எனப்படுவது யாது?
பதில்: அது நேரடியாக, colour tubes இலிருந்து canvas க்கு நேரடியாகவே நிறங்களை பிதுக்கி பூசப்படும் ஒரு முறைமையாகும். மேற்படி முறைமையின் போது பிதுக்கப்பட்ட தீந்தைPallet Knife ஆல் அல்லது விரல்களால் அல்லது சிறுகுச்சிகளால் அல்லது சிறு குச்சிகள் போன்ற தடித்த டீசரளாகளால் ஓவியத்திற்கேற்ப அல்லது ஓவியம் கோரக்கூடிய நிபந்தனைகளுக்கேற்ப செதுக்கி வடிவமைக்கப்படுகின்றது. இது ஒன்றாவது.
இரண்டாவது, வான்கோ அவர்கள் தனது oil canvass ஐ செய்யும் போது, நிறங்கள் காயாமல் இருக்கும் பொழுதே இன்னுமொரு நிறத்தை புகுத்திவிடும் அணுகுமுறையை கொண்டிருந்தார் என்றே நம்புகிறேன். உதாரணமாக Orchard in Blossom with view of Arles(1859) என்ற ஓவியத்தை எடுத்தோமானால், மரங்களை அவர் தீட்டும் போது ஒரு கபிலம் கலந்த கருப்பு காய்வதற்கு முன்பே, செம்மண் நிறத்தில் குறுக்கீடும் செய்து மரத்தின் சிறு சிறு வாதுகளை வரைய முற்பட்டுள்ளார். இப்படி, அதாவது நிறங்கள் காய்வதற்கு முன்பே இன்னுமொரு நிறத்தை புகுத்துவது என்பது என்னை போன்ற ஓவியர்களால் முடியாத காரியமாகின்றது. இருந்தும் இதனை நான் முயற்சித்து பார்த்துள்ளேன். ஆனால், நிறங்கள் உருக்குலைவது மாத்திரமல்லாமல், ஓவியமே உருக்குலையும் சந்தர்ப்பங்களையும் நான் கண்டுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில், மலைகளையும் மலைகள் மேல் இருக்கும் மரங்களையும் தீட்டும் போது மலைகளை தீட்டி முடித்து காயவைத்த பின்னரே, மரங்களை வரைவதற்காக தூரிகையை கையிலெடுப்பேன். ஓவிய உலகில் இது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு நடைமுறையாகும். எனது ஆசான்களை டொனால்ட் ராமநாயக்காவும், ரிச்சர்ட் கெப்ரியலும் இதே அணுகுமுறையைதான் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன்.
கேள்வி: எப்படி நீங்கள் அறிவீர்கள்? அவர்கள் படிப்பித்த போது உங்களுக்கு அவ்வாறு படிப்பித்தார்களா?
பதில்: டொனால்ட் ராமநாயக்காவும், ரிச்சர்ட் கெப்ரியலும் தத்தமது ஓவியங்களை தீட்டும் போது அவர்கள் அருகேயே அமர்ந்து, மணிக்கணக்கில், நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றேன். டொனால்ட் ராமநாயக்காவின் கற்பித்தல் முறையானது பொதுவில் அவர் வரையும் பொழுது சொல்லிக் கொடுப்பதும், அல்லது நாங்கள் ஓவியம் தீட்டும் போது அவர் அவற்றை திருத்தி சரியான வழிமுறைகளை காட்டுவதாகும். ஆனால் ரிச்சர்ட் கெப்ரியல் சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட ஓவிய நூல்களை அள்ளியெடுத்து வந்து அவற்றில் காணக்கிட்டும் ஓவியங்கள் குறித்த நுணுக்க முறைகளை எமக்கு கற்பித்ததும் உண்டு.
கேள்வி: உங்கள் ஓவியங்களில் அதிகமாக காடுகள் பற்றிய விவரிப்புகளே அதிகம் காணக்கிட்டுகின்றன.
பதில்: காடு எல்லோரையும் போலவே என்னையும் ஆகர்ஷித்தது. காடுகள் சொல்லமுடியாத ஓர் அமைதியை தருகின்றன. அவற்றை காணக்கிட்டும் மௌன மொழி, பலமாக இதயத்துடன் பேசக் கூடியது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக எனது தந்தை, நான் ஒரு பாடசாலை மாணவனாக இருந்த போது என்னை காடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்வார். எனது வீட்டிற்கு முன்பாக இருந்த சிங்கமலை காட்டிற்கு எனது நண்பர்களுடன் செல்வேன். ஒருமுறை எனது தந்தை பொகவந்தலாவ நகரிலிருந்து ஹோட்டன் பிளேன்ட்ஸ் (பத்தனை புல்வெளிக்கு) செல்வதற்காக ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து தந்தார். உண்மையில் அந்த வழிகாட்டி தந்தைக்கு தெரிந்த குறித்த தோட்டத்து துரையால் அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் ஒரு கையில் துப்பாக்கியுடனும், ஒரு கையில் லாந்தருடனும் எங்களை வழி நடத்தி சென்றார். அதிகாலையில், எனது நண்பர்களுடன் புறப்பட்ட நான் காடுகளின் வழியாக, ஹோட்டன் பிளைன்ட்சை அடைந்த பொழுது கிட்டத்தட்ட பகல் பதினொரு, பன்னிரெண்டு மணியாகி விட்டது. நானும் எனது நண்பர்களும் உணவு பொட்டலங்களை காவி சென்றிருந்தபடியால் உணவுக்கு பிரச்சினையில்லை. ஆனால் வழி நெடுகிலும் இருந்து சில்லிட்ட குளிர்ந்த ஓடையில் முகம் நனைத்து, அந்நீரைப் பருகி எமது களைப்பினை நீக்கிய போது எழுந்த ஆசுவாசங்கள் சொல்லி மாளாது. அன்று நாம் தரிசித்த காடுகள் எவ்வளவு ரம்மியமானவை என்பதனை கூறுதற்கு இன்று என்னிடம் வார்த்தைகளில்லை. அந்தக் காடுகளே வித்தியாசம் பூண்டிருந்தவையாக ஓர் நினைவு. ரம்மியமானவை, பசுமையானவை, மர்மம் சூழ்ந்தவை – நிசப்தம் பொங்கி வழிபவை.
கேள்வி: வான்கோ, காடுகளை மிஞ்சி மனிதனையே தலையாய பாடுபொருளாக்கினான். இது குறித்து என்ன கூறுவீர்கள்?
பதில்: வான்கோ, ஒரு மகா மனிதன். இயற்கையை அவன் வடித்ததுண்டு. ஆனால் அந்த இயற்கையும் கூட மனிதனின் துயரத்தையே தன் பாடுபொருளாக கொண்டதாய்ப் படைத்தான் - அம்மேதை. அவனது வானம் கூட மனிதனை துயர் கொண்டு பார்க்கும். கேள்விகள் எழுப்பும்.
கேள்வி: வான்கோவின் ஓவியங்களில் உங்களுக்கு பிடித்த ஓவியங்கள் யாவை?
பதில்: முதலாவதாக நான் Starry night ஐ தெரிவு செய்வேன். காரணம் அது வரைந்துள்ள முறைமையும் அங்கே தெரிவு செய்யப்பட்ட நிறங்களுமே ஆகும். குளிர்ந்த இரவு, அமைதி, தனிமை, எல்லையற்ற பரந்த பூமி, நீல கபில வானத்தின் கீழ் - இவற்றை மனிதன் புனிதத்துடன் எதிர்கொள்ளும் முறைமை -இவை அனைத்தும் - அங்கே மிக மௌனமாக ஒளிர முற்படுவதாகும். மௌனத்தின் நிசப்தத்தினை இதைவிட பெரிதாக எந்த ஓர் ஓவியத்திலும் நான் கேட்டதில்லை எனலாம். ஒரு வேளை காடுகள் இந்த நிசப்தத்தை தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்த ஓர் தனி ஓவியம் இவ்வளவையும் தன்னுள் அடக்கி, இவ் ஓவியத்தை வாசிக்கும் வாசகனை அசைக்கின்றதே – அதுவே இவ் ஓவியத்தின் சிறப்பு எனலாம். காட்டை வான்கோ வரையாமல் இருக்கலாம். ஆனால் அக்காடு எழுப்பும் நிசப்தத்தை, புனிதத்தை - இவ் ஓவியத்தில் நான் கேட்டேன். இது மாத்திரமல்ல - இன்னும் என்னென்னவோ…!
கேள்வி: அடுத்ததாய்?
பதில்: அடுத்ததாக Potato eaters ஐக் குறிக்கலாம்.
கேள்வி: ஏன்?
பதில்: இவ் ஓவியம், சாதாரண கஷ்டப்படும் மனிதர்களின் வாழ்க்கை – அவர்களின் அத்தகைய வாழ்வில் நீதிக்கான கோரிக்கையை விடுப்பதாகவே நான் காண்கின்றேன். அவர்களது எளிமையான உணவு, ஒளியற்ற அல்லது மங்கலான அல்லது அரையிருட்டு சாப்பாட்டு அறையின் அங்கே ஒரு குடும்பமாய் அமர்ந்து, இருக்கும் எளிமையான உணவை, ஒரு குடும்பமாய் பகிர்ந்துண்ணும் நாகரிகம் - இவற்றை ஓவியன் படம்பிடிக்கின்றான்.
வேறுவகையில், இதற்கூடு சமூகத்திடம் ஒரு கேள்வியையும் எழுப்புகிறான்: இதுவா உங்கள் நாகரிகம் என்றும். இக்காரணங்களாலேயே வான்கோ ஒரு மகத்தான ஓவியனாக எனக்கு தெரிகின்றான். இதனாலேயே, அதாவது இந்த பலத்தாலேயே அவன் ஒரு ஏழையாக, பாலிய காலத்திலேயே இறந்து போனான் என்றும் சொல்லலாம்.
அதாவது, அவனது காலத்து ஓவியர்கள் அனைவரும் - ஏறத்தாழ அனைவரும் - தமது ஓவியத்துக்கூடாக, பெரும் செல்வத்தை நோக்கி ஓடுகையில், அல்லது ஓவியத்துக்கூடாக, வசதியான வாழ்வுகளை நோக்கி ஓடுகையில், இவன் வயல் வெளிகளிலும், சுரங்கங்களிலும், தொழிலாளர் குடியிருப்புகளிலும், விவசாயிகள் மத்தியிலும் அலைந்து திரிந்து தன் வாழ்வை – அல்லது தன் ஓவியத்தை – தேடியவன். அவனது சகோதரன் தியோ இல்லாவிட்டால் அவன் என்றோ மரித்திருக்ககூடியவன் தான்.
இப்படியான, இவனுக்கு எதிரான பார்வைகள் அன்று மாத்திரமல்ல. இன்றும் தொடர்வதாகவே உள்ளது.
மிக சிறிய உதாரணமாக, 1991 இல் வெளிவந்தPocket Encyclopedia of impressionist என்ற நூலை நான் குறிப்பிடுவேன். 1886ம் ஆண்டு வரையிலான Impressionist வகைப்பாட்டை சேர்ந்த அனைத்து ஓவியர்கள் குறித்த தொகுப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது – கிட்டத்தட்ட 21 ஓவியர்களை உள்ளடக்கிய இந்நூல் (Camille Pissaro, Edouard Manet, Edgar Degas, Claude Monet, Pierre-Auguste Renoir,Alfred Sisili) வான்கோவை தொட்டுப்பார்க்காதது திகைப்பூட்டக்கூடியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்த இருட்டடிப்பு ஏன்? அதுவும் இத்தகைய ஓர் மகா கலைஞனுக்கு? இவ்வளவுக்கும் வான்கோ செய்திருக்க கூடிய ஒரு கெடுதல் என்று ஒன்று இருக்குமானால், அது கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களின் கண்ணீருக்கான கேள்வியை ஆழமாக தொட்டு வினவிய ஒன்றை தவிர வேறு ஒன்றும் இருந்ததாக இல்லை.
கேள்வி: கடந்த காலங்களில், “ஏழைகள் அழுத கண்ணீர் கூரிய வாளென கூறுவோர் பெரியோர்” என்ற கூற்றினை நாம் அறிந்தே உள்ளோம். இருந்தும் வான்கோவின் ஓவியம் எவ்வகையில் இவற்றின் மத்தியில் வித்தியாசமுறுகிறது?
பதில்: உயிர். உயிரால் தான் அது வித்தியாசமுறுகின்றது என்பேன். அதாவது, ஒருவனின் கண்ணீரை, நான் வடிப்பதும் வான்கோ போன்ற மகத்தான கலைஞர்கள் வடிப்பதற்குமிடையே அனேக வித்தியாசங்கள் உண்டு.
கேள்வி: இது தொழில்துறை சம்பந்தமானதா? அதாவது தொழில் நுணுக்கங்கள் சம்பந்தமானதா?
பதில்: இல்லை. இதயம் சம்பந்தமானது. வாழ்க்கை சம்பந்தமானது. அவனைப் போல் தன் வாழ்வையே ஓவியத்திற்காக அர்ப்பணித்தவர்கள் எத்தனை பேர். மிக இலகுவாக தன் திறமைக்கூடு அவன் ஒரு பெருஞ்செல்வந்தனாக ஜீவித்திருக்க முடியும். ஆனால் அவன் தேர்ந்ததோ ஒரு கஷ்டப்பட்ட வாழ்வு. இக்காரணத்தினாலேயோ என்னவோ அவனது ஓவியங்களில் அனேகமானவை உயிரோவியமாய் திகழ்கின்றன. சக மனிதனின், சாதாரண மனிதர்களின் அன்றாட, மொத்த வாழ்வையும் தூக்கி நிறுத்துபவையாக அவை இருக்கின்றன.
கேள்வி: வான்கோவின் ‘Wheatfield with Crows’ எனும் ஓவியம் பற்றி என்ன கூறுவீர்கள்?
பதில்: உலகத்தின், அனைத்து மானுட நேயர்களாலும் அற்புதமாய் கொண்டாடப்படும் ஓவியம் இது. ஜப்பானிய, புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் அக்கிரோ குருசோவா, வான்கோவை பற்றிய தனது ஆவணப்படத்தை, (Dreams) மேற்படி ‘Corn Field and Crows’ – எனும் ஓவியத்துடன் நிறைவு செய்கின்றார். இது தற்செயலானது அல்ல. தர்க்க ரீதியானது. தன் வாழ்வின் தரிசனம் முழுவதையும், இவ் ஓவியத்தில், ஒரு பிடிக்குள் அடக்கி விடுகின்றான் கலைஞன்.
எனது நண்பர்களின் தூண்டுதலால், இதே கருவைக் கொண்ட, கவிஞர் சாருமதியின் கவிதை ஒன்றையும் நான் அண்மையில் வாசிக்க நேர்ந்தது. வான்கோவுக்கு சாருமதியை தெரியாது. அதேப் போல சாருமதிக்கும் வான்கோவை தெரியாது. உலகத்தின் இரு துருவங்களில், இரு வேறுபட்ட காலப்பகுதியில் வசித்த இம்மனிதர்களுக்கு பொதுவானது - கண்ணீர்! சாதாரண உழைக்கும் மக்களின் கண்ணீர்! சாதாரண உழைக்கும் மனிதர்களின் மேல் இவர்கள் கொள்ளும் பரிவும் பாசமும், அவரவர் படைப்புகளில் வித்தியாசமுற்ற மட்டங்களில், வித்தியாசமுற்ற தளங்களில், எழுந்து வினா தொடுப்பதாய் உள்ளன எனலாம்.
கேள்வி: இது போல, உங்களை கவர்ந்த ஏனைய உலக ஓவியர்கள் யார், யார்…?
பதில்: பலர்… கான்ஸ்டபிலில் ( ( John Constable) இருந்து…
தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
அத்தியாயம் 7
பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.
ஏற்கனவே பேசிவைத்தபடி, அம்மாவும் நானும் அக்காளிடம் அதிகாலையிலேயே விவரத்தைக் கூறியபோது, அக்கா உண்மையிலேயே அதிர்ந்துபோனதை அவளின் முகத்திலே கண்டுகொண்டேன்.
ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் போலி மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு, புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகைக்குள்ளே பொதிந்து கிடக்கும் வேக்காடு, “இதை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமே….” என்றே கொதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் அந்தக் கொதிப்பு எந்தக் கணமும் சீறி வெடிக்கலாம் என்னும் எதிபார்ப்பு எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
“சந்தோசமான சமாச்சாரந்தான்…. ஆனா, இது எப்பிடி ஏற்பாடாயிச்சு….? நானும் சம்மந்தப் படல்ல….. என் வீட்டுக்காரரும் பஜார் பக்கம் போறதே அத்தி பூத்த மாதிரி…. ஏம்மா உனக்கு கோயிலையும் வீட்டையும் விட்டால் யாரையுமே தெரியாதே…. அப்புறம் எப்பிடி இது சாத்தியப் பட்டிச்சு…..”
இந்த ஏற்பாட்டுக்கான அடிப்படைச் சூத்ரதாரி யார் என்பதைத் தெரிந்து, அவரைச் சுட்டெரித்துவிடவேண்டும் என்று உள்ளுக்குள்ளே அவள் துடிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.
அம்மா பதில் சொன்னாங்க.
“நீ சொல்றது நெசந்தாம்மா….தக்க சமயத்தில ஒதவிபண்ண யாருமே இல்லைண்ணாலும், தெய்வத்தோட ஒதவியும், உங்கப்பா ஆத்மாவோட ஆசீர்வாதமும் இருக்கிறப்போ, அந்த ரெண்டுமே ஒரு கலியாணத் தரகரை பெரிய கோயில்ல வெச்சே அறிமுகப்படுத்தி, என்னய பேசவெச்சு சாத்தியப் படுத்திச்சுங்க….”
“சரிதாம்மா…. மாப்பிளை என்னவேலை…. அவுங்க குடும்பம் எப்பிடி…..?”
அக்காள் கேட்டதும்,
“ஒரு நிமிசம் இரும்மா…. வந்திடுரேன்……” என்ற அம்மா, குழந்தைபோல துள்ளிக்குதித்து தனது அறைக்கு ஓடியதை, கரவோடு அக்காளும், களிப்போடு நானும் நோக்கினோம்.
திரும்பி வந்தபோது, அம்மாவின் கையில், தினசரிப் பத்திரிகை ஒன்று இருந்தது. விரித்துக் காட்டியபோதுதான் கவனித்தேன். சரியாக இரண்டு வாரங்களூக்கு முன் வெளிவந்த பத்திரிகை அது.
“மணமகள் தேவை” பகுதியில், ஒரு விளம்பரத்தைச் சுட்டிக் காட்டினாங்க அம்மா.
“மதுரையைச் சேர்ந்தவரும், சென்னையில் வங்கி ஒன்றில் தலைமைப் பீடத்தில் மேனேஜராக இருப்பவரும், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவரும், ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளவருமான, முற்போக்குவாத சமூக சீர்திருத்த எண்ணங்கொண்ட , முப்பத்தைந்து வயது மணமகனுக்கு, அழகும் ஓரளவு படிப்பும் உள்ள மணமகள் தேவை.
தாரம் இழந்தவர்கள், விவாக ரத்துப் பெற்றவர்கள், அங்க ஊனமுற்றவர்கள், முப்பது வயதுக்கு மேற்படாதவர்கள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.
வரதட்சணை இல்லை. ஜாதி அவசியமில்லை. விபரங்களுக்கு…….
விலாசம் அரைப் பக்கத்துக்கு நீண்டது. விறைத்துப்போய் நின்றாள் அக்கா.
அமைதியைக் கலைத்தாக அம்மா.
“இந்தப் பத்திரிகையைத்தான் தரகர் ஏங்கிட்டதந்து, பேசினாரு…. தங்கச்சி போட்டோவையும், அவ படிப்பு, வாழ்க்கை சம்பந்தமான விவரத்தையும் நான் குடுத்தேன்…..
மாப்பிள்ளை வீட்டுக்குப் புடிச்சுப் போச்சு….. மதுரையிலயிருந்து காரில வர்ராக…. வந்து புரோக்கரை சந்திப்பாக…. வந்தவங்க எல்லாரையும் புரோக்கர்தான் இங்க கூட்டிக்கிட்டு வருவாக….. காலையில ஒம்பது டூ பத்தரைக்குள்ள வந்திடுவாக…..”
அம்மா பேசப்பேச அக்காளின் முகம் மாறிக்கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. உள்ளூரக் கொதிக்கும் எரிமலை சீறி வெடித்தது.
“இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம எதுக்காகச் செய்யிறீங்க….. தங்கச்சிக்கு கால் ஒண்ணு இல்லேங்கிறத்துக்காக, ஏற்கனவே தாலி அறுத்தவன்தான் கட்டிக்க வரணுமா….?”
ஒருகணம் துடித்தே போய்விட்டாக அம்மா.
“என்னடீ நீ…. இந்த நேரத்தில இப்பிடியான வார்த்தயை பேசிக்கிட்டு…. ஆண்டவனே…. நல்லது நடக்கப்போற நேரத்தில இப்பிடியொரு அபசகுன வார்த்தய கேட்டுபுட்டேனே….. என்ன ஆகப் போவுதோ…..”
நொந்துகொண்ட அம்மா ஒருகணம் அமைதியானாங்க.
“சரிசரி…. போனதெல்லாம் போகட்டும்….. மாப்பிளை வீட்டுக்காரங்க வந்து….. எல்லாத்தையும் பேசி முடிச்சுப் போறவரைக்குமாவது, நம்ம குடும்பச் சண்டையை தூரத் தள்ளி வெச்சிக்குவோம்….. நீயும், மாப்பிள்ளையும் முன்னால நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிச்சிட்டீங்கண்ணா ரொம்ப புண்ணியமா இருக்கும்மா….”
அக்காளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாங்க. என்னையும் அறியாமலே என் கண்கள் குளமாயின.
கருணை மழையால் கரைவதற்குக் கருங்கல்லால் முடியுமா? அல்லது கல் நெஞ்சக் காரியிடம் கருணைதான் பிறக்குமா?
இந்த இரண்டு வார்த்தைகளை எப்படித்தான் மாற்றி,மாற்றிப் போட்டாலும் தருகின்ற அர்த்தம் ஒன்றுதானே.
அதற்காக இவளிடமெல்லாம் போய், கையெடுத்துக் கும்பிடும் அம்மாவின் செயல், எனக்கு அதிகப் பட்சம்போல தோன்றியது.
அம்மாவை இத்தகைய நிலைமைக்கு ஆளாக்கிய அக்காள்மீது, கோபம் கோபமாக வந்தது எனக்கு.
பேயாக மாறிப் பேசினாள் அக்கா.
“ஓ…. முன்னால வேற நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிக்கணுமா….. முடிச்சுப்புடுறேன்…. எல்லாத்தையுமே முடிச்சுப்புடுறேன்….. இதை மட்டுமில்ல….. இனிக் காலத்திலயும் எவனுமே எங்களைக் கலந்துக்காம இவளைப் பொண்ணுகேட்டு வர்ரதை இத்தோட முடிச்சுப்புடுறேன்…. அவங்க வர்ரப்போ முன்னால போய் வீட்டு வாசல்லயே முடிச்சுப்புடுறேன்…..”
வருபவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, நோகடித்து விரட்டிவிடும் நோக்கோடு, உக்கிர ரூபம் எடுக்கின்றாள் அக்கா என்பதைப் புரிந்துகொண்ட அம்மாவுக்குள், அப்போது வந்ததைக் “கோபம்” என்பதைவிட, “வெறி” என்பதே பொருத்தமாகும்.
ஆமாம் ; அக்காளை நோக்கி வெறியோடு பாய்ந்தாங்க அம்மா. கண்கள் இரண்டும் சிவப்பேற, “கொலை வெறி” என்பார்களே, அதை இப்போதுதான் அம்மாவிடம் பார்த்தேன்.
அம்மாவின் இரண்டு கைகளும், ஏக காலத்தில் அக்காளின் கழுத்தைப் பற்றின.
“ஏட்டி…… எடுபட்ட செருக்கி முண்டை….. உன்னையெல்லாம் பொறந்த வூட்டுக்குள்ளயே கொண்ணிருந்தா நான் எப்பவுமே சந்தோசமா இருந்திருப்பேன்…. ”
மறுகணம் யாருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் தலை மயிரைப் பற்றிப் பிடித்தாள் அக்காள்.
“கெழட்டுச் செருக்கி…. இந்த வயசிலயே ஒனக்கு இத்தனை “தில்” இருந்தா, ஒன்னய விடச் சின்னவ எனக்கு , எப்பிடி “தில்” இருக்கும்…. பாரு….”
இதற்குமேல் பொறுமையாயிருக்க என்னால் முடியவில்லை. வலது கைப் பக்கமிருந்த கைத்தடியை எடுத்து, தலை கீழாகப் புரட்டி, கால்ப்புறத்து விளிம்புப் பகுதியை கையிலே இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, நன்றாக ஓங்கி, எனது பலம் அனைத்தயும் ஒன்று திரட்டி, அக்காள் முதுகிலே ஒரு “போடு”போட்டேன்.
“ஐயையோ………………”
அலறியபடி எனதுபக்கம் திரும்பினாள் அக்காள்.
அவளின் இரண்டு தொடைகளிலும் படுமாறு நன்கு குறிபார்த்து, அடுத்தடுத்து நாலைந்து “போடுகள்” போட்டேன். நிற்க முடியாமல் கீழே விழுந்தாள்.
அடுத்தகணம், எப்படித்தான் இத்தனை வேகம் வந்ததோ எனத் திகைக்கும் வண்ணம், என் மீது பொங்கிப் பாய்ந்தார் அத்தான்.
அவரது வலதுகரம், என் கழுத்தைப் பற்றியது.
“ஏண்டீ …… சின்னக் கழுதை….. ஆத்தாளும், பொண்ணுமா மாறி,மாறி அடிக்கிற அளவுக்கு என் பொண்டாட்டி ஒங்களுக்கு கிள்ளுக்கீரை ஆகிட்டாளா…. ஒன்னய கொல்லாம விடமாட்டேன்….”
சொல்லியபடி, பக்கத்திலேயிருந்த சமையல் அறைப்பக்கம் இழுத்துச் சென்றார்.
கதவின் உள்ப்புறத்தே சுவரிலே ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த பிரம்பு அவரது கைக்கு வந்தது. அவர்களது மகன் அவ்வப்போ சேட்டைகள் பண்ணும்போது, அடிப்பதற்காக அக்காள் வாங்கிவைத்தது அது.
அத்தானுக்கு இருந்த கோபத்துக்கு, என்னை அடித்துத் துவைத்து தொங்கப் போட்டுவிடுவார் என்றே நினைத்தேன். அவரோ என் காதருகே வந்து மெதுவாகப் பேசினார்.
“என்னால செய்ய முடியாததை நீ செய்து முடிச்சிட்டே ….. இதை நீ எப்பவோ பண்ணியிருக்கலாம்…. நான் இப்போ இந்தப் பிரம்பால தரையில அடிக்கப் போறேன்…. நீ சத்தமா, உங்க அக்காளுக்கும், அம்மாவுக்கும் கேக்கிறமாதிரிக் கத்தணும்…. அடுத்து முக்கியமான சமாச்சாரம், உங்கக்காளை தூக்கிக்கிட்டுப் போய், ஆஸ்பிட்டல்ல ஒருமாசத்துக்கு இருக்கிறமாதிரி அட்மிட் பண்ணப் போறேன்…. அம்மாகிட்ட சொல்லி, ஒரு மாசத்துக்குள்ள கலியாணத்த நல்லபடியா முடிச்சிடச் சொல்லு….. கலியாணத்துக்கு என்னையெல்லாம் எதிபாக்காத….. வர முடிஞ்சாத்தான் வருவேன்….. எப்பவும் உனக்கு என் ஆசி இருக்கும்…. சரியா……”
வேக வேகமாக சொல்லிவிட்டு, பிரம்பாலே தரையைப் பதம் பார்த்தார். சமையலறை அதிரும்படி அலறினேன் நான்.
விவரம் தெரியாத அம்மாவோ,
“அடிக்காதீங்க மாப்பிளை……..’’ என்று அலறியபடி வந்து, என்னை வெளியே கூட்டி வந்தாங்க.
மறுகணம், மிக வேகமாக வந்த அத்தான், எழுந்து நிற்கமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் அக்காளைத் தூக்கி, எங்கள் காரின் பின் சீட்டிலே கிடத்திவிட்டு, வண்டியை ஸ்ராட் பண்ணப்போனவர்…..
“அடடா …… சாவியை மறந்துபோயி டேபிள்ளையே வெச்சிட்டு வந்திட்டேன்…… ஒரே நிமிசம்….. எடுத்திட்டு வந்திடுறேன்…..”
சொல்லியபடியே வீட்டுக்கு ஓடிவந்தார். வேகமாக வந்த அத்தான், என்னையும், அம்மாவையும், சமையல்காரப் பையனையும் ஒன்றாக வைத்து என்னிடம் சொன்ன சமாச்சாரம் ;
“எந்தக் காரணம் கொண்டும், உங்கக்காவுக்கு நீ அடிச்ச சமாச்சாரம் மாப்பிளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியக்கூடாது..... உங்கக்காவைப்பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரியும்னாலும், இப்ப நடந்த சம்பவத்த அறிஞ்சா, நியாய - அநியாயத்தப்பத்தி ஆராச்சி பண்ணமாட்டாங்க….. உன்னயபத்தி மனசில ஒரு தப்பான எண்ணத்த வளத்துக்குவாங்க….. அதோட விளைவு எப்பிடியிருக்குமோ சொல்ல முடியாது…..மாடிப்படியில இறங்கும்போது, கால் சிலிப்பாகி விழுந்திட்டாங்கன்னு மட்டுந்தான் சொல்லணும்….. புரியிதா…..”
அதுவரை எங்கோ போயிருந்த அவர்களது மகன், புறப்படும் நேரத்தில் சரியாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டான்.
அம்மா என்னைத் துரிதப்படுத்தினாக.
“ இந்தப் பீடைகிட்ட பேசாமலே இருந்திருக்கலாம்போல தோணுது எனக்கு….. டைமை பாரு…. எட்டு ஆவுது….. சீக்கிரமா போயி குளிச்சிட்டு, நல்ல சாறியா ஒண்ணைக் கட்டிக்கிட்டு வா.......”
எங்களைவிட , சமையல்காரப் பையன் வெகு துரிதமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலித்தான்.
அம்மாவின் பார்வை அவன்மீது விழுந்தது.
“நாங்க குளிச்சிட்டு வந்த கையோட சுடச்சுடக் காப்பி ரெடியா இருக்கணும்….. புரிஞ்சிச்சா…….”
அடுத்து, அவன் பேசிய பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“இப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியாதும்மா….. இண்ணைக்கு எங்க குட்டியம்மாவ பொண்ணுபாக்க வர்ராங்க இல்லியா….. அப்போ நான்மட்டும் அழுக்கா நிண்ணா, வர்ரவங்க என்னயபத்தி என்ன நெனைப்பாங்க….. இப்பவே நானும் வாய்க்காலுக்குப் போயி, ஒரு கட்டி சோப்பும் தேயிற அளவுக்கு நல்லா தேச்சுக் குளிச்சிட்டுத்தான் வருவேன் பாருங்க….. காப்பிய நீங்களே போட்டுக்குங்க…..”
எங்கள் பதிலுக்கு எதிர்பாராமல், துடைக்கும் டவல் துண்டை எடுத்துக்கொண்டு கால்வாய் பக்கம் ஓடினான்.
“கிறுக்குப் பயல்….. என்னவோ இவனை மாப்பிளை பாக்க, பொண்ணு வீட்டுக்காரங்க வாறமாதிரி ஓடுறான் பாரு……”
சிரித்தபடி பேசினாங்க அம்மா.
அவன் மனதிலுள்ள மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும்போது, என்னோடு கூடப்பிறந்தவள் துச்சமாகப் பட்டாள்.
“சரீம்மா….. குளிச்சிட்டுக் காப்பி போடுறப்ப அவனுக்கும் சேத்துப் போட்டுடுங்க…..”
மெதுவாக மாடிக்கு நகர்ந்தேன்.
[தொடர்ந்தேன்]
மஹாகவியும் கட்டற்ற தேடுலும் சில குறிப்புகள்! - ஜோதிகுமார் -
1
பேராசிரியர் நுஃமான் அவர்கள்,, மஹாகவி குறித்து 1984இல் எழுதிய,, தனது அறிமுகத்தில்,, அவரது உள்ளடுக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:
1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும்,, போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21
இறுதியில் குறிப்பார்:
“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம்
எடுத்துக்காட்ட
முடியும்… ஆயின் அவை புறநடைகளே.
புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக்
கொண்டு ஒரு
கவிஞனை நாம் மதிப்பீடு
வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும்
முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய
ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்
கொண்Nடுன்”;. ப-45
மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.
“புறநடைகளை நாம் ஒதுக்கி விடுவும்
முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும்
விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.
அதாவது,, ஏன் இப்படி,, ஒரே வீச்சில்,, „ஒதுக்கி விடுவும் முடியாது‟ என்று கூறும் அதே கணத்தில் „ஒதுக்கியும்
விடு;Nடுன்‟ என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.
ஆனால்,, சற்று நிதானித்துப் பார்க்கும் போது,, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது,, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடுயம்.
இருந்தும்,, மேற்படி “புறநடையை ஒதுக்கிவிடும்” அணுகுமுறைக்கு நேரெதிராக திரு. முருகையன் அவர்கள் மஹாகவி பொறுத்து எழுதியுள்ள “மஹாகவியின் சிறு நாடகங்கள்” என்ற தனது அறிமுகக் குறிப்பைப் பின்வருமாறு நிறைவு செய்வதும் அவதானிக்கத்தக்கதே:
“மஹாகவி எனும் கவிஞனின் இயல்பான வளர்ச்சியின் இன்றியமையாத ஓர் அங்கமாக அவரின் சிறு நாடகங்களும் அமைந்து விடுகின்றன என்பதில் ஐயமில்லை”ப-120
(முருகையன்,, சிறுநாடகங்கள் பொறுத்தே குறிப்பிட்டிருப்பினும்,, 'ஒதுக்குவது' என்ற ஒரு கேள்வியின் பின்னணியில்,, சிறுநாடகம்,, பா நாடகம்,, காவியங்கள்,, தனிப்பாடல்கள் - அவற்றின் உள்ளடக்கங்கள் - உருவங்கள் - இத்தியாதி - இவை அனைத்தும்,,
ஏதோ ஒரு வகையில் கைக்கோர்த்து விடு செய்யும் என்பதும்,, அஃது,, கவிஞனின் ஆளுமையில் இருந்து பிரித்தெடுக்க முடியாத
சங்கதிதான் என்பதும் மறுதலிக்க முடியாதபடி புலனாகிவிடும்).
அதாவது,, மஹாகவியின் குறித்த சில கவிதைகளை,, ஒருவர் “புறநடை”,, “தேவையற்றது” என்று கருதத் துணிகையில் மற்றவரோ அவை “இன்றியமையாத அங்கம்” தான் என்று கூற முனைவது அவரவர் பார்வை வித்தியாசங்களை எடுத்துரைப்பதாக உள்ளது.
இருந்தும்,, இத்தகைய,, விமர்சகர்களுக்கிடையிலான முரண்பட்ட
நிலைமையினை சம்பந்தப்பட்ட
கவிஞன்
மாத்திரமே தோற்றுவிப்பவனாக இருக்கின்றானா அல்லது சம்பந்தப்பட்ட விமர்சகர்களுக்கிடையே
முகிழ்க்ககூடிய வேறுபட்டதான கருத்துநிலைகளும்,, இப்பார்வை வித்தியாசங்களுக்கான ஊக்குவிப்பு காரணிகளாக அமைந்து போகின்றனவா அல்லது இவை இரண்டு காரணிகளும் ஏதோ ஒரு வகையாக சம்பந்தமுற்ற நிலைமையில் இம்முரண் காணக்கிடக்கின்றதா என்பதுவும் கூட நிதானித்து நோக்கத்தக்க ஒன்றேயாகும்.
மஹாகவியின் கவிதைகளின் உள்ளடக்கம் அல்லது அவரது கவிதை வெளிப்பாடு முறைமையானது.
முக்கியமாக அன்றாட
வாழ்க்கை அல்லது அன்றாட
வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்பதனை சிக்கென
பற்றிப் பிடித்துக் கொண்டுதாகவும்,, „பேச்சோசையை‟ அதன் முதன்மை வெளிப்பாடுhகக் கொண்டு
இயங்குவதாகவும்,,
கடுபு; ல
காடு;சியை
கடுடு;
மைப்பதாகவும் விபரிக்கப்பட்ட வருகின்றது.
இத்தகைய ஒரு அடித்தளத்திலிருந்தே,, ஓர் சமூகத்தின் ஆசாரங்களை அவர் எதிர்ப்பதும்,,
சமத்துவத்தையும் மானுடு
நேயத்தையும் போற்றுவதும்
நடுந்தேறுவதாகக் கூறப்படுகின்றது (அல்லது
கடுடி; யெழுப்பப்படுகின்றது). அதாவது,, மஹாகவியின் முக்கியத்துவம் ஆசாரங்களை எதிர்;ப்பதிலும்,,
சமத்துவத்தை நாடுவதிலும்,, மானுடு நேசத்தை வழிமொழிவதிலும் உள்ளடுங்குகின்றது என்பதனை விடு
அவர் அன்றாடு நிகழ்ச்சி அனுபவத்தைத் தமது கவிதையில் சித்திரிப்பதில் வெற்றி கணடுhர் ;. அதன்
வாயிலாகப் பேச்சோசையை அல்லது ஓர் விவரண
நடையை
சென்றடைந்தார் என்பதிலேயே அவரது
முக்கியத்துவம் அடுங்குவதாக கூறும் போக்கு இன்று தலையெடுக்கின்றது.
இத்தகைய ஒரு பயணத்தின் போதே,, மஹாகவி,, பாரதியையும் விஞ்சும் ஒரு கவிஞனாக,, தனது
பேச்சோசை மூலமாகவும்,, தன் விவரண
நடையின் மூலமாகவும்
காடு;சி
தருவதாக பேராசிரியர்
நுஃமானாலும் திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்களாலும் ஒருங்கு சேர விதந்துரைக்கப்படுகின்றது.
2
திரு.சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கூறுவார்:
“இந்த அன்றாடு நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிவுதிறனும் கண்டுப்பிடிப்பாற்றலும் (வாய்க்கப்) பெற்றது”.ப-58
இக்கூற்றானது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததே.
ஏனெனில்,, இந்நகர்வே மேலே கூறியது போன்று,, அடிப்படையில்,,மஹாகவி அவர்கள் பாரதியை தாண்டுவதற்கும் கால்கோளாகின்றது என்பது திரு. சண்முகம் சிவலிங்கத்தின் கருத்தாகின்றது.
திரு. சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:
“தமிழ் நாடு;டில் விருத்தப்பாவில் இருந்து வசனக் கவிதைக்கு வந்து,, அதிலிருந்து அன்றாடு
வாழ்க்கையை நோக்கி திரும்பாமல்
அதிலிருந்து (அன்றாடு வாழ்விலிருந்து) பெற்ற கருத்துக்களை நோக்கி திரும்பி,, கருத்து தளத்தில் தமது கவிதையை இயக்க
(தமிழ்நாட்ட
கவிஞர்) முற்பட்டனர்”
“இது அவர்களை,, தனிமையும் விரக்தியும்
கொண்டு
ஒரு „கருத்துமுதல் வாதத்திற்குள்‟ ஆழ்த்தி விட்டது.”
மேலும் கூறுவார் சண்முகம் சிவலிங்கம்:
“(ஆனால்) கருத்துமுதல் வாதத்துக்குள் அகப்படுhமல் யதார்த்த நிகழ்ச்சி அனுபவங்களுக்குள் வந்து சேர்ந்தார் மஹாகவி”ப-58 மேற்படி கூற்றுக்களில் முக்கியத்துவப்படும் மூன்று விடுயங்கள் வருமாறு:
i. ஒன்று,,
அன்றாடு
நிகழ்ச்சி அனுபவம் என்பது மஹாகவியின் தலையாய கவிதை
பரப்பாகின்றது என்பது.
ii. இரண்டுhவது,, இவை யதார்த்த நிகழ்ச்சி என்று வரையறை செய்யப்படுவது.
iii. மூன்றாவது,, இத்தகைய அடிப்படையில் பிறப்பெடுக்கா கவிதைகள் கருத்துமுதல்வாத கவிதைகள் என வகைப்படுத்தப்படுவது. (கருத்து தளங்களில் இயங்குபவை.)
குமரன் கவிதைகள் எனக் கூறப்பட்டவற்றை எடுத்துக்கொண்டுhலும் கூடு,, அவை பெருமளவில் நேரடி
அன்றாடு நிகழ்ச்சியனுபவத்தையோ அல்லது பேச்சோசையையோ வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவு.
இருந்தும் இக்காரணத்தினாலேயே இவை கருத்துமுதல் வாத கவிதைகள் என வகைப்படுத்தப்படு முடியுமா என்பது கேள்வியாகின்றது.
அதாவது,, அவை அன்றாடு வாழ்க்கை நிகழ்ச்சியில் இருந்து நேரடியாக முகிழ்க்காமல்,, அவ்வாழ்க்கை
நிகழ்ச்சிகள் ஏற்படுத்தித் தந்த கருத்து கோலங்களிலிருந்தே பிறப்பெடுப்பதாய் உள்ளன என்பதாலேயே
இவற்றை இங்கே நாம்,, கருத்துமுதல் வாத கவிதைகள் எனப் பொருள் கொள்ளலாமா என்பதே கேள்வி.
இருந்தும்,, கருத்துதளங்களில் இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் கருத்துமுதல்வாத கவிதைகள் என்பதுமில்லை – அதுபோல யதார்த்த நிகழ்வுகளில் இருந்து இயங்க முற்படும் கவிதைகள் அனைத்தும் பொருள்முதல்வாத கவிதைகள் என்பதும் இல்லை என்பதெல்லாம் தெரிந்த விடுயங்களே.
உதாரணமாக,, இன்குலாப்பின் கவிதைகள் சில,, கூறுமாப்போல்,,
அன்றாடு
வாழ்க்கை நிகழ்ச்சிகளில்
இருந்தும்,, பேச்சோசை கொண்டும் உருப்பெற்றிருக்கவில்லை என்பதனால் மாத்திரம் அவற்றை கருத்துமுதல்வாத கவிதைகள் என எப்படி வகைப்படுத்தப்படு முடியாதோ அப்படியே,, மேற்படி தர்க்கத்தின் அடிப்படையும் அமைகின்றது. மொத்தத்தில் கருத்துமுதல் வாதத்தின் தோற்றுகைக்கான வேர்கள் எப்படி வேறுவகைப்பட்டவையாக இருக்கின்றனவோ அதேப்போன்று பொருள்முதல் வாதத்திற்கான தோற்றுவாய்களும் வேறுபட்டவையே.
சுருங்க கூறின்,, வரலாற்றில்,, கருத்து முதல்வாதம் என்பதும் பொருள்முதல் வாதம் என்பதும் மிக தெளிவாகவே வரையறை செய்யப்பட்ட வந்ததாய் இருக்கின்றது. இவற்றை குழப்பிக் கொள்வது பொருந்தாதது.
இவை அனைத்தையும் ஒன்று கூடு;டிப் பார்க்குமிடுத்து,, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டம் ஒரு வகை
தெளிவின்மையும் ஒருவிதமான தள்ளாட்டமும் மிகத் தெளிவாகவே
இருக்கின்றது.
அடையாளம் காணக்கூடியதாக
இருந்தபோதும்,, பேச்சோசைக்கும் (அல்லது அன்றாடு நிகழ்ச்சி அனுபவம் என்பதற்கும்) கருத்துமுதல்
வாதத்திற்குமான மேற்படி தொடுர்பாடுல்களை ஒரு கணம் ஒதுக்கிவிட்ட,, மேற்படி குறிப்புகளில் காணக்கிட்டம்,, யதார்த்தம் பற்றிய புரிதல்களை தெளிவுபடுத்திக் கொள்வது,, விடுயங்களை மேலும் சரியாக வகைப்படுத்திக் கொள்ள உதவுவதாக அமைதல் கூடும்.
3
மஹாகவியின் எழுத்துக்களில் மேலோங்கும் „யதார்த்த பண்பு‟ என்ற விடுயம் பொதுவில் சண்முகம்
சிவலிங்கத்தாலும் பேராசிரியர் நுஃமானாலும் மிக அழுத்தமாகவே பல்வேறு இடுங்களில் பதியப்பட்டள்ளது.
நுஃமான் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:
“மஹாகவி,, புனைகதைக்குரிய யதார்த்தத்தைக் கவிதைக்குள் கொண்டு வந்தவர். அவரது „யதார்த்தம்‟ கருத்து ரீதியானது
அல்ல
காடு;சி ரீதியானது”.ப-17
“கிராமிய வாழ்வை „யதார்த்தப10ர்வமாக‟ சித்தரிக்கும் இப்படைப்புகள் (மஹாகவியின் படைப்புகள்) தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன” ப-10
“மஹாகவியின் கிராமிய சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட
நிலைகளை காண முடியும்… ஆரம்ப காலத்தில்
காணப்பட்ட
கற்பனாவாதமும் (சுழஅயவெiஉளைஅ) பிற்காலத்தில் அவரிடும் வலுப்பெற்ற „யதார்த்தவாதமும்‟ (சுநயடளைஅ) இந்த
வேறுபாட்டக்குக் காரணம்…”
மேற்பட்ட
கூற்றுகளில் „யதார்த்தப10ர்வமான சித்தரிப்பு‟ என்பதும் „யதார்த்தவாத பாற்பட்டது‟ என கூறவரும்
போக்குகளும் சகஜமாக மீள மீள இடும்பெறுவது அவதானிக்கத்தக்கதே.
இதேபோன்று சண்முகம் சிவலிங்கம் அவர்களும் மஹாகவியை ஓர் யதார்த்தவாதியாக பின்வரும் வழிகளில் காணுகின்றார்:
“மஹாகவி போல்,, தமிழ் நாடு;டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்றாடு
வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்ற
பௌதீக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்படையை வேறாக இருந்திருக்கும்…” ப-58
நோக்கி திரும்பியிருந்தால் இன்று தமிழ்நாடு;டின் கவிதை சரித்திரம்
“மஹாகவி…. கருத்து முதல்நிலைக்கு உடு;படுhமல்,, கால்குத்தி நின்றார்…” ப-58
திடுமான,, மெய்மையான,, யதார்த்தமான அன்றாடு
நிகழ்ச்சி அனுபவங்களில்
“மஹாகவி தமிழ் கவிதைக்கு உருவாக்கிய கலையம்சம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என்கிறோம்…” ப-178
“மஹாகவியின்,,„ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்‟ யதார்த்த நெறியையும்,, கொண்டுள்ளது”.
இடையீடு
இட்ட
அமைப்பு முறையையும்
சுருக்கமாகக் கூறினால்,, பேராசிரியர் நுஃமான் - திரு.சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரது பார்வையிலும் மஹாகவி ஓர் யதார்த்தகநெறியை பின்பற்றிய கவிஞன் எனக் கணிப்பிடுவது தெளிவாகின்றது.
இக்கூற்றுக்களே எம்மை யதார்த்தநெறி பொறுத்த வரைமுறை சார்ந்த கேள்விகளுக்கு அமைந்து விடுகின்றது.
4
இட்ட செல்வதாய்
இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும்,, கைலாசபதியாலும்,,
கார்க்கியாலும்,, லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டக்காட்டப்படு;Nடு வந்துள்ளது.
கற்பனாலங்காரத்திற்கும் (சுழஅயவiஉளைஅ),, இயற்பண்பு வாதத்திற்கும் (யேவரசயடளைஅ) யதார்த்த வாதத்திற்கும்
(சுநயடளைஅ)
இடையே
உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படும் பிடித்துக்
காட்டப்பட்டள்ளன.
டுhல்ஸ்டுhய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:
“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டம் அவரது…”
சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம்
“டுhல்ஸ்டுhயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு,, ர~;ய தொழிலாளி வர்க்கமானது,, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும்
அதிகமாகக்
கூடு;டிக்
கொள்ளும்…” ப-31 63
இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:
“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும்
கடுமை ப10ண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின்
பிரதான சுழிப்புகளையும்,,
கூடுவே,, அதன் அற்ப
ஓட்டங்களையும்,, அன்றாடு
வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன்
வீறுகளையும்,, எழுச்சிகளையும்,, வீழ்ச்சிகளையும்,, செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும்,, அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…” p-
“கூடுவே,, குறித்த ஓர் நெறிமுறையானது,, அஃது அவனது தனிப்பட்ட
பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம்
இழந்தும் போயிருப்பினும்,, அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு
துண்டுங்களா (குசயபஅநவெள) அல்லது ஒரு புதிய
உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடுமை ப10ண்டுள்ளான்” p-
கார்க்கியினது மேற்படி கூற்றில் யதார்த்தவாதத்தின் அடிப்படை வரையறுக்கப்படுகின்றன என்பது தெளிவு.
பண்புகள் எப்படியாய்
இறுதிகணிப்பில் யதார்த்தவாதம் என்பது,,
இடும்பெறும்
ஓட்டங்களில்,, நாளைய உலகின் நிர்மாணிப்புக்கான
ஓட்டத்தை அல்லது அதற்கான முளைகளைக் கண்டுணர்ந்து தேர்ந்து கொள்வது என்பதனை தனது முன்நிபந்தனையாகக் கொள்வதாய் அமைந்து போகின்றது.
இதுவே,, மறுபுறத்தில்,, இயற்பண்பையும் (யேவரசயடளைஅ),, யதார்த்தவாதத்தையும் (சுநயடளைஅ) வேறுபிரித்து எல்லை கோடுhகவுமாகின்றது.
[தொடரும்]
**************************************************
5
காட்டம்
இருந்தும் பேராசிரியர் நுஃமான் அவர்களும்,, திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்களும் இப்படியான ஒரு
அணுகுமுறையில் இருந்து அந்நியப்பட்ட,, மஹாகவி அவர்களின் பேச்சோசையையும்
அன்றாடு
நிகழ்ச்சி
அனுபவத்தையையும்,, அதனை அவர் படும்பிடித்த நேர்த்தியையும் மாத்திரமே முதன்மைபடுத்தி,, அவரை
ஒரு யதார்த்தவாதி என வரையறை செய்து அமைந்து போகின்றது எனலாம்.
அடையாளப்படுத்த முனைவதிலேயே,, சிக்கலின் தோற்றுவாய்
இவற்றை,, சற்று நின்று நிதானித்து நோக்கும்போது,, „யதார்த்தப10ர்வமாய் சித்தரித்தல்‟ என்பதே
„யதார்த்தவாதமாகும்‟ அல்லது „யதார்த்தவாத நெறியாகும்‟ என வரையறை செய்;து குழப்பி வைத்துக் கொள்ளும் தப்பான போக்கு மேலெழுவதைக் காணலாம்.
இவை அனைத்தும் இரண்டு கேள்விகளை முன்னிலை நோக்கி நகர்த்துகின்றன:
1. யதார்த்தப10ர்வமான வாழ்க்கையை இவர்கள் சித்தரித்தார்கள் எனும் போது,, யாருடைய வாழ்க்கையை இவர்கள் யதார்த்தப10ர்வமாகச் சித்தரித்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
2. மேலும்,, யதார்த்தப10ர்வமான சித்தரிப்பு என்பதே யதார்த்தவாதம் என்பதாகுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
அதாவது,, அன்றாடு
வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவத்தைக் „கறாராகப்‟ படும்பிடித்ததின் காரணமாக இவரை
(மஹாகவியை) ஓர் யதார்த்த வாதியாக வரையறை செய்து கொள்வதற்கு முன்,, இவர் படும் பிடித்ததாய்க்
கூறப்படும்
அன்றாடு
வாழ்க்கை நிகழ்ச்சியானது மொத்தத்தில்
யாருடைய அன்றாடு
வாழ்க்கை நிகழ்ச்சி
என்பது முதல் கேள்வியாகின்றது.
திரு. சண்முகம் சிவலிங்கம் போன்றோரால்,, பெரிதும் உவந்து போற்றப்படும்,, இவரது படைப்புகளில் ஒன்றாகிய,, „ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்‟ பிறப்பு தொடுக்கம் இறப்பு வரையிலான ஒரு மத்தியதர வர்க்கத்து மனிதனின் ஸ்தீரமற்ற நிலைமையினை சித்திரித்து „உயிர் ஒரு நெடுந்தொடுர் பரிணாமம்‟ என்பதனை உணர்த்துவதாய் உள்ளது எனக் கூறப்படுகின்றது. ப-158 - 176
“இளமை,, வாலிபம்,, ஆண்-பெண் உறவு,, முதுமை முதலியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாக காணும் முயற்சியே அது…”
“வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போக,, அதனை ஒரு உயிர்ப்பு இயக்கமாக காணும் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அதனை குறிப்பிடுலாம்”என மேலும் விஸ்தரிப்பார் திரு. சண்முகம் சிவலிங்கம்.
இங்கே,, மேலே குறித்தவாறு,, „யாருடைய
வாழ்விது‟ எனும் கேள்வி பிரதானமானதாய் இருக்க,, மறுபுறம்,,
“வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போவதாய்” பார்ப்பதில் உள்ள “யதார்த்த நெறி”
யாதாயிருக்கக் கூடும் எனும் சிக்;கல் மிக்க கேள்வி இங்கே உருவாவது தவிர்க்க முடியாததாகின்றது.
ஏனெனில் சகல முரண்பாடுகளும் உள்ளடுங்கி போன ஒரு நிலையில்,, யதார்த்த நெறி கோரும்
„முரண்களின் தேர்வு‟ என்பது அவசியமற்ற ஒன்றாகின்றது. சுருங்கக் கூறினால்,, கார்க்கியும் லெனினும் டுhல்ஸ்டுhயும் கைக்கொண்டு யதார்த்த வாதத்திற்கும் மஹாகவி பின்பற்றிய யதார்த்த நெறிக்கும் எவ்வித ஒட்டறவும் இல்லை என்பது தெளிவாகின்றது.
„சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடுங்கி போன நிலையில்‟ „வாழ்வை ஒரு உயிர்ப்பு இயக்கமாக‟ காணும் முயற்சி ஒன்றே இங்கே விதந்துரைக்கப்படுகின்றது.
சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:
“ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கை சரித்திரம்” கதாநாயகனாகிய முத்தையனுடைய “வாழ்க்கை” ஓர் உழல்வின் அச்சிலே சுழல்வதாக தெரிகின்றது(ஓர் கட்டத்தில்). நெடுக அவனுடைய வாழ்க்கையிலே ஓர் அர்த்தமற்ற தன்மையும்,, தனிமையும்,,
ஒதுங்கியலும் நிச்சயமின்மையும் விரவி சொல்லப்பட்டள்ளது… ப. -141
கிடுக்கக் காண்கின்றோம்… அவனது வாழ்க்கையில் தென்பட்ட
வெறுமை… பலபடு
இப்படிப்பட்ட
ஓர் சித்தரிப்பிலேயே,, யதார்த்த நெறி கோரக்கூடிய „வாழ்வின் எழுச்சிகளையோ‟ அல்லது „புதிய
உலகின் முளைகளின் தேடுகையோ‟ அர்த்தமிக்க முயற்சியாக இருக்க போவதில்லை என்பது தெளிவு. அதாவது,, யதார்த்த நெறி கோரும் விதிகளுக்கும் வெறுமையையும் தனிமையையும் ஒதுங்கியலையும் முன்வைக்கும் மேற்படி கவிதைக்கும் இடையில் எந்த ஒரு ஒட்டறவும்,, உறவு முறையும் இல்லாது போய் விடுகின்றது.
அப்படியென்றால் இக்கவிதையின் முக்கியத்துவம்தான் யாது?
கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -
இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் நடந்த இந்தத் தேர்தல் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 6மணி வரை முற்கூட்டியே வாக்களிக்கும் வசதிகளை தேர்தல் கனடா ஏற்பாடு செய்திருந்தது. அதனால் முற்கூட்டியே வாக்களித்தவர் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இதைவிட சுமார் ஒரு மில்லியன் மக்கள் தபால் மூலமும் வாக்களித்திருக்கிறார்கள். 2019 ஆண்டு நடந்த தேர்தலைவிட இம்முறை அதிகமாக வாக்களித்திருந்தனர். இம்முறை சுமார் 37 மில்லியன் வாக்காளரின் பெயர்கள் பட்டியலில் பதிவாகி இருந்தது. கோவிட் - 19 காரணமாக கடைசிவரை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக முற்கூட்டியே அதிக மக்கள் வாக்களித்திருந்தனர். இறுதி நாளான 20 ஆம் திகதி மாலை 9:30 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும், தனியாக அரசமைப்பதற்குக் குறைந்தது 170 ஆசனங்கள் தேவை. முதலாவது தேர்தல் முடிவு சுமார் 7:10 மணியளவில் வெளிவந்தபோது லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால், முடிவுகளில் சிலசமயம் மாற்றங்கள் ஏற்படலாம்.
கவிதை: கனவில் வந்த காதல் நாய்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
வாலை ஆட்டிக் கொண்டே
என்னை ஏறெடுத்துப் பார்த்தது அந்தத் தெருநாய்
திரும்பவும் கண்ணை மூடுவது போல் படுத்துக்கொண்டது
மீண்டும் வேடிக்கையாக வீரியத்துடன் விழித்தது
பசிதான் காரணம் என்று நினைத்தேன்
மனிதர்களைப்போலவே
கொரோணாக் காலத்தின்
உணவுப் பிரச்சினை அதுக்கும்
முன்பெல்லாம்
மனிதர்களின் மிச்ச உணவாலேயே
பசியை போக்கிக் கொண்டதாம்
மனிதனால் கைவிடப்பட்ட
அவமானப்பட்ட
வேதனைப்பட்ட குரலாக
அன்றும் இன்றும் அந்தத் தெருநாய்