பாரதம்: அகிலேஷ் யாதவின் ஆட்சி உ.பியின் புதிய தொடக்கத்துக்கு விதை போடுமா....
உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை ஆதரித்து வந்த கிராம தலித்தலைவர்களை உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள். பல தலைவர்கள் படுகாயம்பட்டு மருத்துவமனையில் தாமாகவே சேர்ந்தார்கள், அவர்களுள் ஒருவர் உயிரிழந்தார்.