பதிவுகள் முகப்பு

'கோட்டா கோ' எதிர்ப்பலைகளும் , இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜூன் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் எதிர்ப்பலைகள், ஒன்று, ஜனநாயக ஏற்பாட்டினை நோக்கி அசையக்கூடும் - அல்லது பாசிசத்தை நோக்கி நகர கூடும் என்பது கலாநிதி அகிலன் கதிர்காமரின் கணிப்பானது. (பௌசர் Zoom Meeting)). இருந்தும் இந்தக்கூற்றானது பிரதமர் ரணில் பதவி ஏற்பதன் முன்னர் வெளிவந்தது, என்பதும் குறிக்கத்தக்கது. இவ் எதிர்ப்பலையானது 1971, 1989இன் எழுச்சிகள் போல் தனித்து இயங்காது, ஒரு சமூக தளத்தை அரவணைப்பதாகவும், ஓர் தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவும் இருந்தது-இருக்கின்றது. (இவற்றில், வடக்கு மக்கள் எந்தளவில் இணைய முற்பட்டனர் என்பது தனித்து வாதிடப்பட வேண்டிய விடயமேயாகும்). தமிழ் மக்கள் இதில் இணைய வேண்டும் என்று ஒருபுறத்தில் சுமந்திரன், கலாநிதி அகிலன் போன்றோர் அபிப்பிராயப்பட்டாலும், புலம்பெயர் அரசியலின் நிலைப்பாடு என்பது, துருவமயமாக்கலை தொடர்ந்தும் தக்கவைத்தல், என்ற அரசியலை, மையமாக வைத்தே இயங்குவதாய் அமைந்திருந்தது. இது புலம்பெயர் அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் ஆதிக்க சக்திகளுக்கும், கூடவே, மேற்கின் நலன்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விடயம்தான் என்பதில் ஐயமில்லை. வடக்கு மக்களை தனிமைபடுத்தும் இந்நிகழ்ச்சி நிரலானது கடந்த காலங்களிலும், (தேர்தல் உட்பட) நடந்தேறியுள்ளது என்பதும் அவற்றுக்கு பல்வேறு வல்லரசுகளின் பின்னணி உண்டு என்பதெல்லாம் பிறிதான விடயங்களே. ஆனால், எதிர்ப்பலைகளானது மேலே கூறப்பட்டது போல, ராணுவமயமாக்கலுக்கும் அடித்தளம் அமைக்க கூடும் என்பதும், அதற்கான சமிஞ்சைகள் மிக தெளிவான முறையில் இலங்கை அரசியலில் ஏற்கனவே வெளிவரத் தொடங்கி இருந்தன என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு அதிகரிப்பு! - முருகபூபதி -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
02 ஜூன் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 34 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம், இவ்வாண்டு முதல், உதவியைப் பெற்றுவரும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது. இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், போர் முடிவுற்ற பின்னர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் தெரிவுசெய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் மனிதநேயம் மிக்க அன்பர்களின் ஆதரவினால் இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் ( Centre for Child Development ) வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( Voluntary Organization For Vulnerable Community Development – VOVCOD) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) மற்றும் கம்பகா மாவட்டத்தில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆகியனவற்றின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. இந்த உதவியின் மூலம் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, கம்பகா, மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: பாடகர் கே.கே திடீர் மறைவு!

விவரங்கள்
-ஊர்க்குருவி -
கலை
01 ஜூன் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உண்மையிலேயே இந்தியப்பாடகர் என்று கூறத்தக்க வகையில் இந்தியாவின் பன் மொழிகளில் பாடிப் புகழ்பெற்றவர் பாடகர் கே.கே (கிருஷ்ணகுமார் குன்னுத்). கேரளாவைப் பூர்விகமாகக்கொண்ட குடும்பம் இவருடையது, ஆனால் இவர் பிறந்தது புது தில்லியில்.

ஆரம்பத்தில் கே.கே என்னும் ஈர் எழுத்துகள் மூலம் என் கவனத்தை ஈர்த்த பாடகராக விளங்கியவர். நீண்ட நாட்கள் அவ்வெழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெயர்களையோ அல்லது அவரது உருவத்தையோ நான் அறிந்திருக்கவில்லை.

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: யாழ் நூலக எரிப்பு இலங்கை வரலாற்றில் கறை படிந்த நாள்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜூன் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜுன் 1 இலங்கை வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள். ஆம்! யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது யூன் 1 , 1981 இரவுதான். எரியுண்ட நூலகத்தில் அரிய ஆய்வு ஆவணங்கள், சுவடிகள், நூல்கள் பலவும் எரியுண்டு போயின. நூலக எரிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி தமிழ் அறிஞர் தாவீது அடிகளின் உயிரையும் பறித்துச் சென்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை : பூக்கொத்து!  -  கடல்புத்திரன் -

விவரங்கள்
-  கடல்புத்திரன் -
சிறுகதை
28 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ? , வடக்கு , கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்.....அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே ! . இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே . அங்கே , போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது . செய்வார்கள் எனப் படவில்லை . குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டு கொண்டு இருக்கப் போறார்கள் . இன்று , பஞ்சம் , பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது . மனிதர்களை மனிதர் நம்புறதால் , நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும் . அல்லா விட்டால் , வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது . பொலிஸ் , பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும் ? விவசாயத்தையும் , பொருளாதாரத்தையும் வளர விடாது ....படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் .

இங்கே மாமர நிழல் இல்லை ,கீச்சூ ,கீச்சூ என்ற பறவைச் சத்தமில்லை , சுத்தமான நீர்,காற்று...சுகம் காண முடிகிறதா ? என்ன . ஒரு ஏலியன் குடியிருப்புக்குள் வந்து இருப்பது போல இருக்கப் போறார்கள் .நகரத்தின் புறப்பகுதியில் கொண்டோவில் இருக்கிறான் . பல்கணியை அடைக்கலாம் என்ற அனுமதி இருப்பதால் கண்ணாடியால் அடைத்து விட்டிருக்கிறான் . அதிலே திரைச்சீலையை இழுத்து விட்டு ஆசையுடன் இரவில் வானத்தையும் சாலையையும் பார்த்துக் பார்த்துக் கொண்டு நிற்பான் . விண்மீன்களைத் தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை . அப்பாவிற்கு அதிலே சீலைக்கதிரையைப் போட்டு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார் . " அது என்னப்பா சீலைக் கதிரை ? " என்று அவனுடைய வால் ஆறுமுகம் கேட்கிற போது " அது ஈசி செயார் " என்றான் . ஐஞ்சு வயசாகிற அவனுக்கு விளங்க மாட்டாதே ...எனத் தோன்ற கையில் வைத்திருந்த அப்பிள் பலகையில் எடுத்துக் காட்டினான் . " ஒரு பாடியோ கதிரை ". ஒன்லைனில் வாங்கலாம் தான் .உடைந்து விழுகிற அதற்கு விலை அதிகமாகவே போட்டிருந்தது . தமிழ்க்கடைகளில் குறைவாக இருக்கலாம் . கிராமத்தில் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறது .

மேலும் படிக்க ...

டி.எம்.எஸ் என்னும் மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே 25 டி.எம்.எஸ் நினைவு தினம்!

எங்கள் தலைமுறையைப் பொறுத்தவரையில் நாம் இவருடன் கூடப் பயணித்தவர்கள். எம் உடல் வளர்ச்சியில், உள வளர்ச்சியில் இவர் எம்முடன் கூடப் பயணித்தார். காதல், வீரம், இன்பம், துயரம் என்று எம்மைத் தாக்கிய பல்வகை மானுட உணர்வுகளுக்கும் வடிகாலாக இருந்தவர். இன்று வரை இருக்கின்றார். இருந்தபோதும் இருந்தார். இல்லாதபோதும் இருக்கின்றார். மே 25  இவரது நினைவு தினம். நினைவு கூரச் சிறிது தாமதமாகி விட்டது. அதனாலென்னஓவ்வொருநாளும்தான் இவரை ஏதோ ஒருவகையில் நினைவு கூர்கின்றோமே. டி.எம்.எஸ் என்னும் மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும்.

https://www.youtube.com/watch?v=Zo9Lgy7kaso

சிறுகதை: வேட்டை! - நந்தினி சேவியர் -

விவரங்கள்
- நந்தினி சேவியர் -
சிறுகதை
27 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்ததினம் மே 25.  முகநூல் மூலம் நான் தொடர்பு கொண்ட எழுத்தாளர்களில் மூத்த எழுத்தாளர்கள் பலரடங்குவர். அவர்களில் முகநூலில் என்னுடன் அதிகம் உரையாடியவர்களில் நந்தினி சேவியரும் முக்கியமானவர்.  தானிருந்தவரை தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் நிலைகுலையாதவராக, உறுதியுடன் நின்ற ஒருவராகவே அவரை நினைவில் வைத்திருக்கின்றேன்.  எழுத்துகளால் தான் வாழ்ந்த உலகின் அவலங்களைச் சாடியவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளாராகவும் விளங்கியவர். - வ.ந.கி -


1.

“பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து "உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும் தட்டி, நாய்க்கு உற்சாகம் கொடுக்கிறார் தம்பர். நாயும் நெருங்கிய. அடர்ந்த.பற்றைக்குள் எல்லாம் அனாயசமாக வளைந்து, நெளிந்து, ஊர்ந்து, பதுங்கி மோப்பம் பிடிக்கின்றது. “வெள்ளையா. உதுக்குள்ளான் கிடக்கு . விட்டி டாதை.எழுப்படா. எழுப்படா..." மீண்டும் மீண்டும் உற்சாகமூட்டுகிறார் தம்பர். நாய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தம்பர் ஒரு நிலையில் இல்லை. அவர் வேட்டை யிலேயே லயித்து . "கிடக்கடா . கிடக்கடா .. விட்டி டாதை.விட்டிடாதை.எழுப்பு.எழுப்பு." தம்பரின் உற்சாக ஒலயினால் அந்தப் பற்றைப் பிராந்தியம் அமைதியை இழந்து அல்லோலப்படுகிறது. வெள்ளையன் எதையோ மோப்பம் பிடித்துவிட்டது. தம்பர் உசாராகிறார்.

“வெள்ளையா.அதுதான் ரா.இடைஞ்சலாய்க் கிடத் தால் மற்றப் பக்கமாய் வந்து, சுத்திவளை. மற்றப்பக்க மாய் வா.”

நாயைவிடத் தம்பரின் உற்சாகம் கூடிவிட்டது. அவர் சுற்றிச் சுழலுகிறார்.

வெள்ளையன் பற்றைகளை இடறி எறிவதும், வெளியில் வந்து பற்றையைச் சுற்றிச் சுற்றி ஒடுவதும். மீண்டும் பற்றைக்குள் புகுந்து இடறி இடறிக் கால்களால் மண்ணைத் தோண்டி ன்றிவதும்.தோண்டிய இடத்தில் முகத்தை வைத்துமுகர்வதுமாய் போராடுகிறது.

“வெள்ளையா.விலகு நான் பார்க்கிறேன்.என்ன புத்துக்கை விழுந்திட்டுதே. கொஞ்சம் விலகு வெள்ளையா!”

விலகவே மனமில்லாது நிற்கும் நாயைப் பலாத்கார மாக விலக்கிவிட்டுத் தமது கையிலுள்ள கத்தியினால் பற்றைகளை வெட்டி வழிசெய்து கொண்டு புற்றை நெருங்குகிறார் தம்பர்.

“இது என்னடாப்பா.இடைஞ்சலாய்க் கிடக்குது. மம்ப்ெட்டியாலை கூட வெட்டேலா போல கிடக்கு. வெள்ளையா. தம்பி.வாடா. வந்து விட்டு வீசாடியா நிண்டு பார்.என்னாலை வெட்டேலா.புத்துக்கை இடக்குது போல. வந்து பாரடி ராசா."

இயலாத நிலைமையை உருக்கமான வார்த்தைகளால் வெள்ளையனுக்குக் கூறி உசார்படுத்துகிறார் தம்பர்.

மேலும் படிக்க ...

பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[சித்திரை மாத 'ஜீவநதி' சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரை 'பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! ' . வாசிக்க ஜீவநதி சஞ்சிகையினை வாங்கி வாசியுங்கள். ஜீவநதி சஞ்சிகையுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.]


தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார். பால்ய விவாகம், விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு என்று பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவை அவரது எழுத்துகள். பாரதியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆய்வாளர்கள் சிலர் பாரதியார் ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவரால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதியார் அப்படித்தான் கருதியிருந்தார? அவரது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை பின்வருமாறு கூறுகின்றது:

"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதியார் மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

அமேசன் - கிண்டில் மின்னூற்பதிப்பாக 'வ.ந.கிரிதரனின் அணிந்துரைகள்'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் எழுத்தாளர்களின் நூல்களுக்கு எழுதிய ஏழு அணிந்துரைகளை உள்ளடக்கிய மின்னூல் 'வ.ந.கிரிதரனின் அணிந்துரைகள்' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற்பதிப்பாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள்.

மேலும் படிக்க ...

மே 29,2022 அன்று அமரர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன் அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்து நாளை மே 29 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதனை முன்னிட்டு, நாளைய தினம் மெய்நிகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா, கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மெய்நிகர் அரங்கில் மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன் ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

சண்முகம் சபேசன் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர். 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை. அவுஸ்திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர். அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 21: “தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்” - தகவல்- அகில் -

விவரங்கள்
- தகவல்- அகில் -
நிகழ்வுகள்
26 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ராஜமாணிக்கம் மாணிக்கம் -
நிகழ்வுகள்
26 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- * அழைப்பிதழைத் தெளிவாகப் பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை ஒருமுறை அழுத்தவும். -

தகவல்: ராஜமாணிக்கம் மாணிக்கம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிகழ்வு: ஒடுக்கப்பட்ட மக்களின் எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசன்)

விவரங்கள்
- தகவல்: க.நவம்-
நிகழ்வுகள்
25 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்ணாமலை கனடா: சங்க இலக்கியம் - மீள் வாசிப்பு (கருத்தரங்குத் தொடர் -9)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
25 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளங்கோவின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு! - தகவல்: டிசெத -

விவரங்கள்
- தகவல்: டிசெத -
நிகழ்வுகள்
25 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - தகவல்: எஸ்.சுதர்சன் -

விவரங்கள்
- தகவல்: எஸ்.சுதர்சன் -
நிகழ்வுகள்
25 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள  படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3

“உன்னை காதலிக்கின்றேன் - அனைத்தையுமே அப்படியே அறிந்து வைத்திருந்தும், ஒன்றுமே பேசாமல், மௌனம் காக்கின்றாயே – அதற்காய்…” உன்மைத்தான். இவ்வளவு அடக்கம் ஒருவனில் அடங்குமெனில், எந்தப் பெண்தான் காதல் வசப்படாமல் இருப்பாள்? கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, ரசிய மாகாணம் ஒன்றில் குடியேறிய பின், அவன், மூன்று முக்கிய மனிதர்களைச் சந்திக்கின்றான். அவர்களில் ஒருத்தி, கிளிம்மிடம் கூறும் கூற்றே, மேலே காணப்படுகின்றது. இவள் ஒரு பாடகி. ஏற்கனவே மாஸ்கோவில், கிளிம்முக்கு ஓரளவு அறிமுகமாகி இருந்தவள், அவர்களின் பரஸ்பர நண்பர்களின் சுற்று வட்டத்திற்கூடு. வித்தியாசமான ஒரு பெண்ணாக இவளை நாவலில் உலவ விட்டிருக்கின்றார், கார்க்கி.

“எனக்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இஷ்ட்டமில்லை…”

“என்னைப் பொறுத்தவரை, மனிதன் என்பவன், அன்பு செலுத்தி கொண்டிருக்கும் வரைத்தான் வாழ்கின்றான். பிறிதொருவன் பொறுத்து அவனால் அன்பு செலுத்த முடியாது போய் விட்டால், அவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன…?"

அவளது தர்க்கங்கள் இப்படியாகத்தான் இருக்கின்றது. கிளிம்மின் புலமை தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அவனது மௌனத்தால் வசீகரிக்கப்பட்டு விடும் இவள், கிட்டத்தட்ட, கிளிம்மின் அடிமைப் போன்றே இருப்பதில் பெருமை கொள்கின்றாள் - ஆரம்ப கட்டத்தில். போதாதற்கு தனது அந்தரங்கங்களை எல்லாம் கிளிம்மிடம் கொட்டி தீர்ப்பதில் வேறு ஆனந்தம் கொள்கின்றாள் - இவ் அபலை பெண்.

“என் தந்தை ஒரு சீட்டுப் பிரியர். அவர் தோற்கும் போதெல்லாம் என் தாயாரை அழைத்து, பாலில் தண்ணீரை கலக்கச் சொல்லுவார். எங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தன. அம்மா பால் விற்பவர். நேர்மை. அனைவரும் அம்மாவை மனதார விரும்பினர். மரியாதை செலுத்தினர். அவள் தண்ணீரைக் கலக்கும் போது எப்படியாய் அழுதாள் தெரியுமா – என் அம்மா. எவ்வளவு, எவ்வளவு துன்புற்றுக் கலங்கினாள், என்பதை உங்களால் அறிய முடிந்தால்…”

மேலும் படிக்க ...

அஞ்சலி: ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார்! வடபுலத்தின் அடிநிலை மக்களின் விடுதலைக்காகவும் பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தவர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் தெணியான் மறைந்து விட்டார். வர்க்க/வர்ண விடுதலைக்காக, சமூக அவலங்களுக்கெதிராக ஒலித்த போர்க்குரல் ஓய்ந்துவிட்டது. அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதியின் அஞ்சலிக் கட்டுரை. தெணியான் அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவருடனும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. - பதிவுகள்.காம் -


கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 -05- 2022 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார்.

06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கூா்தலறக் கோட்பாடு!  - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
ஆய்வு
23 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பாகுபடுத்த இயலும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களை அடுத்து அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் காணமுடியும். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து மற்றொன்றின் வளா்ச்சி எனும் நிலையில் இலக்கியங்களின் வளா்ச்சி உள்ளது. கூா்தலறக் கோட்பாடு என்பது, இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் குறிப்பிடுகின்றது. கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கூா்தலறக் கோட்பாடு – விளக்கம்

கூா்தலறம் என்பது பாிணாமம் (Evolution) ஆகும். “கூா்தல்” என்ற சொல் முன்பு உள்ளதொன்று மேன்மேலும் சிறப்பதைக் குறிக்கும். தொல்காப்பியா் கூா்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்பாா். உயிாினத் தோற்றம் என்ற தம் நூலில் தாா்வின் சாதாரணப் பொருள்களிலிருந்து ஊழிதோறும் வளா்ந்தும் வேறுபட்டும் மாறி மாறி உயிாினங்கள் தோன்றிப் பாிணமித்து வருகின்றன என்று கண்டு கூறினாா். அதன்பிறகு அவா் வகுத்த கூா்தலறக் கோட்பாடு சமுதாயம் மொழி போன்ற பிறதுறைகள் பலவற்றிலும் ஏற்றிப் பாா்க்கத்தக்க அடிப்படை அறிவியல் ஆயிற்று.

 இயற்கையில் தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு)

கடற்பாசியில் இருந்து உயிாினம் தோன்றியது. மீனின் மூளையே மனித மூளையாக வளா்ச்சி பெற்றது. கோழி முட்டை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் குஞ்சாக மாறிவிடுகிறது. இங்ஙனமே உலகில் பயிா் இனங்கள், உயிாினங்கள் எல்லாம் தோன்றி வளா்ந்து வருகின்றன என்பதே தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு) ஆகும்.

மேலும் படிக்க ...

ஆய்வு: இந்துப்பண்பாட்டு வளர்ச்சியில் மேலைநாட்டவரான சேர் வில்லியம் ஜோன்ஸின் பங்களிப்பு! - ரவிதாஸ் ரஜிதா , இந்து நாகரிகத் துறை, கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை. -

விவரங்கள்
- ரவிதாஸ் ரஜிதா , இந்து நாகரிகத் துறை, கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை. -
ஆய்வு
23 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவில் தோன்றியதும் இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்த சமயமாக இந்து சமயம் விளங்குகின்றது. இச் சமயமானது பல்வேறு நாடுகளில் பரவிச் சிறப்படைந்துள்ளதுடன் இந்துப் பண்பாடானது சிறந்த முறையில் பயில் நிலையில் இருந்து வருகிறது. ஆங்கிலேயரின் வருகை மற்றும் காலனித்துவத்தினால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து நாகரிக ஆய்வுச் செயற்பாடுகளில் மேலைநாட்டவர்கள் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

மேலைத்தேசத்தவர்களுக்கு இந்து பண்பாடு குறித்த கரிசனைகள் அரசியல், சமூக, பொருளாதார செயற்பாடுகளால் ஏற்பட்ட ஒன்றாகும். இவ்வாறான சூழலிலே தோற்றம் பெற்ற ஒருவராக சேர்.வில்லியம் ஜோன்ஸ் விளங்கினார். இவர் ஆங்கிலேய தந்தைக்கும் வேல்ஸ் நாட்டு தாய்க்கும் 28.09.1746 ஆம் ஆண்டு; லண்டன் மாநகரில் பிறந்தார்.

இவர் தனது இளமைப் பருவத்திலே மொழியியலில் மிகுந்த நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். அந்த வகையில் ஆங்கிலம், வேல்ஸ், கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், அரபு, சீனமொழிகளிலே பாண்டித்தியம் பெற்றவராகக் காணப்பட்டார். இவர் 13மொழிகளை நன்கு அறிந்திருந்தார். மேலும் 28 மொழிகள் நியாயமான முறையில் நன்கு அறிந்திருந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை ஹாரோ பாடசாலையில் கற்றார்.

இதன் பயனாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி 1768 இல் பட்டம் பெற்றார். 1772 இல் றோயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் 1773 இல் டாக்டர் ஜான்சனின் புகழ்பெற்ற இலக்கியக் கழகத்தின் உறுப்பினராகவும் காணப்பட்டார். றோயல் சங்கத்தினால் நீதிச் சேவையாளராக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவிற்கு வந்த வில்லியம் ஜோன்ஸ்சை இந்தியப் பண்பாடானது பெரிதும் கவர்ந்திருந்தது. இந்தியப் பண்பாட்டினை அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தினை அறிய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த வில்லியம் ஜோன்ஸ் பல்வேறு முயற்சிகளின் பின் “பிராம்லோசின் கலாபூசன” என்ற வைத்திய குலத்தினை சேர்ந்தவரின் உதவியோடு சமஸ்கிருத மொழியினை கற்றுத்தேர்ந்தார். ஏற்கனவே அவர் அறிந்திருந்த பழம்பெரும் மொழிகளுடன் ஒப்பீட்டு ரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் சமஸ்கிருத மொழியின் அருஞ்சிறப்புக்களை மேலைத்தேச அறிஞர்களுக்கு அறிமுகஞ் செய்வதற்கும் இவருடைய பங்களிப்பு மிக அவசியமானதாகக் காணப்பட்டது. அவ் வகையில் 1789ஆம் ஆண்டு காளிதாசருடைய அவிக்ஞான சாகுந்தலம் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனூடாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஆங்கில மற்றும் ஜேர்மன் மொழிகளைக் கற்றறிந்தவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு வேற்று மொழியைச் சேர்ந்தவர்களும் நன்மை அடைந்தனர்.

மேலும் படிக்க ...

கனடாவில் பால சுகுமார்: ஒன்று கூடல், நூல் அறிமுகம் & கலை நிகழ்வுகள்!

விவரங்கள்
- தகவல்: பால சுகுமார் -
நிகழ்வுகள்
22 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: இந்துப் பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் ! - சிவப்பிரியா சிவராஜா, நான்காம் வருடம் (இந்துநாகரிகத் துறை), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. -

விவரங்கள்
- சிவப்பிரியா சிவராஜா, நான்காம் வருடம் (இந்துநாகரிகத் துறை), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. -
ஆய்வு
20 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலைத்தேசத்தவர்களுக்கு இந்துப்பண்பாடு குறித்த கரிசனையும், அது குறித்த அருட்டுணர்வும் தற்செயலாய் நிகழ்ந்ததொன்றல்ல. மூன்று நூற்றாண்டுகளாய் (கி.பி.17-19) தொடர்ந்த பல்வேறு அரசியல் பொருளாதார சமூக நிகழ்ச்சிநிரல்களின் விளைவாக அவர்களே நினையாப்பிரகாரமாய் நிகழ்ந்த ஒரு பக்கவிளைவாகவே இதனைக் கருத வேண்டும்.

குடியேற்றவாதம், வர்த்தகம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதல் என்ற மூன்று அடிப்படைக்காரணிகள் இந்தியாவிற்குள் மேலைத்தேசத்தவர்களின் வருகைக்கு ஏதுவாயின. அந்தவகையில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனரிகள் தமது சமயத்தை இந்துக்கள் மத்தியில் பரப்புவதற்காக இந்துப்பண்பாட்டை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதே போன்றே 'இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்", 'ஆரியவாதம்" போன்ற எண்ணக்கருக்களால் உந்தப்பட்ட ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலர் குறிப்பாக ஜேர்மன் நாட்டவர்கள் வைதிக இலக்கியங்களையும், சம்ஸ்கிருத மொழியையும் ஆழமாக அறிந்து ஆய்வு செய்வதற்கு உந்தப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்காகவே இந்துப்பண்பாடு பற்றிய கற்கைகளில் மேலைத்தேயத்தவர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அவர்களே நினையாப்பிரகாரமாய் இந்துப்பனுவல்களைக் கற்கக் கற்க இந்துப்பண்பாட்டின் மீதும் சம்ஸ்கிருத மொழிமீதும் அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. இதனால் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் உரைவிளக்கம் எழுதுதல், ஆய்வுநூல்கள், கட்டுரைகள் வெளியிடுதல், ஆய்வுச் சஞ்சிகைகளை வெளியிடுதல், ஆய்வுநிறுவனங்களை ஸ்தாபித்தல் ஆகிய இன்னோரன்ன முயற்சிகளில் மேலைத்தேச அறிஞர்கள் முனைப்போடு செயற்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகளில் இந்துப்பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் பற்றி பின்வருமாரு நோக்குவோம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் இலக்கியத் தராசு 'தராசு முனைகள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அண்மையில் வெளியான எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை. - வ.ந.கி -


எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' என்னும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பினை வாசித்தேன். பதினைந்து எழுத்தாளர்களின் பல் வகைப்பட்ட நூல்களைப்பற்றிய மதிப்புரைகள். சுருக்கமான ஆனால் தெளிவான, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியத்தின் பன்முக வெளிப்பாடுகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான புரிதல்களின் அடிப்படையில் உருவான மதிப்புரைகள். மதிப்புரைக்காக எடுத்துக்கொண்ட நூல்கள் ஆணாதிக்கம், பணம் ஏற்படுத்தும் அவலங்கள், தாயகத்தின் அவலங்களை, இருப்பின் தன்மை, முதிர்கன்னி, விதவைகள் துயர், தாய்மை, சீதனம், காதல், பிரிவு, தீண்டாமை. இனவாதம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் எனப்பலவற்றைப்பற்றிப் பேசுகின்றன. இத்தொகுப்பு நூலை வாசித்தபோது நான் அவதானித்த முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் “தமிழ்ச் சித்தர்கள்”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
18 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மன அழுத்த மேலாண்மை – 2 : மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்! - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -

விவரங்கள்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
'பதிவுகளில்' அன்று
18 மே 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுநமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது.

சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.

நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வெற்றிச் சிகரத்தை நோக்கி: ஆளுமை ஆற்றலில் மனோபாவத்தின் பங்கு! (2)  - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing) -
  2. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் சிங்கள மக்களும் இணைவு!
  3. முள்ளிவாய்க்கால் நினைவேந்துவோம்! - வ.ந.கிரிதரன் -
  4. பெயரடை மற்றும் தமிழின் புணர்ச்சி விதிகள்: சில சிந்தனைகள்! - மதுரன் தமிழவேள் (தவ சஜிதரன்) -
  5. தமிழ் விக்கி பற்றி....
  6. இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். -
  7. இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.-
  8. மே 18 : தமிழின அழிப்பு நினைவு நாள்! - தகவல்: தர்மராஜா (தலைவர், ஒட்டாவா தமிழ்ச் சங்கம்) -
  9. செவ்வியலிசை - பாரதிகள் ஐவர்!
  10. சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’ - கே.எஸ்.சுதாகர் -
  11. கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -
  12. செ. சுதர்சனின் கவிதைகள் இரண்டு: கேலிப் பட்டாசும் கோவணக் கட்டியும்! & நீல அல்லியும் செங்காந்தளும்!
  13. (முகநூல் அஞ்சலி) நான் வளர்ந்த கருப்பையை நான் இழந்து போனேன்! மயிலங்கூடலூர் பி நடராசன் (ஆடலிறை) 14.10.1939 - 12.05.2022 - நா.சபேசன் -
  14. மயிலங்கூடலூர் பி.நடராசன் மறைவு!
பக்கம் 94 / 126
  • முதல்
  • முந்தைய
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • அடுத்த
  • கடைசி