யமுனா ராஜேந்திரன் பங்கேற்கும் இரு கனடிய நிகழ்வுகள்

முதல் நிகழ்வு
காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை


முதல் நிகழ்வு
காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை
'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் 'மூலதனம்' (தமிழில்), மார்க்ஸ்-எங்கெல்ஸ்ஸின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உட்படப் மேலும் பல நூல்களை நீங்கள் வாசிக்க முடியும். இதுதவிர ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள், அவற்றின் அறிக்கைகள், புலம் பெயர்ந்த தமிழிலக்கிய உலகில் உருவான சஞ்சிகைகள் போன்ற பல ஆக்கங்களை, தகவல்களை இங்கு ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கு ஆக்கங்களை வாசிப்பதற்கு நீங்கள் உங்களை இத்தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எதுவுமில்லை. அதன்பின் ஆக்கங்களை வாசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் செல்ல வேண்டிய இணையத்தள் முகவரி: http://www.padippakam.com - ஊர்க்குருவி -

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை சிட்னி நூல் வெளியீட்டுக்குழு மேற்கொண்டுள்ளது. இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும். இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
Mathubashini, 0421791490- Sownthary -0433343007 -Bamathi-0431568568
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'புதிய நூலகம்' செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ் வெளிவந்துள்ளது.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.02.15.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் எட்டாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும். இச் சஞ்சிகைக்கான பவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.
- ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் 'நீர்வளையங்கள்' [தமிழியல் 1988], 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

ஏற்பாடு
1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.

39வது இலக்கியச்சந்திப்பு: விளிம்பும் விசாரணைகளும்
ரொறொன்டோ கனடா மே 5, 2012 ...... மேலதிக விபரங்கள் .. உள்ளே
ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.[ நன்றி: http://inioru.com/?p=27454 ]

சிறுகதை
அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார்
சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன்

நாள்: மே 4, 5, 6
இடம்: குன்றத்தூரிலுள்ள விவசாயப் பண்ணை.
கட்டணம்: 1000/- ( தங்குமிடம் / உணவு உட்பட. )
நடத்துபவர்: ஆர். ஆர். சீனிவாசன்
(தெருப் புகைப்படக்கலைஞர்)

‘முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தமிழக அறிவுலகிலும் சமூக மட்டத்திலும் ஆறாத காயங்களை ஏற்படுத்தி ஈழத்தமிழர்கள் பற்றிய சமூகப் பார்வையை முற்றாக மாற்றிப் போட்டிருக்கிறது. ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப்பின் பத்து ஆண்டு காலமாக ஈழத்து நிகழ்ச்சிகள் பற்றி எந்த எதிர்வினையும் காட்டியிராத தமிழகச் சூழலில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை அணுகும் பெரும்பாலானோரின் நோக்கங்கள் தமது நலன்கள் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன். இதற்காக ஆத்மார்த்தமாக அக்கறை கொண்டுள்ளவர்களை கொச்சைப் படுத்துவதாகக் கருதவேண்டியதில்லை. தமிழகத்தின் ஊடகங்களும் அரசியல் பிரமுகர்களும் ஈழப் பிரச்சினையை சுரண்டல் நோக்கத்துடனேயே பார்க்கிறார்கள் என்பதில் பெருமளவு உண்மை உண்டு என்பதில் சந்தேகமில்லை’ என ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ‘காலச்சுவடு’ என்ற தமிழக சஞ்சிகையின் பதிப்பாளர் சு.கண்ணன் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈழத்துப் பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு மற்றும் விமர்சனம், தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் பற்றிய கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை 'வரலாறு' என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

அனைவருக்கும் பதிவுகள் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.
குறும்பட விருது
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.
அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்கள் இங்கே
அன்புடன்
டாக்டர் தி. ஞானசேகரன்
இலக்கியப்பணிச் செயலாளர்,கொழும்புத் தமிழ்ச்சங்கம்
ஆசிரியர் ஞானம்
“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது.
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை....
- கவிஞர் அஸ்மின் -

மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. 'கவிஞன்' என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை. கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்.
“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது நினைவாக ,'தடாகம் கலை இலக்கிய வட்டம் '(அஞ்சலி கவிதை )நிகழ்வினை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்து வருகின்றது. இக் கவி அரங்கில் இலங்கையின் எப் பகுதில் இருந்தும் கவி உள்ளங்கள் கலந்து சிறப்பிக்கலாம். அத்தோடு (கானக் குயிலுக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி .)எனும் தலைப்பில் கவிதைகளை சர்வதேச மட்டத்தில் இருந்தும் எதிர்பாக்கின்றோம் அக் கவிதைகளை தரமான நூலகவெளியிட உள்ளோம் எனவே உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள் தரமான கவிதைகளுக்கு அம்மாவின் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கும் , ஆக்கங்களை அனுப்பி வைப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தலைவி - சுகைதா ஏ கரீம்
( தாடாகம் கலை இலக்கிய வட்டம் )
677 அஹமட் வீதி ,
சாய்ந்தமருது -14 (கி .மா)
இலங்கை ..
email- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் - கலைமகள் ஹிதாயா றிஸ்வி
அமைப்பாளர் -தாடாகம் கலை இலக்கிய வட்டம் ..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் மாதிரி மொழிபெயர்ப்பு (ஒரு பக்கம்) மற்றும் கட்டண விபரங்களுடன் எம்மை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும். - பதிவுகள்.
எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது "ஓர் எழுதுவினைஞனின் டயரி" சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க. எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.