முழு நிகழ்வு! மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்!


அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது'சிறுகதைத்தொகுப்புக்கு மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின்சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின்இலக்கிய விருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் இப்போது மீண்டும் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது'சிறுகதைத்தொகுப்புக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின்இலக்கிய விருது கிடைத்துள்ளது,
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் 'ஈழநாடு" பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். 'தினபதி" கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய 'பாரிஸ் ஈழநாடு" 'ஐரோப்பா முரசு" ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. பாலர் பாடல்கள் அடங்கிய நான்கு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள்; புலம்பெயர்ந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்துடன் 'பரிசு" என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகையொன்றையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டுவந்துள்ளார். இவருக்கான பரிசு பத்தாயிரம் ரூபாää கேடயம், சான்றிதழ் என்பன அக்டோபர் மாதம் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழாவில் வழங்கப்படவுள்ளன. இவர் ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் மனைவியாவார். தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012
நாள்: 15-08-2012, புதன்கிழமை
இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்)
நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM)
சிறப்பு விருந்தினர்கள்
பாலு மகேந்திரா,
வசந்த்,
பாலாஜி சக்திவேல்,
பவா செல்லதுரை,
மருது,
கூத்துப் பட்டறை ந. முத்துசாமி,
காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன்,
நாடகவியலாளர் ஸ்மைல் வித்யா,
லெனின் & அம்ஷன் குமார்
'எதுவரை' இணைய இதழ் வலையில்..
நட்புடன், எதுவரை இணைய இதழ்- நான்கு பதிவேற்றப்பட்டுள்ளது, கீழ்வரும் தொடுப்பின் ஊடாக நீங்கள் வாசிக்கலாம். எதுவரை: http://eathuvarai.net/?paged=3 உங்கள் கருத்துக்கள்,படைப்புகள்,எழுத்துக்களை அனுப்பி வையுங்கள்-நன்றி
இம்மாத இதழின் உள்ளடக்கம்:
*கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்
*அன்னிய நிதியின் வேர்கள்!
*பெயரில் என்ன இருக்கிறது?
*நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு
*காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்
*சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்
*ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்
*விடியல் சிவா சில குறிப்புகள்
*யாரும் பாடலாம் என்னை-கவிதை
*கண்ணன் பதில்கள்-பகுதி மூன்று

அன்புடையீர், மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம் மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145 ஆகியன-நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் இவ்விதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும். ,நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைபார்வையிடலாம். மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை மல்லிகைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு,இம்மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் ஒரு பிரதியை(cc) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.அதை போல் ஞானம் சஞ்சிகைபற்றிய கருத்துக்களையும் அதே முறையில் அனுப்பி வைக்கு மாறு வேண்டுகிறோம். - அன்பன் , மேமன்கவி

புதுவையில் 03-08-2012 அன்று நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதை நூல் அறிமுகவிழாவில் அகில் நடத்தி வருகின்ற தமிழ்ஆதர்ஸ்.கொம் இணையத்தள பணிக்காக புதுவை நண்பர்கள் தோட்ட அமைப்பால் இலக்கிய விருது வழக்கப்பட்டது. இவ்விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அன்பினிய நண்பரவர்கட்கு, வணக்கம். நான் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஏழாம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். வாய்ப்பிருப்பின் கலந்துகொள்ள வேண்டுகிறேன். மிக்க அன்புடன், - ஆல்பர்ட்.
முழு விபரங்கள் ... உள்ளே
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட "லெனின் விருது" இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.

நிழல் நவீன சினிமாவுக்கான களம்: -தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை
நிழல் - பதியம் இணைந்து நடத்தும் 27வது குறும்படப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை 7 நாட்கள் நடக்க இருக்கின்றன. தகவல்: திருநாவுக்கரசு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மேலதிக விபரங்கள் உள்ளே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Tamil National Alliance (Canada)
41 Windom Road Toronto ON M3C 3Z5
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
யூலை 27, 2012
அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்
பாரம்பரிய உணவு விருந்து..
நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்... நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே. இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?.. சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன? ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழாவில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது.

மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும் இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
தோழர் கு. சின்னப்ப பாரதி நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலில் தோழர் வி. ரி. இளங்கோவன்ää பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட்; கட்சி - மார்க்சிஸ்ட் - கட்சிகளுக்கிடையிலான நல்லுறவு, இலக்கியப் பரிமாற்றம், சர்வதேச நிலைமைகள், உலக மயமாக்கலின் விளைவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட கு. சின்னப்ப பாரதியின் 'Le Réveil' நாவலை பிரெஞ்சு மக்கள் மத்திக்கு பரவலாக எடுத்துச்செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாரிஸ் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டார். பாரிஸ் மாநகரில் வாழும் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினர். ஒரு வாரத்தின்பின் நெஞ்சம் நிறைந்த தோழமை உணர்வுகளைச் சுமந்தவாறு தோழர் கு. சின்னப்ப பாரதி தமிழகம் திரும்பினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் சார்பில் தோழர் வி. ரி. இளங்கோவன் ஒழுங்குசெய்த, பாரிஸ் மாநகரில் கடந்த 15 -ம் திகதி (15 - 07 - 2012) நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும் கு. சின்னப்ப பாரதியின் 'Le Réveil' நாவல் வெளியிடப்பட்டது. தோழர் பியர் மார்சி (Pierre Marcie) இந்நாவல் குறித்து இங்கு சிறப்புரையாற்றினார். தோழர் கு. சின்னப்ப பாரதியின் பாரிஸ் பேச்சுவார்த்தைகள் யாவற்றுக்கும் தோழர் வி. ரி. இளங்கோவன் உடனிருந்து உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.
- Black July Remembrance Vigil will be held in front of 10 Downing Street on Monday 23 July 2012 between 5-8pm. Please gather (clad in black) at a vigil opposite 10 Downing Street on Monday 23rd July 2012 from 5pm to 8pm. -
The month of July brings back vivid memories of death and destruction to many Tamil people who had survived a massacre in a state sponsored pogrom against the Tamil nation by the Sinhala nation in July 1983. More than 3000 innocent Tamil men women and children were butchered on the streets and in their own homes over a period of 5 days. The Tamil people remember this event as "Black July 1983". This was a turning point in the history of Tamils of the island of Ceylon when a large number of the survivors fled the island fearing for their lives. The Tamil Nation have been subjected to repeated pogroms unleashed against them by the Sinhala Nation since the island now known as Sri Lanka gained independence from Britain in 1948. In 1958 pogrom 300 people were massacred. in 1961 there were nearly 500 killings and in 1977 more than 1000 people were murdered. With the advancement in communication technology, the international community was also witness to the carnage in 1983 in which more than 3000 Tamil people were massacred, nearly 100,000 people made homeless and billions worth of their property looted and set ablaze in an orgy of racial attacks on defenceless Tamil people.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
Persatun Penulis Tamil Malaysia
தமிழ் நாவல் கருத்தரங்கம்
28/7/12 , 29/7/12 சனி, ஞாயிறு
Hotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia
உரை: 'நாவல் அனுபவம்' சுப்ரபாரதிமணியன்
பிற உரைகள்: முனைவர் ரெ.கார்த்திகேசு
முனைவர் சபாபதி
முனைவர் கிருஸ்ணன்
நிறைவுரை: பி.ராஜேந்திரன் ( தலைவர், மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் )
தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2012.
நண்பர் /நண்பிகளுக்கு.......
"ஜூலை" மாத நிகழ்வு விபரம்!
நூல் அறிமுகம்: *வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்(நூல் அறிமுகம்) வழிப்படுத்துகை- ந.ஜெயபாலன்
உரைகள்-
வி-லோகநாதன் (ஜேர்மன்)
ரி-குகதாசன்
சந்திப்பு
* பெண் எழுத்தாளருடனான சந்திப்பு: சுகி கணேசானந்தன்- அமெரிக்கா
நாவலாசிரியர் ,சமூக செயற்பாட்டாளர்
வழிப்படுத்துகை- நிர்மலா இராஜசிங்கம்
காலம்- 21 ஜுலை 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London

திரையிடப்படும் படம்: அக்ரஹாரத்தில் கழுதை (இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)
சிறப்பு அழைப்பாளர்: ஆர்.ஆர். சீனிவாசன்
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 21-07-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)
நண்பர்களே, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இனைந்து நடத்தும் "மாற்றம் தந்த இந்திய சினிமா" திரையிடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21-07-2012) தொடங்கவிருக்கிறது. இதுவரை உலகப் படங்களை மட்டுமே பார்த்து அவற்றை சிலாகித்து நமது சுயம் மறந்து போன இந்த நேரத்தில் நமது இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் சில உலகத்தரத்தில் வெளிவந்துள்ளன என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான மேன்மை மிகு இந்திய சினிமாக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதுவரை இந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, இன்னும் பல மொழிகளில்) வெளிவந்த மிக சிறந்த படங்கள் இந்த திரையிடலில் திரையிடப்படவிருக்கிறது.

யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல்: கலந்தரையாடல் - இணையத்தமிழ்
நெறிப்படுத்துபவர்- நிலாந்தன்.
இடம் - IDM கணனிக்கல்லூரி(IDM Nation Campus,Address: # 216 Navalar Road, Jaffna.)
காலம்- 23.07.2012 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணி
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம்
யாழ் இலக்கிய குவியத்துக்காக
வேலணையூர்-தாஸ்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'டொக்டர்' எஸ்.சிவதாஸ் மருத்துவ உலகிலும், இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். ஆரவாரமின்றி அமைதியாக மனநலத் துறையில் தன்னலற்ற அளப்பரிய பணிசெய்பவர். ஆழமான இரசனையுணர்வு கொண்டவர், கவித்துவமிக்க படைப்பாற்றலும் கைவரப் பெற்றவர். சிறந்த புகைப்பட நிபுணருமாவார். 'நலமுடன்' என்ற இவரது நூலின் வெளியீட்டு விழா ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற இருப்பது மனநலம் சம்பந்தமான ஒரு சிறப்புரையாகும். 'மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்' என்ற தலைப்பில் உளநல மருத்துவத்துறைப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு உரையாற்ற இருக்கிறார். SRM பல்கலைக் கழகத்தில் உளநல மருத்துவத்துறைத் தலைவரான இவர் இந்திய உளமருத்துவ சங்கத்தின் அண்மைக் காலத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக உளமருத்துவ சங்கத்தின் தென்னாசிய வலயத்தில் பிரதிநிதியாகவும் இருக்கிறார். எமது சூழலில் நிறைந்திருக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய எமது அறிவை வளர்ப்பதற்கும் அத்தகையவர்களுடன் புரிந்துணர்வுடன் நடப்பதற்குமாக அவசியம் கேட்க வேண்டிய உரையாக இது இருக்கும் என நம்பலாம்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்படமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, 'ரொறான்ரோ' கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கட்டடக்கலைஞர், கட்டடப்பொறியியலாளர், பதிப்பாளர் எனப் பல்துறைகளில் தன் பங்களிப்பை நிலைநாட்டியவருமான அண்மையில் மறைந்த 'தமிழர் மத்தியில்' நந்தா (நந்தகுமாரன் இராஜேந்திரம்) அவர்களின் அந்திரட்டி நிகழ்வு ஸ்கார்பரோவில் அமைந்துள்ள "The Queen Palace" விருந்து மணடபத்தில் 14.7.2012 சனிக்கிழமை, பிற்பகல் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்வில் நீண்ட நாட்களின் பின் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலை, பொறியியற்துறைப் பட்டதாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிவகுமார், கலாஈஸ்வரன், கனகவரதா, யசோதரன், ஜோதிகுமார் மற்றும் கடற்றொழிற் பொறியியலாளரான வரதீஸ்வரன் எனப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு. நந்தகுமார் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கைநூல் மூலம் கனடாத் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவொருவர் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பாக TVI தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளரான சிவதாசன், 'தமிழன் வழிகாட்டி' செந்தி, 'மோட்கேஜ்'துறையில் பணியாற்றும் சுரேந்திரன், 'ரியல் எஸ்டேட்' துறையில் பணிபுரியும் லோறன்ஸ் பிரின்ஸ், 'Monsoon' ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளர் லோகன் வேலாயுதம் எனப் பலரை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.
'விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்து கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே!' என்று பாரதி பாடி ஆண்டுகள் பல கடந்தோடி விட்டன. ஆனால் இன்னும் பாரதம் மானுட நாகரிகமே தலை குனியும் வண்ணம் தீண்டாமைப் பேயின் நச்சுக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. அண்மையில் நடிகர் அமீர்கானின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்ய மேவ ஜெயதே' என்னும் 'உண்மைக் காட்சி' (Reality Show) தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'தீண்டாமை - அனைவருக்கும் மதிப்பு!'(Untouchability - Dignity for All)' என்னும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி அது. பார்த்தோர் அனைவரையும் நெஞ்சு குலுங்க வைக்கும் நிகழ்வாக அந்நிகழ்சி இருந்தது. 'இந்தியர்' என்று பெருமையுறும் அனைவரையும் நாணிக்குனிய வைப்பதாகவிருந்தது அந்த நிகழ்வு.

ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவியான பத்து வயது செல்வி. கிஷ்ணவி விஜயபாலனின் அரங்கேற்றம் லண்டன் Fairfield மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.