இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையத்தள அறிமுகம்!
தமிழ்ப் பூக்கள்:  எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!

இணைய உலாவுதல்..- இம்முறை எழுத்தாளர் தாஜ் அவர்களின் 'தமிழ்ப்பூக்கள்' வலைத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்காக அவர் மூலமாகவே அறிமுகம் செய்து வைக்கின்றோம். தமிழ்நாடு சீர்காழியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தாஜ்.  தாஜ் அவர்களின் கவிதைளை அவ்வப்போது 'காலச்சுவடு' சஞ்சிகையில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனந்தவிகடன் நடாத்திய பவளவிழாக் கவிதைப் போட்டியிலும் முத்திரைக் கவிதையாக அவரது கவிதையொன்று, 'அம்மா' பற்றி, பிரசுரமாகி சிறந்த கவிதைகளிலொன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஞாபகம். எழுத்தாளர் தாஜ்ஜின் 'தமிழ் பூக்கள்' பற்றிய அறிமுகக் கடிதம் கிடைத்ததும் சென்று பார்த்தோம். வாழ்த்துக்கள். இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றார்.அவரது எழுத்தாற்றலும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் இத்தளத்தினை நிச்சயம் வெற்றியடைய வைத்திடுமென்பதை ஆரம்பமே உணர்த்துகின்றது. தாஜ் அவர்களே! அர்ப்பணிப்புடன், அலுக்காமல், சலிக்காமல் உங்கள் எண்ணங்களை, ஆக்கங்களை, கனவுகளையெல்லாம் இங்கு பதிவு செய்யுங்கள். அவ்விதம் தொடர்ந்து செய்து வருவீர்களானால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உங்களை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டு , இணையத்தின் வலிமை கண்டு நீங்களே அசந்து விடுவீர்கள்.

 
இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்தையும் தனிப்பட்டரீதியில் நினைவு கூர்வதும் பொருத்தமானதாகக் கருதுகின்றேன். தமிழகத்தில் 1996இல் 'ஸ்நேகா' பதிப்பகத்தினர் எனது இரு நூல்களை 'அமெரிக்கா' (சிறுகதை, குறுநாவற் தொகுதி) மற்றும் 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' ஆகிய இரு நூல்களை வெளியிட்டிருந்தார்கள். கணையாழி 'நல்லூர் இராஜதானி' பற்றியும் 'புதியபார்வை' சஞ்சிகை 'அமெரிக்கா' பற்றியும் நூல் மதிப்புரைகளை வெளியிட்டிருந்தன. மேலும் தமிழக இலக்கியச் சூழலில் என்னைப் பலருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது ஒரு சிலரைத்தவிர. இந்நிலையில், தமிழக நூல்நிலையங்களில் எனது மேற்படி நூல்களை வாசித்துவிட்டு சீர்காழியிலிருந்து நீண்ட  ஆரோக்கியமான விமர்சனக் கடிதங்களை தாஜ் அனுப்பியிருந்தார். இதுபோல் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் 'அமெரிக்கா' நூல் கிடைத்ததும் நீண்டதொரு கடிதமொன்றினை தனது கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவற்றை இன்னும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றேன்.அத்துடன் தாஜ் அவர்கள் கனடாவில் வசிக்கும் தனது நண்பர்கள் மூலமாக வைக்கம் முகம்மது பஷீரின் 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்னும் புகழ்பெற்ற நாவலினையும் அனுப்பி உதவியிருந்தார். அவற்றையும் இச்சமயத்தில் தனிப்பட்டரீதியில் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றேன்.-வ.ந.கிரிதரன் -
 
தமிழ்ப் பூக்கள்:  எழுத்தில் நிஜத்தை தரிசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மேலும் ஒரு வலைப்பதிவு!
 
 -தாஜ் (சீர்காழி) -  
   
www.tamilpukkal.blogspot.com

எழுத்தாளர் தாஜ்.... இணையத்தின் பக்கம் தமிழ் வலைத் தளங்கள் அல்லது வலைப் பூக்கள் என்பது இன்றைக்கு சாதாரணம். நித்தம் மலர்கிற சங்கதி. கணினி பயன்ற நம் மாணவர்கள் தங்களது தேர்ச்சிக்குப் பிறகு பணிக்குச்செல்ல முயற்சிக்கும் அதே வேளை ஆளாளுக்கு ஒரு வலைத்தளத்தை முனைந்து வடிவமைத்துக் கொள்கின்றார்கள். இதை அவர்கள் தங்களது ஆளுமை சார்ந்த செயலாக நினைக்கின்றார்கள். தமிழ்ப் பூக்கள் என்ற இந்த வலைப் பதிவு- வாசிப்பவர்களின் பார்வையில் பத்தோடு பதினொன்றுத்தான். அல்லது இன்னொரு இம்சை.அப்படியெல்லாம் இல்லையென வாசகர்களை நம்ப வைப்பதில்தான் இந்த வலைப் பதிவின் வெற்றி இருக்கிறது.
                        
80-களின் ஆரம்பத்தில் பஞ்சம் பிழைக்கவென செளதி அரேபியா சென்றிருந்த போது,அதன் மிகப்பெரிய பெட்ரொல் சுத்தகரிப்பு நகரான ரஸ்த்தணூராவில் வேலை,அங்கே எண் பணி நேரம் போக கிட்டிய ஒய்வில் நண்பர்களின்
உறுதுணையோடு முயன்று கையெழுத்து மாத இதழை கொண்டு வந்தேன்.அதன் பெயர் தமிழ்பூக்கள்.ஒன்னறை வருடக்காலத்தில்
பதினோரு இதழ்கள் மட்டுமே வந்து அது முடங்கிப் போனது.
 

அதன் பெரிய விசேசம் செளதிஅரேபியாவின் முதல் தமிழ் இதழ் என்பதுதான். அதை விட விசேசம் அதை வாசித்தப் பலருக்கும் அது பிடித்துப் போனதுதான்.அந்த தமிழ்ப் பூக்களை முன்வைத்துதான் அன்றைக்கு ஜெயகாந்தனிடம் பேட்டிக் காணமுடிந்தது. தி.ஜானகிராமனோடு நெருக்கமாக நட்புடன் உரையாடமுடிந்தது. அந்த பின்புல முகவரியோடுதான் நாகர்கோவில் வைத்து சுந்தாராமசாமியிடம் ஒரு நாள் பூராவும் கேள்விகளால் அவரை துளைக்கமுடிந்தது. சுஜாதா கூட என் இதழைப் பற்றி கணையாழியில் கடைசிப் பக்கம் எழுதினார்.
 
இத்தனை காலத்திற்குப் பிறகு அதன் நீட்சியாக இந்த வலைப் பதிவுக்கு தமிழ்ப் பூக்கள் என்று பெயரிட்டுப் பார்க்கிறேன்.
      
தமிழ் பூக்கள் கையெழத்துப் பிரதிக்கும் இந்த வலைப் பதிவு தமிழ்ப்பூக்களக்குமான ஒரு நீண்ட இடை வெளியில் என்னில் பல
படிமங்களும் சிதைவுகளும் நிகழ்ந்திருக்கிறது. அறுபடாது தொடர்ந்த நவீன இலக்கியப் புழக்கத்தால் பல தெளிவுகள் சாதாரணமாகி இருக்கிறது. எங்கும் எதிலும் நிஜத்தின் நிதர்சணத்தை தொடவும் வேறு பழகி இருக்கிறேன். இவைகள்தான் இனி இங்கே எழதப்போகும்
எவற்றிற்குமான பின் புலன்கள்.
 
இந்த வலைப் பதிவு வழியே வாசகர்களை கவர வேண்டும் என்ற எண் திட்டமிடல் நடக்காமல் போகலாம் . பழுதில்லை.ஜெயித்தால்தான் வியப்பாக இருக்கும். ராசி அப்படி.   பார்க்கலாம்......

தமிழ்ப் பூக்கள் முகவரி: www.tamilpukkal.blogspot.com

 
தமிழ்பூக்கள் தளத்திலிருந்து......

 

இணைய உலாவுதல்..மேற்படி தளத்தில் தன்னைபற்றிய அறிமுகத்தில் 'நவ கலைகளின் ஈடுபாடு மனிதனகுல மேன்மைக்கு அழகும்-கீர்த்தியும் சேர்க்கும் என்று நம்பும் இன்னொருவன்' எனக் குறிப்பிடும் எழுத்தாளர் தாஜ் தனக்குப் பிடித்த இரு நூல்களாக சு.ரா.வின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றும் தி.ஜா.வின் 'உயிர்த்தேன்' ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 'கணினியில் தமிழ் என்று அதன் வல்லுனர்கள் முனைந்தபோது, அவர்களுக்கு மிகவும் லாவகமாக உதவியது தந்தை பெரியார் செய்து வைத்த தமிழ் எழத்துரு சீர்திருத்தம்தான். இங்கே என் முதல் நன்றியை, இன்னும் கூடுதலான அர்த்தம் பொதிவுகளுடன் அந்த பெரியவரின் நினைவுக்கே செய்கிறேன்...சிரம் தாழ்த்தி' என்றும் 'கணியிலும் வலைத்தங்களிலும் எனக்கு ஆர்வமூட்டி அதன்கண் வாசிக்கவும் எழுதிப் புழங்கவும் ஊக்கப்படுத்திய அபிதீனுக்கும், நாகூர் ரூமிக்கும் என் நன்றி ஆகட்டும்' என்றும் நன்றி கூறிக்கொள்கின்றார். மேற்படி தளத்திலிருந்து அதன் ஆரம்பக் கவிதையான 'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..) என்னும் கவிதையினையும் பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்.
 
'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..)
 
-தாஜ் -
 
எழுத்தாளர் சுந்தர ராமசாமி...

கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.

கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.

கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.

கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.

கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்றப் பேரோசை
பெரு வெளிக் காட்டி.

tamilpukkal@gmail.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner