இலக்கியத்துக்காக இரு
வலைப்பதிவுகள்!
ராம்பிரசாத்தின் 'அழியாச் சுடர்கள்'
இம்மாத அறிமுக இணையத் தளங்களாக இரண்டை நாம்
அறிமுகப்படுத்துகின்றோம். இலக்கியத்துக்கான வலைப்பதிவுகளிவை.
'அழியாச் சுடர்கள்' வலைப்பதிவு. தமிழ் இலக்கியத்தின் தடம்பதித்த
இலக்கியச் சிற்பிகள் பற்றி, அவர்களது படைப்புகளைப் பற்றியெல்லாம
பயனுள்ள தகவல்களைத் தருவதோடல்லாமல் , அவர்களின் படைப்புகளை
மீள்பிரசுரமும் செய்கிறது. இத்தளத்தினை நடாத்துபவர் ராம்பிரசாத்
என்பதை தொடர்பு கொள்ள
அறிவித்திருக்கும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அறிய முடிகிறது.
'நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே
இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில்
யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை
நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே' என்று
குறிப்பிட்டுப் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்களுடனான
நேர்காணல்களை, அவர்கள் பற்றிய ஏனைய படைப்பாளிகளின் நினைவலைகளை
இத்தளத்தின் 'பெட்டகம்' பகுதியில் வாசிக்கலாம்.
பாரதியாரின் நினைவு தினம் செப்டமபர் 11
மேற்படி
'பெட்டகத்'திலிருந்து மகாகவி பாரதியாரின் குறுநாவலான
'ஸ்வர்ண
குமாரி'யினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்காக மீள்பிரசுரம்
செய்கின்றோம். பாரதியாரின் நினைவு தினம் செப்டமபர் 11இல் அவரது
இப்படைப்பினை மீள்பிரசுரிப்பதும் பொருத்தமானதே. 'பெட்டகத்தில்'
பாதுகாக்கப்பட்டுள்ள இலக்கியச் செல்வத்தைச் சுகிக்க விரும்பினால்
இங்கே அழுத்தவும்.
கிருஷ்ண பிரபுவின் வலைப்பதிவுகள்!
'நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்', 'இந்திய மற்றும் நேபாள இன்பச்
சுற்றுலா', 'கதைகள் மற்றும் கட்டுரைகள்' என வலைப்பதிவுகளை நடாத்தி
வருபவர் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ண பிரபு. தனது துறையாக
இணையத்தைக் குறிப்பிடும் இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்
'ஒரு
எல்லைக்குள் இருந்து நல்ல விஷயங்களை விவாதிக்கறது பிடிக்கும்...
நீங்கள் தயாரா?' என்று தனது தளத்துக்கு வருகை தரும் வாசகர்களை
வினாத்தொடுத்து வரவேற்கின்றார். தனது ஆர்வங்களை 'படிப்பது, தனியாக
ஊர் சுற்றுவது, வலைப் பூவில் பதிவிடுவது, ஆன்மிகம், தத்துவம் என்று
பல
விருப்பங்கள் இருந்தாலும் சும்மா இருப்பது மிகவும் பிடிக்கும்
(தியானம் அல்ல)...' என்று பட்டியலிடும் கிருஷ்ண பிரபுக்கு இசை ஞானி
இளையராஜாவின் இசை, கருத்தாழம் மிக்க திரைப்படங்களென்றால் மிகவும்
பிடிக்கும். தனக்குப் பிடித்த புத்தகங்கள் 'தமிழ் சிறுகதைகள்,
நாவல்கள்,
கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள், குறிப்பாக ராஜாஜி மகாபாரதம்,
கிராவின் கிராமியக் கதைகள், பஷீரின் கதைகள், பாவண்ணனின் புத்தக
உரைகள், எஸ். ராவின் பயணக் கட்டுரைகள் என்று சொல்லிக்கொண்டே
போகலாம்...' என்று குறிப்பிடும் கிருஷ்ண பிரபுவின் வலைப்பதிவுகளில்
நவீன
தமிழ், இந்திய இலக்கியம் பற்றிய பல பயனுள்ள தகவல்களை அறிந்து
கொள்ளலாம். இவரது வலைப்பதிவுகளிலிருந்து வைக்கம் முகம்மது
பஷீரின்
'பாலய்கால சகி' பற்றிய பதிவினை மீள்பிரசுரம் செய்கின்றோம். இவரது வலைப்பதிவுகளை
வாசிக்க ...
இங்கே
'நான் வாசித்த தமிழ்ப்
புத்தகங்கள்' வலைப்பதிவிலிருந்து ...
பஷீரின் பால்யகால சகி!
- கிருஷ்ண பிரபு -
காலைப் பனியின் மென்மை போலவும், அதிகாலை நேரத்தின் அமைதியான
உதயத்தைப் போலவும் சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் குளத்திலிட்ட கல்
போல தங்கிவிடும். முதல் நட்பும், முதல் காதலும் கூட அது போன்ற
இதமான விஷயங்கள் தான். துருதிஷ்டம் என்னவெனில் இவையிரண்டும் நிறைய
பேருக்கு கடைசி வரை நிலைப்பதில்லை. பாசிபடிந்த கல்லினை மீன்கள்
சுரண்டுவது போல இழந்த உறவுகளையே மனித மனம் உரசித் திரிகிறது.
'போப்பூர் சுல்தான்' என்றழைக்கப்படும் பஷீரின் இளம்பருவத்து
தோழியின் நினைவுகள் தான் பால்யகால சகி.
வைக்கம் முகம்மது
...உள்ளே